ONENESS
LIFE GOES ON.....
Thursday, January 26, 2017
ஆபாசம் என்பது.....
ஆபாசம் என்பது....
ஆபாசம் என்பதை பெண்ணின் உடல், ஒழுக்கம் சார்ந்ததாக மட்டுமே பார்ப்பது பலருக்குப் பழக்கமாகி
விட்டது; வசதியாக இருக்கிறது. ஆனால், குழந்தை களைக் கிளிப்பிள்ளைகளாகப் பழக்கப்படுத்தி சில கருத்துகளைப் பேசவைப்பதும், கொடிபிடிக்க வைப்பதும் கூட ஆபாசம் தான்.
என்னுள்ளிருக்கும் ஒரு சிறுமி என்னிடம் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறாள்:
‘சினிமாவில் ஒருவர் நூறு பேரை அடித்து வீழ்த்தி வெற்றி கொள்ளும் அசாத்தியமான காரியத்தைத் திரும்பத்திரும்ப வீரசாகசமாகக் காட்டிவரும் திரைப்படத்துறையினர், இப்போது மட்டும் ஒரு காளையைப் பலர் துரத்தி விரட்டி வெருட்டிப் பிடித்து அடக்கப் பார்ப்பதை எப்படி வீரம் என்று சித்தரிக்
கிறார்கள்?”
Thursday, January 19, 2017
வலி
வலி
அரிக்கும் இடத்திலுள்ள
கூந்தலை
ஒரு
கையால்
கொத்தாய்ப்
பிடித்து
மறுகை விரலால் நெருடி
வழுக்கியோடும்
பேனைத்
தடுத்து
நிறுத்தி
மயிரிழைகளோடு சேர்த்து
இழுத்து
அதைக் கைக்கட்டைவிரல் நகத்தின்மீது
வைத்து
மறுகைக் கட்டைவிரல்
நகத்தால்
சொடுக்கும்
நேரம்
அந்த இக்கிணியூண்டு உடலிலிருந்து
உயிர்பிரியும்
சப்தம்
துல்லியமாய்க் கேட்கும்.
ஒரு கையறு நிலையில்
மனம்
அதிரும்;
கடவுளுக்கு
சாபமிடும்.
பேன்கள் மண்டிய
தலையோடு
வாழ
முடிந்தால்
நன்றாயிருக்குமோ என்று
பேதலிக்கும்.
சொடுக்காமல் ஜன்னலுக்கு
வெளியே
வீசியெறியும்
நேரம்
எலும்புமுறிவு ஏற்பட்டுவிடுமோ
அதற்கு
என்ற கேள்வி தவறாமல்
கலங்கவைக்கும்.
எல்லாநேரமும் இந்தப்
பிரக்ஞை
விழித்துக்கிடக்கும்
என்று சொல்லமுடியாவிட்டாலும்
‘நல்லா
வேணும்
பேனுக்கு’
என்று ஒருபோதும் நினைக்க
முடிந்ததில்லை;
அந்த நுண்ணுயிர் என்
கையால்
கொலையாவதற்காகவே
பிறவியெடுக்கிறது
என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடிந்ததில்லை;
அதற்கு வலியிருக்க வழியில்லை
என்று
அறுதியிட்டுப் பறைசாற்ற முடிந்ததில்லை.
பேனைச் சொடுக்குவது எனக்குக்
கைவந்த
கலை
என்று
பெருமைபீற்றிக்கொள்ள ஒர்போதும்
வாயெழுந்ததில்லை.
பேனைப் பிடித்துவிடுவதில்தான்
என்
ஆனமானம்
அடங்கியிருக்கிறது என்று
ஒருபோதும் நம்பமுடிந்ததில்லை.
நான் வளர்க்கிறேன் பேனை,
எனவே
நான்
அதைக்
கொல்ல
உரிமைபெற்றிருக்கிறேன் என்று
ஒருபோதும் உரைநிகழ்த்த முடிந்ததில்லை.
உதிர்ந்துகொண்டேபோகும் தலைமயிரென்றாலும்
அது பெரும் காடு
பேனுக்கு.
அதன்
பிறப்பிடம்;
வளருமிடம்.
அங்கிருந்து அதை
விரட்டவேண்டிய
கட்டாயத்திற்காளாவதில்
எப்படிக் களிப்பெய்த
முடியும்?
கண்காணவியலா அந்த
நுண்ணுயிரின்
கண்களில்
மண்டிய அச்சம் மனதில் பாரமாகுமேயல்லாமல்
வீரமாகாது
என்று சொன்னால் விதவிதமான
வழிகளில்
விரோதியாகி
விடுவேன் - தெரியும்;
கருத்துச்சுதந்திரத்திற்கும் இங்கே
வன்முறையார்ந்த
முள்வேலிகள் உண்டு;
கருத்துரிமைக் காவலர்களாகத்
தம்மைத்தாம்
முன்னிறுத்துவோர்
கட்டியெழுப்புவது.
பேனோ மானோ மனிதனோ,
சகவுயிர்களிடம்
கருணை
வேண்டும் என்று
சொன்னால்
கவிஞர்களேனும்
வழிமொழிவார்கள்
என்ற நம்பிக்கை வெறுங்கனாவாகிப்
போவதில்
கலங்கும் மனம்
நம்பிக்கை பொய்ப்பதும்
பகையாவதுமேதான்
நட்பினராவதன் முழுமை
போலும்.
Monday, January 16, 2017
ANAAMIKAA'S (latha ramakrishnan's) 3RD SHORT-STORY COLLECTION அருங்காட்சியகம்
from
ANAAMIKAA ALPHABETS
ANAAMIKAA'S (latha ramakrishnan's)
3RD SHORT-STORY COLLECTION
அருங்காட்சியகம்
from ANAAMIKAA ALPHABETS RAIN BEYOND AND OTHER POEMS rishi (latha ramakrishnan's) collection of poems originally written in English
from
ANAAMIKAA ALPHABETS
RAIN BEYOND AND OTHER POEMS
rishi (latha ramakrishnan's) collection of poems originally written in English
SEETHAA CAN SPEAK Translation of my poem சீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி
SEETHAA CAN SPEAK
Translation of my poem சீதைக்கும் பேசத் தெரியும்
Translation of my poem சீதைக்கும் பேசத் தெரியும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(லதா ராமகிருஷ்ணன்)
RISHI (latha ramakrishnan)
Raamaa is my beloved husband
Do you know how many a wonderful hour I have spent in his company....
What all we have conversed, do you know?
Words invaluable!
How we revelled being together, do you know?
The forest-trees would recite those magical tales!
That he suspected me was his tragic flaw;
But, how dare you scribble that I would ever stoop low as to
love my kidnapper!
Isn’t he who forces a woman a demon?
How can you call him a hero valiant?
Claiming that you champion my cause
why do you all the more abuse?
Won’t a person who abducts a girl
know how to ravish her?
Only because of the curse that his head would go splinters
If he were to move an inch closer
Raavan had to maintain a decent distance.
Having Mandodhari at hand’s reach
oh, what all ‘words sacrilegious’ he spoke to me…
As far as I am concerned
he is a swine, not to be forgiven.
True, he too has the right to have a lawyer
and defend his case.
But, I beseech you,
please don’t try to get his release
arguing that I compared him with Raamaa
and chose him between the two…
oh, please don’t degrade me, the victim,
for bailing out the offender.
If your wife or daughter is taken away by force and deceit
will you mouth such 'milk of the human kindness' arguments ?
Yes, my dear husband Raamaa did doubt me -
but, because of whom? who is the cause of it all?
whose foul deed, alas?
Unbearable pain my beloved husband must have endured
for doubting me, I know for sure.
Of course my wound would be bleeding forever, but,
how can you say that I would seek Raavan’s arms as balm?
Oh, why is it that in my case, in different ways,
everyone of you behave like Raavan always?
சீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
சீதைக்கும் பேசத் தெரியும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(லதா ராமகிருஷ்ணன்)
ராமன் என் அன்பன்.
அவனோடு நான் அற்புதமான பொழுதுகளைக் கழித்திருக்கிறேன்.
நாங்கள் என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் தெரியுமா?
ஒவ்வொன்றும் அட்சரலட்சம் பெறும்!
எப்படியெல்லாம் கூடிக்களித்திருக்கிறோம் தெரியுமா?
ஆரண்ய மரங்கள் கதைப்பாட்டுப் படிக்கும்!
அவன் என்னை சந்தேகப்பட்டது ஒரு சறுக்கல்;
அதற்காய், என்னைக் கடத்திச்சென்றவனை நான்
காதலிப்பேன் என்று கிறுக்குவதா?
பெண்ணை வலுக்கட்டாயப்படுத்துபவன் கயவனல்லவா?
கதாநாயகன் என்கிறீர்களே?
எனதுரிமையைப் பேசுவதாய் என்னை ஏன் இன்னுமின்னும் சிறுமைப்படுத்துகிறீர்கள்?
கடத்திச் சென்றவனுக்குக் கெடுக்கத் தெரியாதா என்ன?
கிட்டே நெருங்கினால் தலை வெடித்துச் சிதறும் என்பதால்
எட்ட நின்றே ஏங்கிப் பார்த்தான்.
கையெட்டும் தூரத்தில் மண்டோதரி இருக்க
என்னென்ன ‘கெட்ட’ வார்த்தைகளைப் பேசினான் தெரியுமா?
என்னைப் பொறுத்தவரை துட்டனே யவன்.
அவனுக்கும் வழக்குரைஞர் வைத்துக்கொள்ளும் உரிமையுண்டு.
ஆனால், நான் அவனை உள்ளூர நேசித்தேன் என்று பொய்பேசி
பாதிக்கப்பட்ட என்னைக்கொண்டே பாதகன் அவன் விடுதலையை வாங்கித்தரப் பார்க்கவேண்டாம்.
உங்கள் மனைவி, மகள் கடத்தப்பட்டால்
இப்படித்தான் மனிதநேயம் பேசுவீர்களா?
என் அன்பன் ராமபிரான் என்னை சந்தேகப்பட்டான்.
யாரால்? யார் செய்த காரியத்தால்?
சந்தேகப்பட்டதற்காய் எத்தனை அலைபாய்ந்திருக்கும் என்
அவனோடு நான் அற்புதமான பொழுதுகளைக் கழித்திருக்கிறேன்.
நாங்கள் என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் தெரியுமா?
ஒவ்வொன்றும் அட்சரலட்சம் பெறும்!
எப்படியெல்லாம் கூடிக்களித்திருக்கிறோம் தெரியுமா?
ஆரண்ய மரங்கள் கதைப்பாட்டுப் படிக்கும்!
அவன் என்னை சந்தேகப்பட்டது ஒரு சறுக்கல்;
அதற்காய், என்னைக் கடத்திச்சென்றவனை நான்
காதலிப்பேன் என்று கிறுக்குவதா?
பெண்ணை வலுக்கட்டாயப்படுத்துபவன் கயவனல்லவா?
கதாநாயகன் என்கிறீர்களே?
எனதுரிமையைப் பேசுவதாய் என்னை ஏன் இன்னுமின்னும் சிறுமைப்படுத்துகிறீர்கள்?
கடத்திச் சென்றவனுக்குக் கெடுக்கத் தெரியாதா என்ன?
கிட்டே நெருங்கினால் தலை வெடித்துச் சிதறும் என்பதால்
எட்ட நின்றே ஏங்கிப் பார்த்தான்.
கையெட்டும் தூரத்தில் மண்டோதரி இருக்க
என்னென்ன ‘கெட்ட’ வார்த்தைகளைப் பேசினான் தெரியுமா?
என்னைப் பொறுத்தவரை துட்டனே யவன்.
அவனுக்கும் வழக்குரைஞர் வைத்துக்கொள்ளும் உரிமையுண்டு.
ஆனால், நான் அவனை உள்ளூர நேசித்தேன் என்று பொய்பேசி
பாதிக்கப்பட்ட என்னைக்கொண்டே பாதகன் அவன் விடுதலையை வாங்கித்தரப் பார்க்கவேண்டாம்.
உங்கள் மனைவி, மகள் கடத்தப்பட்டால்
இப்படித்தான் மனிதநேயம் பேசுவீர்களா?
என் அன்பன் ராமபிரான் என்னை சந்தேகப்பட்டான்.
யாரால்? யார் செய்த காரியத்தால்?
சந்தேகப்பட்டதற்காய் எத்தனை அலைபாய்ந்திருக்கும் என்
அன்பன் மனம் என்று எனக்குத் தெரியும்.
ஆறாக்காயம்தான்,
அதற்காய் ராவணன் கையாலா மருந்திட்டுக்கொள்வேன்?
ஏன் எல்லோருமே என் விஷயத்தில் வெவ்வேறுவிதமாய்
ராவணனாகவே நடந்துகொள்கிறீர்கள்?
ஆறாக்காயம்தான்,
அதற்காய் ராவணன் கையாலா மருந்திட்டுக்கொள்வேன்?
ஏன் எல்லோருமே என் விஷயத்தில் வெவ்வேறுவிதமாய்
ராவணனாகவே நடந்துகொள்கிறீர்கள்?
Subscribe to:
Comments (Atom)


































