LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, October 15, 2022

குழந்தைகள் நம் அடிமைகளோ உடமைகளோ அல்ல

குழந்தைகள் நம் அடிமைகளோ உடமைகளோ அல்ல

 தன் மகளை முந்திக்கொண்டு அதிக மதிப்பெண் எடுக்கிறானே, வகுப்பில் முதல் ராங்க் வாங்குகிறானே என்ற வெறுப்பிலும் கோபத்திலுமாய் எட்டாம் வகுப்பு மாண வனை அதே வகுப்பு மாணவியின் தாய் குளிர்பானத்தில் ஏதோ கலந்து பள்ளிக் காவ லாளியின் கையில் கொடுத்து அந்த மாணவனின் பெற்றோர் தந்ததாகச் சொல்லி குடிக்க வைத்ததன் விளைவாக அந்த மாண வர் இறந்துவிட்டார்.

அப்படியென்றால் அந்தத் தாய் தன் மகளை எந்த அளவு படிக்கச் சொல்லி அழுத்தம் தந்திருப்பார். முதல் ராங்க் வரவில்லையே என்று சாடி அவமானப்படுத்தியிருப்பார் என்று நிகழ்ச்சியாளர் கேட்கும் கேள்வி முக்கியமானது.
இதேபோல்தான் வளரிளம்பருவத்தினருக்கு இயல்பாக வரும் எதிர்பாலின ஈர்ப்பைப் பெற்றோர்களும் சமூகமும் சரியான முறையில் கையாள்வதில்லை என்பதே பல வளரிளம்பருவத்தின ரின் தற்கொலைக்குக் காரணமாகிறது என்பதை மனநல மருத்து வர் ஷாலினி அவர்கள் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாய் பேசியி ருக்கும் ஒரு காணொளியில் முன்வைத்திருப் பார்.
குழந்தைகள் மீது அன்பு என்ற பெயரில் பெற்றோர்கள் அவர்களை உடல்ரீதியாய், மனரீதியாய் துன்புறுத்து வதை அன்பு, அக்கறை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
குழந்தைகள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் அவர்களைப் பற்றி அரசியல் கட்சிகள் அவதானிப்ப தில்லையென்றே தோன்று கிறது. ஆனால் குழந்தைகளின் உரிமைகள், அவர்களை நடத்தும் விதம் குறித்தெல்லாம் பெரியவர்களுக்கு - பெற்றோர்கள், ஆசிரி யர்கள், சமூகத் தின் அங்கத்தினரிகள் ஆகிய அனைத்துத் தரப்பின ருக்கும் sensitization, awareness programmes, அதற்கான முன்னெடுப் புகள் மிக மிக அவசி யம்.
இந்த மாதிரி ஒரு தற்கொலை அல்லது கொலை நடந் தால்தான் குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் பற்றி யெல்லாம் கவனம் செலுத்துவோம் என்றில்லாமல் அரசு கள் குழந்தைகள் நலன் குறித்த தொடர்ச்சியான கவனத்தையும் செயல்பாடுகளையும் கொண்டு இயங்க வேண்டியது இன்றியமையாதது.

கவிஞர் வைதீஸ்வரன் குறித்த ஆவணப்படம் - குவிகம் வெளியீடு

 //சமகாலத் தமிழ்க்கவிதையின் மூத்த கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம் குறித்த ஆவணப்படம் குவிகம் இலக்கிய அமைப்பின் மூலம் நிழல் திருநாவுக்கரசு இயக்கத்தில் உருவாகியுள்ளது. அது சென்னையில் 22.9.2022 அன்று திரையிடப்பட்டது.



செப்டெம்பர் 30 - இன்று உலக மொழிபெயர்ப்பு நாள்!

செப்டெம்பர் 30 - இன்று உலக மொழிபெயர்ப்பு நாள்!

இலக்கியத்திலும் இவ்வாழ்வின் பல்வேறு துறைகளிலும் கட்டங் களிலும் மொழிபெயர்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது.
பறவையின் மொழியை, குழந்தையின் மொழியை நாம் அறிந்த மொழியில் கடத்த முற்படும், பொருள் பெயர்க்க எத்தனிக்கும் பிரயத்தனம் நம்முடைய வாழ்வின் தீராத வலியும் நிவாரணமு மாக.......
மூலப் படைப்பு இல்லையெனில் மொழிபெயர்ப்பாளர் இல்லை. எனவே என்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்து தங்கள் படைப்பு களை மொழிபெயர்க்க எனக்கு அனுமதி யளித்திருக்கும் நட்பின ருக்கு என் என்றுமான நன்றிகள்!

















வயதின் வயது (நிழற்படம்) ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

வயதின் வயது (நிழற்படம்)

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பிட்ட என் தொகுப்பில் நிழற்படம் என்ற தலைப்பில் வெளியான கவிதை இது. இதற்கு வயதின் வயது என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.

//Dedicated to AGELESS Padmini (Gopalan) Madam(91 years) and to my Mother Bhagyalakshmi (87 years) - இருவருமே பின்னோக்கிப் பார்த்துப் புலம்பாதவர்கள். சுயமாய் சிந்திப் பவர்கள்; தன்மதிப்புடையவர் கள்; முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்யத் தயங்காத வர்கள் //

வயதின் வயது (நிழற்படம்)

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின்
கழுத்து முறிய திரும்பிப் பார்த்தால்....
தெரிவது இடிந்த சுவரில் காணும்
நிழலின் நிழலின் நிழலின் நிழலின்
நகலின் நகலின் நகலின் நகலின் நகலின்
முனை மழுங்கிய பாதி கிழிந்த மஞ்சளோடிய புழுதியப்பிய
அழுக்குப் பிரதியின்
பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின்
மறதியாய் ஒன்று....
ஒரு கணம் உறைந்து நின்றதொரு
தருநிழலின் கீழ் சிறு இளைப்பாறலா...?
அணுமேலமர்ந்தொரு பின்னோக்கிய ஒளிப்பயணமா?
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசம் இருள்தானா?
இக்கணமென்பதொன்றா எண்ணிறந்ததா....?
இகம் பரம் எல்லாம் வெறும் கண்கணக்குதானா?
நகமும் சதையும் உணர்த்துவதைச் சொல்ல
நாலாயிரம் வரிகள் போதுமா?
ஆலுமா டோலுமா ஐஸாலக்கடி மாலுமா
அர்த்தமனர்த்தமெல்லாம் இருவேறுபோலுமா?
இன்னமுள காதங்கள்.....
முன்னேகவேண்டும்....
திரும்பவும் நடக்கத் தொடங்கியபோது
இருகால்களில் பெருகும் வலி
இருப்பின் அருமையாய்......

ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி - லதா ராமகிருஷ்ணன்

 ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி

//*செப்டெம்பர் 10 அன்று சென்னையில் நடந்தேறிய கவிஞர் ஆசு சுப்பிரமணி யனின் முழுக்கவிதைத் தொகுப்பு அறிமுக விழாவில் ஆற்றிய உரையிலிருந்து//


 

சக கவிஞரான திருமிகு ஆசுவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.. அவருடைய கவிதைகளின் முழுமையான தொகுப்பை இத்தனை நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் கல்விளக்கு பதிப்பகத்திற்கும் இந்த மிக அவசியமான முன்முயற்சியை மேற்கொண்ட கவிஞரும் கல்விளக்கு பதிப்பக உரிமையாளருமான தோழர் அமுல்ராஜுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சமீபத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் நான், ‘வழக்கமாக சமகாலத் தமிழ்க்கவிஞர்களாக முன்வைக்கப்படும் பெயர்ப்பட்டியல்களில் ஆசு சுப்பிரமணியன், விஜேந்திரா முதலிஅ பல பெயர்கள் இடம்பெறுவதேயில்லை’ என்று குறிப்பிட்டேன்.

“எழுத்தாளர்கள், வாசிப்பாளர்கள், விருது அமைப்புகள் ஆகியவற் றுக் கிடையே இன்றைக்கு ஊடாடும் அரசியல் மிகவும் அபத்தமானது. மண்ணுக் குள் நுழைந்து ஒரு செடியின் வேர்பிடித்து ஆராய்வதைப்போல ஓர் எழுத் தாளனை, அவனது எழுத்தை இந்த அரசியல் ஆழத்தேடி ஆராய்ந்து புறக் கணிக்கிறது  அல்லது ஒரு வார்த்தை பேசாமல் மௌன மாகக் கடந்து போகி றது”, என்று பதிப்புரையில் நடப்புநிலவரம் ரத்தினச்சுருக்கமாகப் பேசப்பட்டி ருப்பது குறிப்பிடத் தக்கது.  இத்தகைய அரசியல் அல்லது அலட்சியத்தையெல்லாம் கடந்துதான் ஆசு போன்ற பல முழுநிறை கவிஞர்கள் கவிதையின்பால் கொண்ட தீராக் காதலினாலும், பேரரும் பற்றினாலும் உலகாயுத வாழ்வின் நெருக்கடிகளையெல்லாம் மீறி, அவற்றிற்கான வலிநிவாரணமாகவும் கொண்டு, கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

 

POETRY IS AN END IN ITSELF என்பார்கள். கவிதை என்பதை நாட்குறிப்பு – டயரி – அல்லது MEMOIRS என்று கூறலாமா? ஒருவகையில் அப்படிக் கூறமுடியும் என்றாலும் கவிதை நாட் குறிப்பிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்டது. கவிதை ஒரு தனிநபரால் எழுதப்படுவ தென்றாலும் தனிமனித உணர்வுகளின் தாக்கத்தில் எழுதப்படுகிறதென்றாலும் அது ஒரே சமயத்தில் பலருக்கானதாகிவிடுகிறது. பொதுக்குரலாகவும் மாறிவிடுகிறது.

 

சாதாரணங்களில் அசாதாரணங்களைக் காண்பதுதான் கவிமனம். ஒருவகையில் சாதாரணம் – அசாதாரணம் எல்லாம் highly relative terms. நபருக்கு நபர், நேரத்திற்கு நேரம் மாறக்கூடி யவை. மழலைச் சிரிப்பு சாதாரணமா? அசாதாரணமா? ரயில் சாதாரணமா? அசாதாரணமா? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அவதானிப்புகளுக்கான பல வரிகளை தோழர் ஆசுவின் கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்ட முடியும்.

வாழ்வைப்போல் கவிதையும் ஆயிரங்காலத்துப் பயிர்” என்று கவிஞர் ஆசு தன்னுடைய இந்த முழுத்தொகுப்பின் என்னுரையில் குறிப்பிடுகிறார். ‘கவிதை என்பது என் நம்பிக்கையின் கைவிளக்கு’ என்று அவர் தனது ‘என்னுரை’ பகுதிக்குத் தந்திருக்கும் தலைப்பே ஒற்றைவரிக் கவிதை. வாழ்வைப்போல் கவிதையும் ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று அவர் கூறும்போது நிஜ வாழ்வின் 60, 70, 80, 90 வயதின் இருப்பும், அதைத் தாண்டிய நம் வாழ்வின் முன், பின் தொடர்ச்சியும், கவியின் அநாதிகாலமும், அமரத்துவமும் – என பலப்பல நமக்கு உணர்த்தப்படுகிறது.

”என் கவிதையின் நிலை என்ன? நோக்கம் என்ன? என்பதெல்லாம் இந்த எட்டுத்து தொகுப்பு களின் கவிதைகள் முழுத்தொகுப்பாகத் தொகுக்கும்போது என் வாழ்வு இவ்வாறாகத்தான் இருந்தது என்றெல்லாம் சொன்னாலும் இது எல்லோருக்குமான வாழ்வு என்று என் கவிதைகள் சாட்சியமானாலும், இக்கவிதைகள் புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக உறுதியுடன் சொல்ல முடியும்”,

_ என்று அறிவிக்கும் கவிஞரின் கூற்றை மெய்ப்பிக்கும் கவிதைகள் பல இந்த முழுத்தொகுப்பில் உள்ளன. உதாரணம்: மண்புழுவின் வலி (பக்கம் 682)

நான் எழுதுவது வாழ்வைப் பார்த்து அல்ல. வாழ்வின் அனுபவங்கள் கொதித்து எழுகையில் துளித்துளியாகத் தெறிக்கும் அந்த கணநேரத் துடிப்பு. இந்தத் துடிப்புகள் காலத்தின் வெளியைத் தமதாக்கிக்கொண்டு நகர்கின்றன. என் கவிதைகளின் அம்சம் அல்லது சாரம் மானுடத்தின் மீதான நம்பிக்கை”,

என்கிறார் கவிஞர்.

‘ஒரு வாளி நீர்’ என்ற தலைப்பிட்ட கவிதையில் கவிமனக் கனிவு கனவுமயமாய் அத்தனை அழகாய் வெளிப்படுகிறது (பக்கம் 683)

வீட்டுப் பூந்தொட்டிச் செடியில்

பூக்களின் காம்புகளில்

ரொட்டித்துண்டுகள்

காய்த்திருக்கின்றன

 

உள்ளடக்கம்போல் நடையும், Style ம் கவிதைக்கு முக்கியம் என்பதை உணர்ந்தவராய் தோழர் ஆசு கவிதைகளைப் படைத்திருக்கிறார்.

கடலாய் விரிந்த வாழ்க்கை

உள்ளங்கை குவித்து அள்ளினேன்

விரல் இடுக்கில் வழிந்த வானவில்

கண்ணீராய் சுருங்க

 

 _ என்று விரிகிறது ஒரு கவிதை.

‘ அம்மா

என் கவிதைக்கேனும்

வாய்க்கக்கூடுமோ

உனக்கான ஒரு புன்னகை

 

என்று முடியும் அம்மாவுக்கான ஒரு புன்னகை’ என்ற கவிதை எத்தனை கவித்துவமானது! அன்பு மயமானது!\

இரண்டு பறவைகள் என்று தலைப்பிடப்பட்ட கவிதை பின்வருமாறு: (பக்கம் 529)

இரண்டு பறவைகள்

 

எனது சொற்களில்

இரண்டு பறவைகள் பறந்தன

 

காற்றைப்போல் ஒன்றிருந்தது

நீரைப்போல் ஒன்றிருந்தது.

 

காற்றைப்போல் இருந்த பறவை

நீரைப் பருகியது

 

நீரைப்போலிருந்த பறவை

காற்றை சுவாசித்தது

 

இடையில் வாழ்க்கைப் பறவை

என்னிடம் காதல் கொண்டது

 

பறத்தல் – கனவு; நீர் – நிலத்தில் வேரூன்றியும் வேரூன்றாமலுமாய் நிற்கும் வாழ்வு என்று கொள்ளலாமா? காற்றும் நீரும் உயிர்மூச்சுக்கு எத்தனை அவசியம்! கவிதைக்கும்தானே!

சமன்பாடுகள் என்ற தலைப்பிடப்பட்ட கவிதை பின்வருமாறு (பக்கம் 95)

சமன்பாடுகள்

அவர் கைகளில் சாமரமுண்டு

என் கைகளில்

பிச்சைப் பாத்திரமுண்டு

 

அவர் கைகளில்

இனிப்பும்

என் கைகளில்

விலங்குகளும்

 

அவர் கைகளில்

மண்டையோடும்

என் கைகளில் தவழும்

குழந்தையும்

அதன் மழலைப் புன்னகையும்

 

எனினும்

கைகுலுக்கிக்கொள்கொறோம்

அவர் உள்ளங்கையின்

இரத்தக்கறை

காயாத மணத்துடனே

 

 

எத்தனையோ அர்த்த அடுக்குகளை இழைபிரிக்க முடியும் கவிதை இது. மண்டையோடுடைய கைகளைக் கொண்டிருப்பவரின் அதே கைகளில் இனிப்பும். இரண்டும் இருவேறு தருணங்கள் எனக்கொள்ளலாமா? அல்லது இனிப்பில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளலாமா? சமயங்களில் ‘தீயவர்’ என்பது தெரிந்தே சினேகம் தொடர்கிறதா? தொடரவேண்டிய நிலையா கவிதையில் இடம்பெறும் இருவரும் இருவரா? ஒருவரா? அல்லது பலரா?

 

கைத்தட்டல்களை எதிர்பார்த்து எழுதப்பட்டவையல்ல இவருடைய கவிதைகள். மனதின் ஆழத்திலிருந்து எழுந்தவை என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் காணமுடியும்.

தன் கவிதைப்போக்கை தோழர் ஆசு வெவ்வேறு வடிவங்களில் கட்டமைத்துப் பார்க்கிறார். 1997ம் ஆண்டில் வெளியான அவருடைய முதல் கவிதைத்தொகுப்பான ஆறாவது பூதம் தொகுப்பில் புலரியின் குரல் என்ற கவிதையில் கவிஞர் பிரம்மராஜனின் பாணி புலப்படுகிறது. ஆனால் அது ‘நகலெடுப்பாக’ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது:

கடிகாரத்தின் முகமொத்த

என் முகம் வரைந்தேன்

பதற்றங்களை

வாழ்வின் எண்களாய் நகர்த்தி

என்னைத் தோற்கடித்தது அது

எனினும்

அசையும் நினைவு ஓவியமாய்

உயிர்ப்புறு கிறது என் முகம்

 

எந்தவொரு கவிஞரின் கவிதைவெளியும் சில அடிச்சரடுகளை, அடிநாதங்களை உணரமுடியும். தோழர் ஆசுவின் கவிதைகளில் காலம் அத்தகைய அடிச்சரடுகளில் ஒன்றாகப் பிடிபடுகிறது. காலம் இவர் கவிதைகளில் வெவ்வேறு குரல்களாய், கதாபாத்திரங்களாய், தாக்கங்களாய், பாதிப்புகளாய் இடம்பெறுகிறது:

கண்ணாடியுள் காலம்

அதன் சிதறிய சில்லுகளில்

கீற்றின்

ஒளி பாய்ச்சும்

என் நரம்பின் விறைப்பு அறுந்து ‘

என்ற விதமாய் பல சொற்றொடர்களை இந்தத் தொகுப்பில் காண முடிகிறது.

 

இந்த முழுத்தொகுப்பின் முத்தாய்ப்பாய் இடம்பெற்றிருக்கும் கவிதை – கரையொன்றும் எதிரியில்லை’ – வாழ்வு குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை முன்வைக்கிறது என்றால் மிகையில்லை

இதுவரை  இவருடைய எட்டு கவிதை நூல்கள், நான்கு சிறுகதை நூல்கள், 209 – கவிஞர்களின் கவிதைகளின் கவிச்சித்திரம் இரண்டு நூல்கள், உரைச் சித்திர நூல் ஒன்று என 15-நூல்கள் வெளியாகியுள்ளன. இவை இன்னும் கூட வேண்டும் அதற்கான சூழல், பெருங்கனவு வெளியாக ஆக வேண்டும் என்பதே என் அவா என்று ஆர்வமும் நம்பிக்கையுமாகக் கூறும் கவிஞர் ஆசுவின் இயற்பெயர் ஆ .சுப்பிரமணியன்.  5-10-1961இல் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தைச் சேர்ந்த முன்னூர் என்ற இடத்தில் பிறந்தவர் தற்சமயம் சென்னையிலுள்ள அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்துவருகிறார். கடைசல் இயந்திரப் பணியாளராகப் பணியாற்றிவரும் இவர் வேலை, குடும்பம் ஆகிய பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்ற அயராது பாடுபட்டுவருகிறார். அவற்றி னூடாய் முப்பது வருடங்களுக்கும் மேலாக அவருடைய காத்திரமான இலக்கியப் பங்களிப்பும் தொடர்கிறது. இவருக்கு

 

கவிஞர் ஆசு – விவரக்குறிப்புகள்

 

பிறந்த ஊர்: முன்னூர்

                        திண்டிவனம் வட்டம்,

                        விழுப்புரம் மாவட்டம்.

 

தற்போது வசிக்கும் ஊர் :

 

                சென்னை, அம்பத்தூர், ஒரகடம்.

 

குடும்பம் :

 

சு.மஞ்சுளா என்கிற    மனைவியும், சு.சித்தார்த்தன், சு.தமிழ்ச்செல்வன் என்கிற மகன்கள்.

சு.பிரியா மகள், மூத்த மகனுக்கு திருமணமாகி, ஹேமலதா என்கிற மருமகளும் பேரன் குகனும் உள்ளனர்.

 

கல்வி : S. S. L.C,….iTi…

 

தொழில் : கடைசல் இயந்திரப் பணியாளர்.

 

எழுதிய நூல்கள்

………………………..

கவிதைகள்

 

  1. ஆறாவது பூதம்
  2. என்றொரு மெளனம்
  3. ஈரவாடை
  4. குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன்
  5. நேசித்தவனின் வாழ்வுரை
  6. தீண்டும் காதலின் சொற்கள்
  7. நிலம் பருகும் மழை

 

சிறுகதை நூல்கள்

……………………………..

 

  1. அம்மாக்கள் வாழ்ந்த தெரு
  2. நாட் குறிப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
  3. கடந்து போகிறவர்களின் திசைகள்
  4. செல்லி

 

கவிச்சித்திர நூல்கள்

………………………………..

 

  1. திறந்திருக்கும் சன்னலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நதி.

(102 – கவிஞர்களின் கவிதைகளின் உரைச் சித்திரம்)

  1. ஆகாயத்தை அளந்த பறவைகளின் தடங்கள்

(107-கவிஞர்களின் கவிதைகளின் உரைச் சித்திரம்)

 

வெளிவர இருக்கும் நூல்

………. …………………. .. ……..

  1. மயிலிறகு வாசிக்கும் புத்தகம்

(உரைச்சித்திரம்)

 

கைப்பிரதியாக உள்ள நூல்கள்

ஒரு சிறுகதை தொகுப்பு ஒரு கவிதை நூல்.

 

பெற்ற விருதுகள்

 

  1. இலக்கிய வீதி இனியவனின் அன்னம் விருது
  2. கவிக்கோ துரை.வசந்தராசன் அவர்களின் பண்ணை தமிழ்ச்சங்க விருது.
  3. கவிஞர் செஞ்சி தமிழினியனின் விதைநெல் விருது .
  •