பொய்யிலே புரண்டு பொய்யிலே உழன்று….
லதா ராமகிருஷ்ணன்
கண்ணன் என் காதலன், கண்ணன் என் சேவகன், கண்ணன் என் குழந்தை என்ற ரீதியில் பாம்பை காதல னாக, காதலியாக குழந்தையாக என்று சித்தரிக்கும் தொடர்களைக் காட்டிக்காட்டியே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் தொலைக் காட்சி சேனல்கள் –
குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டி லையும் ஆட்டிவிடும் கதையாய் – இந்தத் தொடர்க ளைக் காட்டுவதோடு திரையில் பாம்போடு பாம்பாக
’நமது பண்டைய தமிழர்கள் காலம் காலமாக இது போன்ற கற்பனைக் கதைகளை சொல்லி, இதை ஒரு பொழுது போக்காவே மாற்றி உள்ளனர்.அதன் அடிப்ப டையில் பொழுது போக்குக்காக மட்டுமே ஒளிபரப் பப் படுகிறது இந்த தொடர் நாங்கள் நம் நாட்டுப்புறக் கதைசொல்லும் சுவாரசியமான மரபை மீட்டெடுக்கி றோமே தவிர, இந்த மாதிரி முடநம்பிக் கைகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை – அவற்றை வன்மை யாகக் கண்டிக்கிறோம்' _ என்ற ரீதியில் நீளநீளமாக வரிகளைத் திரையின் அடிப்பகுதியில் அதிவிரைவுப்பாம்புகளாய் ஓட விட்டுத் தங்கள் பகுத்தறிவை ’துண்டுபோட்டுத் தாண்டாத குறையாக’ நிறுவப் பிரயத்தனப்படுவ தைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
அதுசரி, ஹமாம் விளம்பரத்தில் இரண்டு பேர் வளரிளம் பருவப் பெண்ணைைக் கேலி செய்வதைப் பார்க்கும் தாய் ஏறத்தாழ அதே வயதிலான தன் சின்ன மகளை ஓட விட்டு,
‘ஓடு துரத்து – எதிர்க்காமலிருந்துவிடாதே – ஹமாம் உன் சருமத்தைக் காக்கும்’ என்று தீவிரப்பார்வை யோடு உளற _
திரையில் அந்தச் சின்ன மகளின் வெற்றுத்தோள்கள் காண்பிக்கப்பட்டு அந்தப் பெண் அவற்றில் ஹமாம் குழைத்துத் தடவிக்கொள்வதும் காண்பிக்கப்படுகி றதே –
எப்பேர்ப்பட்ட பகுத்தறிவு விளம்பரம் இது!
இதைக் காட்டி பணம் பண்ணும் சேனல்கள் பகுத்தறி வைப் பற்றிப் பேசாமலிருப்பதே நல்லது.


No comments:
Post a Comment