’ரீல்’ நாயகர்கள்
அரசியல்வாதிகளுக்காவது
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை தேர்தல்
இருக்கிறது. அரசியல்வாதிகள்
பேசும் பேச்சுகளுக்கு
அவர்கள் பொறுப்
பேற்க வேண்டியிருக்கிறது.
அரசியல்வாதிகளில்
பெரும்பாலோர் சில
குறைந்தபட்ச ஒப்பனைக ளையே
(முடிச்சாயம், ஃபேஸ்-லிஃப்ட்
அன்னபிற) அதிகபட்சமாகப்
பயன்படுத்துகின் றனர்.
அரசியல்வாதிகளில்
கணிசமானோர் ஆரம்பகட்டத்
திலாவது கொஞ்சம்
போல் மனிதநேயமும்
சமூகப் பிரக்ஞையும்
உள்ளவர்களாக இருக்கின்றனர்.
ஆனால்,
(வணிகத்) திரையுலவகைச்
சேர்ந்தவர்கள், திரையில்
செய்யும் நடையுடை
பாவனைகள் எல்லாமே
ஒப்பனை. காசுக்கு.
திரையில்
அவர்கள் பேசும்
பேச்சு எல்லாம்
அவர்களுடைய படைப்புரிமை.
இன்று கோடியில்
புரளாதர்கள் குறைவு.
இரண்டு
மணி நேரத்தில்
உலகையே பொன்விளையும்
பூமியாக ஜோடித்துக்காட்டி
அவர்கள் பூமிகளில்
பொன்விளையச் செய்துவிடுகிறார்கள்.
அரசியல்வாதிகளை
அசிங்கம்பிடித்தவர்களாக திரைப்படங்களில் சித்தரிப்பவர்கள்
தங்கள் முதுகைப்
பார்த்துக்கொள்பவர்களா? பார்க்கத்தேவையில்லை
என்ற பார்வையுடையவர்களா?
No comments:
Post a Comment