காலம்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நடக்கச்
சொன்னால்
ஓடுகிறது,
ஓடச்சொன்னால்
பறக்கிறது,
பறக்கச்
சொன்னால்
தவழ்கிறது,
தவழச்சொன்னால்
ஊர்கிறது,
நகரச்
சொன்னால்
உறைகிறது,
பாயச்சொன்னால்
பதுங்குகிறது,
ஓயச்சொன்னால்
பொங்குகிறது;
திரும்பச்
சொன்னால்
விறுவிறுவெனமுன்னேறுகிறது;
முன்செல்லச்
சொன்னால்
பின்னேகித்
தள்ளாடுகிறது….
எதுவும்
சொல்லாதபோதும்
எல்லாவற்றையும்
செய்கிறது
எப்போதும்
அதன்போக்கில்.
காக்க
காக்க
கவிதை
காக்க…..
No comments:
Post a Comment