LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, October 6, 2019

மைலி – சிறுவர் கதைகள் - TALES FOR CHILDREN – MYLEE SERIES

மைலி – சிறுவர் கதைகள் -
TALES FOR CHILDREN – MYLEE SERIES












நட்பினருக்கு வணக்கம். புதுப்புனல் பதிப்பகம் சார்பில் நான் ருக்லதா என்ற பெயரில் எழுதி வெளியான மைலி என்ற கடற்குதிரையின் சாகசங்களை, நல்ல செயல்களை எடுத்துரைக்கும் கதைகள் இப்போது ஆங்கிலத்தில்!


என்னுடைய எளிய பதிப்பக முயற்சியான ANAAMIKAA ALPHABETS வெளியீடாக!
1.Balloon! Balloon!!
2. Demon on the Mountain!
3.Pebble fallen into the Pond!
4.Building constructed in the air!
5.Ten Hands for Babu!
6.Eight feet tall Butterfly!
7.It is not raining there!
8.Mylee’s Magical Tail!
9. Blue Tomato!
10.Orange in Appu’s mouth!
11.Have you seen Green Jasmine?
12.Let’s save the Little Rabbit!
13. Ringa Ringa Lotus..!
விற்பனை உரிமை – புதுப்புனல் பதிப்பகத்திற்கு.
13 புத்தகங்கள் – வண்ணப்படங்களோடு. அடுத்த வாரம் கிடைத்துவிடும்! ஒரு புத்தகம் 100 ரூபாய். 13 நூல்களுக்கு முன்பதிவு செய்தால் விலை ரூ1000. முன்பதிவு செய்துகொள்ள புதுப்புனல் பதிப்பகத்தை அணுகவும்.

புதுப்புனல் வற்றிவிடாது காப்போம்




புதுப்புனல் வற்றிவிடாது காப்போம்

புதுப்புனல் பதிப்பக ரவிச்சந்திரன் – சாந்தி தம்பதியர் தங்கள் பதிப்பகத்தையும் புதுப்புனல் மாத இதழை யும் எத்தனையோ இன்னல்களுக்கிடையில் தொடர்ந்து நடத்திக்கொண்டுவருகிறார்கள்.

இதற்கு முன்பு தன் நண்பர் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷு டன் பன்முகம் என்ற நவீன தமிழ் இலக்கிய இதழை நடத்தி பல நல்ல படைப்புகள், திறனாய்வுகள் வெளியாக வழிசெய்தார் ரவிச்சந்திரன்.

அவரைத் திருமணம் செய்த போது தோழி சாந்திக்கு( திருமதி சாந்தி ரவிச்சந்திரன்) பதிப்பகம், நூல் வெளி யீடு என்பதெல்லாம் புதிது. ஆனால், அவற்றில் ஆர்வம் காட்டி தன் கணவரோடு புதுப்புனல் பதிப்பக வெளி யீட்டு முயற்சிகளிலும், புதுப்புனல் இதழ் வெளியீட்டி லும் முனைப்பாக அயராது உழைத்துவருகிறார் அவர்.

எந்தவொரு அரசியல்கட்சியின் ஆதரவும் இன்றி, ஏதொரு புரவலரும் இன்றி, பதிப்பகத்தை இயக்குவதற்கான வைப்புநிதி, சேமிப்பு என்று எதுவுமின்றி இலக்கிய இதழை, பதிப்பகத்தை நடத்துவது என்பது பெரிய போராட்டம் இன்று. பெரிய பொருளாதார நெருக்கடியிலுள்ள புதுப்புனல் பதிப்பகம் இந்த இக்கட்டான சூழலிலிருந்து மீள தமது வெளியீடுகளை 50% அல்லது அதற்கும் மேலான தள்ளுபடி விலையில் விற்க முன்வந்திருக்கிறது.

நல்ல பல புத்தகங்களை – புனைவு, புனைவல்லாதது – கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வெளியிட்டி ருக்கிறது. தள்ளுபடி விலையில் அவர்களுடைய வெளியீடுகளை வாங்கி நூலகங்களுக்கு நன்கொடை யாகத் தரலாம். நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தர லாம். நாமே வாங்கிப் படிக்கலாம்.

நிதியுதவி செய்ய முடிந்தவர்கள் அதைச் செய்யலாம்.

மனமிருந்தால் வழியுண்டு.

QUOTABLE QUOTE


INSIGHT - A BILINGUAL BLOG FOR TAMIL POETRY

INSIGHT - A BILINGUAL BLOG FOR TAMIL POETRY
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவைத்திருக்கும் கவிதைகள் நிறைய உள்ளன. அவற்றை அவ்வப்போது பதிவேற்றுவதற்கென ஓர் எளிய முயற்சியாய் ஒரு வலைப்பூ தொடங்கியுள்ளேன். 

15 நாட்களுக்கு ஒரு முறையேனும் சில மொழிபெயர்ப்புகளைப் பதிவேற்ற எண்ணம். பார்க்கலாம்.

கவிஞர்கள் ரியாஸ் குரானா, ராகவப்ரியன் தேஜஸ்வி, அய்யப்ப மாதவன், கோ.கண்ணன், கோசின்ரா,யூமா வாசுகி ஆகியோருடைய கவிதை களை (ஆளுக்கு ஒன்றுபோல் - சிலருடையது ஒன்றுக்கு மேல் இருக்கும். சிலருடையதில் தமிழ் மூலம் தரப்பட்டிருக்கும். சிலவற்றில் இருக்காது. சில கவிஞர்களைப் பற்றி சிறு குறிப்பு தரப்பட்டி ருக்கும். சிலருக்குத் தரப்பட்டிருக்காது. இவையெல் லாம் சீராக்கப்படவேண்டும்.) 

ஆங்கில மொழிபெயர்ப்பில் பதிவேற்றியுள்ளேன்.
சில மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றியும் அறிமுகக் குறிப்புகள் தந்துள்ளேன்.

நட்பினருடைய படைப்பாக்கங்களை, குறிப்பாக ஏற்கெனவே நான் மொழிபெயர்த்திருக்கும் கவிதை களை ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட எண்ணம். அப்படி நான் வெளியிட்டு அது வேண்டா மென்றால் தயங்காமல் தெரியப்படுத்தவும்.

blogspot id: www.2019insight.blogspot.com. முடிந்தால் போய்ப் பாருங்கள். 

Saturday, September 21, 2019

பார்வைக்குறைபாடுடைய வாசகர்களும் பதிப்பகங்களும்

பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் 
ணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்
_ லதா ராமகிருஷ்ணன்
(Treasurer _ Welfare Foundation of the Blind)

(*திண்ணை இணைய இதழில் இவ்வாரம் dated 15, September வெளியாகியுள்ள எனது சிறு கட்டுரை)

 பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு  ஒன்று முக்கியமானது. (அவருடைய இயற் பெயர்பொன்.சக்திவேல்)  அதில் நிறைய   பேருக்குத் தெரியாதஎனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்அதிலிருந்து சில பத்திகள்   கீழே தரப்பட்டுள்ளன:



தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்அவர்களின் வாசிப்பிற்கு அமேசான் கிண்டில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது எனச்   சொல்லலாம்அச்சு புத்தகங்களை வாசிக்க இயலாத பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து எந்த எழுத்தாளரும் அச்சகமும் எவ்வித 
கவலையும் படவில்லைஇன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் , அவர்கள் எங்களை கணக்கி லேயே எடுத்துக் கொள்ளவில்லை.



பார்வையற்றவன்என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அதிலிருந்து சில பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன:
தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களின் வாசிப்பிற்கு அமேசான் கிண்டில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது என சொல்லலாம். அச்சு புத்தகங்களை வாசிக்க இயலாத பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து எந்த எழுத்தாளரும் அச்சகமும் எவ்வித கவலையும் படவில்லை. இன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் , அவர்கள் எங்களை கணக்கி லேயே எடுத்துக் கொள்ளவில்லை.
அமேசானில் வெளிவரும் மின்புத்தகங்களை பார்வை மாற்றுத் திறனாளிகளும் படிக்கமுடியும். சில ஆயிரம் பார்வை மாற்றுத்திறனாளிகளாவது அமேசான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு சமூகத்தின் வாசிப்பு கதவை திறந்துவிட்டது என்ற வகையில் நான் அமேசானைக் கொண்டாடுவேன். அது பங்கேற்பாளர்களை படைப்பாளர்களாக மாற்ற களம் அமைத்துத் தருகிறது.
அமேசானில் எழுதப்படுபவை எல்லாம் இலக்கியமா என்ற விவாதம் தேவையற்றது. ஆனால் அமேசானில் இலக்கியமும் எழுத எவ்வித தடையுமில்லை.”
பார்வை மாற்றுத்திறனாளிகளும் படிக்கும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்என்று தொடர்ந்து வலியுறுத்திவருபவர் தோழர்பார்வையற்றவன்’. தான் மாற்றுத்திறனாளி என்பதில் தனக்கு எந்த தலைக்குனிவுமில்லை என்பதை அடிக்கோடிட்டுக் கூறும் விதத்திலேயே இந்தப் புனைப்பெயரைச் சூட்டிக்கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது. அவருடையடைம் லைனில் அவர் பதிவேற்றியிருக்கும் ஒரு காணொளி அவருடைய பாடும் திறமையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. அவரைப் பற்றிய சிறு குறிப்பு அவருடைய ப்ரொஃபைலிலிருந்து இங்கே தரப்பட்டுள்ளது.
இணையாசிரியர் at விரல்மொழியர் மின்னிதழ்
• Topper at Student
• Studied 12-th std at IAB Madurai
• Studies
முனைவர் பட்ட ஆய்வாளர் _ P.H.D. TAMIL at The Gandhigram Rural Institute - Deemed University
• Studied
ஆய்வியல் நிறைஞர் _ TAMIL M.PHIL at The Gandhigram Rural Institute - Deemed University
• Studied Tamil M.A. at H.H.The Rajah's College, Pudukkottai
• Studied B.L. at Madurai Law College
• Studied at Governme
nt College of Education, Pudukkottai
• Studied at American College, Madurai
• Went to
புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசு துவக்கப்பள்ளி
• Went to Indian Association for the Blind - IAB
முன்பெல்லாம் பார்வைக்குறைபாடுடையவர்கள் ப்ரெய்ல் எழுத்துமுறையில் எழுதப் பட்டு பிரசுரிக்கப்படும் புத்தகங்களை மட்டுமே படிக்க முடியும். பெரும்பாலும் பாடப்புத்தகங்கள் மட்டுமே அப்படி உருவாக்கப்படும்.
ஆனால் இப்போது Voice Synthesizer என்பதைப் பயன்படுத்தி அவர்களால் கணினியைத் தனியாக இயக்கி வாசிக்க, விஷயங்களைப் பகிர முடிகிறது. ஆனால், பார்வைக்குறைபாடுடைய எல்லோராலும் கணினியை வாங்கவியலாத நிலை. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்க வழியுண்டு.
இதை நான் சார்ந்திருக்கும் பார்வையற்றோர் நன் நல அமைப்பான WELFARE FOUNDATION OF THE BLIND கவனத்தில் கொண்டு, படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பார்வைக்குறைபாடுடைய வர்களுக்கு முடிந்தவரை மடிக்கணினி கிடைக்கச் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியில் மற்றவர்களும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வப்போது சில பதிப்பகங்கள் பார்வையற்றவர்களுக்கு வாசிக்க ஏற்றதாக நூல்கள் வெளியிட்டுள்ளன.



கிழக்கு பதிப்பகம் தரமான படைப்புகளை Talking Books களாக Audio Cassetteகளாக வெளியிட்டுள்ளது.
பாரதி புத்தகாலயம் ஓரிரு படைப்புகளை ப்ரெய்ல் எழுத்தில் வெளியிட்டுள்ளது.
வேறு சில பதிப்பகங்கள் பார்வையற்றோரின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் விதத்திலும், ஊக்கப்படுத்தும் விதத்திலும் பார்வையற்ற படைப்பாளிகள் சிலர் எழுதிய படைப்புகளை வெளியிட்டுள்ளன.
சந்தியா பதிப்பகம் எங்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜெயராமனும் நானும் இணைந்து மொழிபெயர்த்த கட்டுரைகளைமொழிபெயர்ப்பின் சவால்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக் கிறது.
காவ்யா பதிப்பகம் டாக்டர் கோ.கண்ணனின் (தர்மபுரி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது அந்தக் கல்லூரித் தலைவர் பொறுப்பு வகித்துக்கொண்டி ருப்பார் என்று எண்ணுகிறேன்) முனைவர் பட்ட ஆய்வேடான தமிழ் நாவல்கள் தொடர்பான எழுத்தாக்கத்தை நூலாக வெளியிட்டிருக்கிறது.
நவீன விருட்சம் பதிப்பகம் கோ.கண்ணனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான மழைக்குடை நாட்களை வெளியிட்டது.
கோ.கண்ணனின் முதல் தொகுப்பான ஓசைகளின் நிறமாலை நான் சார்ந்திருக்கும் அமைப்பான WELFARE FOUNDATION OF THE BLINDஇன் பிரசுர முயற்சிகளில் ஒன்றாக வெளியாகியது.
(எங்கள் அமைப்பு பார்வையற்றவர்களின் பிரச்னைகளைப் பேசும் நூல்களையும், பார்வையற்றவர்களின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் எழுத்தாக்கங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறது).
திரு.கோ.கண்ணனின் சிறுகதைகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.
செல்வி ரம்யா என்ற பார்வையற்ற ஆசிரியையின் கட்டுரைத்தொகுப்பு சமீபத்தில் எங்கள் அமைப்பின் மூலம் வெளியாகியுள்ளது.
மதுரையிலிருக்கும் INDIAN ASSOCIATION FOR THE BLIND க்ரியா பதிப்பகத்துடன் இணைந்து க்ரியாவின் தமிழ் அகராதி போன்ற சில நூல்களை வெளியிட்டுள் ளது.
பார்வையற்றோர் சிலர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் சிலவும் வெளியாகியுள்ளன.
பார்வையற்றோரின் எண்ணிக்கையோடு ஒப்பிட அவர்களுக்கென உருவாகும் நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே என்ற அவலமான உண்மையை தோழர் பார்வையற்றவன் (இவருடைய உண்மைப் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும்) எழுதியுள்ள பதிவு அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.
நான் உறுப்பினராகவும் பொருளாளராகவும் இருக்கும் WELFARE FOUNDATION OF THE BLIND வெளியிட்டுள்ள நூல்கள் சில:
1. காணாத உலகில் கேளாத குரல்கள் - (எங்கள் நிறுவனத்தலைவர் டாக்டர் ஜி.ஜெ.ஜெயராமன் எழுதியது.
2. கண்ணோட்டம் (டாக்டர் ஜி.ஜெயராமன் எழுதிய சிறுகதைகள்
3. மறுபார்வை(பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 18 பேரின் சாதனைகளைப் பேசும் கட்டுரைத் தொகுப்பு)
4. BOOKS BY WELFARE FOUNDATION OF THE BLIND
5.
கடவுளும் குழந்தையும் (.வெங்கடேசன் எழுதிய சிறுகதைகள்)
6.ஓசைகளின் நிறமாலை(கவிஞர் கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு)
7.தெய்வத் தமிழிசை ( மு.வெங்கடசுப்பிரமணியன் என்ற பார்வையற்ற இசையாசிரியர் எழுதிய நூல்)
8.
புத்தகங்களின் வழியே ( ஆசிர்யை ரம்யாவின் கட்டுரைத் தொகுப்பு)
9. ஊற்றுக்கண்கள் ( பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கான போட்டியில் வென்ற சிறுகதைகளின் தொகுப்பு)
10. சமுதாயத்தில் நாம்(பேராசிரியர் ரகுராமன் எழுதிய கட்டுரைகள்)
11. என் அருமைச் சின்னூ( சிறுவர்களுக்கான கதைகள் - டாக்டர் ஜெயராமன் எழுதியவை)
12. விரல் நுனியில் விடுதலை (பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எழுதிய கட்டுரைகளடங்கிய WFB ஆண்டுவிழா மலர்)
13. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சமகால தமிழ்க்கவிதைகளை அறிமுகப்படுத்தும் கவிதைத்தொகுப்பு - ப்ரெய்லி எழுத்தில்.
14. UNHEARD VOICES OF THE NON-SEEING WORLD - DR.G.Jayaraman
15. MY DEAR CHINNOO - DR.G.JAYARAMAN(STORIES FOR CHILDREN)
16. SCHOOLS FOR THE BLIND IN TAMIL NADU (BY DR.JAYARAMAN)
17. இப்படித்தான் வாழவேண்டும்(பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கவிதைப்போட்டியில் கலந்துகொண்டவர்களின் கவிதைகள் இடம்பெறும் தொகுப்பு)
18. சண்டை வேண்டாம் நண்பர்களே !(சிறுவர்களுக்கான கதைகள் - டாக்டர் ஜெயராம் எழுதியவை)