LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 2, 2025

கவிதையும் வாசிப்பும் - 5 (கவிஞர் பிரம்மராஜனின் ‘மரம் சொன்னது’ என்ற தலைப்பிலான கவிதையை முன்வைத்து...) ......................................................................................................................

 கவிதையும் வாசிப்பும் - 5

(கவிஞர் பிரம்மராஜனின் ‘மரம் சொன்னது’ என்ற தலைப்பிலான கவிதையை முன்வைத்து...)

......................................................................................................................

(*அல்லதுமொழிபெயர்ப்பு குறித்து எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் சிலஎன்றும் சொல்லலாம்)

_ லதா ராமகிருஷ்ணன்

....................................................

 //மரம் சொன்னது என்ற தலைப்பிலான பிரம்மராஜனின் கவிதை பின்வருமாறு//

மரம் சொன்னது

பிரம்மராஜன்



வலியின் துவக்க முகமும்

ஒரு சாதாரணம்தான்

என ஒரு முட்சொல் கிழிக்கிறது.

இல்லாத ஓவியத்தைச் சட்டகத்தினுள்

பொருத்திப் பார்ப்பதுபோல்தான்

அதன் அளவு என்பார்

வலியறியா வறியோர்.

எனினும் வலியின் வயது

தொன்மையின் முன்மை

பரசுராமனின் உடல் உறக்கத்திற்கு

முன் தன் விழிப்புடல் துடையை

வண்டுத் துளைப்புக்குத் தந்த

கர்ணத் தன்மை.

மரப்பட்டையை மகிழ்ச்சிப்படுத்தவே

முடியாது

பாம்பின் சட்டையை மாற்றுதல் போல்

மாறுதலுக்கு மாற்றுதல் முடியாது

என்றவனுக்கு

காதல் முட்டாள்கள் செதுக்கிச்சென்ற

தேதிகள் பெயர்களுடன் வளர்மரம்

கனத்துச் சொல்கிறது

வெட்டிக் கிழித்தலின் வலியைவிட

வடுவின் வளர்வேகம்

பொருக்குச் சேதம்

பொறுத்தல்

கொலையின் முடிவற்ற நீள்கோடாகும்.

 

RENDERED IN ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT)

 

TREE'S TESTIMONY

...........................................

The onset of pain too

is but a common one

So a thorny word tears

They who claim that its

volume is but

like fixing inside the Frame

the painting that is not

are poor being unaware of pain.

Yet the age of pain

is that which is the

Before of

Time immemorial;

Karnan’s disposition in

offering his own wakeful body’s check

before Parasuraman’s bodily sleep

to bee’s and giant worm’s sharp pierce.

For he who said that

never can one make merry

the bark of a tree

Never can change it to Change

as like changing snake’s skin

The tree that grows with

the dates and names carved on it

by love-gullibles

declares weighing heavy that

more than the pain of felling

and tearing apart

bearing with the rapidity of the scar’s growth

flakial damage

is murder’s unending long line.


 _ // மரம் சொன்னது என்ற தலைப்பிலான பிரம் மராஜனின் இக் கவிதைமரம் இறுகியது, உறுதி யானது, முரடானது என்பதாக நான் கொண்டி ருந்த, என் மனதில் படிந்திருந்த பிம்பங்களை அடியோடு மாற்றியது. மரத்தின் நெகிழ்வும் ரணம் பொருக்குத் தட்டிநிற்கும் அதன் வலியும், நிராதரவு நிலையும் பிடிபட்டது. //

இவ்வாறு சொல்லும் சொல் பிரம்மராஜனின் என்ற தலைப்பில் ஜூன்2016இல் அநாமிகா ஆல்ஃபெபெட்ஸ் மூலம் வெளியான நூலில் நான் குறிப்பிட்டிருப்பேன். இது எனக்குக் கிடைத்த வாசிப்பனுபவம்.

இந்தக் கவிதை மரத்தை மட்டும் பேசுவதில்லை என்பது வெளிப்படை. இன்னும் சொல்லப்போனால், இதில் மரம் மனித மனதின், வலி ஏமாற்றங் கள் ரணங்களையெல்லாம் சுமந்திருக்கும் அதன் தன்மையையும், வெளியே தெரியாத மனிதமன நெகிழ்வுகள், நிலைகுலைவுகளையும் இன்னும் எத்தனையெத்தனையோ விஷயங்களுக்கு, மனித இயல்புகளுக் குக் குறியீடாகி நிற்கிறது.

எதற்கெடுத்தாலும் அழுபவர்களைக் கண்டால் அதிராத நம் மனம் ஒருபோதும் அழாதவர்களின் கண்ணில் நீர்த்துளியைக் கண்டால் ஒரேயடி யாக அதிர்ந்துபோய்விடும். அப்படித்தான் மரம் பிளக்கப்படுவது, கொல்லப் படும் யானையின் சிறுகண்களில் தெரியும் நிராதரவு எல்லாம் மனிதமன சமன்நிலையைப் பெரிதும் குலைத்து விடுகிறது.

இத்தகைய கவிதைகளை மொழிபெயர்க்கும்போது மரத்தின் உறுதியான மனம் என்பதாய் கவிதையில் இடம்பெற்றிருக்கக்கூடிய வரியை மொழி பெயர்க்கையில் மனம் என்பதை மரத்தின்மார்புப்பகுதிஎன்பதாக மொழி பெயர்க்க வேண்டுமா அல்லது மனிதமனம் என்ற பொருளைத்தரும் சொற்க ளைப் பயன்படுத்தவேண்டுமா?

மார்பு, இருதயம் இரண்டுக்கும்கூட நுட்பமான வேறு பாடு உண்டு. மார்பு உடலின் வெளிப்புறப் பகுதியையும், இருதயம் உடலின் உள்ளே இருக்கும் பகுதியையும் குறிப்பதாகச் சொல்லலாம். ஆனால், இவை ‘overlap’ ஒன்று மற்றொன்றாகப் பொருள்படும் அளவில் பயன் படுத்தப்படுவதும் உண்டு.

மனம் என்று பொருள்படும் இதயம் என்ற சொல்லுக்கும் இருதயம் என்ற சொல்லுக்கும் இடைவெளி இன்னும் அதிகம் என்று தோன்றுகிறது. இருதயம் என்பது மனித உடலினுள்ளே இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பைப் பிரதானப் படுத்தும் சொல். ஆனால், இருதய அறுவை சிகிச்சை என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் Heart Surgery என்றுதான் கூறு கிறார்கள். ஆங்கிலத்தில் Heart என்ற சொல் இருதயம் என்ற உறுப்புக்கும், மனம் இதயம் என்றஉறுப்பாலான அதேசமயம் உறுப்புக்கப்பாலான ஒன்றைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படு கிறது.

 தமிழில் இருதயம் என்ற சொல்லின் பொருளும் பயன் பாடும் வேறாகவும், மனம், இதயம் ஆகிய சொற்களின் பொருளும் பயன்பாடும் வேறாகவுமே இருக்கிறது.

மனம் என்பதை Heart, Mind ஆகிய இரு சொற்களால் குறிப்பதுண்டு. சமயங்களில் Heart, வேறாகவும் Mind வேறாகவும் அர்த்தம் தருவது முண்டு. Brain என்ற சொல் மனம் கலக்காத மூளை என்ற உறுப்பைக் குறிப்பதாகவே அமையுமென்றாலும் Brain என்பதுதான் மனித உயிருக்கே மூலாதாரம் என்ற அளவில் இந்த வார்த்தை மனதுக்கும் பயன்படுத்தப்படுவதும் உண்டு.

 Bosom, breast chest முதலிய வார்த்தைகள் இருதயம், மார்புப்பகுதி என்ற உறுப்பு ரீதியான பொருளையே அதிகம் தருகின்றன. என்றாலும் ஆருயிர்த்தோழன் என்பதை bosom friend என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். மற்ற இரண்டு வார்த்தைகளும் மனம் என்ற பொருளைத் தருவதாகப் பயன்படுத்தப்படுவது அரிது என்றே தோன்றுகிறது.

 பொதுவாக heart, mind ஆகிய இரு சொற்களும் மனித உடலுக்குள் இருக்கும் உறுப்புகளிலான உறுப்புகளுக்கப்பாலானதுமான சிலவற்றைக் குறிக்கப் பயன்படும் வார்த்தைகள் எனலாம்.

 மரம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படும் கவிதை முழுக்க முழுக்க மரத்தின் உறைநிலையை, கிளைகளை, கனிகளை காய்களை, உதிரும் இலைகளை அது அடையும் சிதிலத்தை அது வெட்டப்படுதலையெல்லாம் பேசிக் கொண்டே போனாலும் அந்தக் கவிதையை மொழி பெயர்க்கும் போது மரத்தின் மார்புப்பகுதியைக் குறிக்கும், இருதயம் என்ற உறுப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தவேண்டுமா, அல்லது உறுப்பும் உறுப்பைத் தாண்டிய ஒன்றும் சேர்ந்ததைக் குறிக்கும் மனம் என்ற பொருளைத் தரும் சொல்லைப் பயன்படுத்த வேண்டுமா என்பதில் மொழிபெயர்ப்பாளர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய அவசியமிருக் கிறது.

  


_

நகர்வலம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நகர்வலம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’அதோ பாருங்கள் _ அந்தத் தூணில்
நான் கட்டப்பட்டிருக்கிறேன்’,
என்று
ஆஸ்கார் விருதுபெற்ற
முகபாவத்தில்
கூறுகிறார் அரசர்
அல்லது
அரசி.
அவை பதற்றமடைகிறது.
அய்யய்யோ என்று அழத்
தொடங்குகிறார்கள் சிலர்.
’அதோ என்னை எரிக்கத்
தீப்பந்தத்தைக்கொண்டுவரும்
அந்தக் கூட்டத்தைப் பாருங்கள்
அவர்கள் நெருங்கிவிட்டார்கள்
அவர்கள் என்னை எரிக்கத்
தொடங்குகிறார்கள்.’
என்று அரசர்
அல்லது அரசி
குரலெடுத்துக்கூவ _
அவையோர்
அழத்தொடங்குகிறார்கள்.
அடுத்திருந்தவர்களைத்
தள்ளிவிட்டு
தடுக்கிவிழுந்தவர்களை
மிதித்துக்கொண்டு
ஓடத்தொடங்குகிறார்கள்.
அவர்களில் சிலர்
கைக்குக் கிடைத்த சிலரைக்
கடைந்தெடுத்த எதிரியாக்கிக்
கொன்று தீர்க்கிறார்கள்.
இன்னும் சிலர்
அவசர அவசரமாக
இரங்கற்பா எழுத
முற்படுகிறார்கள்.
இல்லை, நானே வாசிக்கிறேன்
என்று அந்த அரசர்
அல்லது அரசி
அவையோர் முன்
நடவாத தன் மரண நிமித்தம்
மனதையுருக்கும் ஒரு கவிதை
வாசிக்கத் தொடங்குகிறார்.
’மக்கள் நாம் ஒற்றுமையாக
இருக்கவேண்டும்’ என்றும்
’மற்றவர்களெல்லோருமே
கற்றுக்குட்டிகள்,
வெத்துவேட்டுகள்
மொத்தப்படவேண்டியவர்கள்
என்றும்
கெட்ட வார்த்தையில்
திட்டித்திட்டி
அன்பைப் புகட்டும்
அந்த வரிகளைக் கேட்டு
அழாதவர் இருக்கமுடியுமா?
அப்படியிருக்கும்போது
சொன்னால் சிரச்சேதம்
_ உண்மையாகவே எனத் தெரிந்தும்
ஓரிருவர் மட்டும்
‘நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள்,
உங்களை யாரும் எதுவும்
செய்துவிடவில்லை’
என்று உண்மையை
முணுமுணுப்பாய்க்கூடச்
சொல்லிவிடமுடியுமா?
அரசரிடம்
அல்லது
அரசியிடம்.
அப்படி வாயைத் திறப்போரை
வெட்டிப்போட
வாட்படை காலாட்படை
முதல்
சகலமும் உண்டு _
முகநூலிலும்.

உறக்கம் துரத்தும் கவிதை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உறக்கம் துரத்தும் கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

விழுங்கக் காத்திருக்கும் கடலாய்
நெருங்கிக்கொண்டிருக்கிறது உறக்கம்.
யாரேனும் துரத்தினால் ஓடுவதுதானே இயல்பு _
அது மரத்தைச் சுற்றியோடிப்பாடிக்கொண்டே
காதலியைத் துரத்தும்
சினிமாக் காதலனாக இருந்தாலும்கூட…
ஓடும் வேகத்தில் கால்தடுக்கி விழுந்துவிடலாகாது.
உறக்கத்தில் மரத்துப்போய்விடும் சிறகுகளைக்கொண்டு
எப்படிப் பறப்பது..?
உறங்கும்போதெல்லாம் சொப்பனம் வரும் என்று
உறுதியாகச் சொல்லமுடியாது….
எப்பொழுதும் வராது பீதிக்கனவு என்றும்.
தனக்குள்ளேயே என்னை வைத்திருக்கும் தூக்கத்திலிருந்து
வெளியேறும் வழியறியா ஏக்கம்
தாக்கித்தாக்கிச் சிதைவுறும் மனம்
தன்னைக் கவ்வப் பார்க்கும் தூக்கத்தையும்
துண்டுதுண்டாகச் சிதறடிக்கிறது.
அரைமணிநேரம் நீடிக்கும் போரின் இறுதியில்
உறக்கம் கொன்றதுபோக எஞ்சியிருக்கும்
அரைகுறைக் கவிதை யொன்று.

கவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து….. லதா ராமகிருஷ்ணன்

 கவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..

லதா ராமகிருஷ்ணன்

[12 Feb, 2018 திண்ணை இணைய இதழில் வெளியானது.]

தனது தவளை வீடு தொகுப்பின் மூலம் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞராக கவனம் பெற்றுள்ள திரு. பழனிவேளின் கஞ்சா என்ற தலைப்பிட்ட மற்றொரு தொகுப்பு ஆலன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. (64 பக்கங்கள், 50 கவிதைகள். விலை ரூ.100 தொடர்புக்கு – palanivelrayan@gmail.com. தொலைபேசி 8973228830.) புத்தகத்தை வெளியிட்டுள்ள திரு.ராஜகோபால் தமிழ்ச் சிறுபத்திரிகைவெளியில் நன்கு பரிச்சயமானவர். இந்தக் கவிதைத்தொகுப்பை நேர்த்தியாக வெளியிட்டுள்ளார்.
கஞ்சா கவிதைத்தொகுப்பு குறித்து தனது அறிமுக உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் அவர்:
“இயல்பாகவே பழனிவேள் கவிதைகளில், அவரது கவிதைமொழியில், ஆழ்ந்த அமைதியும், செறிவும் விரவியிருக்கும். புலம்பல்கள், வெற்று தர்க்க விசாரங்கள், புதிர் அவிழ்ப்புகள், கழிவிரக்கம் போன்ற கூறுகள் அவரது கவிதைகளில் காணக் கிடைக்காது. வேறெந்த ஒரு படைப்பாளியின் சாயலோ, பாதிப்போ அறவே கிடையாது. ஏறத்தாழ இத்தொக்குப்பிலிருக்கும் ஐம்பது கவிதைகளிலும் ஒரு சரடாக உள்ளோடும் கருப்பொருள் மிகவும் வித்தியாசமானதும், விசித்திரமானதும்கூட. பழனிவேள் இதைக் கையாண்டிருக்கும் விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.”
இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் மேற்கண்ட மதிப்பாய்வின் உண்மைத் தன்மைக்கு நிரூபணமாக விளங்குகின்றன.
big pictureஐ பலவிதமாகக் காட்சிப்படுத்துகிறது. வாழ்வோட்டத்திற்குக் குறியீடாக கவிதைகளில் இடம்பெறுகிறது.
கவிதைகளில் மொழிநயமும் கவித்துவமும் வெகு இயல்பாக, பிரயத்தனம் கோராத கவி மனத் தனிமொழியாக, உரையாடலாக இடம்பெற்றிருக்கின்றன. சமகால வாழ்க்கையின் நெருக்கடிகள் பேசப்பட்டிருக்கின்றன. அவற்றை எதிர்க்கும் கலகக்குரல் கஞ்சாவினூடாக ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு கவிதை:
கடந்த காலமானாலும்
நிகழ் காலமானாலும்
எதிர் காலமானாலும்
எதிரிகளால் சூழப்பட்டது
எதிரிகளால் ஆளப்படுவது
இருக்கட்டுமே
ஒழுக்கம் வேண்டும் என்றே
விளைவிக்கிறது
நேர்மை அதை விநியோகிக்கிறது
வேண்டும் என்று
எளியோர் எப்படி மறுக்க முடியும்
வேண்டாம் என்று
கஞ்சாவைக் குறியீடாக்கி வாழ்க்கை குறித்த தத்துவார்த்தப் பார்வைகள் முன்னிறுத்தப்படுகின்றன. வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் ஒரு வழியாக, உபாயமாக கஞ்சா கவிதைகளில் ஊடாடிக்கொண்டிருக்கிறது.
பாழாய்ப் போனது
பட்டப் பெயர்கள்
அடையாளப் பெயர்கள்
சுட்டுப் பெயர்கள்
டோப்பு மால் சரக்கு
கடா மர்ஜிவானா பொட்டலம்
தூள்
கஞ்சாவின் எல்லாப் பெயர்களும்
புகைவெளியில் மாயமாகின்றன.
பழனிவேளின் கவிதைகள் விளக்கவுரையாக இருப்பதில்லை. பீடமேறி போதிப்பதில்லை. தீர்ப்பளிப்பதில்லை. அழுது புலம்புவதில்லை. அலட்டி ஆர்ப்பரிப்பதில்லை. ஒருவித மோனநிலையில், ஒருவித விலகிய பார்வையில் வாழ்க்கையைப் பார்த்தபடி, கனகச்சிதமான சொற்களில் ரத்தினச்சுருக்கமாகக் காட்சிப்படுத்துகின்றன.
அப்படி இருந்தது
அந்தப் பாட்டு
வரிகள் கூட இல்லையது நான்கைந்து வார்த்தைகள்
நீர்த்திவலைகள்
உடல் உப்புத்தொட்டி
கடல் கண்ணீர் புட்டி
இன்று காற்று
நாளையென்பது பொழுது
போ விலகிப்போ
இலைகளைப் போல உன்னால் நெருங்கவோ
இருக்கவோ முடியாது.
வார்த்தைகளுக்கிடையே வாசகர்கள் தேடியெடுத்துக்கொள்ள சொல்லும் பொருளும் பழனிவேளின் கவிதைகளில் நிறையவே உள்ளன. மேம்போக்கான, அசிரத்தையான தொனியில் ஒலிப்பதுபோலிருந்தாலும் இந்தக் கவிதைகள் அடியாழமன தீவிரத்தன்மை கொண்டவை என்பது தெளிவாகவே புலப்படுகிறது.
பெற்ற பேறு ஏதுமற்று
பெரும்போர் நடக்கும் அன்றாடத்தில்
கஞ்சா
கச்சிதமான பதுங்குகுழி
எல்லோரிடமும் கேள்விகள்
கேள்விகள் போலவே பதில்களும்
அவர்கள் எதையும் கோர்ப்பதில்லை
எதனையும் எளிதாக்குவதுமில்லை
பதுங்கு குழியில்
கேள்விகள்
பதில்கள்
தேவையே இல்லை.
கஞ்சா ஒரு குறியீடாகவும், பின்புலமாகவும், தூல அளவிலும், சூக்கும அளவிலும் இந்தக் கவிதைகளை கவித்துவம் குறையாமல் கட்டமைத்து உயிர்த்திருக்கச் செய்வதை வாசித்துத்தான் முழுமை யாக அனுபவங்கொள்ள முடியும்.

A POEM BY RAMESH PREDAN -SHE WHO LIVES IN THE TALE

 A POEM BY

RAMESH PREDAN

SHE WHO LIVES IN THE TALE
(Rendered in English by Latha Ramakrishnan[*First Draft]
At the border of the village
plant a tree and rear it in your name
From the seed
take notes of your story
step by step
Its life-span could touch a thousand years
You wouldn’t be alive till that time
Yet
give it in the hands of generations
succeeding thee
and so nurture it.
At the end of the tree
You would be alive breathing
and read the thousand year tale of thee
and then cease to be.
Give the name of the sea
that lies East of thee
to the newborn.
As she grows on
the fish would multiply on and on.
Along the course of the sea
daughter’s life would remain flowing
without turning dry
She the Infinite would live on
In the tale of the sea
He who knows how to tell a tale
Why fear Death
As living in the tale
When even the God dies not
He who had created the story
Would never perish in Time
Write the tale of how you had copulated with me,
chronologically.
In the endless intercourse
in our town and everywhere else
in all species with no exception
I will be born, reborn and so go on
O! Human
Turn me, this woman, immortal
by a tale.
Ramesh Predan

கதையில் வாழ்பவள்

ரமேஷ் பிரேதன்

ஊர் எல்லையில்
உனது பெயரில்
ஒரு மரத்தை வளர்த்தெடு
விதையிலிருந்து உனது கதையைப்
படிப்படியாகக் குறிப்பெடுத்துக்கொள்
அதன் வாழ்வுக் காலம்
ஆயிரம் ஆண்டுகளைத் தொடக்கூடியது
அதுவரை நீ இருக்கமாட்டாய்
இருப்பினும்
உன்னைத் தொடரும் தலைமுறைக்கு
மரத்தை மாற்றி மாற்றி கையளித்து வளர்த்தெடு
மரத்தின் முடிவில் நீ
உயிரோடு இருந்து
உன்னைப் பற்றிய ஆயிரமாண்டு கதையைப் படித்துவிட்டுச் சாவாய்
உனக்குக் கிழக்கேயிருக்கும்
கடலின் பெயரை
பிறந்தக் குழந்தைக்குச் சூட்டு
அவள் வளர வளர மீன் வளம்
பெருகிக்கொண்டே போகும்
கடலின் போக்கில் மகளின் உயிர்
வற்றாமலிருக்கும்
முடிவில்லாதவள் கடலைப் பற்றிய கதையில் வாழ்வாள்
கதை சொல்லத் தெரிந்தவன்
மரணத்தைக் கண்டு அஞ்சுவதேன்?
கதையில் வாழ்வதால்
கடவுளுக்கே மரணமில்லாதபோது
அந்தக் கதையைப் படைத்தவன்
காலத்தில் அழிவதில்லை
நீ என்னைப் புணர்ந்தக் கதையை
வரிசைப்படி எழுது
ஊரிலுள்ள உலகிலுள்ள
எல்லா உயிரிலுமுள்ள
முடிவில்லாக் கலவியில்
உயிர்த் தரித்துப்
பிறந்துகொண்டே இருப்பேன்
மானிடனே
ஒரு கதையால் என்னை
இறப்பில்லாதவளாக்கு.