காற்றின் கேள்வி
முடியா சமன்களின் கலைடாஸ்கோப்கோலங்களாய் கவிதையில்
நேற்று முன் தினம் கூடத் தந்துகொண்டிருந்தவரை -
நாளைக்கு அன்பளிக்கத் தருவதற்காக இன்றிரவும் எழுதிக்கொண்டிருப்பவரை -
காணாமல்போய்விட்ட கவியென்றதோடு நில்லாமல்
காலாவதியாகிவிட்ட கவியென்று
சக - கவியொருவர்
கையடித்துச் சத்தியம் செய்து
துண்டுபோட்டுத் தாண்ட
தன்பாட்டுக்கு
உய்யென்று சுழன்றடித்து வீசிக்கொண்டிருக்கும்
நித்தியக் காற்று
மிக அன்பாய் கேட்டது:
யாரைச் சொல்கிறாய் – என்னையா உன்னையா?

No comments:
Post a Comment