LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, January 30, 2019

அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் – புதிய வெளியீடுகள் 1.


அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் – புதிய வெளியீடுகள்

1.       நினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு )



ஒரு சிறிய அறிமுகம்)



டாக்டர். வி. வி.பி ராமாராவ் எழுதிய 22 சிறுகதைகளடங்கிய தொகுப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் எஸ்.ஆர்.தேவிகா.சுமார் 300 பக்கங்கள். விலை: ரூ230. வெளியீடு அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்; விற்பனை உரிமைபுதுப்புனல் பதிப்பகம்பாத்திமா டவர் முதல் மாடி(ரத்னா கபேக்கு எதிரில்), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை. சென்னை 600 005. தொலைபேசி : 9884427997 ; மின்னஞ்சல் pudhupunal@gmail.com



நூலாசிரியர் ராமாராவ்

தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் புதினங்கள், வாழ்க்கைச்சரிதைகள், சிறுகதைத் தொகுப்புகள், திறனாய்வுக் கட்டுரைகளடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலிருந்து தெலுங்குமொழியிலும் தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திலும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புநூல்களும் அடங்கும்.

மொழிபெயர்ப்பாளர் எஸ்.ஆர்.தேவிகா

சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர். பணி ஓய்வுக்குப் பின்னர் மொழிபெயர்ப்புப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுவரும் இவருடைய முதல் மொழிபெயர்ப்பு நூல் இது. புகழ்பெற்ற பாரசீகக்கவிஞரான மிர்ஸா காலிபின் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்து உருதுமொழியிலும் ஆங்கிலமொழியிலும் மொழியாக்கம் செய்திருக்கும் திரு ,மூஸா ராஜா அவர்களின் (இந்தக் கவிதைகள் இப்போது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு கவிதா பதிப்பகத்தால் தொகுப்பாக வெளியிடப் பட்டுள்ளன) குறிப்பிடத்தக்க இன்னொரு ஆங்கில நூலான IN SEARCH OF ONENESS என்ற தலைப்பில், மதங்களிடையேயான ஒருமைத்தன்மையை வலியுறுத்தும் குறிப்பிடத்தக்க, இன்றைய காலகட்டத்திற்கு மிகத்தேவையான  நூலும் தேவிகாவால் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது.


நூலுக்கான அய்யப்ப பணிக்கரின் முன்னுரையிலிருந்து

கதாசிரியர், தன்னை தன்னுடைய வாசகர்களிடையேதான் வாழ்வின் வேறுபட்ட ஒளி மற்றும் இருட்டின் வண்ணங்களை சிந்தித்துப் பார்க்கும் மனிதன்என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘LOVE AMONG THE RUINS’   LOVE IN THE RUINS’ என்று கதையின் தலைப்பை மாற்றியதிலிருந்து, கதாசிரியர் தனது இருவித நோக்கங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். இந்த வர்ணனை கதாசிரியருக்கும் ஏற்ற ஒன்றாகும்; ஏனென்றால், அவருடைய எல்லாக் கதைகளிலும் ஒளி மற்றும் இருட்டின் பலவித வண்ணங்களை நாம் காண்கிறோம்.



QUOTABLE QUOTE

QUOTABLE QUOTE

நிஜப்பெயர் – புனைப்பெயர் – பெயரிலி – பின்…..?


நிஜப்பெயர்புனைப்பெயர்பெயரிலிபின்…..?


பெயர்பெற்ற திரைப்படங்களின் தலைப்புகள் சில புதிய திரைப்படங்களின், சின்னத்திரைத் தொடர் களின் தலைப்புகளாக வைக்கப்படுவது ஏன்? தமிழில் வார்த்தைகளா இல்லை? என்று அவ்வப்போது தோன்றும்.
பிரபல படங்களுக்கே இந்த கதி என்றால் சிறுபத்தி ரிகையில் இயங்கும் பாவப்பட்ட படைப்பாளி தன் புனைப்பெயருக்கு எப்படி உரிமைகோர முடியும்?
ரிஷி என்ற புனைப்பெயரில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கவிதைகள் எழுதிவருகிறேன்.
10
தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே பெயரில் வேறு சிலருடைய கவிதைகளும்
வாசிக்கக் கிடைக்கிறது.
ரிஷி என்ற புனைப்பெயரிலான என் கவிதைகளைக் கேட்டு வாங்கி வெளியிட்ட சிறுபத்திரிகையாளர் ஒருவர் அதே பெயரிலான இன்னொருவர் கவிதைக ளையும் அதே இதழில் வெளியிட்டிருந்தார். கேட்ட தற்கு அந்த இன்னொரு கவிஞரின் நிஜப்பெயரே ரிஷி என்று தெரிவித்ததோடுநம் எழுத்துமூலம்தான் நாம் பேசப்படவேண்டுமே யொழிய புனைப்பெயரால் அல்ல என்று வேறு அறவுரைத்திருந்தார்!
அநாமிகா என்ற புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதி எனது மூன்று தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதே பெயரில் இன்னும் மூவர் எழுதிவருகிறார்கள்.
எனவே இப்போதெல்லாம் புனைப்பெயரோடு லதா ராமகிருஷ்ணன் என்ற நிஜப்பெயரையும் அடைப்புக்குறிக்குள் போட்டுக்கொள்கிறேன்.
அபத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், என்ன செய்ய?
நீங்களென்ன பெரிய எழுத்தாளராஉங்களுடைய புனைப்பெயர் எங்களுக்குத் தெரிவதற்கும், உங்களு டைய புனைப்பெயரையெல்லாம் நாங்கள் நினைவு வைத்துக் கொள்ளவும்என்று என்னிடமே ஒரு நண்பர் சிநேகமாகக் கேட்டபோதுஎத்தனை பெரிய உண்மையை என்னமாய் புட்டுப்புட்டுவைக்கிறார்!’ என்று எண்ணமெழுவதைத் தவிர்க்கமுடிய வில்லை!
இப்போது என் கேள்வியெல்லாம் இதுதான்:
நாளை லதா ராமகிருஷ்ணன் என்ற என் நிஜப்பெயரி லேயே ஒருவர் அல்லது ஓரிருவர் எழுத ஆரம்பித்தால் நான் வேறு என்ன பெயர் வைத்துக்கொள்ள?
பெயரிலி? (அநாமிகா என்பதன் அர்த்தமே அதுதான்).
அல்லது, பெயரிலி XXXX என்று வைத்துக்கொண்டால் இன்னும் நவீனமாயிருக்கும் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வது சரியா?!?!?!


உறவு என்றொரு சொல்


உறவு என்றொரு சொல்


மறைந்த (தமிழக) முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிய தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய உறவுக்காரர்கள் எல்லோருமே அவர் தங்களைப் பார்த்து ஆதங்கப்பட்டதாய்ச் சொல்லிச் சொல்லி அவரைவிட தங்களை உயர்வான வாழ்க்கை வாழ்வதாய் உருவேற்றப் பிரயத்தனப் பட்டதாய் தோன்றியது.

இவர்கள் யாருமே 1980களுக்குப் பின் அவரோடு தொடர்பிலில்லை என்று கூறினார்கள். அதற்குத் தாங்கள் எவ்விதத்திலும் காரணமில்லை என்பதா கவும்.

அதில் ஒரு பெண்மணிநாங்கள் இத்தனை உறவு கள் இருந்தும் அவர் அப்படி அநாதையாய் இறந்து கிடந்ததைப் பார்த்து அத்தனை வருத்தமாயிருந்தது என்றார்.

எண்ணிறந்த மக்கள் தங்கள் உறவினராக எண்ணி அப்படி அழுதார்களேஅவர்கள் உறவுகளில்லையா?

யோசித்தால், இந்த உலகில் யாருமே அநாதை களல்ல; தாம் இல்லாவிட்டால் ஒருவரால் வாழமுடியாது என்ற நினைப்பு உள்ளவர்கள்தான் உண்மையில் அத்தகையோர் என்று தோன்ற வில் லையா?

உறவு என்பதை அந்தப் பெண் வரையறுத்த விதம் அபத்தமாக ஒலிக்கவில்லையா?.