LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 4, 2024

இலவு காப்பது கிளி மட்டுமல்ல- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இலவு காப்பது கிளி மட்டுமல்ல

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


அட்சர லட்சம் பெறும் கவிதைகள் என்
று
ஒரு வாசகராய்த் தன் கவிதைகளை
நிதானமாய் அளவுமதிப்பீடு செய்துகொண்ட
கவிஞர்
கடனோ உடனோ வாங்கி
PRINT ON DEMAND புண்ணியத்தில்
அச்சிட்ட 50 பிரதிகளுக்கான
பிழைத்திருத்தம்
லே-அவுட் முகப்பு அட்டை
பின் அட்டை blurb ஒரு
சின்னக் கவிதையாக
பார்த்துப்பார்த்துச் செய்து
பொன் வைக்கும் இடத்தில் வைத்த
பூவனைத்தாய்
நூல் வெளியீட்டுவிழாவையும்
நடத்தி முடித்த பின்
திறனாய்வென்பது எழுத்தில்தான்
அமையும்
என்று சொல்வதற்கில்லை,
சாணிக்கவளங்களாகவும்
கவண்கற்களாகவும்கூடக்
கிடைக்க வழியுண்டு
என்ற முழு உண்மையின்
முள்மகுடத்தைத்
தலையில் சுமக்கச் சித்தமாய்
100 கவிதைகளடங்கிய தனது
தொகுப்பிற்கான
ஒற்றை விமர்சனத்திற்காக
நித்தமும் காத்துக்கொண்டிருக்கத்
தொடங்கினார்.

பிரதியும் வாசகரும் வழிகாட்டியும் வாசிப்பும் .......

 ........................................................................................................................................

பிரதியும் வாசகரும் வழிகாட்டியும் வாசிப்பும் .......
…………………………………………………………………………………………………………
ஒரு கதையை எப்படி உள்வாங்குவது, ஒரு கதை தரமான கதையா, மேம்போக்காக எழுதப்பட்ட கதையா என்று எப்படித் தெரிந்து கொள்வது என்பதை அறிந்துகொள்ள வாசகர்களுக்கு வழிகாட் டும் எழுத்துகள் ஒருவகையில் தேவையாக இருந்தாலும் இன்னொரு வகையில் அவை ஏதோவொரு வகையில் வாசகப் பிரதிகளை முடக்கிவிடுவதாகவே தோன்றுகிறது. இப்படித்தான் ஒரு பிரதியை அணுகவேண்டும் என்று ஏதோவொரு வகையில் வாசகரை மூளைச்சலவை செய்வதாகவே தோன்றுகிறது.
ஒரு கதையை அணுகும் விதங்கள் அல்லது வழிகள் என்று சொல்லாமல் அணுகும் விதம் அல்லது வழி என்று சொல்வதி லேயே ஒரு ஒற்றை வாசகப் பிரதியை வலியுறுத் தும் போக்கு புலப்படுகிறது. ஒரு பிரதி ஏதோ வொரு விதத்தில் வாசகரிடம் தாக்கம் ஏற்படுத்தும்போது அவர் அதை உள்வாங்க ஆர்வங் காட்டுகிறார். அதன் உள்ளும் வெளியும் திரிந்து அது குறித்த கூடுதல் தகவல்களை, நுட்பங்களை சேகரிக்க முற்படுகிறார்.

இன்றைய காலகட்டத்தில் இதற்கு எந்தவொரு வழிகாட்டி யின் துணையுமின்றி ஒரு வாசகராலேயே தேவையான கூடுதல் விவரங்களை – பிரதி எழுதப்பட்ட பின்புலம், அதில் இடம் பெற்றுள்ள குறியீடுகள், பிரதியை எழுதியவர் குறித்த விவரங்கள் அன்னபிற – பெற முடி யும்.

ஒரு சாதாரண புனைவு – அ-புனைவுப் பிரதியை விமர் சனம் / திறனாய்வு மூலம் ஆஹா ஓஹோ என்று வாசக மனங்களில் – புதிய வாசகர்கள் மனங்களில் மட்டுமல்ல – பதியவைக்க முடியும். அதேபோல், மொழிபெயர்ப்புப் பிரதிகளைப் பொறுத்த அளவிலும் கூட செய்ய முடியும்.

பிரதிகளை நல்ல எண்ணத்தோடு ஒருவர் அறிமுகப் படுத்த, அதை எப்படி அணுகுவது என்று வழிகாட்ட ஒரு வர் முற்பட்டாலும், அவரையுமறியாமல் தன்னுடைய வாசகப்பிரதியே சரியானதாக, மேலானதாக முன்வைக்கும், வலியுறுத்தும் தன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

இது குறித்து இன்னும் நிறைய எழுத இருக்கிறது….

கேட்கத்தோன்றும் சில கேள்விகள்……

 கேட்கத்தோன்றும் சில கேள்விகள்……



1. சமகால இலக்கியப் பிரதிகளில், குறிப்பாக அயல்நாட்டு இலக்கியங்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளில் குறியீடு களை அடையாளங்காண முடிந்தவர்கள் தொன்ம இலக்கி யங்களை, குறிப்பாக இதிகாச புராணங்களை ‘கட்டுக்கதைகள்’ என்று பீச்சாங்கைவீச்சாகப் பகுத்துவிடு வது சரியா? இது என்னவித மான அறிவுசாலித்தனம்?
2. ஒருவர் தனது சுயசரிதையில் உண்மை பேசவேண்டி யது மிகவும் முக்கியம்; அவசியம். ஆனால், அவ்வாறே இன்னொரு வரின் வாழ்க்கையைப் பற்றிய உண்மை விவரங்களை, இன்னொருவர் தன்னிடம் நேர்பேச்சாக, நட்புரீதியாக பல வருடங்களுக்கு முன்பு சொன்னதை உண்மையான உண்மை யாக வெளியிடு வது, சரியா? தேவையா?
3. தனது புத்தகங்களைத் தானே வெளியிடுவதையும், தன் புத்தகங்களைப் பிறருக்கு அறிமுகம் செய்யும் பதிவுகளை வெளியிடுவதையும் இலக்கியப்பணியாகக் கொள்பவர் அதைச் செய்யும் சக-படைப்பாளியை விளம்பர-மோகியாக பாவிப்பதும் பகுப்பதும் ஏன்?

Saturday, June 22, 2024

INSIGHT [ A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY) - MAY 2024 ISSUE

 


INSIGHT - [A BILINGUAL BLOSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY] - MAY 2024 ISSUE

 

ரிஷி(லதா ராமகிருஷ்ணனின் உள்ளங்கையுலகு - 1 (முதல் நான்கு கவிதைத்தொகுப்புகள்)

  நானாகிய ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் இதுவரையான 18க்கும் மேற்பட்ட கவிதைத்தொகுப்புகள் 

உள்ளங்கையுலகு - 1, உள்ளங்கையுலகு - 2 என்ற தலைப்புகளில் வெளியாக உள்ளன. 

முதல் நான்கு கவிதைத்தொகுப்புகள் அடங்கிய 

உள்ளங்கையுலகு - 1 

சமீபத்தில் வெளியாகியுள்ளது. 

கவிஞர் ராகவபிரியனின் மூன்று நூல்கள்

  கவிஞர் ராகவபிரியன் நுட்பமான படைப்பாளி. அவருடைய மூன்று நூல்கள் சமீபத்தில் என்னு டைய ANAAMIKAA ALPHABETS மூலம் பிரசுரமாகி யுள்ளன.  

நூல்கள் வேண்டுவோர் தொடர்புகொள்ள : 

அலைபேசி எண் - 94425 36901( திரு. ராகவபிரியன் தேஜஸ்வி)


கவிஞர் ராகவபிரியன் - (சிறு குறிப்பு)

Poet Ragavapriyan thejswi (Original name Rajagopalan) was born in 1959, in a not so well-offfamily. He was the second son of his parents – Thejeswi Subramanian and Rajamaniammal. With the father being the only earning member of the family and with ten children of whom six younger sisters to the poet, they struggled hard to survive and get educated.

The poet’s father was a scholar in Tamil , Sanskrit and English and a versatile writer too. Though he was a government employee he had to go on long leave due to various ailments. Unfortunately the family could not preserve and safeguard much of his writings as they were struggling to make both ends meet after the father’s demise in 1986..The poet had to shoulder famility responsibilities early in life, finding a work but his thirst for reading and writing remained in tact.

In 2015 he renewed his writing under the pseudonym Thejeswi and since then he has been actively engaged in penning poetry and essays.

A post-graduate (M.Com, M.Phil) the poet has 22 e-books and three printed books to his credit. He writes on a variety of subjects such as Religion, Philosophy etc., but his favourite genre is poetry, he says. Served in Southern Railways as station master for 23 years and as professor in Railway Training Institute for 12 years.

A proud father of two daughters Poet Ragavapriyan is now living in Srirangam, his native palce in south India with his better half.


1. ராகவபிரியனின் சிறுகதைத்தொகுப்பு


இலக்கியம் காலத்தின் கண்ணாடி. என்பார்கள். எழுத்தாளர் தனது அக, புற இருப்பை. அதன்  அகவய, புறவயக் காரணகாரியங்களை புனை வெழுத்துகளில் பதிவுசெய்கிறார்; பிரதிபலிக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பரிணாமம் என்ற சிறுகதை அடுப்பின் மாற்றங்களையும், அதன் வழியே ஏழைக்குடும்பமொன்றின் இருப்பையும், அதன் மாற்றங்க ளையும் எடுத்துக்காட்டுவதுபோல். நல்ல சிறுகதைகள் கதையின் வழியாக சமகால வாழ்வைப் படம் பிடித்துக்காட்டுகின்றன.

திரு.ராகவபிரியனின் சிறுகதைகள் சமகால சமூகத்தின் பொருள் பிரதான வாழ்க்கையின் நிலைகுலைவுகளைப் படம்பிடித்துக் காட்டுவதோடு சமூகத்தின் சில பிரிவினர் தொடர்பான வ்ரலாறு திரிக்கப்படும் விதங்க ளையும் கதைகளினூடாக எடுத்துக்காட்டுகின்றன.


2. கவிஞர் ராகபிரியனின் 30 கவிதைகளும் அவற்றின்

 ஆங்கில மொழிபெயர்ப்பும்



 THE LITTLE GIRL OF  POLE-DANCER

(*Translated by Latha Ramakrishnan)

 

The little girl of pole-dancer ‘Thombankoothaadi’

is the whiz-kid balancing on the cable

 

The icon of benevolence of the bakery opposite

would offer just his applause

and no coins

for her gnawing appetite.

 

Her focus on the balancing pole

turning her legs taut on the cable….

Hunger would seize her stomach

 

Father’s coin-plate

and mother’s drum-beats

would enable the dance of hunger

go on in full swing

upon her stomach-rope.

 

As the dance-steps gain momentum

she would grab the baked bread slice of the bakery

picking it with the sharp end of her pole

as the booty of dance royal .

 

For the hunger of the brilliant little acrobat

running and climbing and walking on the rope

Her very skill, her belly-fill 

 

“Hey you little thief

The man of munificence shrieking

 

The bread-drops

on the child’s lips

bearing witness to stealing

or starving…?

 

Anyone can  say _

standing on the ground all the way.

 

2. தொம்பங்கூத்தாடியின் சின்ன மகள்

 தொம்பங்கூத்தாடியின்

சின்ன மகள்
கம்பியிலாடும் குழந்தை வித்தகி...

எதிர் ரொட்டிக்கடையின்
அன்ன தாதா
அவளின் பசிக்கு
கைத்தட்டல் மட்டுமே 
காசில்லாமல் தருவார்...

அவளின்
சம நிலைக் கம்பில் கவனம்
கம்பியில் கால்களை இறுக்க..

பசி வயிறை இறுக்கிப் பிடிக்கும்..

அப்பாவின் சில்லரைத் தட்டும்
அம்மாவின் மேளத் தட்டும்
அவளின் வயிற்றுக் கம்பியில்
பசியின் நடனத்தை
தாள நயத்துடன்
ஆடச் செய்யும்..

நடன முத்திரையின்
மின்னல் வேகம்
கூடிக் கூட..
ரொட்டிக் கடையின்
வாட்டிய ரொட்டியை
ஈட்டி முனையில்
நர்த்தனக் கொள்ளையாய்
எடுத்துக்கொள்வாள்..

ஓடியேறிக் கம்பியில்
நடக்கும் வித்தகிப் பசிக்கு
வித்தையே உணவு..

திருடி திருடியென
அன்ன தாதா
அறை கூவல்விடுக்க...

குழந்தை உதட்டோர
ரொட்டித்துகள்கள்
திருட்டின் சாட்சியா..?
பசியின் சாட்சியா...?

தரையில் நின்றே
யாரும் சொல்லலாம்..

 

3. கவிஞர் ராகவபிரியன் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் சில 

A (SAMPLE) POEM BY RAGAVAPRIYAN

(IN THIS BOOK)

A jumping pest was

simply flying

with great grit and speed

near my dinner plate

studded with

variety of flora and fauna ..

In one of the hands

of the pest

a sanjeevi mountain

could be seen by me..

The statics and dynamics of the

furious wife prepared dinner

lying on the war ground

without any life..

A war without fire

and a dinner without a jump

is nothing but an empty barrel..

If not a healthy quarrel..

Now the pest

simply on a next mission..

A small jump for the pest

might have been..it..

But a giant leap

for my wife

who had thrown a sharp edged

sambar tumbler vessel

not on me

but on the pest..

Now the fainted

Elakkuvana

got up from inside me

and emptied the

dinner plate...

There is no pest

No war

No fire...

or barrel or quarrel..

Shell shocked


....


Thursday, June 20, 2024

கவிஞர் ’சதாரா’ மாலதி (19.6.1950 – 27.3.2007)

 கவிஞர் ’சதாரா’ மாலதி

(19.6.1950 – 27.3.2007)

தரமான கவிஞர் சிறுகதையாசிரியர், திறனாய்வாளர். ஆர்வம் குறையாத வாசிப்பாளர். அவர் அமரராகி 17 வருடங்கள் ஆகிவிட்டன.
தொடர்ந்து திண்ணை இணைய இதழிலும் வேறு பல இதழ்களிலும் எழுதியவர். திருப்பாவை குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு உயர்பாவை என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
அவர் இறந்த பின் அவருடைய 20 கவிதைகளை ஆங்கி லத்தில் மொழிபெயர்த்து அவையும் மூலக்கவிதை களுமாக ஒரு சிறிய தொகுப்பு வெளியிட்டேன். அநாமிகா ஆல்ஃபபெட்டின் சிறிய துவக்கம் அந்த நூலில் தான் ஆரம்பமாயிற்று.
தணல்கொடிப் பூக்கள், மரமல்லிகைகள் என மூன்று நான்கு கவிதைத் தொகுப்புகள், அநாமதேயக் கரைகள் என்ற சிறுகதைத் தொகுதி, ஆண்டாள் திருப்பாவை குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய உயர்பாவை என்ற நூல்(சந்தியா பதிப்பக வெளியீடு) என குறிப்பிடத் தக்க படைப்புகளைத் தந்திருக்கிறார்.
அவருடைய தாயாரும் எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்டவர். கோமதி என்ற பெயரில் எழுதிவந்த அவரு டைய மூன்று சிறுகதைத்தொகுப்புகள் வெளியாகி யுள்ளன.
’சதாரா’ மாலதி’யின் கவிதை யொன்று கீழே:

காதலர்
..............................................
_’ சதாரா மாலதி’

காதலர் தினத்தில்
சந்திப்பர்
காதலரல்லாதவர்
திருமண தினங்கள்
போல்.
காதலர் சந்திப்பதில்லை
இருப்பர்.
சொட்டச் சொட்டத்
தீக்குளியில் அறுகும்போது
காதலர் இருப்பர்.
பரஸ்பர பரிசுக்கென்று
அவர்களுக்கு உலகங்கள்
வாய்ப்பதில்லை.
பரிசுகள் வாய்க்கும் நேரம்
உலகங்களில் அவர்களில்லை.
ஆம்
தெய்வங்களும் காதலர்தாம்
ஆவிகள் போல்.
(*மரமல்லிகைகள்’ தொகுப்பிலிருந்து)
..............................................................................................................................
REMEMBERING FELLOW-POET SATHARA MALATHI
Latha Ramakrishnan
.
A passionate reader and a very sensitive human being she was, one can find in her Poetry the marvelous blend of the two quotable quotes – ‘Poetry is the spontaneous overflow of powerful emotions’ and ‘Poetry is emotions recollected in tranquility’.
Her poems reveal her passionate heart and its unanswered queries and unfulfilled dreams and they belong to one and all of us. She had experimented with various styles and tones in writing Poetry, using classical Tamil, folk-language etc. She took part in literary seminars and discussions with genuine interest and her Papers would always be balanced and analytical, avoiding overtones.
Three collections of poems – VARIKUTHIRAIGAL ( the zebras) , THANAL KODI POOKAL( fire-plant flowers), MARAMALLIGAIGAL ( a kind of trophical flowers) – one short-story collection – ANAMADHEYA KARAIGAL (anonymous shores) – one Anthology of essays on the renowned Tamil Classic Andaal Thirupaavai, analyzing the underlying theme of the verses with a rare sensibility and sensitivity, UYARPAAVAI - of Sathara Malathy have so far been published.


POETRY IS…
‘sathara’ malathy
Poetry is not a diary, nor the pages of an autobiography. It is not made of ‘I’ s. Not all of a poem are real; nor are they mere fantasy. Poems are not decorated with cleverness and strategies; nor are they made sacred with dirt.
For me, Poetry is Truth; Truth told in the best possible manner. Hiding mine as other’s, this one’s as that one’s, yet, a Truth which comes into the open, no matter however hard one would try to hide it. A poem without this Truth can only be superficial, with no real substance.

LOVERS
They meet on Valentine’s Day
Those no lovers _
as in wedding days
Lovers don’t meet. They Be.
When all drenched in fire
and break apart
They Be.
For mutual gifts
they have no Worlds.
When gifts happen
Worlds don’t have them.
Yes. Gods too are
lovers-like Spirits.
2) THE DUEL
Banging against the stone of language
repeatedly
I voiced my woes.
The Tongue remained unstirred.
Cold War.
And, banging against my heart
again and again
it gained entry
as Poetry
3) THE THREE DIVISIONS OF TIME
Seeping into Yesterday, I,
not flowing in Today
froze in ‘day before yesterday
’having no time to melt.
The minutes are but
veritable milestones.
In the wind of sorrow
bounced and battered
the poem that melts,
so moved,
in the darkness of my tongue
would gain its voice from the light
you would give tomorrow
with the word having gone dead
climbing the wall
and moving ahead.
4) NEED
Just like ‘parrot-hunger
Suffice if there are
Fruits of Syllables.
Why can’t you say
At once ?
That it’s sickening!
Swallowing atrocious Delays
I can’t satiate My hunger.
5) THIS IS NO RESPONSE
I have no response to your letter.
Tears can never be written
in a piece of paper.
My problem is that
I wished to get back the Loan
that I had given elsewhere,
from You.
My failure is that
I was born dead.
For those share of my heart
that have suffered loss
let’s pay homage.
If only time would block
My ebbs and flows
from reaching your shores
my thanks will be million and more.

வஞ்சனை சொல்வாரடீ, கிளியே…….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வஞ்சனை சொல்வாரடீ, கிளியே……..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வெள்ளிப்பாத்திரங்கள் நிரம்பிய வீட்டில் பிறந்துவளர்ந்த குழந்தைகளுக்கு
வறுமையின் அவமானம் புரிய வாய்ப்பில்லை.
அல்லது புத்தரைப்போல் வீட்டைவிட்டு வெளியேறத் தோதான
கால்கள் வாய்த்திருக்கவேண்டும்.
மன்னர்களின் வரலாறுகளை மட்டுமே படித்துமுடித்த இளவரசர்கள்
மிகவும் பிரயத்தனப்பட்டு மக்களாட்சி என்ற சொல்லைப் படிக்கக் கற்றாலும்
அதை மனதில் இறக்கிக்கொள்வதில்லை.
மும்மாரி பொழிகிறதா என்பதைக்கூட குளிரூட்டப்பட்ட அறையில் திண்டுமெத்தையில் சாய்ந்து மனக்கண்ணால் பார்த்து முடிவுசெய்யப் பழக்கப்பட்டவர்கள்
வெறுங்கால்கள் கொப்புளிக்க மைல்கணக்காய் தலையில் பாறாங்கற்களைச் சுமந்துவந்தவர்களை சிந்தித்துப் பார்ப்பதில்லை.
அல்லது, அவர்கள் விசுவாசமிக்க பிரஜைகள் என்று பாராட்டுகிறார்கள்.
அவர்களை அடிமைச்சேவகம் செய்யவைத்தது தன் அரசகுலம் என்பதை மறந்தும் மறைத்தும்.
அடிக்கு அடி சேவகர்கள் காத்திருக்கும் அரண்மனைவாழ்வு வாய்த்த அரசகுடும்பத்தினர்
அரியணைகள் ஈரேழ்பிறவிக்கும் அவர்களுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.
அதனால்தான் மக்களாட்சி என்ற சொல்லின் அர்த்தத்தை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடிவதேயில்லை.
அரையடி புதையும் வெல்வெட் கம்பளம் விரித்த நடைவழியிலேயே போய்வந்து பழகியவர்கள்
அடுத்தவர் நலனுக்காய் பாலைவன சுடுமணலில் வெறுங்காலில் பயணமாகியவன்
வெப்பம் தாளாமல் ஐயோ என்று கதறியதை எள்ளிநகையாடும்
வெட்கங்கெட்டவர்களாக இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.
அவர்களுடைய நன்கு திட்டமிடப்பட்ட சொகுசுநடைப்பயணங்கள்
கால்களற்ற ஏழைப் பிச்சைக்காரரின் தினசரி அவலவாழ்வைக் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை.
வெறுங்கால்களோடு வரப்புகளில் அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்
உலகெங்கும் வலம்வருகிறது புகைப்படங்களாய் காணொளிக்காட்சிகளாய்.
ஆபத்தான அரைவேக்காட்டு விவரங்களும் தரவுகளுமாய் கண்ணில்படும் காணிகளுக்கெல்லாம் குறுநில பெருநில மன்னர்களாகும் கனவுகளோடு
வலம்வரும் இந்த மன்னர் மாமன்னர் சக்கரவர்த்திகளும் அவர்தம் உற்றமித்ர பந்துக்களும்
எளிய மனிதர்கள் தங்களுக்கு சமமாய் அரியணையில் அமரநேர்ந்தால்
அப்படி அழுதுபுரள்கிறார்கள் ஆங்காரமாய்.
மண்ணையள்ளித் தூற்றுகிறார்கள்.
அய்யய்யோ அக்கிரமம் அராஜகம் என்று ஆயத்த மக்கள் புரட்சியாளர்களாய் அதையும் இதையும் பேசுகிறார்கள்.
அத்தனை நேரமும் அவர்களுடைய முழுமுனைப்பான எண்ணமெல்லாம்
அரியணையைக் கைப்பற்றுவதே என்ற உண்மை அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அதை அத்தனை நேர்த்தியாக மறைத்தொளிக்கும் மாபாவிகள் என அவர்கள் மனங்களுக்குத் தெரியாதா என்ன?
ஆனாலும் அவர்கள் வாழையடிவாழையாய் ஏழைபாழைகளின் புரவலர்களே யல்லாமல்
மன்னிப்புக் கேட்கும் கோழைகளல்ல என்று திரும்பத்திரும்ப சொல்லியடியே ஓடியவாறிருப்பார்கள்
நாட்டில் உலகில் மீதமுள நிலபுலன்களை உடைமைகொள்ளும் மார்க்கங்களை
அதற்கான அதிகாரபீடங்களை
நாடித்தேடி…