கவிஞர் ’சதாரா’ மாலதியை நினைவுகூர்வோம்
(19.6.1950 – 27.3.2007)
_ latha ramakrishnan
(*திண்ணை இணைய இதழில் முன்பு எழுதிய அஞ்சலிக்கட்டுரை)
தொடர்ந்து திண்ணை இணைய இதழிலும் வேறு பல இதழ்களிலும் எழுதியவர். திருப்பாவை குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு உயர்பாவை என்ற தலைப்பில் சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
அவர் இறந்த பின் அவருடைய 20 கவிதைகளை ஆங்கி லத்தில் மொழிபெயர்த்து அவையும் மூலக்கவிதை களுமாக ஒரு சிறிய தொகுப்பு வெளியிட்டேன். அநாமிகா ஆல்ஃபபெட்டின் சிறிய துவக்கம் அந்த நூலில் தான் ஆரம்பமாயிற்று.
தணல்கொடிப் பூக்கள், மரமல்லிகைகள் என மூன்று நான்கு கவிதைத் தொகுப்புகள், அநாமதேயக் கரைகள் என்ற சிறுகதைத் தொகுதி, ஆண்டாள் திருப்பாவை குறித்த திறனாய்வுக் கட்டுரை கள் அடங்கிய உயர்பாவை என்ற நூல்(சந்தியா பதிப்பக வெளியீடு) என குறிப்பிடத் தக்க படைப்புகளைத் தந்திருக்கிறார்.
அவருடைய தாயாரும் எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வம் கொண்டவர். கோமதி என்ற பெயரில் எழுதிவந்த அவருடைய மூன்று சிறுகதைத்தொகுப்புகள் வெளியாகி யுள்ளன.
’சதாரா’ மாலதி’யின் கவிதை யொன்று கீழே:
காதலர்
..............................................
_’ சதாரா மாலதி’
காதலர் தினத்தில்
சந்திப்பர்
காதலரல்லாதவர்
திருமண தினங்கள்
போல்.
காதலர் சந்திப்பதில்லை
இருப்பர்.
சொட்டச் சொட்டத்
தீக்குளியில் அறுகும்போது
காதலர் இருப்பர்.
பரஸ்பர பரிசுக்கென்று
அவர்களுக்கு உலகங்கள்
வாய்ப்பதில்லை.
பரிசுகள் வாய்க்கும் நேரம்
உலகங்களில் அவர்களில்லை.
ஆம்
தெய்வங்களும் காதலர்தாம்
ஆவிகள் போல்.
(*மரமல்லிகைகள்’ தொகுப்பிலிருந்து)
No comments:
Post a Comment