கவிஞர் நேசமித்ரனின்
கவிதையை முன்வைத்து…..
.jpg)
நேச மித்ரனின் கவிதை:
..............................................................................
•
அந்த மரம் சும்மாதான் நிற்கிறது
சும்மா இருக்கும் மரம்தான்
ஒரு பழைய இலையை பழுக்க வைக்கிறது
ஒரு புதிய வேர் வழியில் இருக்கும்
பாறையை முட்டிக் குடைந்து கொண்டிருக்கிறது
கடந்து போகும் மேகம் கருக்குமா
பொழியுமா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது
வீசும் காற்றில் கிளை முறிந்து விடாமல் இருக்க வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது
அவ்வளவு வெய்யிலை
உள்ளங்கையில் சுடச் சுட ஏந்தி
சோறு சமைத்துக் கொண்டிருக்கிறது
தாமதமாய் கூடு திரும்பும் பறவைக் கூட்டில் குஞ்சுகளுக்கு சமாதானம் சொல்கிறது
இன்னொரு கூட்டில் முட்டைகளை திருடி உண்ணும் பாம்பை ஒண்னும்
செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கிறது
பூக்களை கனியாக்குகிறது
மரங்கொத்திக்கு உடல் தருகிறது
நன்கு வளர்ந்து நின்ற ஒரு நாள்
அறுத்துக் கொண்டு போகும்போதும்
அப்படியேதான் நின்று கொண்டிருக்கும்
என் அம்மா
ஹவுஸ் ஒயிப்தான் சார் என்பதும்
மரம் சும்மாதான் நிற்கிறது
என்பதும் ஒன்றுதான்
..........................................................................................................
English Translation(by me)
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
That tree is just standing there
கவிமனம் இருபாலினமானது
என்ற என் நம்பிக்கையின் நிரூபணமாய் இக்கவிதை. நிறைவான வாசிப்பனுபவத்தைத் தந்தது.
கவித்துவம் அறவேயற்று எழுதப்பட்ட வெறும் போதனை, அறிவுரை, பிரச்சார வரிகளையெல் லாம்
பெண்விடுதலைக் கவிதைகளாக உருவேற்றி,
அதன் மூலம் தங்களுக்கான மேடைகளை நிறுவிக் கொண்டு,
பெண்கள் எழுதும் கவிதைகளை ஆண் என்ற ஒரே காரணத்தால் திறனாய்வு செய்யத் தகுதிவாய்ந்தவர்களாய் பீடத்திலேறி
பரப்புரை செய்து ....
HOUSEWIFE என்பதற்கு பதில் இப்போது HOME-MAKER என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், சொற்களின் அர்த்தங்களை மனதில் வாங்கிக் கொண்டாலொழிய மனமாற்றம் ஏற்படாது. மனமாற்றத்திற்கு இத்தகைய கவிதைகள் கண்டிப்பாக உதவும்.
.............................................................................











