LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, January 30, 2019

நிஜப்பெயர் – புனைப்பெயர் – பெயரிலி – பின்…..?


நிஜப்பெயர்புனைப்பெயர்பெயரிலிபின்…..?


பெயர்பெற்ற திரைப்படங்களின் தலைப்புகள் சில புதிய திரைப்படங்களின், சின்னத்திரைத் தொடர் களின் தலைப்புகளாக வைக்கப்படுவது ஏன்? தமிழில் வார்த்தைகளா இல்லை? என்று அவ்வப்போது தோன்றும்.
பிரபல படங்களுக்கே இந்த கதி என்றால் சிறுபத்தி ரிகையில் இயங்கும் பாவப்பட்ட படைப்பாளி தன் புனைப்பெயருக்கு எப்படி உரிமைகோர முடியும்?
ரிஷி என்ற புனைப்பெயரில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கவிதைகள் எழுதிவருகிறேன்.
10
தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே பெயரில் வேறு சிலருடைய கவிதைகளும்
வாசிக்கக் கிடைக்கிறது.
ரிஷி என்ற புனைப்பெயரிலான என் கவிதைகளைக் கேட்டு வாங்கி வெளியிட்ட சிறுபத்திரிகையாளர் ஒருவர் அதே பெயரிலான இன்னொருவர் கவிதைக ளையும் அதே இதழில் வெளியிட்டிருந்தார். கேட்ட தற்கு அந்த இன்னொரு கவிஞரின் நிஜப்பெயரே ரிஷி என்று தெரிவித்ததோடுநம் எழுத்துமூலம்தான் நாம் பேசப்படவேண்டுமே யொழிய புனைப்பெயரால் அல்ல என்று வேறு அறவுரைத்திருந்தார்!
அநாமிகா என்ற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதி எனது மூன்று தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதே பெயரில் இன்னும் மூவர் எழுதிவருகிறார்கள்.
எனவே இப்போதெல்லாம் புனைப்பெயரோடு லதா ராமகிருஷ்ணன் என்ற நிஜப்பெயரையும் அடைப்புக்குறிக்குள் போட்டுக்கொள்கிறேன்.
அபத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், என்ன செய்ய?
நீங்களென்ன பெரிய எழுத்தாளராஉங்களுடைய புனைப்பெயர் எங்களுக்குத் தெரிவதற்கும், உங்களு டைய புனைப்பெயரையெல்லாம் நாங்கள் நினைவு வைத்துக் கொள்ளவும்என்று என்னிடமே ஒரு நண்பர் சிநேகமாகக் கேட்டபோதுஎத்தனை பெரிய உண்மையை என்னமாய் புட்டுப்புட்டுவைக்கிறார்!’ என்று எண்ணமெழுவதைத் தவிர்க்கமுடிய வில்லை!
இப்போது என் கேள்வியெல்லாம் இதுதான்:
நாளை லதா ராமகிருஷ்ணன் என்ற என் நிஜப்பெயரி லேயே ஒருவர் அல்லது ஓரிருவர் எழுத ஆரம்பித்தால் நான் வேறு என்ன பெயர் வைத்துக்கொள்ள?
பெயரிலி? (அநாமிகா என்பதன் அர்த்தமே அதுதான்).
அல்லது, பெயரிலி XXXX என்று வைத்துக்கொண்டால் இன்னும் நவீனமாயிருக்கும் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வது சரியா?!?!?!


உறவு என்றொரு சொல்


உறவு என்றொரு சொல்


மறைந்த (தமிழக) முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிய தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய உறவுக்காரர்கள் எல்லோருமே அவர் தங்களைப் பார்த்து ஆதங்கப்பட்டதாய்ச் சொல்லிச் சொல்லி அவரைவிட தங்களை உயர்வான வாழ்க்கை வாழ்வதாய் உருவேற்றப் பிரயத்தனப் பட்டதாய் தோன்றியது.

இவர்கள் யாருமே 1980களுக்குப் பின் அவரோடு தொடர்பிலில்லை என்று கூறினார்கள். அதற்குத் தாங்கள் எவ்விதத்திலும் காரணமில்லை என்பதா கவும்.

அதில் ஒரு பெண்மணிநாங்கள் இத்தனை உறவு கள் இருந்தும் அவர் அப்படி அநாதையாய் இறந்து கிடந்ததைப் பார்த்து அத்தனை வருத்தமாயிருந்தது என்றார்.

எண்ணிறந்த மக்கள் தங்கள் உறவினராக எண்ணி அப்படி அழுதார்களேஅவர்கள் உறவுகளில்லையா?

யோசித்தால், இந்த உலகில் யாருமே அநாதை களல்ல; தாம் இல்லாவிட்டால் ஒருவரால் வாழமுடியாது என்ற நினைப்பு உள்ளவர்கள்தான் உண்மையில் அத்தகையோர் என்று தோன்ற வில் லையா?

உறவு என்பதை அந்தப் பெண் வரையறுத்த விதம் அபத்தமாக ஒலிக்கவில்லையா?.


Tuesday, January 29, 2019

’ரீல்’ நாயகர்கள்


’ரீல்’ நாயகர்கள்


அரசியல்வாதிகளுக்காவது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் இருக்கிறது. அரசியல்வாதிகள் பேசும் பேச்சுகளுக்கு அவர்கள் பொறுப் பேற்க வேண்டியிருக்கிறது.
அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் சில குறைந்தபட்ச ஒப்பனைக ளையே (முடிச்சாயம், ஃபேஸ்-லிஃப்ட் அன்னபிற) அதிகபட்சமாகப் பயன்படுத்துகின் றனர்.
அரசியல்வாதிகளில் கணிசமானோர் ஆரம்பகட்டத் திலாவது கொஞ்சம் போல் மனிதநேயமும் சமூகப் பிரக்ஞையும் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
ஆனால், (வணிகத்) திரையுலவகைச் சேர்ந்தவர்கள், திரையில் செய்யும் நடையுடை பாவனைகள் எல்லாமே ஒப்பனை. காசுக்கு.
திரையில் அவர்கள் பேசும் பேச்சு எல்லாம் அவர்களுடைய படைப்புரிமை. இன்று கோடியில் புரளாதர்கள் குறைவு.
இரண்டு மணி நேரத்தில் உலகையே பொன்விளையும் பூமியாக ஜோடித்துக்காட்டி அவர்கள் பூமிகளில் பொன்விளையச் செய்துவிடுகிறார்கள்.
அரசியல்வாதிகளை அசிங்கம்பிடித்தவர்களாக திரைப்படங்களில் சித்தரிப்பவர்கள் தங்கள் முதுகைப் பார்த்துக்கொள்பவர்களா? பார்க்கத்தேவையில்லை என்ற பார்வையுடையவர்களா?


ME TOO இயக்கமும் சில பெண்ணியவாதிகளும்

ME TOO இயக்கமும் சில பெண்ணியவாதிகளும்


ME TOO இயக்கம் பணிசெய்யும் இடத்தில் பெண்களுக்கு நேரும் பாலியல்சார் அத்துமீறல்களைப் பற்றியது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்ணிய வாதிகளாகப் பேசப்படும் பிரபலப் பெண்கள் சிலரும்கூட இதை சாதியரீதியாய்ப் பார்த்ததும் பழித்தது வன்மமான, வருந்தத்தக்க அணுகுமுறை.
இப்போது ஒருபடி மேலே போய் மதிநுட்பம் வாய்ந்த படைப்பாளிப் பெண் ஒருவர் இங்கேயுள்ள சாதீயப் படிநிலைப்படி மேல்சாதி ஆண்கள், அதற்கடுத்து மேல்சாதிப் பெண்கள், இவர்களை அடுத்துத்தான் இடைநிலை சாதி ஆண் என்கிறார்.
அப்படியென்றால், மேல்சாதிப் பெண்கள் அதற்கடுத்த படிநிலையில் உள்ள ஆண்களுக்குப் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைத் தந்துகொண்டிருக்கி றார்கள் என்கிறாரா?
முடிந்தால் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாய் பாதிக்கப்பட்ட அத்தகைய ஆண்களைப் பேச வைக்கட்டும். அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுத்தர முயலட்டும்.
பொத்தாம்பொதுவாய் சக பெண்களைப் பற்றிப் புறம் பேசுவதுதான் பெண்ணியம் என்று அவர் எண்ணினால் அது தவறு. அவர் பேசியிருப்பது அப்பட்டமான அவதூறல்லவா?