LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 12, 2022

படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்.

....................................................................................................................................

 படைப்புச் சுதந்திரமும்

படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்.

கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்

 

_ லதா ராமகிருஷ்ணன்

(பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது)



சக கவிஞர் லீனா மணிமேகலையின்  சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறதுகுறிப்பாகஅதன் போஸ்டர்காளி புகை பிடிப்பதாகவும்,  கையில் LGBT(ஓரினப்புணர்ச்சியாளர்கள்திருநங்கைகள் முதலியவர்களின் உரிமை களுக்காகப் போராடும் அமைப்புபதாகையைப் பிடித்திருப்பதாகவும் சித்தரிக் கப்பட் டிருப்பதுஇந்து மதக் கடவுள் காளிமாதாவை இந்தச் சித்தரிப்பு அவமதிப்பதாய் ஆவணப்பட இயக்கு னரும்அதில் நடித்திருப்பவருமான கவிஞர் லீனா மணிமேகலை ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களில் பேசுபொருளாகியிருக்கிறார்அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றனஅவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்.


 படைப்புச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களுக்கு அடி பணிய மாட்டேன் என்று கவிஞர் லீனா மணி மேகலை கூறியிருக்கிறார். கனடாவில் தன் மீது வந்திறங்கும் காளி பல இடங்களை அங்கு சுற்றிப் பார்த்து, பல மனிதர்க ளோடு பேசிப் பழகிஅன்பு செழிக்க வேண்டும்என்ற கருத்தை வலியுறுத்து வதாகவே தன் படம் அமைந்திருப்பதாகத் தெரிவித் திருக்கிறார். ‘

 புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பது என்பது உண்மையே ஆனால், அதற்காக அது அத்தனை பாவகரமான செயலா? காளி மாதா புகை பிடிப்பதாகக் காண்பிப்பது அத்தனை அடாத செயலா? தீயவர்களின் ரத்தத் தையே குடித்தவளல்லவா அவள்!

 படைப்புகளில் கடவுளர்களை, குறிப்பாக இந்துக் கடவுளர்களை கேலி செய்வது இழிவுபடுத்துவது என்றிருக்கும் வழக்கத்தைக் கண்டனம் செய்ய வேண்டுமானால் எத்தனையெத்தனையோ திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகள், சமூக ஊடகங்களில் இடம்பெரும் பதிவுகள், அரசியல் தலைவர்களின் பேச்சுகள், அறிவுசாலிகளின் கருத்து ரைகள் என நிறைய இருக்கின்றன.

எதேச்சையாகப் பார்க்கக் கிடைத்த பாடகி சுதா ரகுநாதன் பதிவேற்றி யுள்ள காணொளி ஒன்றைக் காணநேர்ந்தது. அதில் காளியின் பல்வேறு தோற்றங்கள் காணக்கிடைக் கின்றன. https://www.youtube.com/results?search_query=kaali+video+by+sudha+raunathan

வேற்று மதங்களின் கடவுளர்களைப் பழிப்பதில்லையே என்ற கேள்வி அநாவசியம். யாருடைய நம்பிக்கைகளையும், பற்றுக்கோடுகளையும், ஏன், தாம் சார்ந்த மதத்தின் நம்பிக்கைகளையும்கூட யாரும் ஏன் பழிக்க வேண் டும்? அப்படியே அவற்றில் ஆகாதன இருந்தாலும் அவற்றை கண்ணிய மாகச் சுட்டிக்காட்ட முடியும். நாத்திக வாதத்தை பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் அத்தனை தர்க்கபூர்வமாகப் பேசியிருப்பார்!

 லீனா மணிமேகலை நுண்ணுணர்வு வாய்ந்த கைவ்ஞர்திரைப்பட இயக்குனர். அவர் தன்னுடைய திரைப்படங்களை வெற்றுப் பிரச்சார மேடை களாக உருவாக்குவதில்லை என்பதற்கு அவருடைய சமீபத்திய படம் மாடத்தி சிறந்த எடுத்துக்காட்டு.

 அவருடைய கருத்துகள் சிலவற்றோடு _ அரசியல்ரீதி யானவையும் மற்ற வையும் _ நாம் உடன்படாமல் இருக்கலாம். அதற்காக, அவர் காளியை மதிப் பழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சித்தரித்திருப்பதாக, அவரு டைய ஆவணப்படத்தைப் பார்க்காம லேயே கூறுவது நியாயமல்ல.

அவருடைய சில படைப்புகள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரின் கண்ட னத்தையும் எதிர்ப்பையும் சந்தித்திருக்கின்றன. அவருடைய சமீபத்திய படம் மாடத்தியே கூட அத்தகைய எதிர்ப்பைச் சந்தித்தது. எனவே, ஒரு குறிப்பிட்ட மதத்தை, பிரிவினரை மதிப்பழிப்பது அவருடைய நோக்கம் என்று சொல்ல வியலாது. அவர் தனக்கு சரியெனப் பட்டதை எழுதுகிறார்; படைக்கிறார். அவ்வளவே.

 அவரை இப்போது எதிர்ப்பவர்கள் அவருடைய சமீபத்திய காளி ஆவணப் படத்தைப் பார்த்திருப் பார்களா, தெரியவில்லை.

 இந்துக் கடவுளர்களை அவற்றின் சாராம்சம் தெரியாமல் சகட்டுமேனிக்குக் கேவலம் செய்யும் போக்கு அதிகரித் திருக்கிறது என்பது உண்மையே. அதே சமயம் காளி உட்பட கடவுளர்கள் எல்லோரையும், எல்லாவற்றையும் உள்ளடக்கியவர்கள். நம்பிக்கையாளர் களும் சரி, அவநம்பிக்கையாளர் களும் சரி அவர்களை குத்தகைக்கு எடுத்திருப்பதாய், கொத்தடிமைகளாய், பாவிக்கவோ, நடத்தவோ இயலாது; நடத்தவும் கூடாது.

கடவுளின் அல்லது கடவுள் என்ற கருத்தாக்கத்தின் சாராம்சத்தையும் வீச்சையும் விரிவையும் ஒடுக்கி குறுக்கி கடவுளைத் தங்கள் துருப்புச் சீட்டாய்ப் பயன்படுத்தும் போக்கை கடவுள் மறுப்பாளர்களும் சரி, கடவுள் பற்றாளர்களும் சரி, கைவிட வேண்டியது அவசியம்.

ஒருவரின் மதத்தை, கடவுள் நம்பிக்கையைப் பழித்தல் ஒருவகையில் அவருடைய பிறப்பை, பெற்றோரை, முன்னோர்களையெல்லாம் பழிப்பதா கிறது. இந்த உளவியல் புரிந்துகொள்ளப் படவேண்டியது இன்றியமை யாதது.

பொது மேடைகளில் பேசுபவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள், படைப்பாளிகள், அரசியல்வாதிகள், அறிவுசாலிகள் என அனைவருமே இவற்றையெல்லாம் மனதில் கொண்டு செயல்பட்டால் மிகவும் நல்லது.

ஏனெனில், ஊரில் அமைதி குலையும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப் படுவது சாமானியர்களே.

படைப்புச் சுதந்திரத்தின் மீது தற்போதைய மத்திய அரசு தொடுக்கும் தாக்கு தல் என்று கவிஞர் லீனா இதைக் குறிப்பிட்டுள்ளார். இதில் எனக்கு வேறு பட்ட கருத்து உண்டு. எந்த அரசும் சரி, அமைப்பும் சரி, கட்சியும் சரி - அடுத்த வர் அளவில் உயர்த்திப்பிடிக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை, வெளிப்பாட் டுரிமை போன்றவற்றைத் தம் அளவில் கடைப்பிடிப்பதில்லை என்றே தோன்றுகிறது.

கவிஞர் லீனா மணிமேகலையைப் பொறுத்தவரை தனக்கு சரியென்று பட்டதை நேரிடை யாகவும் படைப்பு மூலமாகவும் செய்கிறார். அவை நமக்கு ஏற்புடையதாக இருக்கலாம்; இல்லாமல்போகலாம். அது வேறு விஷயம். ஆனால் அவர் தன் மீதான அவதூறுகளை யெல்லாம் தனியொரு வராகவே எதிர்கொண்டு வருகிறார்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்றெல்லாம் பார்க்காமல்தான் அவர் தன் கருத்துகளை வெளி யிடுகிறார்.

கவிஞர் லீனா மணிமேகலைக்கான ஆதரவாளர்கள் தமிழ் இலக்கிய உலகில் கணிசமாகவே இருக்கிறார்கள்.ஆனால், தமிழ் இலக்கிய உலகின் பொதுக் குரலாக அது வெளியா வது அரிதாகவே உள்ளது.

கவிஞர் லீனா மணிமேகலை தற்போதைய மத்திய அரசை எதிர்ப்பவர் என்பதாலேயே அவருடைய படைப்பைப் பார்க்க முற்படாமல், பிறர் பார்க்க வழிவகுக்காமல் அதை முடக்குவது இந்திய அரசுக்குப் பெருமை சேர்ப்பதல்ல. சம்பந்தப்பட்ட காளி போஸ்டரை ஆதரித்து பல ஆழமான கட்டுரைகள் வெளியாகிவருகின்றன. நுபுர் சர்மா சர்ச்சைக்கு இணை நிலையில் இந்த காளி போஸ்டர் பிரச்சனையை அணுகும் போக்கும் சரியல்ல.

எந்த காளி போஸ்டர் அந்தக் கடவுளை அவமதிப்பதாகச் சொல்லி கண்ட னம் செய்தார்களோ, முடக்கினார்களோ அதே போஸ்டரைத்தான் அத்தனை ஊடகங்களும், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கவிஞர் லீனா மணிமேகலை குறிப் பிட்டிருப்பது உண்மையே.

அதேபோல், கவிஞரின் போஸ்டர் காளிமாதாவை எதிர்ப்பதாகப் பேசிய பலர் அத்தனை ஆபாசமாக கவிஞர் குறித்து எழுதியிருப்பதைப் படிக்கும் போது அவர்கள் மீது தான் காளிமாதாவுக்குக் கோபம் வரும் என்பது உறுதி.

அதிகாரத்திற்கும், கலாபூர்வ தனி மனிதர்களுக்கும் இடையே நிலவும் ‘தொடர்பின் மையை’ கவிஞர் வைதீஸ்வரன் 2015இல் அவர் எழுதி அம்ருதா இதழில் வெளியான ‘ஊருக்குள் இரண்டு காளி என்ற தனது சிறுகதையில் மிக நுட்பமாகப் பதிவு செய்திருப்பார். (http://vydheesw.blogspot.com/2015/11/blog-post_10.html) இக்கதை பதிவு இணைய தளத்தில் இப்போது மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு எழுத் தாளர் அ.ராமசாமி எழுதிய திறனாய்வுக் கட்டுரையும் மிகவும் காத்திரமானது.

மாநில அரசு மாறியதுமே பட்டம் கிடைக்குமா, பதவி கிடைக்குமா, பரிசு கிடைக்குமா என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர்களெல்லாம் கவிஞர் லீனா மணிமேகலை யின் காளி படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை அவருடைய PUBLICITY STUNT என்று கூசாமல் கருத்து வெளியிடுவது வேடிக்கை; வெட்கக் கேடு; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க முடிந்தவர்கள் கொடுக்கலாம். கொடுக்கவேண்டியது அவசியமும்கூட.

 

 

v       

Thursday, July 7, 2022

ஒட்டுத்தையல்களும் கந்தலான வாழ்வுரிமையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒட்டுத்தையல்களும் 

கந்தலான வாழ்வுரிமையும்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 


வாயைத் தைத்துவைத்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

சாமான்யர்கள்

வார்த்தைகள் சாமான்யர்களை மட்டுமே வழிமறிக்கின்றன

சாமான்யர்களுக்கு மட்டுமே குழிபறிக்கின்றன

சாமான்யர்களின் இறப்புக்குக் கிடைப்பதெல்லாம்

செலக்டிவ்மௌனங்கள்; மறதிகள்

சாலை விபத்தை வெறுமே செல்ஃபி எடுத்து ஷேர் செய்து

தலையை சிலுப்பிக்கொள்ளுதலே

சமூகப் பிரக்ஞையாக.

சின்னதா யொரு ரொட்டித்துண்டு கொடுத்துவிட்டாலோ

சட்டென்று தன்னை யொரு அன்னை தெரசாவாக்கிக்கொண்டுவிட

சொல்லியா தரவேண்டும்?

சாமான்யர்களுக்காக சதா உழைப்பதாக சொல்லிக்கொள்ளும்

சிலபலருக்கு சென்னை சீர்காழி ராஜஸ்தான்

ஸ்விட்ஜர்லாந்தில் சொந்தமாய்

அடுக்குமாடிக் கட்டடங்களும்

கிடுகிடுவென வளர்ந்தோங்கிய

பெருநிறுவன வியாபாரங்களும்.

சாமான்யர்களுக்கில்லை சுதந்திரங்கள்

பேச்சுரிமை கருத்துரிமை யாவும்

எட்டாக்கனியாக

சாமான்யர்களுக்கானதே தினந்தினம் செத்துமடியும் வாழ்க்கை

யென்றாக

வரும்போகும் அற்பப்பதர்களுக்கெல்லாம்

வயிற்றுப்பிழைப்புக்காக வணக்கம் சொல்லி

மடங்கி வளைந்து முழந்தாளிட்டு

மனம் நொறுக்கும் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு

மரத்துப் போய்விட்ட உணர்வுடன்

மடைதிறந்த வெள்ளமாய் பீறிடத்துடிக்கும்

சொற்களால் பிதுங்கும் இதழ்களை

இறுக்கித் தைத்துவைப்பதே

இயல்பாகிய

இகவுலக வாழ்வில்

இங்கே இன்று…..

இருந்திரந்து

இரந்திருந்து

இருந்திறந்து

இறந்திருந்து

இருந்திருந்திருந்திருந்து…..

வியாபாரம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வியாபாரம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கமர்கட் வண்டிக்காரர் முதல்
கருப்பு வெல்வெட்டாய் ஜொலிக்கும் இறக்குமதிக் கார்காரர் வரை
தினமும் கடைதிறக்கத் தவறாத சந்தை யிது.
அவரவர் சக்திக்கேற்ப கடைக்கான
அலங்கார விளக்குகளும்
விற்பனைப் பொருட்களும்.
‘அத்தனையும் தரமானவை’ என்ற வாசகம் தவறாமல் இடம்பெற்றிருக்கும்
சின்னதும் பெரியதுமான எழுத்துகளில்.
சமயங்களில் அதே பொருளைத்தரும் வேறு வேறு சொற்களைக்கொண்ட வாசகங்கள் இருக்க வழியுண்டு.
சில கடைக்காரர்கள் முந்தைய இரவு பார்த்த மெகா தொடரின் தாக்கத்தில்
ரகசியமாக தெருமுனை பில்லி சூனிய ஆசாமியிடம் சென்று
குறைந்தபட்சம் 500 ரூபாய் தண்டம் அழுது
தகடு வாங்கிவந்து
தன் கடையிலிருந்து ஐந்தாவதாக இருக்கும் கடையில்
எப்படியாவது கொண்டுபோய்வைத்துவிடுகிறார்கள்.
அவர் அப்படிச் செய்வதை பின்னோடு சென்று பார்ப்பதே
வேலையாக இருப்பவர்கள்
அடுத்த நாளே அதை தவறாமல் அம்பலப்படுத்திவிடுகிறார்கள்.
பொருள் வாங்கக் கடைவாசலில்
கூட்டங்கூடியிருப்பதாய்
நாளுங்காணும் மாயத்தோற்றம் நிஜமாகும் நாட்கள்
நிறைவாழ்வுத்தருணங்கள்.
அவற்றையும் போலச் செய்து போலி செய்து
பலரும் காண வாகான இடத்தில்
‘பச்சக்’ என்று போஸ்டர் ஒட்டி
பெருமைகொண்டு பிரமையிலுழல்வாரும் உண்டு.
மெய்யாகவே தரமான பண்டங்களை விற்கும் கடைகளுக்கு
அவ்வப்போது தாமே தயாரித்த அளவுகோல்களையும்
தரநிர்ணயங்களையும் கொண்டுவந்து
உருட்டி மிரட்டுவதாய் ஒரு பார்வை பார்த்து
ஒரு கூழைக்கும்பிடோ சிறிய பெரிய மாமூலோ
கிடைக்காத கோபத்தில்
சில்லறை வியாபாரம் என்றால் பொறுத்துக்கொள்ளலாம்
ஆனால் இப்படி சில்லறைத்தனமான வியாபாரம் செய்தால்?’
இல்லாத ஆன்மா வேசத்துடன்
அங்கலாய்த்து
அங்கே இங்கே சில மொட்டைக் கடுதாசிகள் அனுப்பி
மேற்படி நல்ல கடைகளை செல்லாக் கடைகளாக மாற்றும்
பிரயத்தனமே தம் மூலதனமாகக் கொண்ட
மொத்த வியாபாரிகளும் கைசுத்தமானவர்களே
அவரவர் செய்யும் கலப்படங்களில்.
அலப்பறைகளுக்கப்பால்
கருமமே கண்ணாய் வியாபாரம் செய்பவர்களுக்கு
செய்யும் தொழிலே தெய்வம்.

அடிவருடிகள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவருடிகள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

அவர் சொன்னார் அப்படி

இவர் சொன்னார் இப்படி

எப்படி சொல்லியிருக்கிறார் பார்த்தாயா

என்னமாய் சுட்டிக்காட்டியிருக்கிறார் கேட்டாயா

கேட்பாயா மாட்டாயா

கேட்டால் உய்வாய்

கேட்காவிட்டால் உன்னுடையது பொய்வாய்

என்று சந்நதம் வந்தாற்போல்

நாலாந்தர விளம்பரப் பாடலாய்

ஆலாய்ப் பறந்தபடி

இன்னுமின்னுமாய்ஜய்ஞ்ஜக்தாளம் தட்டிக்கொண்டேயிருந்தவரிடம்

Silly’ ஆக இருந்தாலும் பரவாயில்லை

சுயமாய் உங்களுக்கே ஏதாவது தோன்றி

நீங்களாக ஏதாவது சொல்லும் நாளில்

சொல்லியனுப்புங்கள்

சாக்லேட் வாங்கி வந்து நான் செவிமடுக்கிறேன்

சண்டைபிடிக்கிறேன்

அல்லது சிலாகிக்கிறேன்

என்று சுருக்கமாக விடைபெற்றுக்கொண்டு

என் வழியே நடக்க ஆரம்பிக்கிறேன்

என் சீடரும் குருவுமாகிய நான்.

 

லைக்’ வள்ளல் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 லைக்வள்ளல்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)




கொலைகாரர்களுக்கும் தருவார் ‘LIKE’

கொல்லப்படுகிறவர்களுக்கும் தருவார் ‘LIKE’

குழந்தைகளுக்கும் தருவார் LIKE

குட்டிச்சாத்தான்களுக்கும் தருவார் LIKE

பெண்ணியவாதிக்கும் தருவார் LIKE

ஆணாதிக்கவாதிக்கும் தருவார் LIKE

கொடுமைக்கார மாமியாருக்கும் தருவார் LIKE

கொடூர மருமகளுக்கும் தருவார் LIKE

இந்தி எதிர்ப்பாளருக்கும் தருவார் LIKE

தமிழ் வெறுப்பாளருக்கும் தருவார் LIKE

மறைவேத நம்பிக்கையாளருக்கும் தருவார் LIKE

இறை மறுப்பாளருக்கும் தருவார் LIKE

வெறுப்பு அருவருப்பானது என்பாருக்கும் தருவார் LIKE

அரும்பெருமையுடையது என்பாருக்கும் தருவார் LIKE

காதல் கட்டாயம் வேண்டும் என்பாருக்கும் தருவார் LIKE

கூடவே கூடாது என்பாருக்கும் தருவார் LIKE

எழுத்தில் கண்ணியம் காப்பவருக்கும் தருவார் LIKE

கண்ணியமா மண்ணாங்கட்டி என்பாருக்கும் தருவார் LIKE.

கட்டெறும்புக்கூட்டங்களுக்கும் தருவார் LIKE

சுட்ட அப்பளங்களுக்கும் தருவார் LIKE

விட்டகுறை தொட்டகுறையாய் அவரிடம் அத்தனை LIKE

எவருக்கோ எதற்கோ தர எக்கச்சக்க LIKE

அன்றாடம் அரிசிமிட்டாயாய் அவர் இறைக்கும் LIKE

அவருக்கு என்றாவது பெற்றுத்தரலாம் ‘LIKE வள்ளல்பட்டம்!

அதற்கும் இப்போதே போட்டுவிட்டார் ஒரு LIKE!!