LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, January 30, 2019

நிஜப்பெயர் – புனைப்பெயர் – பெயரிலி – பின்…..?


நிஜப்பெயர்புனைப்பெயர்பெயரிலிபின்…..?


பெயர்பெற்ற திரைப்படங்களின் தலைப்புகள் சில புதிய திரைப்படங்களின், சின்னத்திரைத் தொடர் களின் தலைப்புகளாக வைக்கப்படுவது ஏன்? தமிழில் வார்த்தைகளா இல்லை? என்று அவ்வப்போது தோன்றும்.
பிரபல படங்களுக்கே இந்த கதி என்றால் சிறுபத்தி ரிகையில் இயங்கும் பாவப்பட்ட படைப்பாளி தன் புனைப்பெயருக்கு எப்படி உரிமைகோர முடியும்?
ரிஷி என்ற புனைப்பெயரில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கவிதைகள் எழுதிவருகிறேன்.
10
தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே பெயரில் வேறு சிலருடைய கவிதைகளும்
வாசிக்கக் கிடைக்கிறது.
ரிஷி என்ற புனைப்பெயரிலான என் கவிதைகளைக் கேட்டு வாங்கி வெளியிட்ட சிறுபத்திரிகையாளர் ஒருவர் அதே பெயரிலான இன்னொருவர் கவிதைக ளையும் அதே இதழில் வெளியிட்டிருந்தார். கேட்ட தற்கு அந்த இன்னொரு கவிஞரின் நிஜப்பெயரே ரிஷி என்று தெரிவித்ததோடுநம் எழுத்துமூலம்தான் நாம் பேசப்படவேண்டுமே யொழிய புனைப்பெயரால் அல்ல என்று வேறு அறவுரைத்திருந்தார்!
அநாமிகா என்ற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதி எனது மூன்று தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதே பெயரில் இன்னும் மூவர் எழுதிவருகிறார்கள்.
எனவே இப்போதெல்லாம் புனைப்பெயரோடு லதா ராமகிருஷ்ணன் என்ற நிஜப்பெயரையும் அடைப்புக்குறிக்குள் போட்டுக்கொள்கிறேன்.
அபத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், என்ன செய்ய?
நீங்களென்ன பெரிய எழுத்தாளராஉங்களுடைய புனைப்பெயர் எங்களுக்குத் தெரிவதற்கும், உங்களு டைய புனைப்பெயரையெல்லாம் நாங்கள் நினைவு வைத்துக் கொள்ளவும்என்று என்னிடமே ஒரு நண்பர் சிநேகமாகக் கேட்டபோதுஎத்தனை பெரிய உண்மையை என்னமாய் புட்டுப்புட்டுவைக்கிறார்!’ என்று எண்ணமெழுவதைத் தவிர்க்கமுடிய வில்லை!
இப்போது என் கேள்வியெல்லாம் இதுதான்:
நாளை லதா ராமகிருஷ்ணன் என்ற என் நிஜப்பெயரி லேயே ஒருவர் அல்லது ஓரிருவர் எழுத ஆரம்பித்தால் நான் வேறு என்ன பெயர் வைத்துக்கொள்ள?
பெயரிலி? (அநாமிகா என்பதன் அர்த்தமே அதுதான்).
அல்லது, பெயரிலி XXXX என்று வைத்துக்கொண்டால் இன்னும் நவீனமாயிருக்கும் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வது சரியா?!?!?!


No comments:

Post a Comment