LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 9, 2026

எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும்......


‘இப்ப நீங்க சொன்ன தைத்தானே நான் நேத்து சொன் னேன்? அப்ப எனக்கு அறிவே கிடையாதுன்னு சொன் னீங்க – ரொம்ப தப்பா நான் யோசிக்கிறதா சாடையா திட்டித் தீத்தீங்க. இப்ப நீங்க அதையே சொல்றீங்க – என்னங்க இது?”


’இதுதான் அறிவுடைமை; ஜனநாயகப் பண்பு. மானே, தேனேன்னு இன்னும் நாலைஞ்சு சேத்துக்கலாம் – பரவா யில்லை. ஆனா, நீங்க சொன்னா தவறு. அதையே நான் சொன்னா அறிவு. அதை மட்டும் தெளிவா புரிஞ்சுக்கங்க’.


(2)

அணுகுமுறை - ’ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்]

 அணுகுமுறை

’ரிஷி’
[லதா ராமகிருஷ்ணன்]

வாட்டசாட்டமாய் வளர்ந்திருந்தவர்
கையிலிருந்த பந்தை மேலே போட்டு
‘காட்ச்’ பிடித்தார்.
தரையில் போட்டு காலால் உதைத்தார்.
இரண்டு கைகளையும் பயன்படுத்தி
அப்படியுமிப்படியும் உருட்டி விளையாடினார்.
பிடரியிலிருந்து முதுகில் வழுக்கச் செய்து
கையைப் பின்னுக்கு நீட்டி
வாகாய் ஏந்திக்கொண்டார்
கீழே தப்தப்பென்று உள்ளங்கைகளால் அடித்து
நூறை வெற்றிகரமாக எட்டினார்.
குறிபார்த்து எதிர்ப்பக்கச் சுவரில் மோதிவிழும்படி வீசினார்.
மொட்டைத்தலைக் குட்டிப்பையன் தலையில்
குட்டுவதாயொரு தட்டுதட்டச் செய்தவர் பின்
பந்தை சுட்டிக்காட்டி
'எப்படி' என்று பெருமையோடு கேட்க
வலிக்கும் உச்சிமண்டையை தடவியபடியே
வந்த சிறுவன்
பந்தை அன்போடு எடுத்து
அதன் மேல் படிந்திருந்த அழுக்கைத்
தன் பனியன் நுனியால் ஆனமட்டும் போக்கி
அறை மூலையிலிருந்த தனது சின்ன மேஜையில்
ஒரு கைக்குட்டையை விரித்து
அதில் பந்தைப் படுக்கவைத்து
இன்னொரு கைக்குட்டையால் கொஞ்சம்போல் போர்த்தி
யதன் வேர்த்திருந்த கைகால்களை நீவித் துடைத்துவிட்டு
அதன் மொட்டைத்தலையை மென்மையாய்
வருடிக்கொடுத்தான்.

’ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான உண்மைக்கவியின் மண்வாழ்க்கை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ’ன்’, ‘ள்’ விகுதிக்கப்பாலான

உண்மைக்கவியின் மண்வாழ்க்கை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தனக்கிருக்கும் ஒரே வயிற்றை
இரு பாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
அவற்றிலொன்றை
நேசத்துக்குரிய நிறைய நிறைய வார்த்தைகளால்
நிரப்பிக்கொண்டிருந்தான்.
கும்பியின் ஒரு பாதி பசிச்சூடு தாளாமல்
கொதித்தெரியும்போதெல்லாம்
மறுபாதியிலிருக்கும் சொற்கள் நீராகாரமாகும்;
நிறைவான அறுசுவை உணவுமாகும்.
தனக்கிருக்கும் ஒரேயொரு தலையை
இருபாகங்களாக வகுத்துக்கொண்ட கவி
ஒரு பாதி உச்சிமண்டையில் சூரியன்
செங்குத்தாய் வந்திறங்கி
அருவப்பொத்தல்களிடும்போதெல்லாம்
மறுபாதி சிரசில்
மாயத்தொப்பியொன்றை தரித்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தான்.
எரிக்கும் சூரியக்கதிர்கள் அந்தத் தொப்பியில்
பட்டுச்சிதறி
கவி நிற்கும் பக்கங்களிலெல்லாம்
சிற்றருவிகளாகும்!
தனக்கிருக்கும் ஒரே நாசியின் இரு துவாரங்களில்
இருவேறு நாற்றங்களை
ஒருங்கே உள்வாங்கவும்
பழகிக்கொண்டுவிட்ட கவி _
தனக்கிருக்கும் ஒரே மனதை
இரு பாகங்களாக வகுத்துக்கொள்ளும்
வழியறியாமல்
அரசியல்வாதியோடும் திரைக்கலைஞர்களோடும்
வாய்கொள்ளா சிரிப்புடன் நின்றுநின்று
வெளிச்சம் தம்மீது வாகாய்ப் படரவைத்து
வரகவியாய்த் தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும்
எத்தனமின்றி
பித்தாய் பிறைசூடி
எத்தாலும் கவிதைகளே நிறைதுணையாகத்
தன்னந்தனியாய்
சென்றுகொண்டிருக்கும் வழியெல்லாம்
அவன் _
(‘ன்’, ‘ள்’ விகுதியை இங்கே
முன்னிலைப்படுத்துவோரை
என்ன சொல்ல….)
எழுதிய
வாசிக்கப் பழகிய
கவிதைவரிகள்
அவனுக்காய்
சிவப்புக்கம்பளம் விரித்தபடி....
(சமர்ப்பணம்: சக கவி யவனிகா ஸ்ரீராமுக்கு)
//2021, APRIL 21 - மீள்பதிவு

KARL MARX ON ARTS

 


National Shakespeare Day

 National Shakespeare Day is celebrated annually on April 23–the anniversary of the bard’s death.

Shakespeare’s birthday is also traditionally celebrated on April 23, though his exact birthday is unknown. However, his baptism is recorded as taking place on April 26.
தேசிய ஷேக்ஸ்பியர் நாள் வழக்கமாக ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும் வழக்கமாக ஏப்ரல் 23ஆம் நாள் கொண்டாடப் பட்டாலும் அதுதான் அவருடைய பிறந்தநாள் என்று திட்டவட்டமாகத் தெரியாத நிலை. என்றாலும், அவரு டைய ஞானஸ்நானம் ஏப்ரல் 26ஆம் நாள் நடந்ததாகப் பதிவாகியுள்ளது.

கவிஞர் யூமா வாசுகியின் கவிதைத்தொகுப்பான சாத்தானும் சிறுமியும்

  கவிஞர் யூமா வாசுகியின் கவிதைத்தொகுப்பான

சாத்தானும் சிறுமியும்


கவிஞர் யூமா வாசுகியின் கவிதைத்தொகுப்பான சாத்தானும் சிறுமியும் 2013இல் வெளிவந்தது. 20, 25 கவிதைகள் இருக்கும். அனைத்துமே குழந்தைகளைப் பற்றிய கவிதைகள். அவற்றில் பல கவிதைகளைப் படிக்கும்போது நம்மால் அழாமல் இருக்க இயலாது. அந்த நூல் மொத்தத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். இதுவரை நூலாக வரவில்லை. அந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைத்தால் மூல தொகுப்பு கிடைக்காது. மூல தொகுப்பு கிடைத்தால் என் ஆங்கில மொழிபெயர்ப்புகள் கணினியிலுள்ள கோப்புகளுக்கிடையில் காணாமல் போய்விடும். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு இன்று இரண்டும் கிடைத்தபோது மனம் உணர்ந்த மகிழ்ச்சி லட்சங்களாலும் கோடிகளாலும் வாங்க முடியாத ஒன்று!

என் மொழிபெயர்ப்புகளுள் iஇரண்டை அப்போது செய்த அதேயளவாய் இங்கே தந்திருக்கிறேன்.

1. சில நிமிடங்களில் யுகங்களுக்கு
யூமா வாசுகி
(சாத்தானும் சிறுமியும் கவிதைத் தொகுப்பி லிருந்து)
இந்தக் குழந்தைக்கு நான்
சுவைக்கத் தருகிற மிட்டாய்
அனைத்துக் குழந்தைகளின் காலத்திலும் இனிக்கவேண்டும்.
இக் குழந்தையின் இமைகளை வருடுகிறேன்.
என்றைக்கும் எந்த அருமையையும் இவர்கள் தவறவிட மாட்டார்கள்.
அத்தனை கன்னங்களிலும்
இந்த முத்தம் பதிந்து
குறுஞ் சிரிப்பை மலர்த்தட்டும்.
எந்தக் கவலையுமற்று என்னோடு ஒன்றியிருக்கும்
இக்குழந்தையைப் போஷிக்கும் என் அணைப்பிற்கு வெளியே ஒருவரும் இல்லை.
இதுவரை பார்த்த குழந்தைகள்
அதற்கப்பாற்பட்டவை அனைத்தையும்
இச்சிறு சிரசில் கைவைத்து வாழ்த்துகிறேன்.
அத்தனை வாழ்க்கையும் இதோ செப்பமாயிற்று.
அன்பே! உன் பதம் இவ்வளவு இனிதா என
வைரமணி உலகு
ஒளிரும் பட்டைகளைத் திறக்கிறது.
யாருடைய குழந்தையோ
இந்தப் பேருந்து நெரிசலில்
என் மடியிலிருக்கிறது.
சில நிமிடங்களுக்குக் கிடைத்திருக்கிறது சீராட்டும் உரிமை.
மக்களே
என் நட்சத்திரங்களைத்தான்
உங்கள் வானத்திற்குக் கொடுத்திருக்கிறேன்.
ஒளியின் ஒரு ரேகை குறைந்தாலும்
நீங்கள்
பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
என் பொக்கிஷங்களுக்கு உங்களையே
காவலாட்களாக நியமித்திருக்கிறேன்.
பாதுகாப்பாக வைத்திருங்கள்.

A POEM BY YUMA VASUKI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Let the candy that I am
giving to this child
to eat and savour
taste sweet to the
Children of all ‘Ages’.
I caress the eye-lids of this
kid.
They would never lose anything
sweet and precious.
Let this kiss press itself
on all the cheeks and cause smile to blossom.
There is none outside
my embrace that’s
nurturing this child
which remains all engrossed in me
without a worry in the world.
Placing my hand on this
tiny head
I wish well and bless
all the children who I
have so far come across
and even beyond.
Here, all those lives have
become wholesome.
The all too precious world
opens its glittering stripes
wondering
‘Oh, Love, is your very quality
so divine!’
In this bus so overcrowded
someone’s child
sits in my lap.
A few minutes right
to take care of it
has come my way.
Oh, my fellowmen-suffering brethren
It is but my stars that
I have offered to your sky.
Even if one ray of light is lost
You are answerable.
For my invaluable treasures
I have appointed none save you
as security personnel.
Do keep them safe and secure.


........................................................................................
A POEM BY YUMA VASUKI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

2. MARBLES ROLLING IN THE LIQUOR SHOP
The coins that a boy doing errands
for those tipplers
pleaded with one fully drunk and
on his way out
slipped from hand and fell on the floor.
As he bent to collect them
a miracle takes place….
Some marbles slipping from his shirt-pocket
scattered on the floor tinkling.
Bonding all there at once
they keep running on and on.
Stalled they were
at the childhood of all those
looking at them and floating
in times bygone.
As the boy stood there hesitant, shocked
One being merciful picked up that which lay by his side
and gave it to the boy.
With love swelling inebriated
another followed suit.
Hands too many
softening in a sense of unbearable guilt
gathered the marbles and gave them to the boy
as blessings.
மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்
யூமா வாசுகி
குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து
அலைக்கழிந்த சிறுவன்
நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்
இறைஞ்சிய சில்லறை
கைநழுவி விழுகிறது தரையில்.
எடுக்கக் குனிகையிலோ
நிகழ்கிறதொரு அற்புதம்….
அவன் சட்டைப்பையிலிருந்து தவறி
கலீரிட்டுச் சிதறின கோலிக்குண்டுகள்.
அத்தனை பேரையும் சட்டென இணைத்துக்கொண்டு
நெடுக ஓடுகின்றன அவை.
கடந்த காலங்களில் மிதந்து
பார்த்திருந்தவர்களின் பால்யத்தில்
தட்டி நின்றன.
தயங்கித் திகைத்த சிறுவனிடம்
கருணை கூர்ந்து ஒருவன்
தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.
போதை மிகைத்த அன்புடன்
மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.
தாளாக் குற்றவுணர்வில்
நெகிழ்ந்த கரங்கள் பல
ஆசிகளெனக் கோலிக்குண்டுகளைப்
பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்.
//2021, MAY 5 - மீள்பதிவு//

போர்களும் மன்னர்களும் சாமான்ய மக்களும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 போர்களும்

மன்னர்களும்

சாமான்ய மக்களும்


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)





கறைபடாக் கையர்கள் அவர்கள்
கொலை செய்துவிட்டுப் பின் சுவடுபோகக்
கழுவிக்கொள்வதற்கென்றே
கொல்லைப்புறத்தி சில நதிகளைக் கட்டுசெட்டாய் நட்டுவைத்து
வாகாய் ஓடவிட்டிருப்பவர்கள்.
ஆகாயத்திலிருந்து அவர்களின் அதிகார, பண பலத்தால் பறித்துவந்திருக்கும் நட்சத்திரங்களை
அவர்களுடைய வரவேற்பறையில் அலங்கார விளக்குகளாகவும்
படுக்கையறையில் இரவுவிளக்காகவும்
அவரவர் சட்டைப்பையில்
அவசர கால டார்ச் லைட்டுகளாகவும்
வைத்துக்கொண்டிருக்கும்
அவர்கள் நினைத்தால்
இரவைப் பகலாக்கவும் பகலை இரவாக்கவும் முடியும்
எத்தனை கார்களும் பங்களாக்கவும் வைத்திருக்கிறார்களோ
அத்தனைக்கத்தனை எளிமையானவர்கள் அவர்கள்
அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
அப்பாவி மக்கள்.
அல்லது, ‘நம்புவதாய் பாவனை செய்துகொண்டிருக்கிறோம்
வம்பெதற்கு என்று வாய்மூடியிருக்கிறோம்’ என்று
சொல்லாமல் சொல்வதாய்
அதோ வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
அவரவருக்குரிய வாக்குச்சாவடிகளில்

வரம்போலும் சாபம்போலும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வரம்போலும் சாபம்போலும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஏழைக் கவிஞர்,
எதிரே இறைவனே வந்துநின்றாலும்
கூழைக்கும்பிடு போட மாட்டார்.
காலத்தின் முன் கோழையாய்
மண்டியிட்டிருக்க மாட்டார்.
வாழையடி வாழையாய்
வறுமையில் உழன்றாலும்
வகைவகையாய் நல்கவியெழுதும்
வரம் கேட்கத் தெரியுமல்லாது
விரிந்தகன்ற வீடுகள் நான்கைந்து கேட்க மறந்துவிடுவதே வழக்கமெப்போதும்.
கண்டால் கடவுளர்க்கும்
கும்பிடத் தோன்றும்.
அன்றென்னவோ அப்படி விசனத்தோடு அமர்ந்திருந்தார்.
அருகமர்ந்த கடவுள் காரணம் கேட்க
ஆற்றாமையோடு
”அன்பினால் செய்கிறார்களென்றாலும்
அடுத்த மொழிக்கு எடுத்துச்செல்வதாய்
விளம்பி சிலர்
என்னை வளர்ந்தோங்கச் செய்வதாய்
விளம்பரம் செய்தவாறே
மனதின் கால்கடுக்க நான் எழுதிய
வரிகளின் உட்பொருளை
வெட்டிக் கிழித்து
அவற்றின் தனிஅடையாளங்களை
யெல்லாம்
அறவே சுவடின்றி யழித்து
ஒரு மொந்தையாக்கி மண்ணில்
உருட்டிவிடுவது
அந்த இன்னொரு மொழி
தெரியாதென்றாலும்
என் உள்ளுணர்வுக்குப் புரிபட்டுவிட
என்ன செய்வதென்றே தெரியவில்லை
யெனக்கு”
என்று தளும்பும் கண்களோடு
அழுகுரலில் கவி கூற
அதைக் கேட்டு கரிசனத்தோடு சிரித்த கடவுள்
"கவலைப்படாதே,
இனி கச்சிதமாய் செய்யப்படாத கவிதைமொழிபெயர்ப்புகள்
கண்ணில் பட்டவுடன் காணாமலாகிவிடும் பார்!" என்று சொல்லி விண்ணேகினார்
யார் கண்ணில் என்று கேட்டுத் தெளிவதற்கு
முன்பே.

உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள்

கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில்

உருவான கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே.
கதையா? அதே யதே – சபாபதே.
கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே
மதிப்புரை யெழுத ?
பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான
மொத்தம் 500 போல் வெள்ளைத்தாள்களில்
விரைவோவிரைவில் வெளியாகிவிடும்
கெட்டி அட்டையிட்ட
புத்தம்புதிய புத்தகமாய்.
விமர்சனம் செய்வதென்றால் எனக்கு ஏற்படும் பரவசம்
சொல்லிமாளாது.
நாட்கணக்காய் எழுதுவேன், யாரும் கேட்கா விட்டாலும்.
யார் சொல்லி வீசுகிறது காற்று?
நேற்றும் இன்றும் நாளையும்
ஊற்றெனப் பொழிந்துகொண்டேயிருப்பேன்
ஊத்தை கர்வத்தில் ஊதிப்புடைத்த என்
நாத்தம்பிடித்த அரைவேக்காட்டுக் கருத்துரைகளை.
நாடகமா
ஆடிப்பாடுவேன் அத்தனை பாத்திரமாகவும்.
சூத்திரம் இதுவே நான் சகலகலாவல்லவனாக
நான் எழுதுவதில் எதுவும் தேறாதா?
வாராயென் தோழி வாராயோ எனவழைத்தால்
பேர் பேராகப் போற்றப் பலர் உண்டு
போரூரிலிருந்து ரோமாபுரி வரை
ஊரூராகப் போய்ப் புதுப்புதுப் பட்டியல்களை வினியோகித்து
காரசாரமாய்ப் பேசுவேன் உங்கள் எழுத்து
உரமற்றது; கண்றாவி யென்று
கன்றுகுட்டியாகவே இருக்கவேண்டும் நீங்கள் காலமெல்லாம் நானே தாய்ப்பசுவாம்
பேர் சொல்ல ஒரேயொரு பிள்ளை நான்
_ இலக்கியத்திற்கு. அப்போதும் எப்போதும்
புரிந்துகொண்டால் நல்லது. அல்லது
புல்லுருவிப் படைப்பாளி என்ற பட்டத்தைச் சுமக்கத் தயாராக இருங்கள். சொல்லிவிட்டேன்.
கலங்கி நிற்கக் கற்றுக்கொள்ளாமலிருந்தால் எப்படி?
கருங்கல் இதயமா உங்களுக்கு?
வித்தகன் நானென்று இன்னும் எத்தனை முறை
சத்தமாய்ச் சொன்னால் ஒப்புக்கொள்வீர்கள்?
சத்தியமாய் தலையசைக்கமாட்டீர்களா ஆமென்று?
சிரிப்பை வேறு அடக்கிக்கொள்கிறீர்களா?
பொறுங்கள் -
உங்களைப் பழித்துக் கிழிகிழித்து
இதோ ஒரு தரவிமர்சனம் தயாராகிக்கொண்டிருக் கிறது.

தமிழகத்தின் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை

 

தமிழகத்தின் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இந்த முத்திரை வாசகம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது


அப்பழுக்கற்ற (அரசியல்) தலைவர் யார்?

 அப்பழுக்கற்ற (அரசியல்) தலைவர் யார்?

* உயர்ந்த அளவு தனிமனித நேர்மையுடையவரா யிருத்தல்
• தனிப்பட்ட ஆதாயத்தை விட அனைவருக்குமான நலனுக்கே முன்னுரிமை அளிப்பவர்.
*தெளிவான முன்னுரிமைகளை வகுத்துக்கொண்டு அவற்றை செயல்படுத்துவதில் முனைப்பாக இயங்குபவர்.
*பொறுப்பேற்பும், அர்ப்பணிப்பு மனோபாவமும் கொண்டவர்.
*நடப்புலகில் நன்றாகக் காலூன்றியிருப்பவர். ஆகாயத்தில் பறக்காதவர்.
*சீரியமுறையில் விஷயங்களை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் திறமை பெற்றவர்.
*வாழ்நாள் முழுக்க கற்றுக்கொண்டேயிருப்பவர்.
* தொலைநோக்குப் பார்வையும் இலக்கும் கொண்டவர்.
*தன்னைத்தான் முனைப்பாக உத்வேகப்படுத்திக் கொண்டேயிருப்பவர்.
*எப்போதுமே உயரளவு ஆர்வமும் உத்வேகமும் கொண்டிருப்பவர்.
*நேர்மை, பரிவுணர்வு மற்றும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் ஒரு பொதுநலப் பணியாளராக இயங்கு பவர்.
*நேர்மை, பொறுப்பேற்பு, சமூக மேம்பாட்டிற்காக அறஞ்சார் கடினமான முடிவுகளை எடுக்கும் துணிச்சல் ஆகிய பண்புநலன் களை உடையவர்.


நாமெல்லோரும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நாமெல்லோரும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நாமெல்லோரு மிதைப் பேசலாம்
இதைப் பேசலாகாதென இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நம்மெல்லோரையும்
ஒன்று திரட்டி
மாவுருண்டையாய் உருட்டி
குலோப் ஜாமுன் குடமிளகாய் பஜ்ஜி
கொத்துபரோட்டா பிரியாணி குருமா
சாதா தோசை மசாலா தோசையென
வகைவகையாய் நமக்கே
பரிமாறிக்கொண்டிருக்கப்போகிறார்கள் நாமெல்லோருமானவர்கள்
நம்மைக் கேட்காது நம்மைச் சேர்க்கும்
நாமின்
நெரிசலான ஜன்னலற்ற சிறைக்கொட்டடிகள்
நம்மை நாமாக்குவதுமொரு தண்டனையாய்.
நம்மை நாமாக்கவும் நாமை நம்மாக்கவும்
அழையா விருந்தாளியாய்
அறவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிவழங்கிக்கொண்டிருப்பவர்கள்
அவற்றின் மூலமே தம்மையொரு
’ஆளாய்’ காணவும் காட்டவும்
ஆலாய்ப் பறப்பதை யறியமாட்டோமா நாம்?
நமது நாமெல்லோரில் நாமெல்லோருமில்லாததுபோலவே
அவரவர் நாமெல்லோரிலும்
நம்மெல்லோருடைய நாமெல்லோரிலும்.
நமக்கான நாமை
அவருக்கான நாமாய் வனையும்
அவருடைய நாமின் நாம்
தலையாட்டிபொம்மைகளாம்
எனச் சொன்ன கணத்தில் நாம்
அந்நியமாகிவிடுவோம்
என்றறிவோம்.

நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


அவர் வாழ்ந்த காலத்திலிருந்து வெகுகாலம் கடந்து
அவர் கவிதைகள் பற்றி எழுதப்பட்டிருந்த
குறிப்பு
கட்டுரை
திறனாய்வில்
காணாமல் போயிருந்தது _
கையில் கிடைத்த தத்துவங்களை
சோழியாய் வரிகளில் சுழற்றி வீசி
யவர் தன்னை தீர்க்கதரிசிக் கவியாக நிலைநிறுத்திக்கொண்டது;
அன்பே சிவம் என்று ஒரு மேடையில் போதித்து
சிவம் சவம் என்று இன்னொரு அரங்கில் சாதித்தது;
தன் வீட்டின் பத்துக்குக் குறையாத அறைகளை பூதங்காத்தவாறும்
எந்நாளூம் நிலவறையில் நெல்மூட்டைகள்
பத்துக்குக் குறையாமல் வைத்திருந்தபடியும்
‘தனியொருவனுக்குணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோமை
தவறாமல் உணர்வெழுச்சிமிக்க ஏற்ற
இறக்கங்களோடு தழுதழுக்கும் குரலில்
தீ கலந்து பகர்ந்தது;
தந்த கோபுரத்தின் கண்ணாடி அறையுள்ளிருந்து கணினியைத் தட்டியவாறே
தன்னாலான கலவரத்தைத் தூண்டும்
சமூகப்பணி செய்துகொண்டிருந்த
அவர் தர்மசிந்தனையும்
தாராளமய நன்னெறியும்;
கழிபொழுதில் தனது மொழியாற்றலை
யெல்லாம்
குறிப்பிட்ட ஒரு தலைவரைப் பழிப்பதற்கே
செலவழித்த
அவரது மெச்சத்தகுந்த கூர்கவனமும்;
அழியாப்புகழ் பெற அவர் செய்த
அரசியலும்;
அவரிலிருந்து பெருக்கொடுத்தோடிக்
கொண்டிருந்த
பொல்லாப்பும் பொச்சரிப்பும்;
சிற்றெறும்பு கடித்ததைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு
உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலுமான
’சிச்சுவேஷனை’ உருவாக்கி அவர் பாடிய
நவீன ஒப்பாரியில் அவர்
கச்சிதமாய் ஒளித்துவைத்திருந்த
நச்சுத்துப்பாக்கியும்;
அச்சச்சோ அராஜகம் என்று
பன்னிப் பன்னிச் சொன்ன அதே வாயால்
அதே விஷயத்தை ‘அதெல்லாம் வாழ்வில் சகஜம்’
என்று அடித்துச்சொன்னதும்;
ஒரு பத்தியில் தொற்றுநோயும் மறுபத்தியில் நடிகர் வெற்றிவேலுக்கான
’வாகைசூடி வா’ வாழ்த்துமாய்
பதிவுகளைப் பகிரும் வித்தகமும்;
எழுத்தின் நிறைமௌனத்தைக் கிழிக்கும்
வெற்றுமுழக்கங்களும்;
மற்றும்……….

QUOTABLE QUOTE


 

சொல்லத்தோன்றும் சில - லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில

லதா ராமகிருஷ்ணன்

என் டைம்லைன் என்னுடைய வெளி. என் வீட்டில் நான் செய்ப வற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ரீதியில் சிலர் எழுதுவதைப் படிக்கும்போது வேடிக்கை யாக இருக்கிறது.

தன் வீட்டுக்கூரை மேல் ஏறி நின்று கொண்டு ஒருவர் தெருவில் போவோர் வருவோரை யெல்லாம் தூற்றிக் கொண்டிருந்தால், அல்லது தனது வீட்டின் ஒரு அறைக் குள்ளிருந்து ஜன்னல் வழியாக எதிர் வீட்டுக்காரரைப் பற்றி ஏளனமாகச் சாக்கிட்டுப் பாடிக் கொண்டிருந்தால்?
PUBLIC SETTINGS இல் இருந்துகொண்டு ஒருவர் பதிவிடு வதைப் படிப்பவர்களில் மாற்றுக்கருத்துரைக்க யாருக்கும் சுதந்திரம் உண்டு. FRIENDS SETTINGSஇல் இருந்தாலும் நட்பினர் எல்லாம் எல்லாக் கருத்துகளுக் கும் ஒத்துப்போக வேண்டும் என்ற அவசிய மில்லை. அத்தகைய எதிர்பார்ப்பு சரியில்லை.
LOCKED PROFILE வைத்திருப்பவர்கள் நட்பு அழைப்பைக் கொடுப் பது வினோதமாயிருக்கிறது. ஆனால், அவர்கள் நட்புவட்டத்தில் யாரேனும் அவர்களுடைய பதிவொன்றை பொது வெளியில் வைத்தால் அதுவும் விமர்சனத்திற்குட் பட்டதுதான்.
பீடத்திலேறி பிரம்மோபதேசம் செய்வதாய் கருத்துரைப்பவர் களுக் கும், ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்துரைப் பவர்களுக்கும், தங்கள் கருத்துகளும், அவற்றைச் சொல்லும் விதமும் தங்களை யும் அம்பலமாக்கிவிடும் என்ற புரிதல் மிக மிக அவசியம்.