LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 12, 2019

உயிருள்ள கெட்ட ஆவியொன்று ......'ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)


உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை
ரிஷி

(
லதா ராமகிருஷ்ணன்)


கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே.
கதையா? அதே யதேசபாபதே.
கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே
மதிப்புரை யெழுத ?
பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் 4 அளவிலான
மொத்தம் 500 போல் வெள்ளைத்தாள்களில்
விரைவோவிரைவில் வெளியாகிவிடும் 
கெட்டி அட்டையிட்ட
புத்தம்புதிய புத்தகமாய்.
விமர்சனம் செய்வதென்றால் எனக்கு ஏற்படும் பரவசம்
சொல்லிமாளாது.
நாட்கணக்காய் எழுதுவேன், யாரும் கேட்கா விட்டாலும்.
யார் சொல்லி வீசுகிறது காற்று?
நேற்றும் இன்றும் நாளையும்
ஊற்றெனப் பொழிந்துகொண்டேயிருப்பேன்
ஊத்தை கர்வத்தில் ஊதிப்புடைத்த என்
நாத்தம்பிடித்த அரைவேக்காட்டுக் கருத்துரைகளை.
நாடகமா
ஆடிப்பாடுவேன் அத்தனை பாத்திரமாகவும்.
சூத்திரம் இதுவே நான் சகலகலாவல்லவனாக
நான் எழுதுவதில் எதுவும் தேறாதா?
வாராயென் தோழி வாராயோ எனவழைத்தால்
பேர் பேராகப் போற்றப் பலர் உண்டு
போரூரிலிருந்து ரோமாபுரி வரை
ஊரூராகப் போய்ப் புதுப்புதுப் பட்டியல்களை வினியோகித்து
காரசாரமாய்ப் பேசுவேன் உங்கள் எழுத்து
உரமற்றது; கண்றாவி யென்று
கன்றுகுட்டியாகவே இருக்கவேண்டும் நீங்கள் காலமெல்லாம் நானே தாய்ப்பசுவாம்
பேர் சொல்ல ஒரேயொரு பிள்ளை நான்
_
இலக்கியத்திற்கு. அப்போதும் எப்போதும்
புரிந்துகொண்டால் நல்லது. அல்லது
புல்லுருவிப் படைப்பாளி என்ற பட்டத்தைச் சுமக்கத் தயாராக இருங்கள். சொல்லிவிட்டேன்.
கலங்கி நிற்கக் கற்றுக்கொள்ளாமலிருந்தால் எப்படி?
கருங்கல் இதயமா உங்களுக்கு?
வித்தகன் நானென்று இன்னும் எத்தனை முறை
சத்தமாய்ச் சொன்னால் ஒப்புக்கொள்வீர்கள்?
சத்தியமாய் தலையசைக்கமாட்டீர்களா ஆமென்று?
சிரிப்பை வேறு அடக்கிக்கொள்கிறீர்களா?
பொறுங்கள் -
உங்களைப் பழித்துக் கிழிகிழித்து
இதோ ஒரு தரவிமர்சனம் தயாராகிக்கொண்டிருக் கிறது.


Saturday, May 11, 2019

காணெல்லைக்கப்பால்..... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*தனிமொழியின் உரையாடல் தொகுப்பிலிருந்து)

காணெல்லைக்கப்பால்.....
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

(*தனிமொழியின் உரையாடல் தொகுப்பிலிருந்து)

                  
தன் உருப்பெருக்கிக் கண்களை யுருட்டியுருட்டி
யென்னைத் தீவிரமாய்க் கண்காணித்துக்
கொண்டிருந்தாள்
மொத்தமா யென்னை ஒரு பொட்டலத்தில் மடித்துக் கட்டும் விருப்பத்தில்.
என் ஒவ்வொரு அசைவையும் ஆனமட்டும் அலசியலசி
அவளுடைய தொலைக்காட்சிப்பெட்டி தந்துகொண்டிருந்த
இலவச சோப்புகளெல்லாம் கரைந்துபோய்க்கொண்டிருந்தன.
அத்தனை அகலமாய் விழிகளை விரித்தால் எதுவும் தப்பாது என்று
என்னவொரு அபத்தமான நம்பிக்கை.
ஊடுகதிர்களுக்குத் தப்பியதொரு ரத்தக்கட்டி
யுள்ளே எங்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கலாம்....
அங்கங்கே சில நரம்புகள் வெட்டுப்பட்டுக் கிடக்கலாம்...
என் கடந்தகாலத்தின் துண்டுதுணுக்குகள்
மூளையின் எப்பக்கக் கிடங்கில் குவிந்திருக்கின்றன தெரியுமா?
என் உடலெங்கும் பாய்ந்துகொண்டிருக்கும் குருதியின்
எத்தனை விகிதம் என் வருங்காலம் என்று
பிரித்துக்காட்ட இயலுமா?
என் மூச்சுக்காற்றில் மண்டிக்கிடக்கும்
மொழியா வார்த்தைகளைக் கணக்கிட்டுக் கூற முடியுமா...?
மனிதர்களைப் பண்டங்களாய் நிறுத்துப்பார்ப்பதை நிறுத்தினால்
எத்தனை நன்றாயிருக்கும்
என்றால், இவர்களுக்கு என்றாவது புரியுமா....?

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் (kindle books) தனிமொழியின் உரையாடல் - ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்   
(kindle books) 

தனிமொழியின் உரையாடல் 
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 
சமீபத்திய கவிதைத்தொகுப்பு



ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் (kindle books) - போகிற போக்கில்....(கவிதைகள்)

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்   
(kindle books) 
- போகிற போக்கில்....(கவிதைகள்)


ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் (kindle books) - RAIN BEYOND & OTHER POEMS

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் 
(kindle books)
(www.amazon.com)/books/latha Ramakrishnan (or) Anaamikaa Alphabets

RAIN BEYOND & OTHER POEMS


ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் 1. FLEETING INFINITY (A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள் 
(kindle books)
(www.amazon.com)/books/latha Ramakrishnan (or) Anaamikaa Alphabets


1. FLEETING INFINITY
(A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY 

Thursday, May 2, 2019

ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்


ANAAMIKAA ALPHABETS மின் -நூல்கள்
(www.amazon.com)
லதா ராமகிருஷ்ணன்
 வணக்கம்.


நண்பர்கள் நிறைய பேர் FLEETING INFINITY இரு மொழிக் கவிதைத் தொகுப்பை மின் – நூலாக வெளியி டுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.

ஒருமுறை ‘வாட்ஸ் அப்’ என்று ஒருவர் கூறியபோது  “ஒன்றுமில்லையே” என்று நான் பதிலளித்ததுண்டு. (ஆங்கிலத்தில் ‘What's up?'’ என்றால் என்ன விஷ யம்என்ன நடக்கிறது என்பதாகப் பொருள்).

ஒவ்வொரு எழுத்தாகத் தான் கணினியில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டேன்எப்போதோ படித்த லோயர் டைப்ரைட்டிங்’ ஓரளவே உதவியதுதேவை சார்ந்தும்நிஜமான ஆர்வத்தோடும் கற்றுக் கொண்டதில் இன்று கணினியைக் கையாள்வதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.

 ஒரு சில நண்பர்களிடம் கிண்டில் நூல் செய்துதரும்படி கேட்டுக் கொண்ட போதிலும்நாமே கற்றுக்கொள்வதே நீண்ட காலப் போக்கில் உதவிகரமாக அமையும் என்ற எண்ணமும் வலுவடைந்தவாறே இருந்தது.


\இறுதியில் ஒருவழியாக நானே சுயமுயற்சியில் FLEETING INFINITY யையும் என்னுடைய வேறு சில நூல்களையும் ‘கிண்டில்’ புத்தகங் களாக பதிவேற்றி விட்டேன்சரியாக வந்திருக்கிறதாதெரியவில்லைகிண்டில் என்னிடம் இல்லையாராவது பார்த்துச் சொன்னால் உதவியாயிருக் கும்தமிழ் நூல்களை Paper back நூல்களாக வெளி யிட இயலாதென்று தெரிவிக்கிறார்கள்.


 அமேஸான் – கிண்டில்ஒரு புத்தத்தைப் பதிவேற்ற நிறைய நேரம் ஆகிறதுபோகப்போக இன்னும் சுலபமாகிவிடலாம்.


நான் கிண்டில் புத்தகத்தை ஒரேயொரு தரம் தான் பார்த்திருக்கிறேன்மற்றபடி அதன் நெளிவு சுளிவுகள் எதுவும் தெரியாது.



 புதுப்புனலுக்காக ருக்லதா என்ற பெயரில் மைலி என்ற கடற் குதிரையை மையமாக வைத்து சிறுவர் கதைகள் எழுதிவந்தேன்அவற்றில் மூன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கிண்டில் புத்தகமாகவும்அமேஸான் அச்சுப் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறேன்.




அச்சுப் புத்தகத்திற்கு அவர்கள் வைக்கும் விலை சில நூல்களுக்கு மிக அதிகமாக இருக்கிறதுஎன்ன காரணம் தெரியவில்லைஇந்த நூல்களினால் என்ன வருவாய் கிடைக்கும் என்று தெரியவில்லை.

உரிமம் என்றெல்லாம் நிறைய உறுதி செய்யப்பட்டிருப்பினும் நம்முடைய கிண்டில் நூல்கள் நம்முடையதாகவே இருக்க வழியுண்டா என்ற கேள்வியும் தொடர்கிறது.