LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 25, 2022

பாடகனின் அநாதிகாலம்! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாடகனின் அநாதிகாலம்!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)

எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே

என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்

மேடையில்.....

காதல் என்று அவன் பாடுவது எனக்குக்

காலம் என்பதாய் குழம்புகிறது.

அவனை மாற்றியிருக்குமோ காதல்?

ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது?

எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில்

மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.

சமயங்களில் சுருதி பிசகுவதாய்த் தோன்றுகிறது.

குரலில் கரகரப்பு கூடுகிறது.

ஆனாலும் அவனுடைய ஆனந்தத் துள்ளலில்

கரடிக்குட்டியும் முயலும் சின்ன பப்பியும்

செல்லப் பாப்பாவும் வரக் காண்பது

சொல்லிலடங்கா சூட்சும தரிசனமாய்…!

இசையின் உன்மத்தநிலையில்

சூரிய சந்திரராய் சுடர்விடும் அந்த விழிகள்

அனந்தகோடிமுறை அருள்பாலிக்கின்றன!

'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே'

என்று அழைக்கும் அந்தக் குரல்

கண்ணனுடையதாக _

கிறங்கிக்கிடக்கும் கோபியர் கூட்டம்

பாலினங் கடந்து!

வியர்வையில் நனைந்த முதுகுப்புறச் சட்டையும்

முன்நெற்றி முடிச்சுருளுமாய்

அந்தப் பாடகனின் குரல்

அநாதி காலத்திலிருந்து கிளம்பி

அரங்கில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.

மேடையிலிருந்த வாத்தியக்காரர்களெல்லாம்

அவனுடைய பிரதிபிம்பங்களாய்….

அல்லது, அந்தப் பாடகன் அவர்களுடைய

விரல்களனைத்தின் ஒற்றைக்குரலாய்....

பாடலை எழுதிய, இசையமைத்த

கைகளும் மனங்களும்

தனி அடையாளம் இழந்து அந்தக் குரலில்

இரண்டறக் கலந்து

ஈரம் நிறைக்கும் இசையில்

அரங்கமெங்கும் க்வாண்ட்டம் அணுக்களாய்

விரவிய ரசிகர்களின்

காலம் இல்லாமலாகியது.

அன்பின் குறுக்குவழி அல்லது சுற்றுப்பாதையின்

அரூப ஓவியங்களைத் தீட்டிமுடித்து

அவன் விடைபெற்றுக்கொள்ளும்போது

அரங்கிலுள்ளோர் எழுந்து நின்று கைதட்டி

அவனை அத்தனை அன்போடு

வழியனுப்பிவைக்கிறார்கள்.

நான்கு சுவர்களுக்குள் ஒரு பிரபஞ்சவெளியை

உருவாக்கித்தந்தவனுக்கு

என்னவென்று நன்றிசொல்வது என்று தெரியாமல்

நீர் தளும்பி வழிகிறது கண்களிலிருந்து.

 

கவிதையாதல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  கவிதையாதல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


நாடுமல்ல காடுமல்ல நான் கவிதை
யென்றது;
நரி காகம் கதையல்ல நான் கவிதை
யென்றது;
நான்குவரித் துணுக்கல்ல நான் கவிதை
யென்றது;
நீள நீள மறுமொழியல்ல நான் கவிதை
யென்றது;
நிறையக் கேட்டுவிட்ட தத்துவமல்ல நான் கவிதை யென்றது;
நான்குமறைத் தீர்ப்பல்ல நான் கவிதை யென்றது;
நான்கு பழமொழிகளின் திரட்டல்ல நான்
கவிதை யென்றது;
நச்சென்ற எதிர்வினையல்ல நான் கவிதை யென்றது;
நாக்கால் மூக்கைத் தொடுவதல்ல நான் கவிதை
யென்றது;
நாய்வால் நிமிர்த்தலல்ல நான் கவிதை யென்றது;
நன்றியுணர்வோ நபும்சகமோ அல்ல நான் கவிதை யென்றது;
நகையின் இருபொருளுணர்த்தலல்ல நான் கவிதை யென்றது
நல்முத்துமணியணிக்கோலமல்ல நான் கவிதை
யென்றது
நவரத்தின மயிற்பீலியல்ல நான் கவிதை
யென்றது
நட்சத்திரங்களின் எண்ணிக்கையல்ல நான் கவிதை யென்றது
நிலவின் துண்டங்களல்ல நான் கவிதை யென்றது
நல்லது நல்லது சொல் சொல் இன்னும் சொல்
என்றதற்கு
’ந’விலேயே வரிகளெல்லாம் தொடங்குவதல்ல கவிதை யென்றது சொல்லிச் சென்றது.
நாணித் தலைகுனிந்தென் கவிதை (நற்)கதி யிழந்து நின்றது.

விளம்பர யுகம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 விளம்பர யுகம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


அரதப்பழசுக் கதையை

அசல் புதுக்கதையைப்போலவே


ஆனமட்டும் எழுதப்பார்த்தும்


முடியாமல் போனதில்


மனமொடிந்துபோன ‘மகாமெகா’


எழுத்தாளரிடம்


ஒரு சகாவாய்


கனிவாய் பார்த்து


கண்சிமிட்டிச் சிரித்தபடி

சொன்னதொரு


அசரீரி:


அட, அழலாமா இதற்கெல்லாம்?


அன்றுமில்லை என்றுமில்லை


அதிபுதிய கதை இங்கே இன்று


என்று


ஆறு ஆள் உயர அல்லது அறுபது


ஆள் உயர


AD ஒன்று கொடுத்துவிட்டால்


போதுமே


அதன்பின் உன் கதையே புத்தம்புதி


தெப்போதுமே….


அது சரி அது சரி


ஆ சிரி சிரி சிரி சிரி….

காலத்தால் அழியாத காலரைக்கால் கவிதை! _ ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 காலத்தால் அழியாத 

காலரைக்கால் கவிதை!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

காலரைக்கால் கவிதையைக் கிறுக்கிமுடித்தபின்

காட்மாண்டுவிலொரு அறிமுகவிழாவும்

காணொளியிலொரு வர்ணமய வாசிப்பும்

கிட்டத்தட்ட ஐம்பதுபக்கங்களில்

பட்டுத்துணியில் கட்டப்பட்ட கட்டுரைகள் எட்டும்

கிட்டும்படி செய்தும்

அவை போதாதென்ற திட்டவட்டமான புரிதலுடன்

ஆறுவருடங்கள் கழித்து ஆரம்பமாகப்போகும்

தொன்றுதொட்ட முதல் இன்றைய கட்டம்வரை

சுட்டும்

தமிழிலக்கியத்திற்கான தொலைக்காட்சி சேனலின்

’லோகோ’விலும் அதை இடம்பெறச்செய்ய

ஆனமட்டும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்

ஆனானப்பட்ட கவி யவர்.

 

 

வேண்டுகோள் புதுப்புனல் பதிப்பகத்திடமிருந்து

 வேண்டுகோள்

புதுப்புனல் பதிப்பகத்திடமிருந்து

வணக்கம். கொரோனா காலகட்டம் அச்சுத்துறை யிலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப் பதை அனைவரும் அறிவோம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியும் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. அதில் புதுப் புனல் அரங்கமைப்பதற்காக செலுத்திய கட்டண மும் சரி, அந்த அரங்கில் காட்சிப்படுத்துவதற் கான அவசர அவசரமாக அச்சிட்ட சில நூல்களும் சரிகடன் வாங்கிச் செய்தது.

எனவே, நன்கொடையாகவோ நூல்களை வாங் கியோ எங்களுக்கு உதவவேண்டுமென்று உங் களை கேட்டுக் கொள்கிறோம்.

இப்போது வெளியிடவுள்ள சில நூல்களுக்கு முன்பணம் செலுத்த முடிந்தவர்கள் எங்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம்.

அவற்றில் விலைகள் கீழே தரப்பட்டுள்ளன, நூல்கள் அடுத்த மாத முதல் வார முடிவிலிருந்து கொரியரில் அனுப்பிவைக்கப்படும்.

எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து ரூ2000 அனுப் பித்தந்திருக்கும் கவிஞர் கலாப்ரியா அவர்களுக்கும் ரூ. 3000 அனுப்பித் தந்திருக்கும் கவிஞர் ஜீனத் அவர்களுக்கும் ரூ.1000 அனுப்பித் தந்திருக்கும் கவிஞர் இனியவன் விக்ரம் அவர்க ளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்புகொள்ள _ திரு. ரவி 9884427997 / திருமதி சாந்தி 99623 76282

வாட்ஸப் எண் : 99623 76282

பணம் கட்ட GOOGLEPAY number 99623 76282

கூகுள் பேயில் பணம் செலுத்தினால் செலுத்திய விவரத் தையும், செலுத்தப்பட்ட பணம் நன்கொ டையா நூல்க ளுக்கான விலையா என்பதையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளியாகியுள்ள, வெளியிடப்படவுள்ள நூல்கள்

______________________________________________

1. நான் கே.எஸ்.பேசறேன் விலை: ரூ 350

2. ஒருமையைத் தேடி விலை ரூ350

3. நினைக்கப்படும்(தெலுங்குக் கதைகள் தமிழில்)

ரூ.350

4. மனக்குருவி- வைதீஸ்வரனின் முழுக்கவிதைத்

தொகுப்புரூ.500

5. தொடுவானமல்லவே ஆங்கிலம் ரூ. 50

6. குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு _

7. ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

கவிதைத் தொகுப்பு ரூ.200

8. WORLD WITHIN OUR REACH(WRITTEN

BY RAVICHANDRAN –

PUDHUPUNAL EDITOR) RS. 200

9. BREAD AND A DREAM (KOSINRA’S SELECTED

POEMS IN ENGLISH) RS.200

10. LIFE IN A NUTSHELL(A COLLECTION OF

TAMIL POEMS TRANSLATED INTO ENGLISH_

RS. 500

11. உள்ளங்கையுலகு(சமகாலத்

தமிழ்க்கவிதைகள் சில) ரூ. 500

______________________________________________

இந்த 10 நூல்களின் மொத்த விலை ரூ.3200

(*இங்கே தரப்பட்டுள்ள நூல் அட்டைகளில் தரப்பட்டுள்ள விலைகள் சிலமாறக்கூடியவை)

மொத்தமாக வாங்க முன்பதிவு செய்தால் ரூ 3000க்குக் கிடைக்கும்.

(தபால் செலவு தனி)

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்

ரவிச்சந்திரன்சாந்தி

புதுப்புனல் பதிப்பகம்


INSIGHT - JANUARY 2022

 INSIGHT 

 JANUARY 2022

(A BILINGUAL BLOGSPOT FOR TAMIL POETRY)


புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 5 & 6

   புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் 

- 5 & 6

வேண்டுகோள் / புதுப்புனல் பதிப்பகத்திடமிருந்து
117, TRIPLICANE HIGH RAOD
(OPP TO RATHNA CAFÉ)
CHENNAI – 600 005
Mobile Nos: 9884427997, 9962376282
Email id : pudhupunal@gmail.com
வணக்கம். கொரோனா காலகட்டம் அச்சுத்துறை யிலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதை அனைவ ரும் அறிவோம்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியும் எப்போது நடக் கும் என்று தெரியவில்லை. அதில் புதுப்புனல் அரங்க மைப்பதற்காக செலுத்திய கட்டணமும் சரி, அந்த அரங்கில் காட்சிப்படுத்துவதற் கான அவசர அவசர மாக அச்சிட்ட சில நூல்களும் சரி – கடன் வாங்கிச் செய்தது.
எங்களுக்கு ஏதாவது வழியில் உதவும் நோக்கத்து டன் தோழர் லதா ராமகிருஷ்ணன் அவர் ஆங்கிலத் தில் மொழிபெயர்த்த ஃபேஸ்புக் நண்பர்களின் சம காலத் தமிழ்க்கவிதைகள் 200 + அடங்கிய தொகுப்பை மூல கவிதைகள் ஒரு தொகுப்பாகவும், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஒரு தொகுப் பாகவும் இரண்டு தொகுப்புகளை வெளியிடும் பொறுப்பை புதுப்புனல் பதிப்பகத்திடம் ஒப்படைத் துள்ளார்.
FLEETING INFINITYஐத் தொடர்ந்து வெளிவரப்போகும் தொகுப்பு(கள்).
இவையிடண்டிலும் இடம்பெறும் 200+ கவிஞர்களுக்கு ஒரு பிரதியாவது அன்பளிப் பாகத் தரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தபால் அனுப்பி னால் நிறைய செலவாகும்.
ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கையில் 21/2 ரூபாய் என்று நினைக்கிறேன். எனவே இந்தத் தொகுப்புகளை அங்கே என்ன விலைக்கு விற்றால் கவிதை ஆர்வலர்க ளால் வாங்க முடிந்த விலையாக இருக்கும் என்று யோசிக்கவேண்டும்.
மொத்தம் 400, 500 பிரதிகளாவது அச்சிட்டால்தான் பங்குபெறும் கவிஞர்களுக்கான அன்பளிப்பு பிரதிகள் போக 100 பிரதிகளாவது விற்பனைக்கு மிஞ்சும்.
எப்படிப் பார்த்தாலும் குறைந்தபட்சம் 80,000 முதல் 1,20,000 (அச்சிடும் தாள், முகப்பு அட்டையின் தரம் என பல்வேறு அம்சங்களையும் பொறுத்து) வரை செலவாகும்.
எனவே, உதவ முடிந்தவர்கள் நன்கொடையளித்தால் இந்த முயற்சியை செவ்வனே மேற்கொண்டு வெற்றி கரமாக நிறைவேற்ற முடியும்.
உதவுபவர்கள் தொகுப்புகளில் நன்றியோடு குறிப்பி டப்படுவார்கள்.
உங்கள் உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
எங்கள் கூகுள் பே எண்: 9962376282
மின்னஞ்சல் முகவரி: pudhupunal@gmail.com
அலைபேசி எண்கள்: 9884427997, 9962376282
நன்கொடையளிப்பவர்கள் அது குறித்து எங்களுக்கும் விவரம் தெரிவித்தால் உதவியாயிருக்கும். எங்கள் ஃபேஸ் புக் பக்கத்தில் உடனே நன்றி நவில முடியும்.
உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்
ரவிச்சந்திரன் – சாந்தி

புதுப்புனல் பதிப்பகம்

மோதிரக் கைகளும், மகத்துவக் குட்டுகளும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மோதிரக் கைகளும்,

மகத்துவக் குட்டுகளும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



நான்கே சொற்களில் ஒரு கவிதைத்தொகுப்பைப்
பற்றிய முழுநிறைவான விமர்சனம் சாத்தியமா?
மந்திரமாவது சொல்
தந்திரமன்றி விமர்சனமில்லை என்றுகொள்
முன்முடிவுக்கேற்ப
தன்னிச்சையாகவோ
ஒருமித்த கருத்தாகவோ
’அவசியம் படிக்கவேண்டும் அனைவரும்’
என்றோ
’அனாவசியம். யாருக்குமே படிக்கப் பிடிக்காது’
என்றோ
எழுதிவிட்டாலாயிற்று.

அடிக்குறிப்பு:
இரண்டாயிரமோ இருபதாயிரமோ சர்க்குலேஷன் உள்ள பத்திரிகைக்கு இருப்பதெல்லாம் மோதிரக்கைகள்தானே!

நீளாதிநீளங்களும் நீக்குபோக்குகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீளாதிநீளங்களும் நீக்குபோக்குகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளிலேயே
மிகவும் நீளமானது எழுதப்பட்டிருப்பதாக
புதிய மோஸ்தரில் விளம்பரம் தரப்பட்டிருந்தது.
சிலர் மர ஸ்கேலை எடுத்துக்கொண்டனர்
சிலர் இரும்பு ஸ்கேலை எடுத்துக்கொண்டனர்.
சிலர் ‘இஞ்ச் டேப் எடுத்துக்கொண்டார்கள்
சிலர் கையால் முழம்போட முடிவுசெய்தார்கள்.
ஆளாளுக்கு ஒரு அளவுகோலை எடுத்துக் கொண்ட பின்
அதி கவனமாக அளந்தார்கள் அந்த ஒரேயொரு கதையைத்
திரும்பத்திரும்ப.
அவர்களுடைய அளவுகோல்கள் காட்டும்
வேறுபட்ட அளவுகளை
அவற்றின் வித்தியாசங்களை
அளவுகோல்களின் அளக்குங் கைகளின்
வேறுபட்ட நீளங்களை
ஆக்ரோஷமாய் அதி துல்லியமாய்
ஆங்காங்கே அடைமொழிகளோடும்
மேற்கோள்களோடும்
அழுத்தமாய்ச் சுட்டிக்காட்டியவாறிருந்தார்கள்.
ஸ்கேலும் இஞ்சுடேப்பும் ஸ்டேஷனரி கடைகளில்
அமோக விற்பனையாக
அலங்காரப் பொருளாகவோ ஆய்வுக்கான கருப் பொருளாகவோ
அந்தஸ்துக்கான ஆஸ்தியாகவோ பந்தோபஸ்துக் கான முன்னேற்பாடாகவோ
முகக் கவசமாகவோ மார்பில் பூணும் கேடயமாகவோ
மண்டைக்குப் பின்னாலான ஒளிவட்டமாகவோ
அந்தக் கதை குறித்த கட்டுரை யெழுத
அதியதிவேகமாக விலைகொடுத்து
வாங்கிக்கொண்டிருப்பவர்களின்
வாதப்பிரதிவாதங்களில் _
காலம் எழுதிய கதைகளையெல்லாம்
ஒன்றுவிடாமல் படித்தவர் யாரென்ற விவரமும்
காலத்தினாற் செய்யப்பட்ட அதி நீளக் கதை
யெதுவென்ற விவரமும்
கதை யென்ற ஒன்றுண்டு என்ற விவரமும்
வெகு நேரத்திற்கு முன்பே
காணாமல் போயிருந்தன.

புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 4 மனக்குருவி

  புதுப்புனல் பதிப்பக வெளியீடுகள் - 4

மனக்குருவி

(கவிஞர் வைதீஸ்வரனின் முழுக்கவிதைத் தொகுப்பு)

விலை : ரூ.500