LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 2, 2025

கவிஞர் கவின் கவினை நினைவுகூர்வோம்

 கவிஞர் கவின் கவினை நினைவுகூர்வோம்

//30. மே, 2022 - மீள்பதிவு//


_ லதா ராமகிருஷ்ணன்

தமிழில் கவிஞர்களாக அறியப்படும் கவிஞர்கள் சிலர். கொண்டாடப்படுபவர்கள் வெகு சிலர். சாதாரண கவிஞர்கள் சிலர் அசாதாரணக் கவிஞர் களாக முன்னிலைப்படுத் தப்படுவதும் உண்டு. அதேபோல் அடர்செறிவாக தொடர்ந்து எழுதி அதிகம் அறியப்படாமலேயே முடிந்து விடும் கவிஞர்கள் அனேகம் பேர். கவிஞர் கவின் சமீபத்தில் அமரராகிவிட்டார் என்று இப்போது தான் படித்து மிகவும் வருத்தமாயிருந் தது.

நாம் எல்லோருமே தினசரி வாழ்க்கையை ஒப்பேற்றவும் அலைந்துகொண் டிருப்பதால் நாம் மதிக்கும் கவித்துவம் கொண்ட சக கவிஞர்களைக்கூட உரிய நேரத்தில் உரிய விதமாய் மரியாதை செய்ய இயலாமல் போய் விடுகிறது.

என் எளிய மரியாதையாய் கவிஞர் கவின் உயி ரோடிருக்கையில் அவருடைய இரண்டு மூன்று கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற்றியிருந் தால் மனதுக்கு நிறைவாயிருந்திருக்கும். செய்யவில்லை. இப்போது அவருடைய ஓரிரு கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற் றுகிறேன். வாழ்வின் அர்த்தம் குறித்த தேடலை யும் பிரதியின் அர்த்தம் குறித்த தேடலையும் கவிதை பேசுவதாகக் கொண்டு முடிந்த வரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

திருத்தங்கள் தேவையிருப்பின் தெரிவிக்கவும் என்று அவரிடம் கேட்கமுடியாத நிலை.

கவிஞர் கவினுக்கு என் நன்றியும் மரியாதையும் -



(REMEMBERING POET KAVIKAVIN)

Two of his poems are gvien here with their English Translations


கவிக்கவினின் கவிதை 1

ஒரு தாவரத்தின் இறுதி முனையை தேடி பயணிக்கிறது அந்த நீர்த்துளி..
மேல் முனையும் கீழ் முனையும் நாளும் வளர்ந்து
முனைப்பை தடுக்கின்றன ..
அர்த்தமற்ற சத்தமேற்றும் காற்றின் பிரதான உந்துதலின் ராட்சசம் துயரூற்ற,
ஆனாலும் தாவரமெங்கும் பரவி தேடியபடி திரிகிறது துளி,
வேரின் முனை துளிர் முனை என குழப்பமற்று போய் சேர்ந்த வேரருகே,
ஆணிவேர் சல்லிவேர் சங்கடங்கள்...
காப்பியங்கள் , சொல்வழுக்கா புதினங்கள் மெருகேற்றா ,
ரசவாத காலநிலை சாரமற்ற,
முள் முறைக்கும் கிளை கடந்து போகிறது துளியின் பயணம்..
பூவின் இதழ் மீது தங்கி ஒய்யாரமாய் நின்ற மற்றோர் துளிக்கு எக்கவலையும் இல்லை..
தேடலற்ற பயணங்கள் சொகுசானதாய் ..
தேடுகிற தடங்கள் இறுதி முனையின்
ஓர் ஓரமாய்
தேடல் நீதியுடன்,
பரம்பொருள்களின் ஆசிர்வாத இறுதிமுனை பற்றிய தர்க்கமற்று....
.....கவிக்கவின்.

A POEM BY KAVIKKAVIN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Seeking the ultimate end of a plant
The droplet of water travels.
The upper end and the lower end growing daily
hamper the fervour…
The demonism of the winds mindless uproar’s prime-force
causing anguish
yet wandering all over the plant the droplet
continues searching.
With the confusion regarding the root-end and the bud-end
near the root arrived at
apprehensions pertaining to central root and fibrous root
prevail……
Going past Epics, novels with no spontaneous overflow
unrefined alchemic climate listless thorn-glaring branch
_the journey of the droplet continues.
The other drop settled on the flower-petal
elegantly
has no worry whatsoever….
Journey without search, luxurious
The trails of search
at a corner of the ultimate end….
With the Search having its own justice
with no disputes about the blessed ultimate finish
of the great grand inferences .



r


A POEM BY KAVI KAVIN - 2
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
I would be standing in the nooks and crannies of the forests….
There searching for me I would come all alone….
The forest that enters through my ears
that are not familiar with the sounds of forest
would probe me searching and seeking….
I who hides all anguished
would be apprehended by I
who has come in search of I…
That jungle would stand exclusive
safeguarding my footprints
and give them to me
who comes throwing open the jungle.
On that day
these words would say
of my jungle meant for jungles….








Thursday, May 29, 2025

இந்தியாவை பிறநாடுகளுடன் ஒப்பிட்டு மதிப்பழிப்பவர்களுக்கு .....

 

சிலர் இந்தியாவை பிற நாடுகளுடன் ஒப்பிட்டு மதிப்பழிப்பதில் மகிழ்பவர்கள்.

ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் நிலப்பரப்பு இயற்கை வளம், மக்கட்தொகை இவற்றைச் சார்ந்தே அமைகிறது.
இந்நிலையில் நிலப்பரப்பு, மக்கட்தொகை இரண்டும் சம அளவு இருக்கும் நாடுகளை ஒப்பாய்வு செய்தலே உண்மை நிலவரங்களைத் தருவதாக அமையும்.
கீழே சில நாடுகளின் மொத்த நிலப்பரப்பளவும், மொத்த மக்கட்தொகையும் தரப்பட்டுள்ளது.
உலகின் சில நாடுகளின் நிலப்பரப்பளவும் மக்கட்தொகையும்:

1. CANADA ;
TOTAL AREA - 9,984,670 km2 (3,855,100 sq mi) (2nd) • 11.76 (2015) • 9,093,507 km2 (3,511,023 sq mi).
TOTAL POPULATION - 3.82 crores (2021)

2. USA.
TOTAL AREA -9.834 million km²
TOTAL POPULATION 33.19 crores (2021)

3. UNITED KINGDOM –
TOTAL AREA : The total area of the United Kingdom is 242,495 square kilometres (93,628 sq mi),

UK – TOTAL POPULATION - 6.73 crores (2021)

4. AUSTRALIA –TOTAL AREA 7.688 million km²
TOTAL POPULATION 2.57 crores (2021)

5. FRANCE –
TOTAL AREA: Its eighteen integral regions (five of which are overseas) span a combined area of 643,801 km2 (248,573 sq mi)
TOTAL POPULATION 6.77 crores (2021)

6. SRILANKA - The nation has a total area of 65,610 square kilometres (25,330 sq mi), with 64,630 square kilometres (24,950 sq mi) of land
SRI LANKA TOTAL POPULATION – 2.22 crores (2021)

7. CHINA –
TOTAL AREA 9.597 million km²
TOTAL POPULATION: 141.24 crores (2021)

8. PAKISTHAN –
TOTAL AREA - 803,940 square kilometers,
TOTAL POPULATION 23.14 crores (2021)

9. CUBA – TOTAL AREA:
Cuba's area is 110,860 km² (42,803 sq mi) including coastal and territorial waters with a land area of 109,884 km2 (42,426 sq mi).
CUBA
– TOTAL POPULATION
1.13 crores (2021)

10. INDIA
TOTAL AREA: India is one of the largest countries in the world, by area. India has a total area of 32, 87, 263 sq.km. It accounts for 2.42% of the world's total area. In terms of area, India is the seventh largest country in the world.
TOTAL POPULATION:140.76 crores (2021)

11. RUSSIA
TOTAL AREA: The largest country in the world is Russia with a total area of 17,098,242 Km² (6,601,665 mi²) and a land area of 16,376,870 Km² (6,323,142 mi²), equivalent to 11% of the total world's landmass of 148,940,000 Km² (57,510,000 square miles).
TOTAL POPULATION: 14.34 crores (2021)

DUBAI
TOTAL AREA: 35 km²
TOTAL POPULATION : 33.3 lakhs (2019)

UAE United Arab Emirates
TOTAL AREA: 83,600 km²
United Arab Emirates / Area
Geography. The United Arab Emirates are a country in the east of the Arabian Peninsula on the Persian Gulf. The land has a total area of 83,600 km² (32,278 mi²) and a total coastline of 1,318 km (819.0 mi).
The largest emirate, Abu Dhabi, accounts for 87% of the UAE's total area (67,340 square kilometres (26,000 sq mi)).
TOTAL POPULATION – 1,02,36,339

Tuesday, May 27, 2025

INSIGHT - APRIL, MAY - 2025 (A Bilingual Blogspot for Contemprary Tamil Poetry) 2019insight.blogspot.com PARTICIPATING POETS

 INSIGHT - APRIL, MAY - 2025

(A Bilingual Blogspot for Contemprary Tamil Poetry)

2019insight.blogspot.com

PARTICIPATING POETS



அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*என் ‘அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்’ தொகுப்பிலிருந்து)



அன்புத் தோழீ…
(*அன்பு, தோழி என்ற சொற்களின் மெய் யர்த்தங்கள் அளவில் நீ என் விளிக்கு நியாயம் சேர்ப்பவளா யில்லாமலிருக்கலாம். இருந்தும்,
நாம் உழைக்கும் வர்க்கத்தவர்கள் என்ற உறவின் உரிமையில் அப்படி விளிக்கலாம்தானே…)
அவனை அமரச் சொல்லேன்…
(*அவன் என்பது இங்கே அவமரியாதைச் சொல்லல்ல –அன்பின் பரிவதிர்வுக் குறிப்புச்சொல்).
ஒரு புத்தனைப் போன்ற சலனமற்ற முகத்துடன்
கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறானே….
அவனை அமரச் சொல்லேன்.
நாள் முழுக்க இப்படித்தான் நிற்கவைக்கப்போகிறாயா
மேஜையின் விளிம்பில் தன் இடுப்பை சற்றே சாய்த்தபடி அவன் நின்றுகொண்டிருக்கும் விதம்
கால அளவையும்
அவன் கால்களின் வலியையும்
கணக்கிட்டுக்காட்டிவிடுகிறது.
அவனை அமரச் சொல்லேன் தோழீ….
அந்தக் கணினிக்குள் அத்தனை மும்முரமாய் நீ பார்த்துக்கொண்டிருப்பது
மெய்யா பாவனையா தெரியவில்லை.
இதற்குமுன் ஏதோவொரு நாளில் உங்களிருவருக்கும் ஏற்பட்ட சச்சரவுக்கு இப்படித் தீர்வு தேடிக்கொள்கிறாயோ….
வேண்டாம் இந்த வன்மம்
விட்டுவிடு தோழீ….
அவனை அமரச் சொல்லேன்….
அவமானத்தில் அவன் கண்களுக்குள் நீர் குத்திக்கொண்டிருக்கக்கூடும்.
பலவீனமா யுணரும் நாள்களில் இதுவுமொன்றோ என்னவோ
வலி என் கண்களுக்குள் கால்மாற்றிக்கொள்கிறது.
மிகவும் வலிக்கிறது தோழீ….
அவனை அமரச் சொல்லேன்.
இந்த மதிப்பழிப்பின் வடிகாலாய்
அவன் இல்லந் திரும்பி மனைவியை அடிக்கலாம்;
மக்கட்செல்வங்களை அடிக்கலாம்;
மதுக்கடைக்குச் சென்று முட்டக் குடித்து
நட்டநடுச் சாலையில் கதிகெட்டுக் கிடக்கலாம்;
இருசக்கரவாகனங்களின் கீழ்
சிதறிப்போகலாம்….
பதறுகிறது மனம் –
அவனை அமரச் சொல்லேன் தோழீ…
என் இருக்கையை விட்டு எழுந்து
அவனை அமரச் செய்யத் துடிக்கும் மனதை
அடக்கிக்கொள்கிறேன்.
அப்படிச் செய்தால் உன் அதிகாரத்திற்கு
அடிபணிய மறுப்பவனாய்
கூடுதலாய் இன்னும் கொஞ்சம் அவன் நிற்கவைக்கப்படுவானோ என்ற பீதி பரவி
என் சமத்துவ, சகோதரத்துவ, சுதந்திர வேட்கையையெல்லாம் முடக்கி
என்னை செத்த எலியாக அசைவற்று அமர்ந்திருக்கச் செய்கிறது.
என்னால் அவனை ஏறெடுத்துப் பார்க்க இயலவில்லை.
அவனை அமரச் சொல்லேன் தோழீ….
நீயும் நானும் அவனும் உழைக்கும்வர்க்கம்தானே
பூமிக்கு அடியிலுள்ள தட்டுகளே நிலைபெயர்ந்துவருகின்றன
என்பதை நீயறிவாயா?
நல்லவள்தான் நீ.
நான் சொல்ல வருவதை உன்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்…
அவன் கால்களில் உன்னைப் பொருத்திப்பாரேன் ஒரு கணம்
அந்த மதிப்பழிப்பின் ரணம் வழியே பெருகும் வலி
சீழ்கோர்த்துக்கொண்டு
சின்னாபின்னமாக்கிவிடும் மனதை.
உன் மேலதிகாரியிடம் நீ இதுபோல்
மண்டியிடாதகுறையாய் நின்றிருப்பாய்தானே…..
இன்னுமா அவனை நிற்கவைக்கப்போகிறாய்?
அவனை அமரச் சொல்லேன் தோழி…
உயிர்வாழப்போவது இன்னும் எத்தனை நாளோ….
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் எத்தனை
அபத்தமான பிரமைகள்….
அவனை அமரச் சொல்லேன் தோழி…
(இன்னும் நீ அவனை அமரச் சொல்லவில்லை.
இனி பொறுக்கலாகாது என நான் அவனைப் பார்த்து
எழுந்து நின்று இன்னொரு நாற்காலிக்கு நகர்ந்துகொண்டு
அருகிருக்கும் நாற்காலியைச் சுட்டிக்காட்டி அமரும்படி செய்கை செய்ய அவன் தலையசைப்பு ’ பரவாயில்லை, வேண்டாம்’ என்று பதிலளிக்கிறது.)
மித மிஞ்சிய மன அயர்வுடன் எழுந்துகொண்ட பின்
இன்றுவரை நான் போகுமிடமெல்லாம்
கால்கடுக்க நிற்கும் அவன் கால்கள்
கூடவே வருகின்றன.
(அருங்கவிதை யில்லை யிவ் வரிகள் என்று தெரிந்தாலும்
ஆணியறையப்பட்ட நிலையில் அவன் நின்றிருக்கக் கண்டது
நெஞ்சடைக்கிறது இன்னமும்…
நோஞ்சான் கவிதையாவது எழுதித்தான்
நிவாரணம் தேடிக்கொண்டாகவேண்டும்…..

சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் (அ) தீதும் நன்றும் பிறர் தர வாரா - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்

(அ)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
தீதும்அவரவருக்குள்ளிருக்கும் நிலக்கிழார்கள்
சக மனிதர்களை அடிமைகளாக பாவித்து
அவர்களது வாய்களை அச்சுறுத்தல்களாலும்
அசிங்க வார்த்தைகளாலும்
அடைமொழிகளாலும் அடைத்துவைத்து
அவர்களுக்காகப் பேசுவதாக செய்யும்
பாவனையில்
அடுத்தவரின் பேச்சுரிமை எழுத்துரிமை கருத்துரிமை
எல்லாவற்றையும் கொத்துபரோட்டாவாக்கிக் கொடுத்தவண்ணம்
தங்களுடைய குடும்பத்தோடு சர்வதேச தரத்திலிருக்கும் ஐம்பது நட்சத்திர ஹோட்டல்களில்
ஐரோப்பிய ஸ்பானிய ஜப்பானிய
அயர்லாந்து நெதர்லாந்து ஆஸ்திரேலிய அமெரிக்க ஜெர்மானிய உணவு தின்பண்ட வகையறாக்களை
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ருசித்துக்கொண்டிருக்க
அவர்களுடைய அக்கறையின் இலக்காக ’சும்மனாங்காட்டிக்கு’ அடையாளங்காட்டப்படுவோர் கலாச்சாரக் காவலர்களாய் கூழையும் களியையும் உண்டவாறே
படகுவீட்டுப் புரவலர்களுக்காய் கையிலும் எழுத்திலுமாய் கொடியுயர்த்திப் பிடித்தபடி
அவர்கள் கைகாட்டும் இடத்தில் காறித்துப்பியபடி….
அறஞ்சார் விசுவாசத்தை யல்லாமல்
அரச விசுவாசத்தைக் காட்டுவதே புலவர்பெருமக்களின்
வேலையாகிவிட்டால்
வாழ்ந்துவிடுமா மொழி
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ தமிழில் எழுதப்பட்ட
தென்றாலும்
அது உலகப் பொது வழி.

கவிமன வேதியியல் மாற்றங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிமன வேதியியல் மாற்றங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும்
மாறிக்கொண்டேயிருப்பவர்கள்
முன்னவராக இருக்கும்போது
அன்பே சிவம் என்று பண்ணிசைக்கிறார்கள்....
பின்னவராக மாறி காது கூசுவதாய்
தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட
ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கொன்றழிக்கத்தோதாய்
சொற்களின் கூர்நுனியில் நஞ்சுதோய்த்து
அவர்கள் வைத்திருக்கும் கத்தி கபடா துப்பாக்கி
வெடிகுண்டு வகையறாக்கள்
வேகமாய் துடிக்கவைக்கின்றன
ஏற்கெனவே எதனாலெல்லாமோ
எந்நேரமும் படபடப்பாக உணரும்
பாழ் இதயத்தை.

முன்னவராக எண்ணி நட்புபாராட்டிக்
கொண்டிருந் தவர்கள்
காலடியின் கீழ் தரை நழுவுவதாய் உணர்ந்து
மூர்ச்சையாகிவிழும் தருணம்
மீண்டும் Dr. Jekyll முன்னால் வந்து
காசுவாங்காமல் மருந்துமாத்திரைகளை
அத்தனை அன்போடு
ஒரு கவிதையில் பொதிந்து
கையில் தந்துவிடுகி றார்கள்.

நம்பிக்கையிழப்பின் கொடும் அசதியிலிருந்து
மெல்ல எழ முயலும் மனதில்
பேயறை அறைகிறது நாராசக் கெக்கலிப்
பொலியும்
நாக்கூசா அவதூறுகளும்.

அத்தனை மனிதநேயத்தோடு கவியெழுதும் மனம்
இத்தனை மூர்க்கமாய் வெறுப்பைக்
கக்கவே கக்காது என்ற நம்பிக்கையை
சுக்குநூறாக்குவதாய்
அதே மனதிலிருந்து அந்த அளவே
வெறுப்பைக் கக்கும்
அதே வார்த்தைகள்
அதைவிட மோசமாகவும்
எதிரொலித்தவண்ணம்.

ஒரே செயல் ஒருவரின் அளவில்
வெறுப்பைக் கக்கவைப்பதும்
இன்னொருவரின் அளவில்
விருப்புக்குரியதாகவும் மாறும்
மருத்துவத்திற்கப்பாலான விந்தை புரியாமல்
Dr. Jekyll தன் மருத்துவப்பட்டத்தைத் துறக்க
முடிவுசெய்யும் நாளில் -

Mr.Hyde தன்னையோ அவரையோ அல்லது
தங்களிருவரையும் கவிதையில் இனங்கண்டு
கொள்பவரையோ
எதுவும் செய்துவிடாமலிருக்க வேண்டும்

Dr. Jekyll Mr.Hyde ஆக மாற உதவும்
வேதியியல் சாறு தரும் அருவக்கைகளால்
_ அவர்களுடையதோ அடுத்தவரு
டையதோ....

அதைவிட முக்கியம்
Mr.Hyde களை Dr. Jekyll களாக மாற்றும் சாறு கண்டுபிடிக்கப்படவேண்டியது.