லதா ராமகிருஷ்ணன்
நண்பர்கள் நிறைய பேர் FLEETING INFINITY இரு மொழிக் கவிதைத் தொகுப்பை மின் – நூலாக வெளியி டுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
ஒருமுறை ‘வாட்ஸ் அப்’ என்று ஒருவர் கூறியபோது “ஒன்றுமில்லையே” என்று நான் பதிலளித்ததுண்டு. (ஆங்கிலத்தில் ‘What's up?'’ என்றால் என்ன விஷ யம்? என்ன நடக்கிறது என்பதாகப் பொருள்).
ஒவ்வொரு எழுத்தாகத் தான் கணினியில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டேன். எப்போதோ படித்த லோயர் டைப்ரைட்டிங்’ ஓரளவே உதவியது. தேவை சார்ந்தும், நிஜமான ஆர்வத்தோடும் கற்றுக் கொண்டதில் இன்று கணினியைக் கையாள்வதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.
ஒரு சில நண்பர்களிடம் கிண்டில் நூல் செய்துதரும்படி கேட்டுக் கொண்ட போதிலும், நாமே கற்றுக்கொள்வதே நீண்ட காலப் போக்கில் உதவிகரமாக அமையும் என்ற எண்ணமும் வலுவடைந்தவாறே இருந்தது.
\இறுதியில் ஒருவழியாக நானே சுயமுயற்சியில் FLEETING INFINITY யையும் என்னுடைய வேறு சில நூல்களையும் ‘கிண்டில்’ புத்தகங் களாக பதிவேற்றி விட்டேன். சரியாக வந்திருக்கிறதா, தெரியவில்லை. கிண்டில் என்னிடம் இல்லை. யாராவது பார்த்துச் சொன்னால் உதவியாயிருக் கும். தமிழ் நூல்களை Paper back நூல்களாக வெளி யிட இயலாதென்று தெரிவிக்கிறார்கள்.
அமேஸான் – கிண்டில். ஒரு புத்தத்தைப் பதிவேற்ற நிறைய நேரம் ஆகிறது. போகப்போக இன்னும் சுலபமாகிவிடலாம்.
நான் கிண்டில் புத்தகத்தை ஒரேயொரு தரம் தான் பார்த்திருக்கிறேன். மற்றபடி அதன் நெளிவு சுளிவுகள் எதுவும் தெரியாது.
புதுப்புனலுக்காக ருக்லதா என்ற பெயரில் மைலி என்ற கடற் குதிரையை மையமாக வைத்து சிறுவர் கதைகள் எழுதிவந்தேன். அவற்றில் மூன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கிண்டில் புத்தகமாகவும். அமேஸான் அச்சுப் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறேன்.
அச்சுப் புத்தகத்திற்கு அவர்கள் வைக்கும் விலை சில நூல்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. என்ன காரணம் தெரியவில்லை. இந்த நூல்களினால் என்ன வருவாய் கிடைக்கும் என்று தெரியவில்லை.
உரிமம் என்றெல்லாம் நிறைய உறுதி செய்யப்பட்டிருப்பினும் நம்முடைய கிண்டில் நூல்கள் நம்முடையதாகவே இருக்க வழியுண்டா என்ற கேள்வியும் தொடர்கிறது.
No comments:
Post a Comment