A POEM BY
RAMESH PREDAN
plant a tree and rear it in your name
From the seed
take notes of your story
step by step
Its life-span could touch a thousand years
You wouldn’t be alive till that time
Yet
give it in the hands of generations
succeeding thee
and so nurture it.
At the end of the tree
You would be alive breathing
and read the thousand year tale of thee
and then cease to be.
Give the name of the sea
that lies East of thee
to the newborn.
As she grows on
the fish would multiply on and on.
Along the course of the sea
daughter’s life would remain flowing
without turning dry
She the Infinite would live on
In the tale of the sea
He who knows how to tell a tale
Why fear Death
As living in the tale
When even the God dies not
He who had created the story
Would never perish in Time
Write the tale of how you had copulated with me,
chronologically.
In the endless intercourse
in our town and everywhere else
in all species with no exception
I will be born, reborn and so go on
O! Human
Turn me, this woman, immortal
by a tale.
Ramesh Predan
○ கதையில் வாழ்பவள்
ரமேஷ் பிரேதன்
ஊர் எல்லையில்
உனது பெயரில்
ஒரு மரத்தை வளர்த்தெடு
விதையிலிருந்து உனது கதையைப்
படிப்படியாகக் குறிப்பெடுத்துக்கொள்
அதன் வாழ்வுக் காலம்
ஆயிரம் ஆண்டுகளைத் தொடக்கூடியது
அதுவரை நீ இருக்கமாட்டாய்
இருப்பினும்
உன்னைத் தொடரும் தலைமுறைக்கு
மரத்தை மாற்றி மாற்றி கையளித்து வளர்த்தெடு
மரத்தின் முடிவில் நீ
உயிரோடு இருந்து
உன்னைப் பற்றிய ஆயிரமாண்டு கதையைப் படித்துவிட்டுச் சாவாய்
உனக்குக் கிழக்கேயிருக்கும்
கடலின் பெயரை
பிறந்தக் குழந்தைக்குச் சூட்டு
அவள் வளர வளர மீன் வளம்
பெருகிக்கொண்டே போகும்
கடலின் போக்கில் மகளின் உயிர்
வற்றாமலிருக்கும்
முடிவில்லாதவள் கடலைப் பற்றிய கதையில் வாழ்வாள்
கதை சொல்லத் தெரிந்தவன்
மரணத்தைக் கண்டு அஞ்சுவதேன்?
கதையில் வாழ்வதால்
கடவுளுக்கே மரணமில்லாதபோது
அந்தக் கதையைப் படைத்தவன்
காலத்தில் அழிவதில்லை
நீ என்னைப் புணர்ந்தக் கதையை
வரிசைப்படி எழுது
ஊரிலுள்ள உலகிலுள்ள
எல்லா உயிரிலுமுள்ள
முடிவில்லாக் கலவியில்
உயிர்த் தரித்துப்
பிறந்துகொண்டே இருப்பேன்
மானிடனே
ஒரு கதையால் என்னை
இறப்பில்லாதவளாக்கு.
●
No comments:
Post a Comment