LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 20, 2025

சொல்லாமலிருக்க முடியவில்லை..... 1........ latha ramakrishnan

 சொல்லாமலிருக்க முடியவில்லை..... 1

சொன்னால் வம்பு. ஆனால் சொல்லாமலிருக்க முடியவில்லை.

நவீன தமிழ்க்கவிதையின் பிரதிநிதியாக உள்ளூர், மாநில, தேசிய , சர்வதேசிய கருத்தரங்குகள், கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முக்கிய இலக்கியப் பிரமுகர்கள் பெரும்பாலும் போன இடத்தில் தாங்கள் தங்களை மட்டுமாகவும், மற்ற பங்கேற்பாளர் களுடன் சேர்ந்தும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுகிறார்கள், அதிகம் போனால் தங்களுடைய உரையைக் காணொளியாக வெளியிடுகிறார்கள்.
மற்றபடி, இலக்கிய நிகழ்வில் நடந்தேறிய இலக்கிய நிகழ்வுகள் பற்றிப் பேசுவதேயில்லையே - ஏன்?

                  சொல்லாமலிருக்க
முடியவில்லை..... 2


Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
சொல்லாமலிருக்க முடியவில்லை.... 3
மனமொப்பி உடலுறவுகொள்வதும் பாலியல் வன்கொடுமையும் ஒன்றல்ல என்று சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பணியிடங்களில் பாலியல் சீண்டல், அத்துமீறல்களெல்லாம் சட்டப்படியான குற்றங்களே. ஆனால், ஊடகங்கள் திரு.சீமானைக் குதறியெடுக்கின்றன. தன் அக்காவைப் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும் நடிகை விஜயலட்சுமியை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்கின்றன.
அதற்கு பதிலாக அவருக்குத் தங்கள் ஒளி ஊடகங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு த…
See more
All reactions:
ஆத்மாஜீவ், Aasu Subramanian and 1 other
Like
Comment
Send
Share
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
சொல்லாமலிருக்க முடியவில்லை.... 2
ஜல்லிக்கட்டுப் போட்டியில் நேற்றுகூட ஓர் இளைஞர் இறந்துபோயிருக்கிறார். இதுவரை ஜல்லிக்கட்டில் பங்கேற்ற, ஜல்லிக்கட்டைப் பார்க்கவந்த பலர் இறந்துபோயிருப்பதாகவும், காயமடைந்திருப்பதாகவும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் தகவல்கள் கிடைக்கின்றன.
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டாகப் பேசப்படுகிறது. அப்படியெனில் அதில் ஏன் மக்களாட்சி மண்ணிலிருக் கும் அரசர்களும், அரசகுமாரர்களும், பிரபுக்களும், பிரமுகர்களும் பங்கேற்பதில்லை?

வீரவணக்கம்! ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வீரவணக்கம்!

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

போர்க்களமென்ற திட்டவட்டமான நிலவரையறை களில்லாமல்
நியதிகளில்லாமல், நெறிகளென்று எதுவுமே யில்லாமல் _
காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படையென்று விதவிதமாய் காசைக்கொண்டு கட்டமைத்த படைகள், வியூகங்கள், ஆயுதங்களைக் கைக்கொண்டு _
அறவான் அப்பிராணியாய் போய்க்கொண்டிருப்போர்தம்
முதுகையே மார்பாக்கி மூர்க்கமாய் குத்திக்கிழித்து _
மன்னர் மாமன்னர் மகாசக்கரவர்த்தியாய் முடிசூடிக்கொள்ளும் அற்பப்பதர்களை அடித்து வீழ்த்தி
அதிகம் பதறச்செய்யுமோர் வீரனை
வெள்ளித்திரையிலோ சின்னத்திரையிலோ பார்த்தாலே
விஸிலடிக்கத்தோன்றும்; மனம் விகசித்துப்போகும்!
நாம் வாழுங்காலத்தே நகமும் சதையுமாய்
நம்மைப்போல் ஒருவரை யத் திறமா யிங்கே
காணக்கிடைப்பதொரு நல்வினையாக.....
அன்னார் பெயர் விக்கிரமனோ வேதாளமோ ஆலாலசிங்கமோ ஆதித்தநல்லனோ…..என்னவாயிருந்தா லென்ன….!
’நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்’ என
நியாயத்தின் பால் நின்று, அக்கிரமக்காரர்களை யெவர் எதிர்த்தாலும்
அவர் வணக்கத்திற்குரியவர்!
இறுதிவார்த்தை யெனதென்ற மமதையில் அரியாசனத்திலிருக்கும்_
எதிர்க்கத் துணிபவரை நிலவறையிலடைத்து, அல்லது
கழுவேற்றி அல்லது கூலிப்படையை ஏவி நையப்புடைத்து
கைகாலைக் காணமலாக்கி, சித்திரவதை செய்தபடி,
சிரத்சேதம் செய்தபடியிருக்கும் _ கொடுங்கோலனைப் பார்த்து
சரிசரியெனத் தலையாட்டாமல், சிரி சிரியென
வயிறுவலிக்கச் சிரிப்பதோடு மட்டுமல்லாமல் _
இறுதித்தீர்ப்பு கொடுங்கோலனுடையதாக இருக்கலாகாது
நியாயத்திற்காக நிற்கும் ஒரு சாதாரணனுடையதே அது
என நிறுவ பகலும் இரவும் அழுக்குப்பழிச் சேறுதாங்கி
வழுக்குப்பாறை பல விழச் செய்தும் தளராமல் _
ஏழு கடல் ஏழு மலைகளைத் தன்னந்தனியாய்க்
கடந்துபோய்க்கொண்டிருக்கும் சகவுயிரைக் காண
என்ன தவம் செய்தனையோ என் நெஞ்சே! என் நெஞ்சே!

கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும்சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்.......

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச்
சொல்லும்போதே
அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது.
இன்னொரு மேம்பட்ட உலகிற்குள்
அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது.
அந்தப் புதினத்தின் இரண்டு கதாபாத்திரங்களின்
பெயர்களை
அவர் குறிப்பிடும் விதம்
பிஞ்சுக் குழந்தையை அதிசயமாய்ப் பார்த்து
அத்தனை பத்திரமாய் ஏந்துவதைப்
போலிருக்கிறது.
கதையில் வரும் காடு குறித்து
அவர் பேசும்போது
அதில் வாழும் சிங்கராஜாவும்
ஊறும் நத்தையுமாகிவிடுகிறார்!
அந்த நதிக்கரையில் பொழியும் மழையை
அப்படி நனைந்து நனைந்து
விவரிக்கிறார்!
அந்தக் கதையை எழுதியவரின் பெயரை
மந்திர உச்சாடனம் செய்வதாய்
உச்சரிக்கிறார்!
இன்னொருவர் அதே படைப்பின் பெயரை
சொல்லும் விதமே
அவருடைய அதி மேலோட்டமான வாசிப்பை
அல்லது அறவே வாசிக்காத அப்பட்டமான உண்மையை
அடிக்கோடிட்டுக் காட்டிவிடுகிறது.
அவர் அந்தக் கதை குறித்து முன்வைக்கும்
சொற்களெல்லாம்
ஒப்பனை செய்யப்பட்ட உணர்ச்சிப்
பெருக்கையும் மீறி
முள்ளங்கிபத்தை முசுக்கொட்டை
முப்பத்தியாறு மொள்ளமாரி யென்பதாய்
மேம்போக்காய் ஒரு தொடர்புமற்று
இறைந்து சிதறுகின்றன
குப்பைக்கூளமாய்.
’இதற்கு பதில், என்னைப் படிக்கவில்லை
என்று சொல்லியிருந்தால் போதுமே –
அது உனக்கும் கௌரவமாக
எனக்கும் கௌரவமாக
இருந்திருக்குமே’ என்று_
’இந்தக் கொள்ளைநோயிலிருந்து
நமக்கு நிவாரணம் கிடைக்க
வழியேயில்லையா
என்ற அங்கலாய்ப்போடு
தனக்குள் சொல்லிக்கொள்வதுபோல்
அதோ, அந்த நூல்....All reaction

கல்லூரி காலத்தில் எழுதிய கவிதைகள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 கல்லூரி காலத்தில் எழுதிய கவிதைகள் 

லதா ராமகிருஷ்ணன்

//2019 , MARCH 20 - மீள்பதிவு//

பள்ளி கல்லூரி நாட்களில் பிரபலமான இந்தித் திரைப்படப் பாடல்களின் மெட்டில் தமிழில் பாட்டெழுதிப் பாடுவது வழக்கம். . (அப்போதெல்லாம் நான் எனது என்று எண்ணுவதே பாவ காரியம் என்ற நினைப்பு வேறு மனதில் நெருடிக்கொண்டே யிருக்கும்!) அப்படி எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. ‘தேரா மேரா மேரா தேரா என்று தொடங்கும் பாடலின் மெட்டில் எழுதப்பட்டது. எங்கும் எழுதிவைக்கவில்லை. ஆனால், இப்போதும் மனப்பாடமாய் சொல்லமுடிவது ஆச்சரியமாக இருக்கிறது – லதா ராமகிருஷ்ணன்.

1. என்னில் உன்னை உன்னில் என்னை......

என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்தால்
என்றும் நன்மையாகும் –
மனப்புண்கள் ஆறிப்போகும்.
நீயும் நானும் பூவும் நாரும்
காயும் வேரும் என்றிணைந்தால்
நம் பலம் அதிகமாகும் -
நாம் எண்ணினால் நடந்தேகும்...

(என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்…….)

ஆதியந்தம் நாமறியோமே
வேதனைகள் நிறைய வருமாமே
பாதையிலும் காலில் முள் இடறும்
காதலிலும் தோல்வி பின் தொடரும்
அதனா லென்ன நெஞ்சமே –
பகலிரவே பிரபஞ்சமே

(என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்…….)

ஏன் எதற்கு என்று கேட்போமே
நாண(ந)யமும் துணிவும் காப்போமே
ஆனவரை நன்மை செய்வோமே
ஆணவம் முன் அடிபணிந்திடோமே
கானம் பாடு நெஞ்சமே
மானுடமே ஆனந்தமே...!

என்னில் உன்னை உன்னில் என்னைக்
கண்டு தினம் அன்பு செய்வோம்……


2.ஏங்கித் தூங்கி யெந்நாளும்
ஏங்கித் தூங்கி யெந்நாளும் வாழ்ந்திருக்
கின்றோம் - வாழ்விதா?
எத்தனை நாள்தான் இவ்வாறே வாழப்போகின்
றோம் - தோழர்காள்?
விழித்தெழுவோம் வழியமைப்போம்
விதைவிதைத்தே கதிரறுப்போம்!
போகும் பாதை யெங்கிலும்
சோதனைகள் பொங்கிடும்…..
வேதனைகள் சேர்ந்திடும்….
சோர்ந்துபோக நேர்ந்திடும்….
அட, இரவின் பின் பகல் உண்டென்றே
அறிந்திடுவோமே நாமே –
மனமே விளக்காம்-
முன்னேறுவோம்.. (ஏங்கித் தூங்கி)
தேசமெங்கும் தரித்திரம்
வேஷந் தாங்கும் நரித்தனம்
ஜோசியத்தில் திருமணம்
காசுதானே உறவினம்
அட, யோசித்தால் விசுவாசித்தால்
இம்மாசுகள் விலகாதா
வாசம் இங்கேயும் வீசாதா (ஏங்கித் தூங்கி)