LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, September 13, 2017

ஓவியாவின் மழை
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ஏதோவொரு தருணத்தில் மண்ணில் உதிர்ந்திருக்கலாகும் 
நிலவுகளையும் நட்சத்திரங்களையும் தேடியெடுக்கும் தவிப்பில்
தலைகுனிந்தபடியே,
ஒரு காலாதீதவெளியைக் காலால் கெந்தியபடி
போய்க்கொண்டிருக்கிறாள் ஓவியா.
அடிக்கொரு முகமூடி இடறுகிறது.
ஒன்றைக் கையிலெடுத்துச் சுழற்றி வீசியெறிகிறாள்.
அது போய்விழுந்த பள்ளத்தாக்கிலிருந்து
பொசுங்கும் நாற்றம் சுள்ளென்று கிளர்ந்தெழுகிறது.
இன்னொன்று பிடியில் அகப்படாமல் நழுவிப்போனபடியே
அவளைப் பார்த்து எள்ளிநகையாடுகிறது.
பகையென்ன என்னோடு என்று திகைப்போடு பார்த்துவிட்டுத்
தன் தேடலைத் தொடர்கிறாள்
வழிமறிக்கும் முகமூடி ஒன்றை 
ஒரே குதிகுதித்துத் தாண்டிச்சென்றுவிடுகிறாள்.
கனிவாய்ச் சிரித்தபடி கனலைக் கக்கும்
முகமூடியை மருட்சியோடு வெறித்துப்ப்பார்க்கிறாள்.
முகம் மட்டுமல்ல அவள்மனம்; ஆன்மா
அவளைச் சும்மா விடலாமா?
விடாமல் வழிமறித்துக்கொண்டேயிருக்கின்றன முகமூடிகள்.
ஒன்று அசந்த நேரம் அவள்மேல் ஏறிப்படர்ந்து
அவள் முகத்தை எட்டப்பார்க்கிறது.
தட்டிவிட்டு முன்னேறுகிறாள்.
குரங்கிலிருந்து வந்தவர்கள்தானே நாம் என்று
ஒரு முகமூடி இன்னொன்றை அணிந்துகாட்ட,
போலச் செய்யாமல், இரண்டு போலிகளையுமே மறுத்து
அப்பால் செல்கிறாள்.
ஒன்றை உருட்டுக்கட்டையால் ஒரே போடு போடுகிறாள்
ஒன்றை தனக்கேயுரிய புன்னகையால் கதிகலங்கச் செய்கிறாள்.
என்ன செய்தும் முகமூடிகள் விடுவதாயில்லை.
மூர்க்கமாய் அவளைத் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.
ஒருவேளை தானும் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டுவிடுவதுதான் தப்பிக்கும் வழியோ 
என்றெண்ணி ஒன்றை எடுக்கும்போதே
அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிடுகிறது.
தொப்பென்று போட்டுவிடுகிறாள்.
பொழுது போய்க்கொண்டிருக்கிறது - காலாதீதவெளியிலும்.
அழ நேரமில்லை.
மண்ணுள்ள நிலவுகளை விண்மீன்களை அவள் திரட்டி யாகவேண்டும்…..
நாளெல்லாம் நடந்து நடந்து அதிகம் களைத்துவிட்ட 
அவள் வண்ணச்சீரடிகள் இளைப்பாற ஏங்குகின்றன
இருந்தாற்போலிருந்து பெய்யும் மழையின்
மடிசாய்ந்துகொள்ளும் ஓவியாவை
மனநிலை பிறழ்ந்தவளாய்க் கொக்கரித்து
உதட்டளவில் வருத்தப்படுகின்றன முகமூடிகள்.
பாவம், முகமூடிகளால் பார்க்கவியலாது
விண்மீன்கள், நிலவுகள், கோள்கள்,மேகம், அணுக்கள், அந்தர சுந்தரதோடு
அவள் வசமாகிவிட்ட வானம்
அவளைக் கதகதப்பாக அடைகாத்துக்கொண்டிருப்பதை.


ஓவியாவுக்கு…

ஓவியாவுக்கு
ரிஷி’ 

(லதா ராமகிருஷ்ணன்)



(* ஆம், நான் Bigg Boss பார்க்கிறேன். இதில் அறிவுச்சிறுமையென்ன, அவமானமென்ன. ஒரு சில மண்டைகளில் உதிக்கும் மெகாத்தொடர் குரூரங்களோடு ஒப்பிட, சமூகத்தின் ‘self-appointed champion’களின் புளுகுமூட்டை விவாதக்கூச்சல்களோடு ஒப்பிட, இந்த நிகழ்ச்சி ஒருவித இளைப்பாறலாகக்கூட இருக்கிறது.)


நிஜத்தை நிழலென்றும் நிழலை நிஜமென்றும் நம்பவைக்கும் நாட்களினூடாக நகர்ந்துகொண்டிருக்கிறோம்;
உண்மையைப் பொய்யாக்கி பொய்யை உண்மையாக்கிக் காட்டும்
பிரபஞ்சத்தின் பிரஜைகள் நாம்.
இதில் உன் அன்பும் ஆதங்கமும் கோபமும் தாபமும், வலியும் களியும் வீம்பும் விசும்பலும்
utopion
கனவுலகை உருவாக்கித்தருவதொரு கொடுப்பினையாய்.
உலக உருண்டையை வாய்க்குள் காட்டும் குழந்தைக் கண்ணனாய்
ஏழை ஸிண்ட்ரெல்லாவாய்,
ஏதோ சாபவிமோசனத்தை எதிர்பார்த்திருக்கும் மெழுகுச்சிலையாய்
என்னென்னவோ பரிமாணங்களில் உன்னை உவமையாய் குறியீடாய், காவியமாய் விரித்துக்கொண்டே போகிறாய் பெண்ணே….
ஏதோவொரு ஆகுதியில் உன்னை அர்ப்பணமாக்கியபடியே
வளையவருகிறாய்
உன் அன்பின் அகோரப் பசியைக் கண்டு அஞ்சியோடுபவர்களை
விரட்டிப்பிடிக்கவேண்டாம். விட்டுவிடு.
வழிபார்த்துக் காத்திரு நம்பிக்கையோடு.
உன் கண்களில் மின்னித் தெரியுமோர் ஊமைவலி
என்னுள் ஊடுருவிப் பாய்ந்து
காலத்தின் கையிலிருந்து என்னைக் கடத்திச்சென்றுவிடுகிறது.
குழந்தையும் கிழவியுமற்றதொரு அருவமாய்
தினந்தினம் கூடுவிட்டுக் கூடுபாய்கிறேன் உனக்குள்.
உன் நிர்மலம் அத்தனையும் மொத்தமாய் நடிப்பெனில்
ஆயிரம் ஆஸ்கார்களுக்கு அப்பாற்பட்டவள் நீ.
அருவ வெளியிலான அரியாசனத்தில் அமர்ந்தபடியே
நிரந்தர நாடோடியாய் அலைந்து அலைக்கழிந்துகொண்டிருக்கும் நீ
விதிவச வாழ்வின் freewill.
உன் அரசவையில் சட்டங்களியற்றிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறகுகளைப் பிய்த்தெறியக் காத்திருப்பவர்களை
சிரித்தபடி கடந்துசெல்.


கவிமூலம்

கவிமூலம்
ரிஷி)
(லதா ராமகிருஷ்ணன்










சொன்ன சொல் சொக்கத் தங்கமெனில்
சொல்லாதது வைரமெனச்
சான்றோர் மொழிய
இல்லை 
அது என்னிடம் இல்லாத
என் செல்ல நாய்க்குட்டி 
என்கிறான் சிறுவன்.

காலம்

காலம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



 நடக்கச் சொன்னால்
ஓடுகிறது,
ஓடச்சொன்னால்
பறக்கிறது,
பறக்கச் சொன்னால்
தவழ்கிறது,
தவழச்சொன்னால்
ஊர்கிறது,
நகரச் சொன்னால்
உறைகிறது,
பாயச்சொன்னால் 
பதுங்குகிறது,
ஓயச்சொன்னால் 
பொங்குகிறது;
திரும்பச் சொன்னால்
விறுவிறுவெனமுன்னேறுகிறது;
முன்செல்லச் சொன்னால்
பின்னேகித் தள்ளாடுகிறது….
எதுவும் சொல்லாதபோதும்
எல்லாவற்றையும் செய்கிறது 
எப்போதும்
அதன்போக்கில்.

காக்க காக்க கவிதை காக்க…..


Tamil Sangam Women Poets In Translation

Tamil Sangam Women Poets
In Translation

Translated by
Dr.K.S.SubramanianPrice : Rs.210Published by NCBH


தற்காலத் தமிழ்க் கவிதைகள் - சங்ககாலம் தொட்டு இன்றுவரைபாரதியார் கவிதைகள்ஜெயகாந்தனின் படைப்புகள்கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகள் என பல தமிழாக்கங்களைத் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் 42 சங்கப் பெண்கவிகளின் 180க்கும் மேற்பட்ட கவிதைகளை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தி ருக்கிறார்.
  சங்க இலக்கியங்களை முழுமையான தொகுப்புகளாக வெளியிட்டிருக் கும் என்.சி.பி.எச் நிறுவனம் இந்த நூலைப் பிரசுரித்துள்ளது. தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலம் வழியாக உலகெங்கிலும் பரவச் செய்யும் இத்தகைய பணிகள் போற்றத்தக்கவை; பேசப்படவேண்டியவை.



BACK WRAPPER BLURB
About 2000 years old, this must be one of the most ancient corpuses of Women Poetry in world literature, giving it an intrinsic importance.
A unique feature of Sangam Poetry is its organic linkage to Nature . The situations, similes, metaphors and leitmotifs are all intertwined with Nature, and are marked by sheer lyrical finesse and poetic allure.
Female sexuality, the passionate bond between the girl and her lover, the agony of separation, outpouring of suppressed ardour and a celebration of the female body have a strong presence in these poems. This has potential value in sociological and cultural-anthropological studies of ancient societies from a feminist perspective.
Dr.K.S.Subramanian

VENNPOODIYAAR
(*From the book Tamil Sangam Women Poets – Translated into English by Dr.K.S.Subramanian)
My friend dear!
Pallor has come to be
my body’s second nature.
My love the cure resides
in his heart loveless
in a distant somewhere.
Directs me my intellect
‘Go forth unto him’.
Stay but here
stresses my reserve.
Should he want to inquire
‘How indeed are you?’
apt is the time now
for my lover
the lord of seashore yonder
lush with thorny pandanus.
Kurunthokai, 219
Thinai: Neidal.
(The girl lamenting her malady of loneliness.)



இரங்கற்பா

இரங்கற்பா
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்
)

பின்பக்கத்தாளின் கீழ்க்கோடியில்
பொடி எழுத்துகள் அடுக்கப்பட்ட வரிகளில்
கருப்பு-வெள்ளையிலோ
கண்கவர் வண்ணத்திலோ,
அல்லது _இரண்டாம் பக்கத்தில்
சற்றே பெரிய அச்சிலான
இரு பத்திகளில்
இல்லைடோலக்கு ஆட ஆட
அதற்கேற்ப தலையும் கையும் அபிநயிக்க
மைக்கை நேராக உங்கள் குரல்வளைக்குள் இறக்கி
கருத்துரைக்கச்சொல்லும்
இருபது தேசியபிரதேசியபரதேசிய
முக்கியத் தொலைக்காட்சிச் சானல்களில்
சில சாவுகள் அடக்கம்செய்யப்பட்டுவிடுகின்றன_வெறும் செய்தியாக மட்டுமே.




.

MeenaGops Making!

MEENAGOPS MAKINGS!



 

MeenaGops Making!




நடந்த பாதையையோ, கடந்த காலத்தையோ திரும்பிப் பார்த்தவாறே.....

MeenaGops Making!


EASY TO SPEAK ENGLISH

EASY TO SPEAK ENGLISH


குழந்தைகளுக்கான  நூல். அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடு
புதுப்புனல் பதிப்பகத்தில் வாங்கலாம்