LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 10, 2025

மோசமான முன்னுதாரணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மோசமான முன்னுதாரணங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இலக்கிய மாபெரும்வெளியின் நீள அகலங்களை
அளந்துகூறும் உரிமைபெற்றவர்
தான் மட்டுமே
என்ற நினைப்புள்ளவர்கள்;
துலக்கமான விமர்சனம் என்ற பெயரில்
வழக்கமான வன்மத்தூற்றலையே
கலக்கிக் குழப்பி வாரியிறைப்பவர்கள்;
பலமெல்லாம் தன் எழுத்தென்றும் சுகவீனமே
பிறர் படைப்பெனவும்
பலகாலமாய் நம்பிக்கொண்டிருப்பவர்கள்;
தன்னை முன்னிறுத்தாதவர்களின்
மௌனக்கடலில்
ஆனமட்டும் மீன்பிடித்து விற்பவர்கள்;
அதுவே வணிகவெற்றிச்சூத்திரமாக
அன்றாடம் கடைவிரித்துக்கொண்டிருப்பவர்கள்;
மாற்றுக்கருத்தாளர்களைக் மதிப்பழிப்பதற்கென்றே
மிகுகொச்சை வார்த்தைகளை
முடிந்துவைத்திருப்பவர்கள்;
மதிப்பார்ந்த சொற்களில் சதா கூர்வாளை
மறைத்துவைத்திருக்கும்
புன்மதியாளர்கள்;
பெருங்கடலின் நட்டநடுவில் தன்னால்
வெறுங் காலில் நிற்கமுடியும் என்று
உருவேற்ற முடிந்தவர்க்கெலாம்
உருவேற்ற முனைபவர்கள்;
ஒருமை பன்மை தன்மை முன்னிலை
யெல்லாமும்கூட
தன் காலடியில் தெண்டனிட்டு மண்டியிட்டுக் கொண்டிருப்பதாக
இன்கனா கண்டிருப்பவர்கள்;

ஒரு ரோஜா தன் எழுத்தால் தான்
ரோஜாவாகிறது என்று தன்னைத்தானே
தாஜா செய்துகொள்பவர்கள்;

”ஆஜா…. ஆஜா” என்றும் “வா வா வா” என்றும்
‘வாரே வாஹ்’ என்றும் WOW! HOW WONDERFUL!’ என்றும்
அறிந்த மொழிகளிலெல்லாம் தனக்குத்தானே
ஆரத்தியெடுத்துக்கொண்டிருப்பவர்கள்;

பளபள இலக்கிய பல்லக்கில் பவனி வந்தபடி
பல்லக்குத்தூக்கிகளின் பட்டியலை
கவனமாய் கண்காணித்துக்கொண்டிருப்பவர்கள்:

காலத்திற்குமாய் ஆவணப்படுத்திக்
கொண்டிருப்பவர்கள்;

படைப்பகராதியின் அத்தனை சொற்களையும் அவற்றுக்கான பல்பொருள்களையும்
நடையாய் நடந்துநடந்து தானே கண்டுபிடித்துக்
கொண்டுவந்துசேர்த்ததாய்
தான் நம்புவதுபோல் எல்லோரும்
நம்பவில்லையே
என்று வெம்பிக்கொண்டிருப்பவர்கள்;

நல்ல இசையொன்றை இனங்கண்டு சொல்லி
கூடவே இன்னொரு நல்ல இசையை
நாராசமெனவும் சொல்லி
அதை அழகியல் அறிவியல் அருளியல்
அறவியல் சார் அரசியல் பேசி
அலசித்தள்ளி
அதி எளிதாய் அநியாயத்தை
நியாயமாக்கப் பார்க்கும்
அராஜவாதிகள்;

அடியில் புளி ஒட்டிய துலாக்கோலை
நியாயத்தராசாகப் பிடித்திருக்கும் அவர்தம்
கைகள்
HANDWASHஐ அடிக்கடி பயன்படுத்தி
கொரோனாத்தொற்றிலிருந்து மீள முடியும்….

அடிமுடியெங்கும் ஆழப் பற்றியிருக்கும்
'தானா'ன நோய்த்தொற்றிலிருந்து
சற்றும் மீள முடியுமோ…?

UPS & DOWNS - REMINISCENSES OF MR.VENKATESH

 UPS & DOWNS  - 

REMINISCENSES OF MR.VENKATESH




“வாழ்க்கை சீட்டுக்கட்டு விளையாட்டைப் போன்றது.’’ என்று எதிலோ படித்திருக்கிறேன். ஒரு குலுக்கலில் இணையும் சிலர் மறுகுலுக்கலில் விலகிச்சென்று விடுகிறார்கள்.

அப்படித்தான், நானும், நான் பெரிதும் மதிக்கும் பத்மினி மேடமும் முடிந்தபோது சென்றுவரும் பூங்காவில் திரு. வெங்கடேஷை சந்திக்க நேர்ந்தது.

மனைவி இறந்த பிறகு ஏறத்தாழ 26 வருடங்கள் தனியாக வாழ்ந்துவருபவர்.

(தேவையெனில் வந்து உதவுவதற்கு அவருடைய மகளும் மருமகனும் மற்ற உறவினர்களும் இருக்கிறார்கள்).

எங்களிருவரின் வலைப் பூக்கள் குறித்துப் பேசும்போது தனக்கும் வலைப்பூ இருந்தால் நன்றாயிருக்கும் என்று விருப்பம் தெரிவித்தார். அவருடைய வலைப்பூ ஆரம்ப மாகி அதில் அவர் ஆர்வமாகப் பதிவேற்றும் கட்டுரைகள் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றது.

அவருடைய ஆங்கில மொழித் தேர்ச்சியையும், எழுத எடுத்துக் கொள்ளும் விஷயங்களையும் அவற்றை சுவாரசியமாக வெளிப்படுத்தும் பாங்கையும் பார்த்தபோது அவற்றை நூலாக வெளியிடலாமே என்று தோன்றியது. அவற்றையும் அவற்றோடு என்னுடைய மொழிபெயர்ப் பையும் இணைத்து ஒரு நூலாக வெளியிட்டேன்.

இப்போது மின் – நூல் வடிவில் திரு வெங்கடேஷ் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரை களும் அவற்றுக்கான எனது மொழபெயர்ப் புகளும் இடம்பெற்றுள்ளன. அமேஸான் Paperback பதிப்பில் ஆசிரியரின் ஆங்கிலக் கட்டுரைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்

ANAAMIKAA ALPHABETS
BOOKS PUBLISHED THROUGH AMAZON DIRECT PUBLISHING AS E-BOOK AND PAPERBACK EDITION.
AMAZON LINKS :
AMAZON KINDLE BOOK(DIGITAL) AND PAPERBACK EDITION OF MR.G. VENKATESH'S COLLECTION OF ESSAYS TITLED UPS 7 DOWNS (a blogger's musings) originally published by ANAAMIKAA ALPHABETS.

IN THE ORIGINAL BOOK ALONG WITH THE ENGLISH ARTICLES MY TAMIL TRANSLATIONS OF THEM ARE ALSO THERE. IN THE KINDLE EDITION(E-BOOK) OF THIS VOLUME THE TAMIL TRANSLATIONS ARE THERE. IN PAPERBACK EDITION THE ENGLISH ARTICLES

(the author wrote these articles originally in English and uploaded them in his blog) are there. i thak the author for giving me permission to publish his book as kindle book and amazon paperback book. - Latha Ramakrishnan

திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடு – இல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள்
லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த
தோழி நீலா அல்லது லீலா.
நானே ஒப்புக்கொள்வதில்லையே என்று நகைத்த என்னைப்
பகையாளிபோல் பார்த்தபடி
“பார்த்தே தீரவேண்டும்;
நேர்த்திக்கடன் செலுத்தாதிருப்பது தெய்வக்குத்தம்-
உய்ய வழி தேடிக்கொள். அவ்வளவுதான் சொல்வேன்” என்றாள்.
பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த தெனாலியில்
கிளப் டான்ஸர்(?) கணக்காய் அத்தனை குட்டைப்பாவாடையில்
அண்ணனோடு ஜோதிகாத் தங்கையைப் பார்த்ததில் உண்டான பீதியில்
அரங்கில் இடியிடித்து எரிமலை வெடிப்பதாய் பரவிய
ஒலியின் வன்முறையில் பலவீனமாகிப்போன மனதிற்கு
திரும்பவும் தியேட்டருக்குள் நுழைய தைரியம் வரவில்லை” யென்றேன்.
”பெண்ணின் நடை யுடை பாவனை குறித்து உனக்கெல்லாம்
எத்தனை மனத்தடை” என்று பழித்தாள்.
நான் சொல்லிக்கொண்டிருப்பது மனத்தடையின்
இன்னொரு பரிமாணம் பற்றி என்பதை
நன்றாகவேஅறிந்திருந்தும் ஏதுமறியாதவள் போல பேசுபவளிடம்
மேலும் என்ன சொல்லவிருக்கிறது…. ?
நாளும் வாளாவிருப்பதே இங்கே சாலச் சிறந்தது…..
அதையும் செய்யவிடாமல்
அங்கே விற்றுக்கொண்டிருந்த இளநீரைத் தாண்டிச் சென்று
கோலா வாங்கிக் கொடுத்தபடி _
”அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோள்களிலிருந்தெல்லாம்
வந்திறங்கிக் கண்டுகளித்துக்கொண்டிருக்கிறார்கள்;
அவர்களில் பேர்பாதிக்கும் மேல்
’பாரிய’ எழுத்தாளர்கள் தெரியுமா”
என்று கூறிச் சென்றாள் மாலா அல்லது ஷீலா.
காரியமாய் அன்றி மனதார அப்படியேதேனுமொரு நூல்
அவர்களுடைய மேடைகளில் என்றைக்கேனும் மரியாதை செய்யப்பட்டிருக்குமானால்…….என்று
முனகும் மனதின் முட்டாள் வாயை முக்கியமாய் அடைத்தாகவேண்டும்….
அகண்ட திரையின் ஆக்கிரமிப்புக்கு அப்பால், இருள் மூலைகளில்
இறைந்துகிடக்கின்றன ஏராளமான இலக்கியப் படைப்புகள்
சிறிய அறிமுகமற்று, ஒரு வரி விமர்சனமுமற்று
சக படைப்பாளிகளாலும் சீந்தப்படாமல் _
வீசியெறியப்பட்ட மீந்த சோற்றுப்பருக்கைகளாய்.....

விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விலகியிருந்து பார்க்கக்

கிடைக்கும் வெற்றி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல்,
ஒரு கணத்தில் உடைந்த கண்ணாடியை
மீண்டும் ஒன்றாக்கிவிடும் புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை
வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம், ஆங்காரப் புழுதிப்புயல் –
இன்னும் ஏராளமானவற்றோடு
வெற்றியாளர்களை வலைவீசித் தேடித்தேடிக் கண்டெடுத்துக்கொண்டவாறு சிலபலர்…..
பெற்றெடுத்த பிள்ளையாய்த் தத்தெடுத்து
முத்தம் கொடுக்க
அல்லது குற்றேவல்காரராய் பாவித்து
எத்தித் தள்ள.
இவர்களுடைய குரல்வளைகளிலிருந்தெல்லாம் இடையறாது துருத்திக்கொண்டு வெளிக்கிளம்பும்கால்களின் வளைநகங்கள் கத்தியைக் காட்டிலும் கூர்மையானதும்,
கொடிய விடந்தோய்ந்ததுமாய்….
வரலாற்றுச் சின்னமொன்றின் வயிற்றுப்பகுதியில்படிந்திருக்கும் சில ஒட்டுண்ணிகள்,
வெவ்வேறு ஊடகங்களில் வாகாய்த் தெரியும்படியாக……
.
அன்புமழையில் குளிப்பாட்டுவதாய்
ஜன்னியில் தள்ளிப் பிதற்றச் செய்து
சுரவேக உளறல்களையெல்லாம் பொன்மொழிக்கையேடுகளாக்கி
பெரிய பெரிய அச்சுருக்களில் சமூக வெளிகளெங்கும்
அமோகமாய் அப்பளம் சுட்டு வடை பொரித்து
வெற்றியாளருக்கு
நெட்டி முறித்து திருஷ்டி கழித்து
காலின் கீழ் குழிபறிப்பவைகளுமாக
விறுவிறுவென இயங்கிக்கொண்டிருக்கின்றன வேறு சில.
வருடாவருடம் தண்ணித்துறை மார்க்கெட் கடையில்
கதை கட்டுரை கவிதைப் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கான
பரிசுகளைத் தயாரிக்கச் சொல்லி முன்பணம் கொடுக்கச் செல்லும் நேரம்
சின்னதும் பெரியதுமாய் அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கோப்பைகளின்
மங்கிக்கொண்டே போகும் தங்கமுலாம்…….
விற்பனையாகாமலே தங்கிவிட்ட விதவிதமான வடிவங்களிலான
பதக்கங்கள் ஷீல்டுகளைப் பார்க்கநேரும் தருணங்களில்
பெறக் கிடைக்கும் போதிமரத்தடி வாசத்தில்
வீசும் தென்றலினூடாய் வெகுதொலைவில்
செல்ஃபி சகிதம் சுற்றுமுற்றும் பார்த்தபடியே
வெற்றியாளர்களைச் சேர்த்தணைத்து இன்னும் இறுக்கமாய்ப்பற்றிக்கொள்வதில்
முற்றிலுமாய்த் தம்மை யிழந்து
மும்முரமாய், மூழ்கிக்கொண்டிருப்பவர்கள்
மங்கலாய்த் தெரிகிறார்கள்.

SHAKESPEARE SAYS......

 SHAKESPEARE SAYS.....













Wednesday, June 4, 2025

THUGLIFE அல்லாத சாதா வாழ்க்கையிலிருந்து சில கேள்விகள்

 THUGLIFE அல்லாத

சாதா வாழ்க்கையிலிருந்து

சில கேள்விகள்

கேள்வி - 1



நினைப்புதான் வாய்வார்த்தையாக வெளிவருகிற தென்றாலும் நினைப்பு வார்த்தையென்றான பின் அதன் பொருள்பெயர்ப்பு கேட்பவர்களுக்கானதாகி விடுகிறதல்லவா?

இன்னொரு வகையில் பார்த்தால், வார்த்தைகள் வழியாக எண்ணத்தைக் கட்டுடைத்துக் காணவும் வழியுண்டல்லவா?

கேள்வி - 2

THUGLIFE அல்லாத சாதா வாழ்க்கையிலிருந்து
கேள்வி - 2
அன்பு ஒருபோதும் மன்னிப்புகோராதா?
(LOVE NEVER APOLOGIZES) ?
இது என்ன புதுக்கதை?
ஒருவேளை THUGLIFE வாழ்வுக்கோட்பாடுகள் சாமானியர்களுக்குப் புரியாதோ என்னவோ. நமக்குத் தெரிந்ததெல்லாம் -
அன்பே சிவம்
*
கேள்வி - 3, 4, 5.......
சர்வம் THUGLIFE மயம்!


வெகுஜனப் பத்திரிகையாளர்கள் முதல் நவீன தமிழ் எழுத்தாளர்கள் வரை THUGLIFE படம் குறித்த ஆய்வலசல்களில் மும்முர மாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் களே - ஏன்?

அண்ணா பல்கலைக்கழக பாலியல் பலாத்காரம் பற்றியெல்லாம் இப்படி அகல்விரிவான ஆய்வல சல்கள் நடக்கவில்லையே - ஏன்?

பிரம்மாண்ட மேடையில் அரங்கேற்றப்பட்ட THUGLIFE பாடல்களெல்லாம் திரு. ரஹ்மானின் முந்தைய சில பாடல்களின் அப்பட்டக் கலவையாய். ஆனால், அதைப் பொருட்படுத்தா மல் ஏராளம் பேர் அந்தப் பாடல்களை ஓஹோ வெனப் புகழ்கிறார்களே - ஏன்?

படத்தின் ட்ரெயிலரைப் பார்க்கும்போது அது நாயகன்’ படத்தின் நீட்சியாகவே தெரிகிறது. 40 வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் படங்களில் படபடபடவென்று ’மெஷின் கன்’களை வைத்துச் சுட்டுக்கொண்டிருப்பவர்களை இவர்கள் இந்தியா விலும் தமிழகத்திலும் உருவாக்கி அயல்நாட்டுக் கும் ஏற்றுமதி செய்து காசு பார்க்கிறார்கள். அரைத்த மாவையே அரைத்து கோடிகளில் சம்பா திக்கும் திறன் பாராட்டுக்குரியதாவது ஏன்?

THUG - THUGLIFE - 

ROMANTICISING VIOLENCE  

IN THE NAME OF ART?

Meaning of THUG in English a man who acts violently, especially to commit a crime: Some thugs smashed his windows. Synonyms. goon (CRIMINAL) mainly US informal. hoodlum old-fashioned

*

"THUG LIFE" is a term that originated in hip-hop culture, popularized by Tupac Shakur, and refers to a determined and resilient attitude to succeed despite facing adversity, particularly in the context of marginalized communities. It's not necessarily about violence or crime, but rather a philosophy of self-reliance and fighting for what one believes in. Some interpretations of "thug life" also include the idea of overcoming obstacles and building oneself up from nothing. 

மேற்கண்ட எந்த அர்த்தத்தை எடுத்துக்கொண்டா லும் -

வன்முறையை, சட்டமீறலை ROMANTICIZE செய் யும் வழக்கம் திரைத்துறையைப் பீடித்திருப்பது ஏன்?



தேடித்தேடி இளைத்தேனே…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தேடித்தேடி இளைத்தேனே……

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மூக்குத்தியம்மனோ நெத்திச்சுட்டி அம்மனோ
இக்கணம் என் முன் வந்து
வரமருள்வேன் கேள் என்றால்
தரச்சொல்லிக் கேட்பேன் _
தன் மனதிற்குள் தினந்தினம் பல்கிப்பெருகி
விரிந்துகொண்டேபோகும்
திக்குத்தெரியாத காட்டில் ஒரு
ஏழைக் கவியென்றாலும்
உண்மைக் கவி
தன்னந்தனியாய் அலைந்தபடி
இல்லாத கடற்கரையில் இறைந்துகிடக்கும்
கிளிஞ்சல்களை
குனிந்து எடுத்து வானம் நோக்கி உயர்த்தி
அழகுபார்க்கும் நேரம்
அவர் கண்களில் மினுங்கும் மகிழ்ச்சித்துணுக்குகள்
ஒவ்வொன்றும்
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த
புராதனப் பொருட்களாய்
மிகப்பெரிய பொருளீட்டித்தரவேண்டும்
அவர்க்கு.