LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, April 15, 2025

கவிஞர் சதாரா மாலதியும் அவருடைய தாயார் எழுத்தாளர் கோமதி என்கிற லலிதாவும்

 கவிஞர் சதாரா மாலதியும் 

அவருடைய தாயார் 
எழுத்தாளர் கோமதி என்கிற லலிதாவும்




t

spdeonrSo3f3  t17m9gul4p62Aa2li1rf4h5fg780igih56hhhl400tt3g 
Shared with Your friends
Friends
//சில நாட்களுக்கு முன் கவிஞர் சதாரா மாலதியின் நினைவுநாளில் அவரைப் பற்றிய சிறு கட்டுரையை வெளியிட்டிருந்தேன்.
திண்ணை இணைய இதழில் தொடர்ந்து எழுதிவந்தவர் அவர்.
அவருடைய தாயாரும் எழுத்தாளர். திருமதி லலிதா நாராயணன். கோமதி என்ற பெயரில் எழுதியவர். அவரு டைய மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள் ளன.
முன்பெல்லாம் கதை எழுத முடியாமலும், எழுதினால் அதை பத்திரிகைக ளுக்கு காசு கொடுத்து தபாலில் அனுப்பிவைக்க வழியில்லாமலும் தான் பட்ட சிரமங் களை அவர் எழுதியிருக்கிறார்.
ஒரே மகள் இறந்த பிறகு பெங்களூருவிலிருந்து சென்னைக்குக் குடிவந்தவரை ஒரு முறை போய்ப் பார்த்திருக்கிறேன். பழகிய பெங்களூருவை விட்டு வந்த வருத்தம் அவர் பேச்சில் தெரிந்தது.
அவரிடம் கையெழுத்துப்பிரதியாக நிறைய கதைகள் இருந்தன. அவற்றையெல்லாம் என்னிடம் கொடுத்து நூலாக வெளியிட முடியுமா என்றார்.
விடைபெற்றுக்கொண்டு போகும்போது ந் கையில் 1000 ரூ கொடுத்து ஆசிர்வதித்தார். அவருடைய நூலை வெளி யிடவேண்டும் என்ற நோக்கமே அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் ANAAMIKAA ALPHABETS.
அவர் தந்த கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து சின்னஞ் சிறு கிளியே என்ற தலைப்பில் புத்தகமாக்கி, விஷ யத்தை முன்கூட்டியே சொல்லாமல் நூலின் பிரதிகளை எடுத்துக்கொண்டுபோய் அவர் கையில் கொடுத்து அவரை ஆச்சரியத்திலாழ்த்த வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
ஆனால், அதற்குள் அவர் மாரடைப்பால் காலமாகிவிட்ட தாக தாமதமாக செய்தி கிடைத்தது.
மாரடைப்பு ஏற்பட்டு உயிர் போகும் வலியிலும் மருத்துவ ரிடம் தனது உடல் மருத்துவமனை ஆய்வுக்குப் பயன்பட வேண்டும்’ என்று சொல்ல மறக்கவில்லை கோசாம் புடவை உடுத்திய அந்தப் பெண்மணி.
MODERNITY IS NOT IN DRESS, BUT IN OUTLOOK என்ற வரி தவிர்க்கமுடி யாமல் நினைவுக்கு வந்தது.
கோமதி என்ற புனைபெயரில்(அது தனது மாமியாரு டைய பெயரென்று அவர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டி ருந்தார்) அவர் எழுதிய திருமதி லலிதா நாராயணன் தன்னுடைய மகள் -கவிஞர் சதாரா மாலதி குறித்து எழுதி திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரையை அனுப்பித்தந்த திண்ணை ஆசிரியர் திரு.கோபால் ராஜா ராமுக்கு என் மனமார்ந்த நன்றி.
அந்தக் கட்டுரையை இங்கே பதிவேற்றியுள்ளேன்.
.....................................................................................................................................
என் மகள் N. மாலதி
(19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2
லலிதா April 2, 2009
________________________________________
ஒரு டூர் போக ஏற்பாடு செய்திருந்தார் மாலாவின் கணவர். த்வாரகா, மற்றும் சில இடங்கள். ரிஸர்வேஷன் எல்லாமே செய்து விட்டார். டில்லிக்கு இருவரும் போய் வந்தார்கள். அங்குள்ள உறவினர்களைப்பார்க்கச் சென்றிருந்தனர்.
மாலாவுக்கு பெங்களூருக்கு மாற்றல் ஆகி விட்டது என்பதை இன்டெர்நெட் மூலம் அறிந்ததும், யாத்திரயை ரத்து செய்துவிட்டு பெங்களூர் திரும்பினாள் மாலா. பாஸ் வீணாகமல் தான் மாத்திரம் சென்று வந்தார் அவள் புருஷன்.
மாற்றல் வந்து வேலையை ஏற்றவுடன் குவாட்டர்ஸ் பார்த்து, வீடு மாற்ற ஏற்பாடுகளை கவனித்தாள், மாலா. குவாட்டர்ஸ¤க்கு காத்திருப்பு அதிகம் இருந்ததால், குடித்தனத்திற்கு வாடகை வீடு தேட அட்வான்ஸ் அதிகம் கொடுக்க வேண்டும் வாடகையும் அதிகம், சிறிய வீடு போதவும் போதாது.
எனவே லோன் எடுத்து ஒரு •ப்ளாட் வாங்கி விடலாம் என்று யோசித்துத் தேடினாள். அவசரத்திற்கு வெகு சிரமப்பட்டு திரட்டி அட்வான்ஸ் கொடுத்து பாங்க லோன் எடுத்துக் கட்டுவதாக ஒரு •பிளாட்டை ஏற்பாடு செய்தாள்.
சதாராவிலிருந்து சாமான்களுடன் நாங்களும் வந்து பெங்களூர் சேர்ந்தோம். அந்த •பிளாட் இரண்டு ரூம் ஹால் இருந்தாலும் சிறியதாக இருந்தது. சாமான்கள் பிரிக்காமால் அப்படியே வைத்தும் போதவில்லை. அதிலேயே ஒரு பெரிய •பிளாட்டை வாடக்கு எடுத்துவிட யோசித்தோம். சாந்தினி வந்தால் இடம் போதாது என்பதால்தான்.
அமெரிக்கா போக மாலாவுக்கும் அவள் கணவருக்கும் விசா கிடைக்கவில்லை. எப்படியும் மகள் சாந்தினிதான் வருகிறாளே என்று சமாதானமாகி விட்டது. இரண்டு மாதங்கள் போவதாக தீர்மானித்த அந்த இரண்டு மாதங்கள் மிக முக்கியமான மாதங்கள் ஆகிவிட்டன.
திருநெல்வேலியில் ஒரு வீட்டு மனை வாங்கி இருந்தது. அதையும் விற்பனை செய்தாயிற்று. பெங்களூரிலேயே ஒரு மனை இருந்தது. அதையும் விற்றாகி விட்டது. உடனே வேறு ஒரு சொத்தில் பணத்தை முதலீடு செய்வதுதான் முக்கியம்.
இப்போது ஒரு பெரிய •பிளாட்தான் அவசியம். எனவே அதைத் தேடிய போது, வெஸ்டோ ரோட்டில் இந்த வீடு கிடைத்தது. சற்றும் யோசிக்கவில்லை. உடனே அட்வான்ஸ் கொடுத்துவிட்டு எப்படி எப்படியோ புரட்டி பெரிய வீடு தான் முக்கியம் என்று வாங்கி விட்டாள்.
சாந்தினி வரும் போது எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்று லோனில் ஒரு கார், (மாருதி 500) வாங்கி டிரைவ ரும் வைத்துக் கொண்டாள்.
தீபாவளிக்கு புதிய வாஷிங் மெஷின் வாங்கி, மைக்ரோ வேவ் ‘அவன்’ வாங்கி, 4 பர்னர் கொண்ட கேஸ் அடுப்பு, சாந்தினி வந்தவுடன் புது வருப் பிறப்பில் புது •பிரிட்ஜ், சாந்தினி ரூமுக்கு ஏ.சி வீடு வாங்கிய உடனேயே எல்லா அறைகளும் மரவேலைகள், எல்லா ரூம்களிலும் பீரோ, அலமாரி, நிலைக்கண்ணாடி எல்லாம் செய்து முடித்தாள்.
அவள் கணவர் ரூமில் அலமாரி போதவில்லை என்று, மறுபடி சுவார் பூராவும் அலமாரி செய்துவிட்டாள்.
சாந்தினிக்கு குழந்தை வேண்டும் என்று அதையும் தத்து எடுத்துக் கொண்டு நிறைவேற்றியதில் திருப்தி ஏற்பட்டது. குழதையை அப்படிக் கொஞ்சி, அதற்கு என்ன செய்யவேண்டும், என்ன என்ன வாங்க வேண்டும் என்று 100 வருடத்திற்கு கனவுகள் கண்டு அவளுக்கு சென்னை யில் பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடுகள் கோடித்து கோடித்து சாமான்கள் வாங்கினாள்.
சதாராவிலிருக்கும் போது கிட்னி தொந்தரவு வந்து மருந்து கள் சாப்பிட்டு உப்பில்லாமல் சாப்பிட்டு வந்தாள் மாலா. என்றாலும் சாதாரணமாகத்தான் வளைய வந்தாள்.
திடீரென்று மஞ்சள் காமாலை என்று அதற்கு மருந்து சாப்பிட வேண்டி வந்தது. மந்திரித்ததும் சற்றுக் குறைந் தது. குழந்தை பிறந்த நாள் சமயம் நன்றாகவே இருந் தாள். சென்னை போய் வந்த மறுநாளே உடல் நலம் சரியில்லை என்றாள்.
ஸ்பெஷலிஸ்டு டெஸ்ட்கள் செய்து மல்லைய்யா ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்கள் சேர்த்து சற்று பரவாயில்லை என்று வீட்டுக்கு அனுப்பி விட்டனர். ஒரு வாரத்திற்குள், ஆஸ்பத்திரிக்குத் திரும்பவும் போக வேண்டி வந்தது. மிகவும் பலஹீனமடைந்து சோர்ந்து விட்டாள். ஆலாலும் தைரியமாகவே பேசினாள். சாப்பாடு நன்றாக இல்லை என்று சமையலுக்கு ஆள் வைக்க வேண்டுமென்றாள். அதற்கும் ஏற்பாடு செய்தாள்.
குலதெய்வங்களுக்கு பிரார்த்தனைகள் செய்ய வேண்டு மென்று கணவரை கோவில்களுக்குப் போய்வரச் சொன்னாள்.
இரண்டாம நாளே திரும்பவும் உடல் நலம் சரியில்லா மல் போய் பக்கத்திலிருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி சாந்தினியிடம் சொன்னதால் ப்ரிஸ்டின் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, அப்பாவை உடனே திரும்பும்படி சாந்தினி போன் செய்துவிட்டு அத்தை களையும் வந்துவிடுங்கள் என்று சொல்லி விட்டாள்.
கணவனின் அண்ணா, மன்னி பெங்களூரிலேயே இருந்ததால் அவர்களும் வந்தார்கள். யார் வந்தால் என்ன? நன்றாகவே இருந்தவள் இரவு மூச்சுவிடக் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி, காலையில் ஐ.சியூ வில் சேர்த்தார்கள், பிறகு திரும்பி வரவே இல்லையே?
முதல் செவ்வாய் ஆஸ்பத்தியில் சேர்த்த நேரம் அதே அடுத்த செவ்வாயில் அவள் உடல்தான் வீடு வந்தது. அவரவர்கள் துக்கம் அவரவர்களுக்கு மிகப் பெரியது. ஞாயிறன்று என்னைக் கூப்பிட்டனுப்பி நாளை வந்துவிடுவேன் என்றாள்.
முதல் ஞாயிறு அன்று என்னிடம் “ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல” என்ற பாட்டு கண்ணதாசன் பாட்டு கேட்டிருக்கிறாயா என்றாள். பிறகு அதன் வார்த்தைகள் தெரியவில்லை. சாந்தினியை நெட்டில் தேடி எடுத்து கொண்டுவரச் சொல்லி படித்தாள்.
சந்தினியின் முகம் வாடாமல் பார்ப்பவள். அவள் முகத்தில் சிரிப்பே இல்லாமல் போக்கடித்து விட்டாள். உன்னைக் கரையேற்றாமல் நான் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டு என்னை நட்டாற்றில் விட்டுவிட்டு போய்விட்டாள்.
குழந்தையைப் (பேத்தியை) பார்க்க வேண்டும் என்று ஆஸ்பத்திரியில் கேட்டிருக்கிறாள். ஆனால் நோய் தொற்று ஏற்படலாம் என்று மகளே மருத்துவராக இருப்பதினால் அங்கு இருக்கும் டாக்டர்கள் கொண்டு வரக் கூடாது சொல்லி விட்டதாலும் சாந்தினி குழந்தையை எடுத்துப் போகவில்லை. எனவே பிறகு குழந்தையை அவள் பார்க்கவே இல்லை.
சாந்தினி இந்தியா வந்து கூடவே இருந்து ஒரு மருத்துவ ராக ஆலோசனை சொல்லி ஆறுதல் அளித்தது ஒரு நல்ல விஷயம். அவளுக்கும் திருப்தி.
மாலா வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கி கடன்க ளைக் கட்டி மாத பென்ஷன் மூன்றுமாதங்கள் கூட வாங்கவில்லை.
ஆசைஅசையாய் வாங்கிய வீட்டில் ஆரோக்கியமாய் வளைய வரவில்லை. குழந்தையுடன் பேசி விளையாடி அது ஊருக்கும் போகும் வரை கூட இருந்து வழி அனுப்ப வில்லை. எல்லா விஷயத்துக்கும் அவசரம். சாவுக்கும் அவசரமே ஆயிற்று.
அவள் நல்ல கதிக்குத்தான் போனாள். மற்றவர்கள்தான் உருகி உருகி தவிக்கிறோம்.
என் மாலாவின் பல வித உருவங்களை நினைத்து நினைத்து மருகுகிறேன். சின்ன வயதில், ஐந்து வயதி ருக்கும். சிவப்பு பைஜாமாவும், மாம்பழக் கலர் குர்தா வும் போட்டு, இரட்டைப் பின்னல் போட்டு போட்டோ எடுத்தோம். மிக அழகாயிருப்பாள். அது ப்ளாக் அண்ட் வொயிட் போட்டோதான். எந்த உடை போட்டாலும் பொம்மை போலிருப்பாள்.
அவள் பெரியவளானபோது மயில் கழுத்துக் கலரில் பாவாடை சொக்காய், நைலான் தாவணி மிகமிக அழகா யிருக்கும். போட்டோ இல்லாவிட்டாலும் என்கண் முன்னே இன்னமும் அந்த உடையில் நிற்கிறாள்.
முன்பு கிருஷ்ணராஜபுரத்தில் கஷ்டப்பட்டு வீடு கட்டி அவளால் வாழ முடியாமல் போய்விட்டது. வாடகை வீட்டிற்கு போனோம். இப்போது இவ்வளவு வசதியாக வீடு வாங்கி வாழ ஆசைப்பட்ட அவள் போயேபோய் விட்டாளே.
எந்தப் பக்கம் திரும்பினாலும், அவள் நிற்பதும், நடப்பதும் முணுமுணு வென்று பாடுவதும்தான் நினைவில் நிற்கிறது.
டி.வியில் சிறப்புத் தேன்கிண்ணம் பார்ப்பாள். பழைய பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
கடைசியாக அன்னக்கிளி என்ற படம் ரசித்துப் பார்த்தாள். சில சின்னத்திரை சீரியல்கள் பார்ப்பாள். பார்க்கவிட்டுப் போனால், தோழியிடம் கதை கேட்பாள். ஹிந்திப்பாடல் ‘ரங்கோலி’ முன்பு விடாமல் கேட்பாள். முகேஷ் பாடல் கள் காஸ்ட்டுக்கள் கேட்பாள்.
லீவு நாட்களில் கூட திட்டமிட்டே வேலை செய்வாள். சோம்பேறியாய் உட்கார்திருப்பது பிடிக்கவே பிடிக்காது. சமையல் செய்தாலும் அளந்து, மீந்து விடாமல் இருக்கும் படி செய்வாள். விணாக்குவதும் பிடிக்காது.
பளிச்சென்று உடைகள் உடுக்க வேண்டும். கலக்கலப்பாக நடமாட வேண்டும். இது போதுமே என்று நான் சொன் னால், உன்னை நாங்கள்தானே பார்க்கப்போகிறோம், நல்லபடியாய் உடுத்து என்பாள். சந்தோஷமாயிருக்க வேண்டும் நீ என்பாள்.
ஆபீஸ் நண்பர்கள். உறவினர்கள், அக்கம்பக்கம், எழுத்தா ளர்கள் என்று எல்லோரிடமும் கலகலப்பாக பழகுவாள். நலன் விசாரிப்பாள்.
அதனால், அவள் இழப்பு எல்லோரையுமே உலுக்கிவிட் டது. இந்த வயதில் போய் விட்டாளே என்று சிலருக்கு பயம் கூட வந்துவிட்டது. நமக்கும் வயதாகிறதே என்ற கவலையும் வந்துவிட்டது. தலையை வலித்தால் கூட செக்கப் என்று சென்று விடுகிறார்கள்.
எனக்கு தலை கூட வலிப்பதில்லை. போக வழியும் தெரியவில்லை.
மாலா எத்தனையோ முறை பணம் புரட்டக் கஷ்டப்பட் டிருக்கிறாள். ஆனால், சொல்லவே மாட்டாள். அவளின் அப்பா படுத்த போது, உடனே கைவளையல் களை வைத்து கடன் வாங்கி ஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டி னாள். ரயிலில் களவு போன போது சதாரா திரும்ப பூனாவிலிருந்து டிக்கட் எடுக்க பணமில்லை. போன் செய்ய காசில்லை. ரயிலில் டி.டி.ஆர் தானே உதவி செய்து அனுப்பினாராம். மறுநாள் அவருக்கு எம்.ஓ செய்தாள்.
பெங்களூர் வந்து கெஸ்ட் ஹவுஸில் தங்கி பிறகு வீடு அட்வான்ஸ் கட்ட சரியானபடி ரிகார்டுகள் கிடைக்காமல், மறுபடி சதாரா வந்து சரி செய்து, நினைத்த தேதியில் சாவி வாங்கி, அங்கேயே தங்கி, சாப்பாடு படுக்கை வசதி யின்றி, பச்சைத் தண்ணீரில் குளித்து, கொசுக்கடியில் தூங்காமல் இம்சைகள் பட்டுப் பிறகு, குடித்தனம் வந்த பிறகுதான் அவைகள் எல்லாம் சரியாயிற்று.
ஒரு நாள் சிவாஜி நகரில் விழுந்து விட்டதாக சொன் னாள். அதை உடனே சொல்ல மாட்டாள். எப்போதோ சொல்வாள். ரிடையர்மெண்ட் எடுத்த பிறகு கூட மைசூர் போய் வந்தாள். ஒரு மனை பார்க்க வேண்டும் என்று. அப்போதும் வழியில் விழுந்து விட்டதாகச் சொன்னாள். மனதிற்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது.
கண்ணே, மணியே என்று கொஞ்ச முடியவில்லை, என்றா லும் என் குழந்தை எப்படிப்பட்டவள்? என்ன தவம் செய்து பெற்றேனோ? அநியாயமாக தொலைத்து விட் டேனே? இனி எப்போது பார்க்க முடியும்?
அப்படிப்பட்ட பெண்ணை என்ன பாவம் செய்து என் கண் எதிரிலேயே வாரிக் கொடுத்தேன்? எந்த தெய்வமும் இரக்கம் காட்டவில்லயே? என் கண்ணே பறி போனதே.
இனியும் வாழ வேண்டியிருக்கிறது. அந்த நாளில் வன வாசம் போவார்கள் என்பார்கள். என்னால் வீட்டை விட்டுக்கூட வெளியே போக முடியவில்லை.
வேளைக்கு தூங்க வேண்டி உள்ளது. வேளைக்கு சாப்பிட வேண்டி உள்ளது. வேளை தவறாமல் பாத்ரூம் போவது ஒரு அவஸ்தை. என்ன செய்வேன்?
அவளை அவசரமாகக் கூப்பிட்டுக் கொண்ட தெய்வம் என்னை ஏன் இப்படி விட்டு வைத்து இருக்கிறது? யாருக்கு என்ன லாபம்?
எத்தனையோ வேலைகள் அவள் முடிக்க வேண்டிருக்க போயே போய் விட்டாள்.
இன்னமும் நம்ப முடியவில்லை. போனில் பேசுவாள் என்றும் வெளியூருக்குப் போயிருப்பதாகவும், கடிதம் எழுதுவாள் என்றும் மனம் ஏமாற்றுகிறது. ‘லலிதா’ என்று கூப்பிடுவது போல குரல் கேட்கிறது.
எழுது, எழுதாவிட்டால் எழுத வராது என்பாள். இப்படி அவளைப்பற்றிப் புலம்பி எழுத வைத்துவிட்டாள்.
சுற்றிக் கொண்டே இரு, படுத்துவிட்டால் எழுந்திருக்க முடியாது என்று என்னைச் சொல்வாள். அவள் எழாமலேயே போய்விட்டாள்.
என்னிடம் அக்கறை காட்டும் ஒரே ஜீவன் அவள்தான். அது அவள் இருக்கும் போது உரைக்கவில்லை. இப்போது தான் நிஜமாக நிர்கதி ஆகிவிட்டேன். அவள் அப்பா போன போது எனக்கு நிழலாக அவள் அரண் போல் நின்றாள்.
இப்போது என்னை இருக்கிறாயா? என்று போன் செய்து கேட்கக்கூட இப்போது யாருக்கும் நேரமில்லை.
நாம் எதிர்பார்ப்பதும் தவறுதான். காலத்தில் அவரவர் வேலை செய்து கொள்ள நேரம் போதாத காலம் இது. மற்ற ஜீவன்களைப் பற்றி நினைக்க எப்படி முடியும்?
எப்படியோ எனக்கு ஒரு முடிவைக் கொடு கடவுளே என்று மனம் வேண்டுவதுதான் பைத்தியக்காரத்தனம். எத்தனை பாடுபட பிறவி எடுத்தேனோ? முடிய வேண் டாமா?
ஒரு நாள்வரும் நானும் போவேன்.

சொல்லும் செயலும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லும் செயலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


நேற்று ஒரு நெடுஞ்சாலையோரம் நளினமாய் நடந்தபடியிருந்த
தன் படத்தைப் பதிவேற்றினாள்
(அல்லது) பெண் படத்தைப் பதிவேற்றினார்.
நூறுX10 லைக்குகளாவது விழுந்திருக்கும்.
நேற்று முன் தினம் அவளால் (அல்லது) அவரால்
பதிவேற்றப்பட்டிருந்த படத்தில்
நல்ல அரக்குவண்ண சேலையில்
அதி ஒயிலாய் தான் (அல்லது) அவள்
நின்றிருந்த விதம்
புதிய புடவைக்கடையொன்றின் விளம்பரத்தை நினைவுபடுத்தியது.
போன வாரம் அவள் (அல்லது) அவர்
பதிவேற்றியிருந்த படத்தில்
அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி
காதல்பொங்கச் சிரித்துக்கொண்டிருந்த
தன் (அல்லது) பெண் படத்தில்
பக்கவாட்டு முகம் ஒளிவட்டமொன்றில்
ஆளை மயக்கும் ஆயத்தச் சிரிப்பொன்றை
கவனமாய் அப்பிக்கொண்டிருந்தது.
’மேக்கப்
தூக்கலாகவே….
இரண்டுநாட்களுக்கொருமுறை சிகையைக்
கலைத்தும் முடிந்தும்
சிறு சிறு பிரிகளாக நெற்றிப்பொட்டுகளில்
அலைபாயவிட்டும்
தோள்களிலிருந்து ஆரமாகத்
தொங்கவிட்டுமிருக்கும்
தன்னுடைய ஏராள பிம்பங்களைத்
துல்லியமாக்கிப் பதிவேற்றத் தவறுவதில்லை அவள்
(அல்லது) பெண்ணுடைய ஏராள பிம்பங்களைத்
துல்லியமாக்கிப் பதிவேற்றத் தவறுவதில்லை அவர்.
தவறேதுமில்லைதான்……
இருந்தும்
திறந்தவெளி அரங்கத்திலோ
திரையிட்டு மூடிய கதவங்களுக்குள்ளாய்
விரிந்துபரந்திருக்கும் மேடையிலோ
’பெண் என்பவள் வெறும் அழகுப்பொருளல்ல’
என்று திரும்பத்திரும்ப
அவள்
(அல்லது)
அவர்
(அல்லது)
அவர்கள்
உரக்க முழங்குவதைக் கேட்க
ஏனோ அவமானமாய் உணர்கிறது மனது.

சொப்பனவாழ்வு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொப்பனவாழ்வு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கனவாய்ப்போன கனவு
கனவாகிப்போகாமலிருக்கும் கனவில்
கனவாய்ப்போவதுதான் கனவின்
விதியும் நியதியுமென
கனவில் ஒலித்த அசரீரியின் கனவுப்
பாதையில் பின்னோக்கிச் செல்லத் தொடங்கும்
கால்களின் கனவில் தொலைவு தொலைந்துபோக
கருக்கலில் அலைமேல் நடந்துகொண்டிருக்கும்
நானெனும் ஆனபெருங்கனவின் ஒருமுனை
விழிப்பின் வெளிர்பழுப்பில் சிக்குண்டுகிடக்க
மறுமுனையொரு நெடுங்கனவாய் நீளும்
வானவில்லின் வர்ணஜாலங்களில்.
s

கவிதானுபவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதானுபவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உபதேசிக்கும் கவிதைகளை
எழுதிக்கொண்டே போனவருடைய
வரிகளெல்லாம்
ஒவ்வொன்றாய் மலையுச்சியிலிருந்து
உருண்டோடி
அதலபாதாளத்தில் விழுவதையறியாமல்
இன்னுமின்னுமாய்
பிரசங்கம் செய்துகொண்டிருந்தவரை
ஆதுரத்தோடு பார்த்துக்கொண்டிருந்த
அவருடைய எழுதப்படாக் கவிதை
தனக்குள் முணுமுணுத்துக்கொண்டது:
”பீடமல்ல கவிதை
பாழ்மனதின் எதிரொலி;
உயிர்வலி;
உன்மத்தக்களி;
சரீரம் கடந்த நிலை;
சரணாகதி;
”ஒருவேளை நோயுற்றிருக்கும் மருத்துவரா
யிருக்கலாம்...
ஆனால் மருத்துவரில்லை கவிதை.
பார்க்கும் ஆடி எனில்
அதற்குள் தெரியும் முகம்
இன்மைக்கும் பன்மைக்கும் இடையே
உண்மைக்கும் பிரமைக்கும் இடையே.
வலியுணர்ந்து வாழ்வுணர்ந்து
வாக்கின் வலுவுணர்ந்து
உணர்ந்ததை உட்குறிப்பாய்
உணர்த்துவதே
கவிதையென்றுணர்.
அடிக்குறிப்பாய்_
”இதுவும்கூடக் கவிதையில்லை
யென்றுணர முடிந்தால்
இனி நீயெழுதுவது கவிதையாகும்,
அறிவாய்.
1

அமுத குணாளன் கவிதை

           அமுத குணாளன் கவிதையும்

அதன் (என்)

ஆங்கில மொழிபெயர்ப்பும்


போராளிகளும்
இசவாதிகளும்
இலக்கியவாதிகளும்
குழுமியிருந்த கூடாரத்திலிருந்து
நம்முள் ஒருத்தன் அப்புறப்படுத்தப்பட்டான்
ஒரு செயல் நிகழ்த்த காரணம் மட்டும் வேண்டும்
அது
பொய்யா?
உண்மையா? அவசியத்திற்கான தேவையில்லை
அவர்களின் அவசரத்தில் தெளிகிறது
பொய்யின் உண்மை
இல்லாத விதியை எப்படி மீறினொம் என
எண்ணுவதற்குள்
விலங்கேறியிருக்கிறது அவன் கைகளில்
அறிவை பரப்ப ஆரம்பித்து
லாபம் பெருக்கவும்
சுய விளம்பரம் தேடவும் பழகிப்போனோம்
இன்னும்
பலரும் அறிந்திக்கவில்லை
அவன் அப்புறப்படுத்தப்பட்டது
அறிந்தவர்களில் சிலர்
அவன் விரட்டப்பட்டான் என்றார்கள்
சிலர்
விடுவிக்கப்பட்டான் என்றார்கள்
அவன் விரட்டப்பட்டிருந்தால்
நாம் அடிமைகள்
அவன் விடுவிக்கப்பட்டிருந்தால்
நாம் கைதிகள்
எதுவாகினும்
அடக்கி வாசிப்பதே அழகு

A POEM BY AMUDHAGUNALAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(In memory of Poet Amudhagunalan)

From the camp filled with activists and men of Isms and
literary personalities
one from our midst was removed.
For an act to be performed
suffice to have just some reason.
Whether it is true or false
No need to validate.
In their haste is clearly seen
True Lie.
Ere he could start wondering
when and how he violated the rule that is nonexistent
His hands were chained.
Embarking on the mission to spread knowledge
soon we got used to mint profit
and indulge in self-aggrandizement.
That he is removed, not many know as yet.
Of those who know
Some said that he was chased away;
Some others said that he was relieved.
If chased away
We are slaves
If relieved
We are captives.
Whatever be the case _
Better not to cry hoarse





கேள்வியும் பதிலும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கேள்வியும் பதிலும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்காய்
தவமியற்றாத குறையாய்
காத்திருக்கத் தொடங்கினார்.
சத்தமாய் தன்னை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள்
சத்தற்றவையாக இருந்தால் என்ன?
பொத்தாம்பொதுவாய் இருந்தால் என்ன?
மொத்த விற்பனைத்தனமாயும் சில்லறைவிற்பனை ரீதியிலும்
வாழ்க்கைத் தத்துவங்களாய் வெத்துமுழக்கங்களைத்
தந்துபெறும் விதமாய் கேட்கப்பட்டால்தான் என்ன?
அந்தரத்தில் வந்தமர்வதாய் ஆன் – லைனில்
அவரிடம் அனுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கும் வினாக்களில்
அவரே சில பெயர்களில் ஒளிந்துகொண்டிருப்பவை
அதிகம் போனால் நாற்பது இருக்கும்.
அதனாலென்ன?
ஒரு மனிதருக்குள் குறைந்தபட்சம் இருவராவது இருப்பார்களல்லவா?
குகைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் கிளியில் இருக்கும்
ராஜகுமாரியின் உயிர்போல்
தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும் அடங்கியிருப்பதாகக்
கருதியவருக்குப் புரிந்தது ஒருநாள் _
தன்னால் தொடுக்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும்
அடங்கியிருப்பதாக
வினா தொடுப்பவரும் நினைத்துக்கொண்டிருப்பது.

1