மக்கள் நலவாழ்வுக்கான தேவையும் அளிப்பும்
2. சுத்தம் சுகாதாரம் பேணல்
_லதா ராமகிருஷ்ணன்
[26 மே, 2013 திண்ணை இதழில் வெளியானது]
ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF சார்பாய் சமீபத்தில்
வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையொன்றின்படி, சுத்தமான தண்ணீரைப் பருகாத, பயன்படுத்தாத காரணத்தால் உலகில் நாள்தோறும் 1800 சிறுகுழந் தைகள்
இறந்துவருவதாகவும், அதில் இந்தியாவில் மட்டும் 500 குழந்தைகள் நாள்தோறும் உயிரிழப்பதாகவும்
தெரியவருகிறது. இந்த இறப்புவிகிதத்தில் உலகிலேயே நம் நாட்டிற்கு முதலிடமோ
இரண்டாவது இடமோ கிடைத் திருக்கிறது. எத்தனை அவலமான உண்மை இது!
ஓரிரு வாரங்களுக்கு முன் எதேச்சையாக தந்தி
தொலைக்காட்சியில் காண நேர்ந்த நிகழ்ச்சியொன்றில் தூய்மையான குடிநீராக நாம் நம்ப
வைக்கப்பட்டி ருக்கும் ’கேன் வாட்டர்’ உண்மையில் சுத்தம் குறைவனதே என்றும், இந்த ‘மினரல் வாட்டர்’ விற்பனை செய்யும் நிறுவனங்களில் முறையான உரிமம் பெறாமல் நடத்தப்பட்டுவருபவை
ஏறத்தாழ 2000 அளவு இங்கே இருப்ப தாகவும், உரிமம் பெற்று நடத்தப்பட்டுவருபவைகளிலும் பல சரியானபடி சுத்திகரிக்கப் படாத
தண்ணீரையே தருகின்றன என்றும், வீடுகளில் விநியோ கிக்கப்படும் ‘ப்ளாஸ்டிக்’கினால் ஆன தண்ணீர்குடுவையை உண்மை யில் இரண்டு தடவைக்கு மேல் பயனபடுத்தலாகாது
என்றும், ஏனெனில், அவ்வாறு பயன் படுத்தினால் குடுவையின் ப்ளாஸ்டிக்
நீரில் சேர்ந்துவிடும் என்றும், ஆனால், சம்பந்தப்பட்ட
நிறுவனங்கள் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் குடுவைகளைப் பொறுத்தவரை மேற்படி மேற்படி
கவனம் செலுத்தப் படுகிறதா என்பது மிகவும் சந்தேகமே என்றும் ஆதாரபூர்வமான
தரவுகளுடன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு.தேசிகன் எடுத்துரைத்தது
இங்கே நினைவுகூரத் தக்கது.
மேலும், தண்ணீர் வழியாகப் பரவும் நோய்கள் இந்தியாவில் மிகவும் அதிகம் என்றும்
தெரியவந்திருக்கிறது. கைகளைக் கழுவும் பழக்கம் இல்லாமையும், கழிப்பறைகள் சுத்தமாக இல்லாமையும் மக்களின் உடல்நலனைப்
பலவகை யிலும் பாதித்துவருகின்றன என்றும் ஆய்வுபூர்வமான ஆய்வறிக்கை கள்
தெரிவிக்கின்றன. வீதியில் மலங்கழித்தல், சிறுநீர் கழித்தல் சுகாதாரக் கேட்டிற்கு முக்கியக்காரணமாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், வீடுகளிலும் சரி, வீதிகளிலும் சரி, பள்ளிக்கூடங்கள். வணிக வளா கங்கள், ரயில்நிலையங்கள், ஏன், மருத்துவமனைகளிலும்
கூட கழிப்பறை வசதி என்பது மிகவும் கடைசிபட்சமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்
பட்டிருக்கும் நிலையைத்தான் நம்மைச்சுற்றிப் பரவலாகக் காண முடிகிறது. இரண்டு
வருடங்களுக்கு முன்பு நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி
ப்ளைண்ட்’ உறுப்பினர்களோடு
சேர்ந்து தில்லியில் நடந்த ஒரு அகில இந்திய மாநாட்டிற்குச் சென்றபோதும்
திரும்பிவரும் போதும் ரயிலிலும் ரயில் நிலையங்களிலும் இந்த அவலநிலையை
சுத்தம்-சுகாதாரம் பேணல் குறித்த உச்சபட்ச அலட்சியத்தைக் கண்கூடாகக் காண நேர்ந்தது;அனுபவிக்க நேர்ந்தது. சமீபத்தில் ரயில் பயணத்தின்
போது கழிப்பறை சுத்தமாக இல்லாததால் பயணத்தில் அனுபவிக்கவேண்டியிருந்த நரகவேதனையை ஒரு
வாசகர் டெக்கான் க்ரானிக்கிள் செய்தித்தாளில் பதிவு செய்திருந்தார்.
பதிவுசெய்வதும் புகார்செய்வதும் ஒருசிலரே. பெரும்பாலோர் தினசரி வாழ்வின் நெரிசலில்
இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவதுதான் நடக்கிறது.
வீதிகளில் எங்காவது அங்கொன்றும், இங்கொன்றுமாக அமைந்திருக்கும் ‘இலவசக் கழிப்பறை’களில் உள்ளே நுழையமுடியாத அளவு துர்வாடையும்
அசுத்தங்களும் நிரம்பியிருக்கும். சிறுபிள்ளைகள் மட்டுமல்லாமல் வளர்ந்த ஆண்களும்
சாலையோரம் சர்வசாதாரணமாக சிறுநீர் கழித்துக்கொண்டிருப் பார்கள். பெண்களுக்குத்தான்
திண்டாட்டம். ‘கட்டணக் கழிப்பறைகள்’ அமைப் பது நியாயமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அப்படி அமைக்கப்பட்டிருப் பவையும் போதுமான அளவு
சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின் றனவா என்ற கேள்வியும் தேவையாகிறது. இந்தத்
தருணத்தில் சென்னை திருவல் லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் தொண்டுநிறுவனம்
ஒன்றால் பராமரிக் கப்பட்டுவரும் ‘இலவசக் கழிப்பறை வசதி’ எத்தனை அருமையாக, தூய்மையாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது என்பதையும்
நினைத்துப்பார்க்கா மல் இருக்க முடியவில்லை.
மக்கள் நல அரசுகள் ஆர்வமுள்ள தொண்டுநிறுவனங்களின்
பணியையும், பங்கேற்பையும்
பயன்படுத்திக் கொண்டு பல நோய்களின் பிடியிலிருந்து மக்களைக் காக்க வல்ல ‘சுகாதாரமான தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்குக்
கிடைக்கச் செய்யும் முயற்சிகளை முழு முனைப்பாக மேற் கொள்ள வேண்டியது இன்றைய
இன்றியமையாத் தேவை.
No comments:
Post a Comment