LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 16, 2025

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்ச்சொல் வீரர்களும்

”வாழ்க வாழ்க” வாயர்களும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை.
உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்
சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்
காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க
அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும்
அதிகரித்துக்கொண்டேபோகின்றன.
அதனாலென்ன ? ஒருதரப்பு அன்னாடங்காய்ச்சிகளை
இன்னொரு தரப்பு அன்னாடங்காய்ச்சிகளுக்கெதிராகத் திருப்பிவிட்டால் பின்
பரபரப்பாய்த் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்களே
யல்லாது
பதுக்கியிருக்கும் கருப்புப்பணத்தின் பக்கம் கவனம் திரும்பாது.
அடிப்பதற்கு
ஆக்ரோஷமாக முழங்குவதற்கு
அசிங்கசிங்கமாகத் திட்டுவதற்கு
அப்பிராணிகள் சிலபலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர்கள்
ஆயிரங்காலத்திற்கு முன்னான புராண நாயகநாயகியராயிருந்தால் இன்னும் நல்லது.
அவர்கள் பேசாத வார்த்தைகளையெல்லாம் பொருள்பெயர்த்துச்சொல்ல வசதியாயிருக்கும்.
அவர்களைக் கடித்துக்குதறி காலால் எட்டியுதைத்து
காறித்துப்பித்துப்பி நம்மை நலிந்தவர் நாயகர்களாகக் காட்டிக்கொள்வது சுலபம்.
வாயற்றவர்களின் வாயாக நம்மை நிலைநாட்டிக்கொண்டுவிட்டால் பின்
வக்கிரமாக விஷமத்தனமாக வண்டைவண்டையாக என்னவேண்டுமானாலும் பேசலாம்.
அலையலையாய் அழைப்பு வரும்
நிலையாய் பேர் புகழ் காசு புழங்கும்
உலைபொங்கமுடியாமல் அழுதுகொண்டிருப்போருக்கான உங்கள் முழக்கத்திற்குக் காத்திருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அரங்குகள்.
சிரங்கும் சொறியும் சேத்துப்புண்ணும் சீதபேதியும்
நிரந்தரமாகிவிட்ட மக்கட்பிரிவினருக்காகப் பேசிப்பேசியே
விருந்துகளில் குறைந்தபட்சம்அறுபது உணவுவகைகளை
இருபது உணவுமேடைகளில் ருசித்துச் சாப்பிடலாம்.
கைகழுவப் போகும் வழுவழு வாஷ்பேஸினின் மேற்புறம்
பிரம்மாண்ட ஓவியத்தில் யாருடைய கண்களேனும் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கட்டும்.
அல்லது, குறைந்தபட்சம் கருத்தைக் கவரும் முத்திரை வாசகம் ஒன்று தீப்பொறிகள் பறக்கத் தரப்பட்டிருக்கட்டும்.
காகிதத்தீ கருக்கிவிடாது எதையும் என்ற அரிச்சுவடியை அறிந்துவைத்திருந்தால் போதும்.
ஆம், அதுவே போதும்.

FLEETING INFINITY - A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY

 இது 2019இல் வெளியான தொகுப்பு



தகவல் பரிமாற்றம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தகவல் பரிமாற்றம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வடிவங்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன....
இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்...
தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி.....
மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில்
மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை.
சில சமயம் வராத புறாவின் ஆயிரங் கால்களில் கட்டப்பட்டிருக்கும் காகிதத் துண்டுகள்
அதை எப்படியோ தரையிறங்க வைத்துவிடுகின்றன.
சில சமயம் தபால்காரர் வீசியெறிந்துவிட்டுச்செல்லாத
சில நூறு பக்கக் கடிதங்களைப் படிப்பதுதான்
எத்தனை சுவாரசியமாக இருக்கிறது!
காலப்போக்கில் கிழிந்ததும் கிழித்ததும்போக
எஞ்சிய கடிதங்களில் எந்தவொரு சொல்லையும் வரியையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
OK – Okayவுக்கு இடையே வித்தியாசம்
உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை.
யாரும் யாருக்கும் எழுதுவதான தொனியில்
ஆரம்பமாகி முற்றுப்பெறாமலேயே முடிந்துவிடுபவை
வாட்ஸ் ஆப் கடிதங்கள்.
காலை ஆறுமணிக்கு எழுந்து மறுகணம்
மணி முற்பகல் பதினொன்றாகிவிடும் ஓட்டத்தில்
நிதானமாகக் கடிதங்கள் எழுதும் நேரம் பிடிபடவில்லை.
எதை யென்பதும் யாருக்கு என்பதும்கூட.
எனக்கு நானே எழுதிக்கொள்ளலாமென்றால்
எதற்கு என்று கேட்பது மனமா மூளையா
இரண்டுமா புரியவில்லை.
இப்போதெல்லாம் தபால்காரர் வரும் நேரமென்ன
சரியாகத் தெரியவில்லை.
எங்கள் வீட்டு எண் தாங்கிய சிறு தபால்பெட்டியில்
குடியிருப்பினுடைய காவலாளியின் சார்ஜர் மட்டுமே எப்பொழுதும் குட்டிக் குருவிபோல் ஒரே இடத்தில் துவண்டுகிடக்கிறது.
ஒருவகையில் சார்ஜரும் மடல்தான் என்று தோன்றுகிறது.
அரிதாய்ப் பெய்யும் மழை
நீரில் கரைந்த வரிகள் நிறைந்த மடல்களை
ஒரே நேர்க்கோட்டில் தலைமீது பூவாய்ச் சொரிகிறது.
பெறவேண்டும் வரமாய இன்னும் ஒரே யொரு மடல் _
மறுமொழியளிக்காது விட்டுவிட…..

இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.

 இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.


......................................................................................................

இந்திய எல்லைப்புறங்களில் உள்ள நாடுகள்:
1. பாகிஸ்தான்.
2. சீனா,
3. நேபாளம்
4. பங்களாதேஷ்
5. பூடான்
6. மியன்மார்
7. இலங்கை
8. ஆஃப்கா னிஸ்தான்.
எல்லைப் பரப்பின் மொத்த நீளம் ஏறத்தாழ 15,200 கிலோ மீட்டர்கள். இதில் கடலோர எல்லைப்பரப்பு 7515 கிலோ மீட்டர்கள். நிலஞ்சார் எல்லைப் பரப்பு ஏறத்தாழ 15,200 கிலோ மீட்டர்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பரப்பை விண்ணி லிருந்து பார்க்க முடியும். இது மிகவும் அபாயகரமான எல்லைப்பகுதி களில் ஒன்றாக அரசு ஒலிபரப்புச் சேவையால் (Public Broadcasting Service) கொள்ளப்படுகிறது.
இந்திய எல்லைப் பகுதிகளில் அமைந் துள்ள மாநிலங் கள் பின்வருமாறு:
ஜம்மு காஷ்மீர்,
பஞ்சாப்,
ராஜஸ்தான்,
குஜராத்,
சிக்கிம்,
அசாம்,
மேற்கு வங்கம்,
திரிபுரா,
மேகாலயா,
மிசோரம்,
அருணாசலப் பிரதேசம்,
நாகாலாந்து,
மணிப்பூர்,
மினோ.
பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லை யைப் பகிர்ந்து கொள்கின்றன.
ஆப்கானிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
சீனா: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தர காண்ட், சிக்கிம், அருணா சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
நேபாளம்: சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
பூடான்: அருணாசலப் பிரதேசம், சிக்கிம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பூட்டானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
மியான்மர்: அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப் பூர், மினோ ஆகிய மாநிலங்கள் மியான்மருடன் எல்லை யைப் பகிர்ந்து கொள்கின்றன.
பங்களாதேஷ்: அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, மேகா லயா, மிசோரம் ஆகிய மாநி லங்கள் பங்களாதேஷுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
*இந்த எல்லைப் பகுதிகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

போரும் பயங்கரவாதமும் நாமும்

 போரும் பயங்கரவாதமும் நாமும்


நிறைய நேரங்களில் அறிவார்த்தமாகப் பேசுவதாக நினைத் துக்கொண்டு அபத்தமாகப் பேசுவோரில் நடிகர் கமலஹாஸ னும் ஒருவர். ஆனால், ஒரு பேட்டியில் அவர் சொன்னது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது. (எந்தத் தருணத்தில் என்று நினைவுக்கு வரவில்லை).
அவர் சொன்ன தன் சாராம்சம் இதுதான்: ”


//”நாம் நாட்டின் உட்புறத்தில் இருப்பதால் நமக்கு இந்திய ராணுவத்தின் அருமை, பயங்கரவாதிகளால் மக்கள் அனுப விக்கும் கொடுமைகள் தெரிவதில்லை. இங்கே எல்லாம் இயல்பாக, அமைதியாக, இணக்கமாக இருப்ப தாக பாவித்துக் கொள்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும், அல்லும்பகலும் நம் ராணுவத்தினர், கடற்படை யினர், வான்படையினர் வெகு கவனமாக எல்லையோரப் பகுதிகளை கண்காணித்து, பதுகாத்துக்கொண்டிருப்ப தால்தான் நாம் இங்கே நிம்மதியாக வழ்ந்துகொண்டி ருக்கிறோம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க மறநதுவிடுகிறோம்.

ஆனால் இந்திய எல்லையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு – அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி – பயங்கரவாதிகளின் தாக்குதல்களி லிருந்து, பயங்கரவாதிகள் என்ற போர்வையில் எதிரி நாட்டு ராணுவம் மேற்கொள்ளும் அத்துமீறல்களிலி ருந்து நம்மைக் காப்பது நம் படைவீரர்களே என்பது நன்றாகவே தெரியும்.”

Saturday, May 10, 2025

என் அம்மா - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ன் அம்மா

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒருபோதும்
சுனாமியாகப் பொங்காத சாகரம்;
சூறாவளியாகாத காற்று;
சுட்டுப்பொசுக்காத நெருப்பு;
சுக்குநூறாகாத திடம்;
சடசடவென்று முறிந்துவிடாத மரம்;
கையில் தம்பிடிக் காசில்லாத நேரம்
என் அருகில்
கதவை விரியத்திறந்திருக்கும் சிறுசேமிப்பு வங்கி;
எரியுங் குளிரில் போர்த்தக் கிடைத்த
அரிய மேலங்கி;
இரவில் காலந்தாழ்த்தி படுக்கையில் தலைசாய்த்து
’பச்சை புட்டி அமிர்தாஞ்சனை நான்
நெற்றியில் தேய்த்துக் கொள்வதை
எனக்குத் தெரியாமல் கண் திறந்து
கவலையோடு பார்க்கும்
எதிர்பார்ப்பற்ற பரிவு;
என்னவென்று சொல்லவியலா அன்பு;
சுருங்கிவரும் உடலுக்குள் சதாசர்வகாலமும்
சுழன்றுபெருகியோடிக்கொண்டிருக்கும்
ஜீவநதி;
கருகாத பூ;
ஒண்டுக்குடித்தன வீடோ
இன்றுள்ள இரண்டறைகள் கொண்ட
வாடகைக் குடியிருப்போ _
அரண்மனை, அரியணை, அரசவை,
மணிமகுடப் பிரக்ஞையற்று
பிரபஞ்சவெளியில் மிதக்கும் ஒரு
பறவைச் சிறகிழை ;
தனதேயான வானவில் நிறங்களையெல்லாம்
வாரி வழங்கும் பட்டாம்பூச்சி்;
தொட்டுவிடலாகும் தொடுவானம்;
என்றும் என் கவிதையில்
எட்டாச் சொல்……

நிலவும் போர்ச்சூழலும் தமிழக அரசின் பேரணியும் லதா ராமகிருஷ்ணன்

 நிலவும் போர்ச்சூழலும் 

             தமிழக அரசின் பேரணியும்

லதா ராமகிருஷ்ணன்


இந்தப் போர்ச்சூழலில் இந்திய அரசு, ராணுவத்தின் பக்கம் நிற்ப தாக நம் தமிழக அரசு சென்னையில் ஒரு பேரணி நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இதை காரியார்த்தமானது என்றும், பாவனை என்றும் இன்னும் வேறாகவும் சிலர் சொல்லக்கூடும்; சொல்ல முடியும். ஆனால், இந்தப் பேரணி இன்றைய இந்திய அரசின் மீதுள்ள வெறுப்புக்கும், இந்தியா என்ற நாட்டின் மீதே உள்ள வெறுப்புக்குமான பிரிகோட்டை கவனமாக வெளிப்படுத்துகிறது. இது அவசியமானது.

இந்தியா என்ற நாட்டின் ஒரு மாநிலமாக இருந்துகொண்டு எதற் கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைசொல்வதும், எதிர்த்துநிற் பதும், மதிப்பழிப்பதாய் பேசுவதும், தனித்தமிழ் நாடு கேட்கிறார் களோ, அதற்கான கலவரங்கள் ஊக்குவிக்கப்படுமோ என்ற அச்சத்தை நிறைய பேர் மனங்களில் ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய கலவரங்களை விரும்பும், ஊக்குவிக்க விரும்பும் (இத்த கைய கலவரங்களில் பெரிதும் பாதிப்படைவோர் எளிய மக்களே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) தரப்பினருக்கும் இந்தப் பேரணி மாநில அரசுக்கு அப்படியெதுவும் எண்ணமில்லை என்று தெளிவு படுத்தியிருக்கிறது. அவ் வகையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்மாநில சுயாட்சிஎன்ற சொற்றொடர் இங்கே இரண்டுவிதமான அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, அதைத் தெளிவுபடுத்தல் அவசியமாகிறது.

 இது மக்களாட்சி நாடு. ஆளும் அரசு பிடிக்கவில்லையென் றால் அடுத்த தேர்தலில் அவர்களைத் தோற்கடிப்ப தற்கான நியாயமான ஆயத்தங்களை, பரப்புரைகளை மேற் கொள்ள லாம். ஆனால், ஒரேயடியாக ஆளுங்கட்சி செய்வதை யெல்லாமே திட்டித்தீர்த்த வாறிருந்தால் எதிர்க் கட்சியென்றாலே இப்படித்தான் என்று மக்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

ஆனால், படைப்பாளி என்றாலேஅரசுஎன்ற கட்ட மைப்பை எதிர்க் கக் கடமைப் பட்டவர் என்பதாக இங்கே ஒரு பார்வை நிலவுகிறது. (ஆனால், இந்தக் கண்ணோட்ட முடைய இலக்கியவாதிகளும் மாநில அரசுக்கு எதிராக இதுவரை முணுமுணுப்பாகக்கூட குரல் எழுப்பியதில்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக் கிறது).

 மாறாக, பாராட்ட வேண்டியவற்றை பாராட்டினால், பின் அரசின் மீது - அது மத்திய அரசோ, மாநில அரசோ - நாம் வைக்கும் எதிர் விமர்சனங்களைப் பொருட்படுத்தி கவனத்தில் கொள்வார்கள். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்இப்போதைய போர்ச்சூழல் தொடர்பான மத்திய அரசின் முயற்சிகளை மிகத் தெளிவாக அலசி, பாராட்டியிருப்பது ஓர் உதாரணம்.