LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 9, 2025

அன்னா அக்மதோவாவின் கவிதை - 19 - நான் கவிதை எழுதும்போது

 அன்னா அக்மதோவாவின் கவிதை

- 19

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்.
(*முதல் வரைவு)
நான் கவிதை எழுதும்போது

அரூப மனவெழுச்சியால் ஆரத்தழுவப்படும்போது
நான் விண்ணுக்கும் மண்ணுக்குமான இணைப்புப்பாலம்,
படைப்பாக்கத்தின் உயர்-விழுமியங்களாக இதயம் கொள்ளும் அனைத்திலும்
ஆட்சிபீடத்தில் நான், ஒரு கவிதையோடு சுவாசித்திருக்கும்போது!
என்னுடைய ஆன்மா அதை விரும்பினால்,
அன்பின் தேவதையே,
மென்ரீங்காரத்துடன், இளரோஜாநிறக் கடல்
கனவுமயமான அலை கனவுமயமான தரையை அடைய
அதைத் தூக்கிசென்றுகொண்டிருக்கும்
அமைதியான கடலோர இசைக்குழுவைக்
கேட்கத் தருவேன் உனக்கு.
என்னால் எல்லாமே செய்யமுடியும், என்னை நம்பு அதுபோதும்:
நான் அதிவலிமையானவள்;
கருணைக்கும் காதலுக்குமான வேர்கள் என்னிடமுள்ளன;
நான் விரும்பினால், மேகங்களிலிருந்தும் மின்னலிலிருந்தும்
விண்ணிலிருக்கும் உன் இன்படுக்கைக்கு போர்வை தயாரிப்பேன்.
மேலும், அன்பே, வெகு சிறப்பான மிகப் பிரத்யேகமான
ஒரு சொல்லை உருவாக்குவேன் _
உலகனைத்தின் விதிகளை மாற்றிவிடுவதாய்,
தனதேயான கொண்டாட்டத்தை மீண்டும் வரவழைப்பதாய்
இரவின் குளிர்வில் சூரியன் விழுவதைத் தடுத்துநிறுத்துவதாய்.
நான் முழுக்க முழுக்க வேறொருவர், என் கவித்துவ மனவெழுச்சியில்.
நான் விண்ணுக்கும் மண்ணுக்குமான இணைப்புப்பாலம்,
படைப்பாக்கத்தின் உயர்-விழுமியங்களாக இதயம் கொள்ளும் அனைத்திலும்
ஆட்சிபீடத்தில் நான், ஒரு கவிதையோடு சுவாசித்திருக்கும்போது!

When I Write Poems
When I'm embraced by airy inspiration,
I am a bridge between the sky and earth.
Of all what heart high-values in creation
I am a king, when breathing with a verse!
Just if my soul wishes it, my fairy,
I shall give you the peaceful coast band,
Where, with a hum, the pinky sea is carrying
The dreaming tide to reach the dreaming land.
I can do all, just trust in me: I'm mighty;
I have the roots for kindness and for love;
And if I want, from clouds and from the lightning
I'll make a cover your sweet bed above.
And I can, dear, create a word such special,
That it would change laws of the whole world,
To call again its own celebration
And stop the sun from fall in the night cold.
I'm all another in my inspiration,
I am a bridge between the sky and earth.
Of all what heart high-values in creation
I am a king, when breathing with a verse!
Anna Akhmatova

அன்னா அக்மதோவாவின் கவிதை - 18 - இடி

 அன்னா அக்மதோவாவின் கவிதை - 18

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்

இடி

அப்பொழுது அங்கே இடியிடிக்கும். என்னை நினைத்துக்கொள்.
‘அவள் சூறாவளிகளைக் கேட்டாள்’ என்று சொல்.
உலகம் முழுவதும் மாணிக்கக்கல்லின் நிறத்திற்கு மாறிவிடும்
உன்னுடைய மனம், முன்பைப்போலவே, நெருப்பாகும்.
இறுதியாக விடைபெற்றுக்கொண்டு
என் நிழலை இங்கே ஆகாயத்தில் விட்டுவிட்டு
நான் காண ஏங்கிக்கொண்டிருந்த
விண்ணுலகம் ஏகும் கணம்
அன்று, மாஸ்கோவில், ஒரு மெய்யான முன்னுரைத்தலின் தீர்க்கதரிசனம்.

THUNDER
There will be thunder then. Remember me.
Say ‘ She asked for storms.’ The entire
world will turn the colour of crimson stone,
and your heart, as then, will turn to fire.
That day, in Moscow, a true prophecy,
when for the last time I say goodbye,
soaring to the heavens that I longed to see,
leaving my shadow here in the sky.

Anna Akhmatova

அன்னா அக்மதோவாவின் கவிதை - 17 - மரணம்

 அன்னா அக்மதோவாவின் கவிதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்
*முதல் வரைவு)

மரணம்
(1)

திருத்தமான பெயர் எதுவுவில்லாத
ஏதோவொன்றின் விளிம்பிலிருந்தேன் நான்
தவிர்க்கமுடியாததொரு அரைமயக்கநிலை,
தன்னைத்தான் தவிர்த்தலாய்…..

(2)

ஏதோவொன்றின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருக்கிறேன்
எல்லோருக்கும் நேர்வதுதான் – ஆனால் இதன் விளைவு வேறு
இந்தக்கப்பலில் எனக்கென்று தனியறை இருக்கிறது
என் பாய்மரத்தில் காற்றிருக்கிறது
மற்றும் என் தாய்நாட்டிடம் விடைபெற்றுக்கொள்ளும்
அந்தக் கொடூரமான கணமும் இருக்கிறது.

உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

 உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)
கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே.
கதையா? அதே யதே – சபாபதே.
கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே
மதிப்புரை யெழுத ?
பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான
மொத்தம் 500 போல் வெள்ளைத்தாள்களில்
விரைவோவிரைவில் வெளியாகிவிடும்
கெட்டி அட்டையிட்ட
புத்தம்புதிய புத்தகமாய்.
விமர்சனம் செய்வதென்றால் எனக்கு ஏற்படும் பரவசம்
சொல்லிமாளாது.
நாட்கணக்காய் எழுதுவேன், யாரும் கேட்கா விட்டாலும்.
யார் சொல்லி வீசுகிறது காற்று?
நேற்றும் இன்றும் நாளையும்
ஊற்றெனப் பொழிந்துகொண்டேயிருப்பேன்
ஊத்தை கர்வத்தில் ஊதிப்புடைத்த என்
நாத்தம்பிடித்த அரைவேக்காட்டுக் கருத்துரைகளை.
நாடகமா
ஆடிப்பாடுவேன் அத்தனை பாத்திரமாகவும்.
சூத்திரம் இதுவே நான் சகலகலாவல்லவனாக
நான் எழுதுவதில் எதுவும் தேறாதா?
வாராயென் தோழி வாராயோ எனவழைத்தால்
பேர் பேராகப் போற்றப் பலர் உண்டு
போரூரிலிருந்து ரோமாபுரி வரை
ஊரூராகப் போய்ப் புதுப்புதுப் பட்டியல்களை வினியோகித்து
காரசாரமாய்ப் பேசுவேன் உங்கள் எழுத்து
உரமற்றது; கண்றாவி யென்று
கன்றுகுட்டியாகவே இருக்கவேண்டும் நீங்கள் காலமெல்லாம் நானே தாய்ப்பசுவாம்
பேர் சொல்ல ஒரேயொரு பிள்ளை நான்
_ இலக்கியத்திற்கு. அப்போதும் எப்போதும்
புரிந்துகொண்டால் நல்லது. அல்லது
புல்லுருவிப் படைப்பாளி என்ற பட்டத்தைச் சுமக்கத் தயாராக இருங்கள். சொல்லிவிட்டேன்.
கலங்கி நிற்கக் கற்றுக்கொள்ளாமலிருந்தால் எப்படி?
கருங்கல் இதயமா உங்களுக்கு?
வித்தகன் நானென்று இன்னும் எத்தனை முறை
சத்தமாய்ச் சொன்னால் ஒப்புக்கொள்வீர்கள்?
சத்தியமாய் தலையசைக்கமாட்டீர்களா ஆமென்று?
சிரிப்பை வேறு அடக்கிக்கொள்கிறீர்களா?
பொறுங்கள் -
உங்களைப் பழித்துக் கிழிகிழித்து
இதோ ஒரு தரவிமர்சனம் தயாராகிக்கொண்டிருக் கிறது.


n

நோய்த்தொற்று - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நோய்த்தொற்று

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கொரோனா காலத்திலும்
தன் கோணல்பார்வையையும்
கேடுகெட்ட ஆணவத்தையும்
குறுக்குபுத்தியையும்
கிண்டல் சிரிப்பையும்
குத்தல்பேச்சையும்
குசும்புத்தனத்தையும்
கொஞ்சமும் விடாதவர்
’கொரோனாவை விடக் கடுமையான வைரஸ்
நானே’ என்று
கண்ணில் பட்டவரிடமெல்லாம் கர்வப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

நிகழ்த்துகலை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிகழ்த்துகலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு கட்சிக்கு கொள்கை யிருக்கிறதோ இல்லையோ
கொள்கைப்பரப்புச் செயலாளர்(கள்) கட்டாயம் தேவை.
எத்தனைக்கெத்தனை அதிகம் ’கொபசெ’க்கள் இருக்கிறார்களோ
அத்தனைக்கத்தனை அந்தக் கட்சி
சத்தான முத்தான கெத்தான கட்சியாகக்
கொள்ளப்படும்.
ஒரு கொபசெவுக்கான அடிப்படைத் தகுதி
ஒரே விஷயத்திற்காகத்
தனது கட்சியை வானளாவப் புகழ்ந்து
எதிர்க்கட்சியை ஆனமட்டும் இகழ்ந்து
அதலபாதாளத்தில் வீசியெறிவது.
ஒரு கட்சியின் கொபசெ நியமனத்தையும்
நியமனமான கொபசெவையும்
கொச்சையாய் எள்ளியவாறே
தன் கட்சிக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும் கொபசெவை
எங்கிருந்தும் இழுத்துவர
வலைவீசித் தேடிக்கொண்டிருப்பதே தலைமைக்கு அழகு.
ரௌத்ரம் பழகு
தேவையான இடங்களில் ஒரு துருப்புச்சீட்டாகப்
பயன்படுத்த மட்டும்.
எட்டுத்திக்குமுள்ள படைப்பாளிகள்
அரசியல் பேசாமலிருக்கப்போமோ?
எனில் _
அரசியல் பேசுவதில் அரசியலிருக்கலாமோ?
அறச்சீற்றத்தோடு அரசியல் பேசினால் - சரி
ஆதாயத்திற்காகப் பேசினால் –
அது ஒரு மாதிரி…..
கடித்துத்துப்புவதாய் சில வார்த்தைகளை
உதிர்க்கத் தெரிந்தால்
கலகக்காரர்களாகிவிடல் எளிது;
சில கவிஞர்களும் கொபசெக்களாக மாறிவரும் காலமிது.


Like
Comment
Share