LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 23, 2026

குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME

 

-          லதா ராமகிருஷ்ணன்

13, June, 2026 – pathivukal oniline magazine

https://www.geotamil.com/index.php/2021-02-13-00-58-35/2021-02-14-02-21-59/9754-abetment-to-the-crime

 

18 வயதுக்குட்பட்டோர் அனைவருமே குழந்தைகள் என்று குறிப்பிடப் படுவது பொதுமக்கள் மனங்களில் சற்று குழப்பத்தை ஏற்படுத்துவது உண்மைதான். மழலையர், சிறு குழந்தைகள், சற்றே பெரிய குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் என குழந்தை என்ற பிரிவின் கீழ் பலர் இடம்பெறுவர். ஆனால், அவர்கள் எல்லோருமே குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள், வளர்ந்தவர்கள் உணரவேண்டியது அவசியம்.

 

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்தபட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர்களால் நடத்தப்படுவது அவர்களி டம் என்னென்ன அக – புற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன. 

இன்று சமூக ஊடகங்கள் நிறைய இருப்பதால் குழந்தைகள் மீதான சுரண்டல்கள், பெரியவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் சிறார்களை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ பயன்படுத்திக்கொள்வது எல்லாம் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடுகின்றன. அதனால், நாற்பது-ஐம்பது வருடங்களுக்கு முன் குழந்தைகள் மீதான இத்தகைய சுரண்டல் கள் அறவேயில்லையென்றோ, அதிகம் இல்லையென்றோ சொல்லிவிட இயலாது.


ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என சிலபலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் வண்ணநிலவன் என சில பெயர்களைக் குறிப்பிடலாம். துக்ளக் இதழ் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ‘பள்ளிகளில் மாணாக்கர்கள் அடித்துக் கண்டிக்கப் படவேண்டியவர்கள் என்று வலியுறுத்துவதைத் தனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்துவருகிறது.


சமீபத்திய துக்ளக் இதழில் எஸ்.ஜே.இதயா என்பவர் ‘குற்றங் களைக் குறைக்குமா சிங்கப்படை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள

கட்டுரையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். கீழே அந்தப் பத்தி தரப்பட்டுள்ளது:

இன்று குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் மாணவர் களுக்கு ஆசிரியர்கள் நல்லொழுக்கம் போதித்துவந்ததை நிறுத்திவிட்டதுதான் என்று அவர் சொல்வதையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடுத்தாற்போல் அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்:

‘பெற்றோரும் கண்ணை மட்டும் விட்டுட்டு எப்படி வேண்டு மானாலும் அடிங்க’ என்று ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளை களை ஒப்படைப்பார்கள்’

இது என்ன விதமான சமூகவுணர்வு? ‘இதை அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்பவர்களைப் பார்த்து நான் கேட்கும் கேள்வி இதுதான்: ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? ஆசிரியர்களும் பெற்றோர்கள் என்ற அளவில் பெரியவர்கள் ‘தோலுரிக்க’ப் பிறந்தவர்கள் தான் குழந்தைகள்? இது என்ன காட்டுமிராண்டித்தனமான கண்ணோட் டம்; அணுகுமுறை?

அடித்துதுவைப்பதால் குழந்தைகள் நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொண்டுவிட மாட்டார்கள். ஏற்கெனவே குழந்தைக ளுக்கு வாக்குரிமை இல்லை என்பதால் அவர்களுடைய நலன்கள் சமுக்க-அரசியல் ரீதியாய் புறக்கணிக்கப்படும் நிலையே பெருமளவு நிலவுகிறது.

இதில் சமூகப் பிரக்ஞை- மனிதநேயம் தூக்கலாக இருப்பவர் களாகத் தங்களைக் காண்பித்துக் கொள்ளும் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் இப்படிப் பேசிக்கொண்டிருந்தால் எப்படி? இதுதான் உண்மையில் அதி ஆபாசமான பேச்சு; ஆதிக்க மனப்பான்மை.

உண்மையான உலகத் தலைவர்கள் குழந்தைகளை அடித்துத் திருத்து தல், ஒழுக்கசாலியாக்குதல் என்ற பார்வையை ஒருபோதும் ஆதரித்த தில்லை. காந்தியடிகள் என்ன கூறுகிறார் பாருங்கள்:



தன் வாழ்நாள் முழுக்க குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை, பள்ளிப் பருவ வாழ்க்கையை இனிமையானதாய், பயனுள்ளதாய் ஆக்க பெரு முயற்சி எடுத்த மரியா மாண்டிஸோரி குழந்தைகளை அடிப்பது குறித்து என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்:


குழந்தைகளை அடித்தல் குறித்து மரியா மாண்டிசோரி
 

குழந்தைகளை அடிப்பது எந்த வகையிலும் அவர்களின் நற்பண்பை வளர்க்காது, மாறாக அவர்களின் சுயமரியாதையைக் குலைத்து எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று மரியா மாண்டிசோரி உறுதியாக நம்பினார். தண்டனைகளுக்குப் பதிலாக, குழந்தைகளின் இயல்பான உணர்வுகளைப் புரிந்துகொண்டு, சுதந்திரம் மற்றும் சுயக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுய-ஒழுக்கத்தை (Self-discipline) வளர்ப்பதே மாண்டிசோரி முறையாகும். 

ParentCo. +3

குழந்தைகளை அடித்தல் மற்றும் கண்டிப்பு குறித்து மரியா மாண்டிசோரியின்முக்கிய கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தண்டனைக்கு இடமில்லை

  • பாரம்பரிய பள்ளிகளைப் போலல்லாமல், மாண்டிசோரி முறையில் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு உடல் ரீதியான தண்டனைக ளுக்கோ அல்லது அபராதங்களுக்கோ (Punishments) எவ்வித இடமும் இல்லை. 

he Kavanaugh Report +1

  • அடிப்பதோ, கண்டிப்பதோ குழந்தைகளிடம் கீழ்ப்படிதலை ஏற்படுத்தாது, மாறாக அது அவர்களின் உள்ளத்தில் கலக மனப்பான்மையையும், எதிர்ப்பையும் மட்டுமே உருவாக்கும். 

ParentCo. +2

சுய-ஒழுக்கத்தை வளர்த்தல்

  • உண்மையான ஒழுக்கம் என்பது சுதந்திரத்தின் மூலமே வர வேண்டும். குழந்தைகள் தாமாக முன்வந்து பிறருடன் இணைந்து செயல்படும்போது ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். 
  • ஒரு குழந்தை தனத கவனத்தை ஒருமுகப்படுத்தி, ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, அதுவே அந்த குழந்தைக்கு ஒரு சுய-ஒழுக்கத்தை அளிக்கிறது. 

The Montessori School of the Berkshires +2

அன்பான வழிகாட்டுதல்

  • குழந்தைகள் சவாலான நடத்தைகளை வெளிப்படுத்தும்போது, அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆரோக்கியமான முறையில் அதை வெளிப்படுத்த உதவ வேண்டும். 


அன்பான வழிகாட்டுதல்

  • குழந்தைகள் சவாலான நடத்தைகளை வெளிப்படுத்தும்போது, அவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆரோக்கியமான முறையில் அதை வெளிப்படுத்த உதவ வேண்டும். 

Montessori Academy +1

  • உதாரணமாக, குழந்தை கோபத்தில் அடிக்க வந்தால், "அடித்தல் தவறு. உனக்குக் கோபம் வந்தால் இந்த மெத்தையை அடிக்கலாம்" என்று மாற்று வழியைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் ஆற்றலை வழிநடத்த வேண்டும். 

Montessori Academy +1

நிபந்தனையற்ற மரியாதை

  • "குழந்தைகள் என்பவர்கள் மனிதர்கள், அவர்கள் உரிய மரியாதைக்குரியவர்கள்" (Children are human beings to whom respect is due) என்பது மரியா மாண்டிசோரியின் மிக முக்கியமான பொன்மொழியாகும். 

Goodreads +1

  • குழந்தைகளின் சுதந்திரமான செயல்பாடுகளில் பெரியவர்கள் தேவையற்ற குறுக்கீடுகளைச் செய்யக்கூடாது. அவர்களின் இயற்கை சார்ந்த செயல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 311870 – மே 61952)

இத்தாலி யைச்  சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய கல்வி முறையை உருவாக்கி ஜனவரி 61907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழு வதும் பயன்படுத்த துவங்கி னர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல்  1947 வரை  இந்தியாவிலும் இலங்கையிலும்  பணியாற்றினார்.


உலகெங்கிலுமுள்ள உளவியலாளர்கள், குழந்தை மருத்துவர்கள், கல்வியாளர்கள் எல்லோருமே குழந்தைகள் மனிதகுலத்தில் எதிர் காலம். அவர்கள் அன்பும் அனுசரணையுமாக, அவர்களுடைய அடிப் படை உரிமைகளும், தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வாழ வேண்டி யது அவசியம் என்று அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.

18 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தைகள் என்ற பிரிவின் கீழ் வரு கிறார்கள் என்ற அளவில் அவர்களுடைய பலதரப்பட்ட தேவைகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவேண்டியது அவசியம். அடித்துத் தண்டித்தல் எத்தனை ஆகாததோ அதேமாதிரி தான் வார்த்தைகளால் இழிவுபடுத்தலும்.

பள்ளிகள், கல்விக்கூடங்கள் எல்லாம் பிரதானமாக மாணாக்கர்களுக் கானவை.

ஆசிரியர் தொழில் என்பது வெறுமே பொருளீட்ட உதவும் வாழ்க்கைத் தொழில் அல்ல. அப்படி பாவிக்கப்படுவதும், அரசு ஆசிரியர் பணி கிடைக்க பெருந்தொகை தரவேண்டியிருப்பதும், இன்னும் பல காரணங்களும்தான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டியவை.

சிறார்களுக்கான ஆபாசவலைத் தளங்களை, இணைய வழி விளை யாட்டுகளை நடத்துபவர் யார்? பெரியவர்கள்தானே?

அரசியல் பத்திரிகை என்ற பெயரில் துக்ளக் அரசியல்வாதிகளைப் பேட்டி கண்டு எழுதுகிறதே தவிர கல்வியாளார்களையோ, உளவியலாளர்களையோ, மாணாக்கர்களையோ எத்தனை முறை பேட்டிகண்டிருக்கிறது? விவாதத்திற்கு அழைத்திருக்கிறது?

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சிக்குரிய அளவுகோல்களில் ஒன்று அங்கு குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது. குழந்தை களை அடிப்பது, அவமரியாதையாக நடத்துவது, வீட்டிலும் சரி, கல்விக் கூடங்கள் போன்ற வெளியிடங்களிலும் சரி – சட்டரீதியாய் குற்றம். இந்தக் குற்றத்தை ‘ஒழுக்கத்திற்கான அடிப்படைச் செயல்பாடா கத் திரும்பத்திரும்ப வலியுறுத்தும் துக்ளக் போன்ற பத்திரிகைகள் ‘இந்தக் குற்றத்திற்குத் துணைபோகின்றன. குழந்தைகளை அடித்துத் திருத்த வேண்டும் என்ற இவர்களின் பார்வையும் போதனையும் கொடுங் கோலர்களின் காட்டுமிராண்டித்தனத்தைவிடக் கொடுமையானது. இத்தகைய கருத்துகளை வெளியிடுபவர் சட்டரீதியான தண்டனைக் குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்.


https://www.geotamil.com/index.php/2021-02-13-00-58-35/2021-02-14-02-21-59/9754-abetment-to-the-crime


*

  • குழந்தைகளின் சுதந்திரமான செயல்பாடுகளில் பெரியவர்கள் தேவையற்ற குறுக்கீடுகளைச் செய்யக் கூடாது. அவர்களின் இயற்கை சார்ந்த செயல்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். 

 

 

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 311870 – மே 61952)

இத்தாலி யைச்  சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய கல்வி முறையை உருவாக்கி ஜனவரி 61907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழு வதும் பயன்படுத்த துவங்கி னர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல்  1947 வரை  இந்தியாவிலும் இலங்கையிலும்  பணியாற்றினார்.

 

உலகெங்கிலுமுள்ள உளவியலாளர்கள், குழந்தை மருத்துவர்கள், கல்வி யாளர்கள் எல்லோருமே குழந்தைகள் மனிதகுலத்தில் எதிர்காலம். அவர்கள் அன்பும் அனுசரணையுமாக, அவர்களுடைய அடிப்படை உரிமைகளும், தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வாழவேண்டியது அவசியம் என்று அழுத்தமாக எடுத்துரைத்திருக்கிறார்கள். 18 வயதுக்குட் பட்டவர்கள் குழந்தைகள் என்ற பிரிவின் கீழ் வருகிறார்கள் என்ற அளவில் அவர்களுடைய பலதரப்பட்ட தேவைகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவேண்டியது அவசியம். அடித்துத் தண்டித்தல் எத்தனை ஆகாததோ அதேமாதிரி தான் வார்த்தைகளால் இழிவுபடுத்தலும்.

 

பள்ளிகள், கல்விக்கூடங்கள் எல்லாம் பிரதானமாக மாணாக்கர்களுக் கானவை. ஆசிரியர் தொழில் என்பது வெறுமே பொருளீட்ட உதவும் வாழ்க்கைத்தொழில் அல்ல. அப்படி பாவிக்கப் படுவதும், அரசு ஆசிரியர் பணி கிடைக்க பெருந்தொகை தரவேண்டி யிருப்பதும், இன்னும் பல காரணங்களும்தான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டியவை. சிறார்களுக் கான ஆபாசவலைத் தளங்களை, இணைய வழி விளையாட்டுகளை நடத்துபவர் யார்? பெரியவர்கள்தானே? அரசியல் பத்திரிகை என்ற பெயரில் துக்ளக் அரசியல்வாதிகளைப் பேட்டி கண்டு எழுதுகிறதே தவிர கல்வியாளார்களையோ, உளவியலாளர்களையோ, மாணாக்கர்க ளையோ எத்தனை முறை பேட்டிகண்டிருக்கிறது? விவாதத்திற்கு அழைத்திருக் கிறது?

 

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சிக்குரிய அளவுகோல்களில் ஒன்று அங்கு குழந்தைகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது. குழந்தை களை அடிப்பது, அவமரியாதையாக நடத்துவது, வீட்டிலும் சரி, கல்விக் கூடங்கள் போன்ற வெளியிடங்களிலும் சரி – சட்டரீதியாய் குற்றம். இந்தக் குற்றத்தை ‘ஒழுக்கத்திற்கான அடிப்படைச் செயல்பாடா கத் திரும்பத்திரும்ப வலியுறுத்தும் துக்ளக் போன்ற பத்திரிகைகள் ‘இந்தக் குற்றத்திற்குத் துணைபோகின்றன. குழந்தைகளை அடித்துத் திருத்த வேண்டும் என்ற இவர்களின் பார்வையும் போதனையும் கொடுங்கோலர் களின் காட்டுமிராண்டித்தனத்தைவிடக் கொடுமையானது. இத்தகைய கருத்துகளை வெளியிடுபவர் சட்டரீதியான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்.

https://www.geotamil.com/index.php/2021-02-13-00-58-35/2021-02-14-02-21-59/9754-abetment-to-the-crime

*


Saturday, June 20, 2026

எமோஜிக்களின் உரையாடல் – 65

 எமோஜிக்களின் உரையாடல் – 65

...................................................................................

வாழைப்பழத்தோல் மேல கால வச்சா வழுக்கத்தான் செய்யும்.

ஆமா,

அதுக்காக வாழப்பழம் சாப்பிடாம இருக்க முடியுமா, தோலைத் தான் எறியாம இருக்க முடியுமா?

முடியாது.

அதனால, நாம செய்யவேண்டியது என்னன்னா –

வாழைப்பழத்தை சாப்பிட்டு தோலை பத்திரமா குப்பைத் தொட்டியில போடணும். பக்கத்தில குப்பைத் தொட்டி இல் லேன்னா, தெருவோரமா போடணும்... வீட்டுக்குள்ளாற இருந்து ஜன்னல் வழியா வெளிய எறியக் கூடாது.

என்னப்பா இன்னும் இதே ரீதியில யோசிச்சுக் கிட்டிருக்கே ... ? இதுக்கான தீர்வு ஒண்ணே ஒண்ணுதான்.

என்னது?

தோலே இல்லாம வாழப்பழம் கிடைக்கச்செய்ய றது தான்.

?????????????????????????????????????????????????????????????

சொல்லத்தோன்றும் சில..... நடிகைகளின் வயது

 சொல்லத்தோன்றும் சில.....

நடிகைகளின் வயது

’மௌனம் சம்மதம்’ என்ற திரைப்படம்தான் நான் தியேட்டருக்குச் சென்று பார்த்த கடைசிப் படம் என்று நினைக்கிறேன்.

மம்முட்டிக்காக இமயமலையின் உச்சிக்கு மேலாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டேகூட எந்தப் படத்தையும் பார்க்கும் முனைப்பு ஒரு காலத்தில் இருந்தது.

எத்தனை அறிவார்த்தமாகப் படங்களைப் பற்றிப் பேசினா லும் எள்ளிநகையாடினாலும் தியேட்டருக்குள் சென்று அமர்ந்துவிட் டால் பின் அந்தப் பெரிய திரையில் யாராவது அழுதால் என்னால் எப்படி அழாமலிருக்க முடியும்?!

எழுத்தோ, சினிமாவோ - வாசிப்பவை, காண்பவை எல்லாமே ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு குழுவின் கற்பனை மட்டுமே என்ற எண்ணமேற்பட்டுவிட்டால் பின் அவற்றிலிருந்து மனம் ஒருவிதத் தில் அந்நியப்பட்டு விடுகிறது.

பின், தொலைக்காட்சிப்பெட்டி வந்தது.

சின்னத்திரையில் நடக்கும் கதையோடும், காட்சிகளோடும் ஒன்றாமலேயே அதை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பது பழகி விட்டது.

வெகுநாட்களுக்குப் பிறகு 'தெனாலி' படம் தியேட்டருக்குச் சென்று பார்த்தபோது அதில் மனிதர்களின் கனபரி மாணங்கள் மிகமிகப் பெரிதாய் தலையை, கண்களைக் கிறுகிறுக்கச் செய்தன.

அதுவும் கதாநாயகி ஜோதிகா அண்ணனுடன் செல்லும் போது அணிந்திருக்கும் அதி குட்டைப் பாவாடை...... அதுநாள்வரை காதல னுடன் தான் கதாநாயகி அப்படி அணிந்துகொண்டு நடனமாடு வாள். அல்லது, காபரே நடனக்காரி அப்படியொரு ஆடையில் ஆடுவார். ஏதோ வொரு வகையில் அண்ணனுடனான அந்தக் குட்டைப் பாவாடைக்காரத் தங்கச்சியைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியாயிருந்தது.

பின், வீட்டில் ஆங்கில சேனல்களில் சிலகாலம் சில படங்கள். அதே படங்கள் பல மாதங்களுக்குத் திரும்பத் திரும்பக் காட்டப் படுமாதலால் அவற்றையும் சீரியல்கள் போலப் பார்த்துக்கொண் டிருக்கலாம். DA VINCI CODE, ANGELS AND DEMONS, THE ORIGINAL SIN, THE SCENT OF A WOMAN, THE DEVIL'S ADVOCATE - இப்படி சில படங்கள்.

இப்போதெல்லாம் இரண்டு மூன்று மணிநேரம் தொடர்ந்து எந்தப் படத்தையும் பார்க்கமுடிவதில்லை. அலுப்புத் தட்டிவிடுகிறது. நிறைய காட்சிகளை முன்னூகித்துவிட முடிகிறது. நடப்பதைக் காட்டுகிறோம் என்ற பெயரில் மிகக் கொடூரமான காட்சிகள் காட்டப் படுகின்றன. பார்க்க முடிவதில்லை.

இரண்டொரு வருடங்களுக்கு முன்பு பார்த்த கவிஞர் லீனா மணிமேகலையின் படைப்பு ’மாடத்தி’ மனதுக்கு நிறைவைய ளித்தது.

இப்போது அதிகம் பேசப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்கவில்லை. அதைப் பற்றி நிறையப் பேசப்பட்டுவிட்டன; பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆனால், எனக்கு இதில் படத்தைப் பார்க்காமலே நிறைவளித்த அம்சம் - அதில் வரும் இரண்டு கதாநாய கிகளின் வயது. அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குக் கதாநாயகி அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது.

கல்கி கதையில் அந்தப் பாத்திரங்கள் நடுத்தர வயதுக் காரர்களா தெரிய வில்லை. ஆனாலும், தமிழ் சினிமா வைப் பொறுத்தவரை (அல்லது, இந்திய சினிமா என்றே சொல்லலாமா?) இது மிக மிக அரிதான விஷயம்.

//மீள்-பதிவு - ஜூன் 9, 2023//

எமோஜிக்களின் உரையாடல் - 66

 எமோஜிக்களின் உரையாடல் - 66

அநியாயம், அக்கிரமம் , உச்சபட்ச துரோகம்...

தேர்தல் முடிவுகளைச் சொல்றீங்களா

அதில்லைங்க

பின்னே? வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஏறிட்டதைச் சொல்றீங்களா?

அதெல்லாமில்லீங்க

ஆ! 'நீட் தேர்வு வினாத்தாள் கசிவைச் சொல்றீங்களா?

நீங்க வேற - அது எதுவும் இல்லீங்க.

அப்பிடின்னா - வேறென்ன?

ஜி-தமிழ்ல மெகாத்தொடர்களை மெகாஆஆஆத் தொடரா நீட்டிக்கிட்டே போறவங்க, மெகாத் தொடர்களைக் கிண்டல் பண்ணி மினி தொடர் பாருங்கன்னு சொல்ற விளம்பரத்தையும் வெளியிடறாங்க - அநியாயம், அக்கிரமம், உச்சபட்ச துரோகம்...

???????????????????????????????????????????????????

எமோஜிக்களின் உரையாடல் - 67

 எமோஜிக்களின் உரையாடல் - 67

...................................................................................

என்னங்க - ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க் கட்சியை எகத்தாளமாகவும் பேசி பரபரன்னு பதிவுகள் போட்டுக்கிட்டிருப் பீங்க. ரெண்டு மூணு மாசமா ஒண்ணுமே காணமே.

உங்ககிட்ட சொல்றதுக்கு என்னங்க - நாமெல்லாம் ஒண்ணுக் குள்ள ஒண்ணு . இப்ப எதிர்க்கட்சி ஆளுங் கட்சியாயிடுச்சு. நமக்கு வேண்டப்பட்டவர் மூலம் அதுல ஒரு நல்ல பதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. பேச்சு வார்த்தை, பரிந்துரையெல்லாம் பலமா நடந்துக் கிட்டிருக்கு. அதான்.......

'யதார்த்த புரட்சியாளர்'னு உங்களுக்கு ஒரு பட்டம் தர ஏற்பாடு பண்ணிடறேங்க.

எமோஜிக்களின் உரையாடல் - 68

 எமோஜிக்களின் உரையாடல் - 68

............................................கஷ்டமான கேள்வி கேட்கப்போறேன் சார் - ஆனா, கைசொடுக்கற நேரத்தில பதில் தரணும்.


தந்துட்டாப் போச்சு. கேளுங்க.

நல்ல இலக்கியம் எது?

நான் எழுதுவது.

இலக்கியமல்லாதது?

மற்றவர்கள் எழுதுவது.

எமோஜிக்களின் உரையாடல் - 69 ....................................................................................

 எமோஜிக்களின் உரையாடல் - 69




பேனா, பேப்பர் சரி. கூட, கையில கத்தி வச்சிருக் கயே ஏன்?


அதுவா அந்த இரண்டு நாள் கவிதை உருவாக்கப் பயிலரங்குல கலந்துக்கிடேனில்லே - அங்கதான் சொன்னாங்க - வார்த்தைகளை வெட்டிப் போட்டா, வரிகளை வெட்டிப்போட்டா கவிதை உருவாகும்னு. அதான்.

???????????????????????????????????????????????????

எமோஜிக்களின் உரையாடல் - 70 ....................................................................................

 எமோஜிக்களின் உரையாடல் - 70

....................................................................................


இந்த ஃபேஸ் புக்கே வேலையில் லாத வங்களோட வம்பு மடமாகிப் போச்சு. நமக்கு எவ்வளவோ வேலையிருக்கு. இதுல நேரத்தை வீணாக்கமுடியாது.

ஆனா, நீங்க ரெண்டு ஃபேக் ஐடி வச்சிருக்கீங்க. உங்க சார்பா உங்க நண்பர்கள் ரெண்டு மூணு அக்க வுண்ட்ல உங்களைப் பாராட்டிக்கிட்டே யிருக்காங்க. உங்க வீட்டாளுங்க ரெண்டு மூணு பேர் உங்க பொஸ்தகங் களைப் பட்டியலிட்டுக் கிட்டேயிருக் காங்க - இதெல்லாம் எதுக்குங்க?

என்ன பேசறீங்க? பாத்துப் பேசுங்க. ஃபேஸ்புக் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா?

??????????????????????????????????????????????????????????


எதுவும் கடந்துபோகும் - சிறுகதைத்தொகுப்பு - அநாமிகா(லதா ராமகிருஷ்ணன்)

 எதுவும் கடந்துபோகும் 

- சிறுகதைத்தொகுப்பு - 

அநாமிகா

(லதா ராமகிருஷ்ணன்)

எனது மூன்றாம் சிறுகதைத்தொகுப்பு என் அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடாக 50 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டது. இப்போது அதிலிருந்த கதைகளும் சமீபத்தில் திண்ணை இணைய இதழில் வெளியான எட்டு-பத்து கதைகளுமாக 'எதுவும் கடந்துபோகும் என்ற தலைப்பில் புதிய சிறுகதைத்தொகுப்பாக புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புதுப்புனல் பதிப்பகத் தாருக்கு என் நன்றி.


தொடர்புக்கு:
புதுப்புனல் பதிப்பகம்
pudhupunal@gmail.com
Phone Numbers: 99623 76282 / 98844 27997

உள்ளங்கையுலகு - 1 & 2 -ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் முழுக்கவிதைத்தொகுப்புகள்

 உள்ளங்கையுலகு - 1 & 2

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின்  முழுக்கவிதைத்தொகுப்புகள்



எனது முழுக்கவிதைத்தொகுப்பு - 1, உள்ளங்கையுலகு - 1 என்ற தலைப்பில் புதுப்புனல் பதிப்பக வெளியீடாக ஓரிரு வருடங்க ளுக்கு முன்பு வெளிவந்தது. (என்னுடைய முதல் நான்கு கவிதைத் தொகுப்புகளில் உள்ள கவிதைகள் இந்த முதல் முழுக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இப்போது இரண்டாம் முழுக்கவிதைத்தொகுப்பு உள்ளங் கையுலகு - 2 என்ற தலைப்பில் புதுப்புனல் பதிப்பக வெளியீடாக பிரசுரமாகியுள்ளது. இதில் என்னுடைய 6 முதல் 10 வரையான கவிதைத்தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
எனது ஐந்தாம் தொகுப்பான 'வாக்கு' (சந்தியா பதிப்பக வெளி யீடு) கைவசம் இல்லாததால் இரண்டாவது முழுக்கவிதைத் தொகுப்பில் அது இடம்பெறவில்லை. மூன்றாவது முழுக்கவிதைத் தொகுப்பில் இடம்பெறும்.
தொடர்புக்கு:
புதுப்புனல் பதிப்பகம்
pudhupunal@gmail.com
Phone Numbers: 99623 76282 / 98844 27997