LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 2, 2025

மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
“இல்லை இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை”
என்று
திரும்பத் திரும்பக் கூறத்தொடங்கிவிட்டவர்களைப் பார்த்தபடி
குதிருக்குள் எட்டிப்பார்க்கச் செல்லத்தொடங்கிவிட்ட மக்களை _
”மாக்கள் என்று சொல்லிவிட்டார் உங்களை,
இனியும்
பேசாதிருக்கப் போகிறீர்களா?” என்று கேட்டவர்
அச்சு ஊடகங்களின் இரண்டறக் கலந்த அம்சமான
அச்சுப்பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில்
கைதேர்ந்தவர்.
அவருக்குத் தெரியும் மக்கள் மாக்களானது பிழை பார்ப்பிலான விடுபடல் என்று.
ஆனாலும் அது சொன்ன வாயின் இமாலயத் தவறென்று
திரும்பத் திரும்ப உருவேற்றிக்கொண்டிருப்பதோடு _
”சுப்பர் என்று சொல்லாமல் சுப்பன் என்று பெயர் வைக்கச் சொன்னது என்னவொரு மரியாதைகெட்ட தனம்” என்று வேறு சொன்ன கையோடு _
”அப்பர் என்னாமல் அப்பன் என்று நாங்கள் சொல்வது மரியாதைகெட்டத்தனமல்ல - மிகு அன்பில் விளைந்த உரிமை”
என்று, கேளாமலே ஒரு விளக்கத்தை வைத்ததைக் கேட்டபடியே _
குதிரிருக்கும் இடத்தை மேலும் நெருங்கிக்கொண்டி ருக்கும் மக்களைஎப்படி தடுத்து நிறுத்துவது
என்று புரியாமல் _
கடித்துப் பார்த்து கனியில்லை காயே என்று
அத்தனை திமிராய் தன் கருத்தையுரைக்கும்
அந்த நாயே கல்லில் அடிபட்டுச் சாகும் தன் விதியை
இப்படிக் குரைத்துக்குரைத்து எழுதிக் கொண்டா யிற்று என்றொருவர் அத்தனை பண்போடு தன் கருத்துரைக்க _
அதிகார வர்க்க அடிவருடி என்று அதி கார மாய் தப்புக்குறி போட்டு ஆயிரம் முறை காறித்துப்பியும்
ஆத்திரம் தீராமல் _
பன்றி பொறுக்கி நன்றி கெட்ட நாசப்பேயே நாலு கால் நரியைவிடவும் நீசநெஞ்சக்கார ஆண்டையே
இன்னும் நாண்டுகிட்டு சாகவில்லையா நீ
பேண்டு முடித்தபின்னாவது போக உத்தேச முண்டோ முழக்கயிறு வாங்க?” வென
நயத்தக்க நாகரிகமொழியில் மூத்திரத்தை சிறுநீர் என்றெழுதும் கவிதைவரிகள் காற்றில் பறந்துபோக
வார்த்தைக்கற்களை வீசிக்கொண்டேயிருக்கும் படைப்பாளிகள் சிலரும் _
”உடை உடை யந்தக் கடைந்தெடுத்த நீசமண்டை யை என்று _ ஆன்றோர்கள், ஆசிரியப் பெருமக்கள்,
அரசியல்வாதிகள், இன்னும் இன்னுமாய்
அத்தனை அமைதிப்புறாக்களைப் பறக்கவிட்டபடி
யிருக்க
ஒவ்வொரு புறாவின் காலிலும் கூர் கத்தி, அரை ப்ளேடு, பாட்டில்துண்டு, தகரத் தகடு, அமில பலூன் என பார்த்துப்பார்த்துக் கட்டப்படுவதை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே _
மக்கள் இன்னுமின்னும் முன்னேறிக்கொண்டிருக் கிறார்கள்
குதிருக்குள் எட்டிப்பார்த்துவிட.

நேரமும் காலமும் கவிதையும் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நேரமும் காலமும் கவிதையும்

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

..................................................................................................................................
*2015இல் என்னுடைய வலைப்பூவில் பதி வேற்றப்பட்ட என் கவிதையொன்றை இன்று யதேச்சையாகப் படிக்க நேர்ந்தது.

அப்போது தான் எழுதுனேனா அல்லது அதற்கு பலநாட்கள் முன்பே எழுதியதா என்று நினை வுக்கு வரவில்லை.

ஆங்கிலத்தில் எழுதிய கவிதை. அதன் பின் புலம் எதுவுமே துளிகூட நினைவுக்கு வர வில்லை.

இந்த இயல்பான மறதிதான் வாழ்வின் ‘தனித் துவம்’, மகத்துவம்’ என்று தோன்றுகிறது.

கவிதையின் பின்புலம் அறவே மறந்துபோகும் போது அதிலிருந்து முற்றிலுமாக விலகி நின்று ஒரு வாசகராக அதை உள்வாங்க, அதன் நிறை குறைகளை அறிய முடிகிறது.

என் கவிதைகளை மொழி பெயர்க்க எனக்குப் பிடிக்காது. எனினும் இந்தக் கவிதையைத் தமி ழில் மொழிபெயர்த்துப் பார்த்தேன்.

எந்த மொழியானாலும் சரி, மூலமொழியில் மொழி சார் தனித்துவமான வார்த்தைச் சேர்க் கைகளை அதேயளவாய் இலக்குமொழியில் கொண்டுவரவே இயலாது என்பது இம்முறை யும் தெளிவாகியது.

இதோ கவிதை.

A LULLABY TO MY OWN SELF
By RISHI
(Latha Ramakrishnan)

A feeling unknown-
weighing me down….
What is it
Way beyond the mist….
I drift along
through nameless pangs
in these very moments
leaving no trace
yet having grace and force
Proving the very source
of all that is our being
Language proving
ineffective
to pinpoint the pricking spots
nor ease the ache therein…..
Words unwritten
Poems escaping the pen
Minutes slipping through
The fingers failing to grip
Sleep overpowering
the lust to keep awake….
For my own sake….
Just give and take
what …. not…. this… that
What’s up
who asks whom
Ma’m, Sir, Hon’ble,
May you all be able
to wade through these endless wanderings
Windows are or is
just a capital W decides
so is Mouse, you see
Sea is sea, near or far
Shore is there;
So fares Nature.
Secret-cameras mushroom
in dressing-rooms
bathrooms
courtrooms
bridegrooms
brooms
there zooms
the tip of a gun
targeting you me everyone.
Get up
Go to sleep
No time to sup or weep
True, between the cup and the lip
Lies a chasm so deep.
Moon unseen
Song unheard
Death not defied
Sensitivities defiled
Mystery shrouding
I move on
A feeling unknown
weighing me down

எனக்கேயான என் தாலாட்டு
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(TAMIL TRANSLATION – LATHA RAMAKRISHNAN)

இன்னதென்றறியா உணர்வொன்று
இன்னுமின்னுமாய் கனத்தவாறு
என்ன அது
மூடுபனிக்கு மிக அப்பால்
இங்குமங்கும் அலைகிறேன்
இதோ இத்தருணங்களில்
சுவடின்றி
எனில் நளினமும் வலிமையும் கொண்டு
நமதிருப்பின் அடிநாதமாய்
நிலைகொண்டிருக்கும்
பெயரறியா வலிகளினூடாய்
அதன் சுள்ளென வலிக்கும் புள்ளிகளை
சுட்டிக்காட்டவும்
அங்குள்ள வலியை இல்லையாக்கவும்
வலுவற்றதாய் மொழி நலிவுற்றிருக்க
எழுதாச் சொற்கள்
எழுதுகோலை விட்டு நழுவியோடும் கவிதைகள்
நழுவியோடும் நிமிடங்கள்
பிடித்துவைக்கவியலா விரல்கள்
விழித்திருக்கவேண்டுமென்ற வேட்கையை
ஆதிக்கங்கொள்ளும் தூக்கம்
கொடுக்கல் வாங்கல்
எதை இல்லை இது அது
என்ன விஷயம்
யார் கேட்பது யாரை
ஐயா, அம்மா, திருவாளர், மாண்புமிகு
நீங்களனைவருமே இந்த முடிவற்ற அலைச்சல்களினூடாகக்
கடந்துசெல்ல முடிந்தவர்களாகட்டும்
WINDOWS ARE அல்லது IS?
’பெரிய’ W தான் தீர்மானிக்கும்
அவ்வாறே MOUSE ம் – அறிவோம்
கடல் கடலே – அண்மையிலிருந்தாலும் சேய்மையிலிருந்தாலும்
கரை யண்டு எங்கும்
அதுவேயாகுமாம் இயற்கையும்
ரகசிய காமராக்களின் பெருக்கம் பல்கிப்பெருகுகின்றன
உடைமாற்றும் அறைகளில்
குளியலறைகளில்
அவைகள்
வளாகங்கள்
மணமகன்கள்
விளக்குமாறுகள்
அதோ அங்கே பெரிதாக விரிகிறது
ஒரு துப்பாக்கிமுனை
உன்னை என்னை எல்லோரையும் குறிபார்த்து
எழுந்திரு
தூங்கச்செல்
சாப்பிடவோ தேம்பியழவோ
அவகாசமில்லை
ஆம் உண்மைதான் கோப்பைக்கும்
உதட்டுக்கும் நடுவே
அதியாழம்; அதலபாதாளம்.
காணா நிலவு
கேளாப் பாடல்
மறுதலிக்காத மரணம்
மாசுபடா நுண்ணுணர்வுகள்
மர்மம் போர்த்தியவாற்ய்
முன்னேறிச்செல்கிறேன் நான்
இன்னதென்றறியா உணர்வொன்று
இன்னுமின்னுமாய் கனத்தவாறு

கவிஞர் கவின் கவினை நினைவுகூர்வோம்

 கவிஞர் கவின் கவினை நினைவுகூர்வோம்

//30. மே, 2022 - மீள்பதிவு//


_ லதா ராமகிருஷ்ணன்

தமிழில் கவிஞர்களாக அறியப்படும் கவிஞர்கள் சிலர். கொண்டாடப்படுபவர்கள் வெகு சிலர். சாதாரண கவிஞர்கள் சிலர் அசாதாரணக் கவிஞர் களாக முன்னிலைப்படுத் தப்படுவதும் உண்டு. அதேபோல் அடர்செறிவாக தொடர்ந்து எழுதி அதிகம் அறியப்படாமலேயே முடிந்து விடும் கவிஞர்கள் அனேகம் பேர். கவிஞர் கவின் சமீபத்தில் அமரராகிவிட்டார் என்று இப்போது தான் படித்து மிகவும் வருத்தமாயிருந் தது.

நாம் எல்லோருமே தினசரி வாழ்க்கையை ஒப்பேற்றவும் அலைந்துகொண் டிருப்பதால் நாம் மதிக்கும் கவித்துவம் கொண்ட சக கவிஞர்களைக்கூட உரிய நேரத்தில் உரிய விதமாய் மரியாதை செய்ய இயலாமல் போய் விடுகிறது.

என் எளிய மரியாதையாய் கவிஞர் கவின் உயி ரோடிருக்கையில் அவருடைய இரண்டு மூன்று கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற்றியிருந் தால் மனதுக்கு நிறைவாயிருந்திருக்கும். செய்யவில்லை. இப்போது அவருடைய ஓரிரு கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற் றுகிறேன். வாழ்வின் அர்த்தம் குறித்த தேடலை யும் பிரதியின் அர்த்தம் குறித்த தேடலையும் கவிதை பேசுவதாகக் கொண்டு முடிந்த வரை மொழிபெயர்த்திருக்கிறேன்.

திருத்தங்கள் தேவையிருப்பின் தெரிவிக்கவும் என்று அவரிடம் கேட்கமுடியாத நிலை.

கவிஞர் கவினுக்கு என் நன்றியும் மரியாதையும் -



(REMEMBERING POET KAVIKAVIN)

Two of his poems are gvien here with their English Translations


கவிக்கவினின் கவிதை 1

ஒரு தாவரத்தின் இறுதி முனையை தேடி பயணிக்கிறது அந்த நீர்த்துளி..
மேல் முனையும் கீழ் முனையும் நாளும் வளர்ந்து
முனைப்பை தடுக்கின்றன ..
அர்த்தமற்ற சத்தமேற்றும் காற்றின் பிரதான உந்துதலின் ராட்சசம் துயரூற்ற,
ஆனாலும் தாவரமெங்கும் பரவி தேடியபடி திரிகிறது துளி,
வேரின் முனை துளிர் முனை என குழப்பமற்று போய் சேர்ந்த வேரருகே,
ஆணிவேர் சல்லிவேர் சங்கடங்கள்...
காப்பியங்கள் , சொல்வழுக்கா புதினங்கள் மெருகேற்றா ,
ரசவாத காலநிலை சாரமற்ற,
முள் முறைக்கும் கிளை கடந்து போகிறது துளியின் பயணம்..
பூவின் இதழ் மீது தங்கி ஒய்யாரமாய் நின்ற மற்றோர் துளிக்கு எக்கவலையும் இல்லை..
தேடலற்ற பயணங்கள் சொகுசானதாய் ..
தேடுகிற தடங்கள் இறுதி முனையின்
ஓர் ஓரமாய்
தேடல் நீதியுடன்,
பரம்பொருள்களின் ஆசிர்வாத இறுதிமுனை பற்றிய தர்க்கமற்று....
.....கவிக்கவின்.

A POEM BY KAVIKKAVIN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Seeking the ultimate end of a plant
The droplet of water travels.
The upper end and the lower end growing daily
hamper the fervour…
The demonism of the winds mindless uproar’s prime-force
causing anguish
yet wandering all over the plant the droplet
continues searching.
With the confusion regarding the root-end and the bud-end
near the root arrived at
apprehensions pertaining to central root and fibrous root
prevail……
Going past Epics, novels with no spontaneous overflow
unrefined alchemic climate listless thorn-glaring branch
_the journey of the droplet continues.
The other drop settled on the flower-petal
elegantly
has no worry whatsoever….
Journey without search, luxurious
The trails of search
at a corner of the ultimate end….
With the Search having its own justice
with no disputes about the blessed ultimate finish
of the great grand inferences .



r


A POEM BY KAVI KAVIN - 2
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
I would be standing in the nooks and crannies of the forests….
There searching for me I would come all alone….
The forest that enters through my ears
that are not familiar with the sounds of forest
would probe me searching and seeking….
I who hides all anguished
would be apprehended by I
who has come in search of I…
That jungle would stand exclusive
safeguarding my footprints
and give them to me
who comes throwing open the jungle.
On that day
these words would say
of my jungle meant for jungles….