LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 1, 2021

பத்மினி மேடம், உங்கள் தோழமைக்கு நன்றி!

 பத்மினி மேடம்,

உங்கள் தோழமைக்கு நன்றி!

_லதா ராமகிருஷ்ணன்


(*5.7.2017 அன்று எழுதிய கட்டுரை அல்லது கடிதம் இது. இங்கே பகிரத் தோன்றுகிறது - லதா ராமகிருஷ்ணன்)

 

அன்புமிக்க பத்மினி மேடம்,

 

இன்று காலை நான் ஃபேஸ்புக்கைத் திறந்தபோது நாமிருவரும் அதில் நட்பினராகி இரண்டு வருடங்களாகி விட்டதாக ஃபேஸ்புக் அறிவித்திருந்தது.

 

அதைப் படித்ததும் நினைவுப்பாதையில் நடக்க ஆரம் பித்து, (பொதுவாக அப்படிச் செய்வது என் வழக்க மில்லை) உங்களோடான நட்பு குறித்த சில இதமான எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதை (அப்படியானால் இதமற்ற கணங்களும் உண்டு என்று அர்த்தமில்லை. நம் நட்பில் அப்படி எதுவும் இருந்ததில்லை!) என்னால் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், சக மனிதர்களை நிஜமான அக்கறை யுடனும் மரியாதையுடனும் அணுகும், மிகச் சில மனிதர்களில் நீங்களும் ஒருவர்.

 

மேலும், இதை நான் எழுத விரும்பியதற்கு இன்னு மொரு காரணம் - இதுபோல் இன்னுமொரு தருணம் வாய்க்காமலே போய்விடக்கூடும். (நான் மரணத்தைப் பற்றிப் பேசவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நம் இருவருக்குமே அஞ்சலிக்கூட்டங்கள் உவப்பானதாக இருப்பதில்லை!)

 

உங்களைப் பற்றி நான் எழுதுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னால் எழுதாமலிருக்க முடியவில்லை. நான் உள்நோக்கத் தோடு, சுயலாபத்திற்காக ஒருவரைப் பாராட்டமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

 

‘’சிறைதிரைப்படம் குறித்து எல்லோரும் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்த சமயம், நான் கணையாழியில், அந்தக் கதையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்ணை ஏற்க மறுத்து அவளை துரத்திவிடும் கணவனை வில்லனாக சித்தரித்து (அவனும் சமூக நியமங்களால் கட்டமைக்கப்பட்டவன் தானே என்பதைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல்) அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவனை மேலானவ னாகச் சித்தரிக்கும் போக்கை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதி யிருந்தேன். அதைப் படித்துவிட்டு நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்கள் (அப்பொழுது நான் சென்னை அபிராம புரத்தில் ஒரு சிறிய வாடகைவீட்டில் குடியிருந்தேன்). என் கட்டுரையையும், அதில் நான் முன்வைத்திருந்த கோணத்தையும் பாராட்டினீர்கள். அன்று தொடங்கியது நம் நட்பு.

 

உங்களிடமிருக்கும் தீராத் தேடலும், சக மனிதர்களுடன்தெரிந்தவர் கள், தெரியாதவர்கள் _ இடையறாது உரையாடல் நிகழ்த்துவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வமும், மனித இருப்பின் அழிவுகள், அலைக்கழிப்பு கள், கனவுகள், கலவரங்களின் அடியாழத்திற்குச் சென்று பார்க்கும் உங்கள் முடிவற்ற அலசலும் என்னை மலைத்துப் போக வைக்கிறது. மகாத்மா காந்தி மீது உங்களுக்கிருக்கும் அளப்பரிய மரியாதையை நானறிவேன். வாழ்க்கையில் முடிந்தவரை பொய்யே சொல்லக்கூடாது என்ற கொள்கையை நீங்கள் இன்றுவரை கடைப்பிடித்து வருவதையும் நானறிவேன்.

 

நம்மிருவருக்கும் பொதுவான தோழியொருவர் பகிர்ந்துகொண்ட செய்தி நினைவுக்கு வருகிறது. யாரோ உங்களிடம்நீங்கள் ஏன் நகையே அணிவதில்லை?” என்று கேட்டபோது, நீங்கள் அளித்த பதில் – ”ஏன் அணிய வேண்டும்?”

 

நாம் சந்திக்கும்போதெல்லாம் ஏதாவதொரு சமூக அநீதி, பிரச்னை, நடப்பு குறித்து அக்கறையும் கவலையுமாய் அலசியாராய்ந்து பேசுவீர்கள். ஒருமுறைகூட உங்கள் தனிப்பட்ட பிரச்னை என்று எதையுமே (அப்படி ஏதேனும் இருக்குமெனில்) நீங்கள் பேசியதே யில்லை.

 

இன்னொரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒருமுறை உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உங்களிடம் உங்கள் குடும்பம் தொடர்பாக ஏதோ அற்பக் கேள்வியைக் கேட்டுதெரியாதேஎன்று நீங்கள் சொன்னதற்கு, ‘இதுகூட நினைவில்லையா?’ என்று கேட்ட போது உங்கள் தோழியொருவர், ‘பத்மினிக்கு மானுடந்தழுவிய, சர்வதேச, தேசிய, மாநிலப் பிரச்னைகள்தான் நினைவிருக்கும், இதெல்லாம் இருக்காதுஎன்று குறிப்பிட்டார்! எனக்கு அந்த வாசகங்களை சரியாக நினைவுகூர முடியவில்லை. ஆனால் உங்களை அறிந்தவர்கள் அந்தக் கூற்று எத்தனை உண்மையானது என்று அறிவார்கள்!

 

யாரேனும் உங்களிடம் வந்து தெரிந்தவர் அல்லது உறவுக்காரர் ஒருவருடைய மகள் திருமண தினத்தன்று இன்னொருவனோடு ஓடிப்போய்விட்டதாக கண்கள் பளபளக்க மகிழ்ச்சியோடு வம்புபேச முன்வந்தால், அந்த விஷயத்தை, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் உளைச்சலை,அத்தகைய சம்ப வம் யார் வீட்டிலும் நேரக்கூடும் என்ற உண்மையை அகல்விரிவாக நீங்கள் பேச, வம்புபேசத் தொடங்கியவர் கவலையும், பீதியுமாய் அவமானமாய் உணரும்படியாகிவிடும்!

 

ஒரு விஷயம் நம் மனதை அலைக்கழிக்கிறதென்றால் அந்த விஷயத்தைப் பிரக்ஞாபூர்வமாக மனதிலிருந்து தள்ளிவைத்துவிட வேண்டும் என்று நீங்கள்தான் என்னிடம் சொன்னீர்கள்.

 

சொல்வது எளிது,’ என்று முதலில் நான் இடக்காக நினைத்துக் கொண்டாலும், இத்தனை வருடங்களில் இந்தசிகிச்சைஎனக்கு உண்மையாகவே நிவாரணம ளித்திருக்கிறது.

 

எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் பொதுப்படையான, மேலோட்ட மான கருத்துரைப்பது உங்களுக்குப் பிடிக்காது.

 

.ஐந்தாறு வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த பின் கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பிரிவு ஏற்படுமெனில் அந்தத் திருமணமே தோல்வி என்று ஒட்டுமொத்த மாக எப்படி முத்திரை குத்த முடியும்?” என்று நீங்கள் அடிக்கடி கேட்பதுண்டு.

 

இருபது வருடங்களுக்கும் முன்னால் ஸ்வச்சித் (SWACHID _ soldiers of war against corruption, hunger, ignorance and disease) என்ற பெயர் கொண்ட சமூகநல இயக்கம் கணையாழியின் நிறுவனரும் எழுத்தாளருமான திரு.கஸ்தூரி ரங்கனால் துவங்கப்பட்டது. நான் 1990 இல் மேற்கு சைதாப்பேட்டைக்கு குடிபெயரும்வரை நாம் அதில் முனைப்பான உறுப்பினர்களாகச் செயல்பட்டு வந்தோம். நீங்கள் எப்பொழுதுமே ஏதாவ தொரு சமூகப்பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொண்ட வண்ணமே; உங்களால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்தவண்ணமே. விளம்பரமோ, தம்பட்டமோ அறவே கிடையாது.

 

நீங்களும் உங்கள் நட்பினரும் சமூகத்தின் நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி மழலையர் வகுப்புக்குழந்தை களுக்குச் செய்துவரும் பணி போற்றத்தக்கது. நகரின் சில அரசுப் பள்ளிகளில் அந்த ஏழைக் குழந்தைகளுக்கு தரமான மாண்டிசோரி கல்வி கிடைக்க உங்கள் சேவை நிறுவனமான ஸ்ரீ ராமசரண் அறக்கட்டளை மூலம் வழிசெய்திருக்கிறீர்கள். இந்தப் பணியை மேற்கொள்வதில் நீங்கள் எதிர்கொண்ட இடையூறுகள், அவமானங்கள், சிக்கல்களை நானறிவேன். ஆனாலும், உங்கள் எண்ணம், சிந்தனை முழுக்க அந்தக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதிலேயே இருந்தது. அந்தப் பள்ளிகள் சிலவற்றில் உங்கள் 50+ ஆசிரியைகள் மாணாக்கர்களுக்கு தமிழ்மொழியைப் பிழையறப் பேசவும், எழுதவும் கற்றுத்தந்தார்கள்.

 

உங்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆசிரியைகளுக்கும் உங்களுடைய சமுதாயப் பணியில் உத்வேகத்தோடு பணீயாற்றும் புரிதலையும் கடமையுணர்வையும் ஏற்படுத்தி யிருக்கிறீர்கள். சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காகப் போராடுவதாகச் சொல்லும் அரசியல் கட்சிகள் அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்ப தையும், தரமான சுகாதாரச் சூழல் கிடைப்பதையும் உறுதிசெய்ய போதிய கவனம் செலுத்துவதில்லையே, இந்தப் பள்ளிகளை அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடிக்கொருதரம் வந்து பார்வையிடலாம்,, எவ்வளவோ செய்யலாம் என்று நீங்கள் அடிக்கடி வருந்திக் கூறுவதுண்டு.

 

உங்களுடைய இந்தப்பணி மிகவும் முக்கியமானது. நாளைய தலைமுறையின் நலனை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் தொலைநோக்குப் பார்வையுடைய பணிக்காக உங்களுக்கும், உங்கள் தோழியர்க ளுக்கும், ஸ்ரீராமசரண் அறக்கட்டளை நிறுவனர்களுக்கும், உங்கள் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நீங்கள் எதிலும், எல்லாவற்றிலும் உண்மையைத் தேடுபவர். அதுவே உங்கள் இயல்பாக, வாழ்நெறியாக இருக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், எப்பொ ழுதுமே வாழ்வு குறித்த ஒரு தீவிரத் தேடல் உங்களிடம் இருந்துகொண்டேயிருக்கிறது. எல்லா நேரமும் சக மனிதர்களுடன் அல்லது உங்களுடனேயே இடையறாது உரையாடிக்கொண்டேயிருக்கிறீர்கள். என்னுடைய ஒரே வேண்டு கோள்

 

நாம் நட்பினராகி ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் மேலாகிறது. எனக்கு 29 வயதான சமயம் உங்களுக்கு 58. இருமடங்கு. இன்று நான் 59இலிருந்து 60க்குப் போகிறேன்.(அல்லது, போயாகிவிட்டதோ! எனக்கு ஷோபா டேயின் எழுத்துகள் பிடிக்காது. மேலோட்டமான வையாகத் தோன்றும். ஆனால் அவர் ஒரு கட்டுரையில் இன்றைய உலகில் 60 வயது என்பது கடந்த உலகின் 40 வயதிற்குச் சமம் என்று குறிப்பிட்டிருந்ததைப் படித்த போது அந்த எழுத்தாளர் மேல் எனக்கு அன்பு பெருகியது!) உங்களுக்கு இப்போது 88,வயதிருக்கலாம். ஆனால், வயதென்பது நம் நட்பில் என்றுமே முட்டுக்கட்டையாக இருந்ததில்லை.

 

தலைமுறை இடைவெளியை நாம் என்றுமே உணர்ந்த தில்லை. அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்று வதுண்டு (எடுத்துக்காட்டாக, நீங்கள் எவரொருவர் ஒரு நல்ல கருத்தைக் கூறினாலும்யார் கூறினார்கள்என்று பார்ப்பதை விட்டு கருத்தின் மேன்மையை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பீர்கள்.

நான், எந்தக் கருத்தானாலும் யார் சொல்கிறார்கள் என்பதும் சம அளவு முக்கியமானது என்பேன்.) ஆனால் நாம் என்றுமே மற்றவர் கருத்திற்கு, அப்படி வேறுபட்ட கருத்துரைக்க மற்றவருக்குள்ள உரிமைக்கு மதிப்பளித்திருக்கிறோம். சில (தற்போது அதிகரித்து வரும்) ‘போலி அறிவுசாலிகளைப் போல் மாறுபட்ட கருத்துடைய வர்களைக் கேவலமாகப் பார்த்து, பேசி, முகத்தில் எல்லாநேரமும் ஓர் இளக்கார, அதிமேதாவிப் புன்சிரிப்பைப்படரவிட்டபடி, நமக்கு மட்டுமே எதைப் பற்றியும் கருத்துரைக்க உரிமை யும் தகுதியும் இருக்கிறது, மற்றவர்களெல்லாம் முட்டாள்கள் என்ற நினைப்போடு ஒருவரையொருவர் மட்டம்தட்டிக்கொண்டதில்லை; வார்த்தை களுக்கு எத்தகைய அழிவாற்றல் உண்டு என்று தெரிந்திருந்தும், பிறர் மதிக்கும் தரமான மனிதர்களைமூஞ்சூறு முதலாளிகள்’,’ முனகும் முதலைகள்’, ’முட்டாள் கோட்டான்கள்’, நடுத்தர வர்க்க நாய்கள்என்றெல்லாம் அடைமொழி சூட்டி மதிப்பழிக்க முனைவதில்லை. (அப்படிச் செய்பவர்கள் தங்கள் செயலின் மூலம் வெளிப்படுத்துவது தங்கள் தராதரத்தையே.)

 

இந்த மடலை நான் கம்ப்யூட்டரில்டைப்செய்துகொண்டிருக்கும் போது என்னுடைய அம்மா இதோ உறங்கிக் கொண்டிருக்கிறார். , அவருக்கு 81 வயதாகிறது. துணிச்ச லான பெண்மணி. அவர் கவிதை வாசிப்பதோ எழுதுவதோ கிடையாது. ஆனால், தினசரி அருகிலுள்ள கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒருமுறை (பல வருடங்களுக்கு முன்பு) அச்சு அசலான போலி அறிவுசாலியாய் நான் அவரிடம் கேட்டேன்: “கடவுள், அப்படி ஒருவர் இருப்பாரெனில், அவர் ஒருவரே என்னும்போது நீ ஏன் தினமும் வேறு வேறு கோவில்களுக்குச் செல்கிறாய்?”

 

உனக்குப் புத்தகங்கள் எப்படியோ, எனக்குக் கோவில்களும் அப்படியேஎன்று மட்டும் சொல்லி முடித்துக்கொண்டார். பிறகு, சில நாட்கள் கழித்து, ”நாற்பது வயதை எட்டாத நிலையில் ஒரு பெண் (என் அப்பா இறந்த போது அம்மாவுக்கு 38 வயது இருக்கும்) பாதுகாப்பாய் அமர்ந்துகொள்ள முடிந்த இடம் கோயில். அங்கே என்னைப்போன்ற பல பெண்களைப் பார்க்க முடியும். பல்வேறு சிரமங்களிலும் துயரங்களிலும் எதிர்நீச்சல் போட்டு அவர்கள் வாழ்வதைப் பார்த்து எனக்கும் வாழ்வில் நம்பிக்கையும் உத்வேகமும் பிறக்கும். நான் கோயிலுக்குச் செல்வதுஇதைத் தா அதைத் தாஎன்று கடவுளைக் கேட்க அல்ல. என் இரு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள உதவியாய் எனக்கு மனவலிமையும் உடல் நலனும் இருக்கும்படி செய்ததற்காகக் கடவுளுக்கு நன்றிசெலுத்தத்தான்”, என்று எடுத்துரைத்தார்.

 

என் அம்மா கவிதை எழுதாவிட்டால் என்ன? வாசிக்காவிட்டால் என்ன? அவரே ஓர் அதிநுட்பமான கவிதை!

 

நீங்களும் அப்படித்தான் பத்மினி மேடம். உங்களிடமும் என் அம்மா விடமும் நான் பேசும்போதெல்லாம், நீங்கள் எனக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே உங்களை ‘take it for granted’ தோரணையில் நடத்திவிடக் கூடாது என்ற நினைப்பு எனக்குள் இருந்துகொண்டேயிருக்கும்.

 

நீங்கள் எப்பொழுதுமே புத்தகங்களை நேசிப்பவர். தீவிர வாசிப்பாளி. பலவகையான நூல்களையும், அவற்றில் உண்மையும் சாரமும் இருக்குமெனில், வாசிப்பவர். ஜெயகாந்தன், பாரதியார், காந்தியின் சத்திய சோதனை, மணி பௌமிக், பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், க்வாண்ட்டம் தியரி, ராமாயணம் Thich Nhat Hanh இன்னும் எத்த னையோ உங்கள் மனதுக்குப் பிடித்த நூல்கள் உள்ளன. 80, 90களில் நீங்கள் தமிழ் இலக்கிய இதழ்களை நிறையவே வாசிப்பவராக இருந்திருக்கிறீர்கள். இலக்கியக் கூட்டங்களுக்கும் செல்வீர்கள்.

 

நீங்கள் சில நல்ல நவீன கவிதைகளும் எழுதியிருக்கிறீர்கள்! உங்கள் நட்பினர் யாராவது அவற்றைப் பிரசுரித்து விடுவார்களோ என்று அஞ்சி அவற்றை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக் கிறேன்!

 

உங்களுக்கு எழுபது எழுபத்தியைந்து வயதிருக்கும் போது கணினி வகுப்பு மையத்தில் சேர்ந்து அடிப்படை கணினி இயக்கம் கற்றுக்கொண்டீர்கள். இன்று நீங்கள் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்ட் கைபேசியிலும் இயல்பாய் இயங்கிக்கொண்டிருக் கிறீர்கள்.

 

உங்களுக்கு உங்களுடைய மதிப்பார்ந்த முன்னோர் குறித்த கர்வமோ, பிரக்ஞையோ என்றுமே இருந்த தில்லை, அந்தஸ்து, அதிகாரம், செல்வம், செல்வாக்குஇவையெல்லாம் உங்களை என்றுமே பிரமிக்கவைத்ததில்லை.

 

நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்து சுவடற்றுச் சென்று விட வேண்டும்என்று நீங்கள் எப்போதுமே கூறுவீர்கள். உங்கள் நட்பினருக்காகவும், அறக்கட்டளைப் பணிகளுக் காகவும், அர்ப்பணிப்புள்ள ஆசிரியைகளுக்காகவும், அடித்தட்டுமக்களின் குழந்தைகளுடைய நலவாழ்வுக்காகவும் நீங்கள் நீண்டகாலம் நலமாக வாழவேண்டும்.

 

எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளது. இப்போ தைக்கு முடிக்கிறேன். 2005இல் வெளியான என் கவிதைத்தொகுப்பில் உங்களுக்கு நான் சமர்ப்பணம் செய்திருக்கும் கவிதையொன்று இதோ.

 

உங்கள் தோழமைக்கு நன்றி, பத்மினி மேடம்.

 

அன்புடன்

லதா

 

 

நெல்லிக்கனி

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

அகலிகையின் அடிபணிந்த ராமனை அறிமுகம் செய்தாய்.

ஜானகியின் கரம் பற்றிக் கானகமெங்கும் திரிந்த

காதல் மணாளனைப் பரிச்சயமாக்கினாய்.

நாதவெளியில் மிதக்கும் நற்றவம் கற்றுத் தந்தாய்.

பாதிப்பாதியாய் ஆளுக்கொரு முனையிலிருந்து

இழைபிரித்த கனவுச்சிடுக்குகள், நனவு முடிச்சுகள் நிறையவாய்.

சிக்கவிழ்த்தோம் சில மார்க்கங்களின் திக்குகளை.

ஒருபோதும் அதிராத உன் அடிமனக் குரல் எனக்கொரு

பிடிமானமாய்.

அவரவர் வெந்தழலுக்குள் கனன்றபடி

நந்தலாலாவைச் சொந்தமாக்கிக் கொண்டோம்.

நிறைமாத கர்ப்பிணியின் எதிர்பார்ப்பும் குறைப்பிரசவக் கையறுநிலையுமாய்

நம்முடைய கலந்துரையாடல்கள்

மூன்று புள்ளிகளோடே முற்றும் திறம் வரமாய்ப் புரியப்

பெருகுமாக் கடலொரு பரிசாய் உனக்கு என்றும்

.

(’பத்மினி மாடம்க்கு)

 

PADMINI MADAM, THANKS FOR BEING MY FRIEND!

 PADMINI MADAM,

THANKS FOR BEING MY FRIEND!

5.7.2017

(This an article or rather an open letter written by me in the year 2017. Thanking Padmini madam for her enriching friendship. i feel like sharing it here.

_ Latha Ramakrishnan




Dear Padmini Madam,

Today morning when I opened facebook it informed me that we have been friends for two years in facebook.

I couldn’t help walking down the memory lane (though as a rule I don’t) and share some warm thoughts about you (not that there are cold thoughts too! There aren’t) for you are one of those very few persons who treat your fellow humanbeings with real concern and courtesy.

Also, I want to write this as there may not be another occasion. (I don’t refer to death here. You know that. Incidentally, both of us never like Memorial Meetings!)

I know you won’t like me writing about you, but, I can’t help it. And you do know that I never admire anyone with some ulterior motive or with vested interest.
‘When everybody was going ga-ga over the movie ‘Sirai’ I wrote an article in Kanaiyazhi, writing against the then prevailing tendency of painting the protago nist’s husband black for refusing to accept her after she was raped, but condoning the rapist, You came to see me (I was then in a small tenement in Abhiramapur am) appreciating my stand and writing and there began our friendship. I am amazed at the way you have been a seeker always, going to the depth of the chaos and controversies of human existence.

I know your immense reverence for Mahathma Gandhi and your vow not to tell any lie which you follow till date.

I remember the incident shared with me by one of our common friends that when someone asked you why you were not wearing any jewels you simply asked in a matter-of-fact tone ‘why should one wear jewels?’

Whenever we meet you will always have some social concern to share and ponder over. Never once have you spoken of your personal grievances, if any. I remember another anecdote that when somebody asked you regarding some trivial issue connected with your domestic life and you were not remembering, your friend said that you would always be thinking of international affairs and national affairs and hence you have no time to ponder over personal problems! I don’t remember the exact words or incident but people who know you will know how true it is!

Even if someone comes to you with some juicy gossip such as someone’s daughter eloped with someone on the day of her marriage, you would speak elaborately on how much of pain it would have caused to all concerned - so much so that the person who began talking with such glee at the sad plight of others would grow pensive, apprehensive and ashamed of herself!

It was you who told me that if anything troubles our mind we should keep that particular thought outside us and consciously stay away from entertaining that thought. ‘Easier said than done’ I thought at first but all these years this ‘therapy’ has really helped me.
You never like sweeping generalizations. A husband and wife having happy married life for six years and then growing apart means, how can we call the marriage a failure as a whole?’ you would muse often.

More than three decades ago we joined a social movement called SWACHID (soldiers of war against corruption, hunger, ignorance and disease) founded by Mr. Kasthurirangan, writer and founder- editor of Kanaiyazhi and till I moved to Saidapet in 1990 we were being active members of the Movement. And, you have always been doing some social work or other, helping someone or other, with ‘nil’ publicity or pomposity.

And, what you and your friends are doing to the children of the downtrodden families studying in Chennai Corporation Schools is phenomenal. With your focus solely on enabling the children to have the best possible education in their early stage of life, you and your friends have started Sri Ramacharan Charitable Trust and have taken up introducing Montessori method of Teaching in the primary classes in quite a number of such outlets. Despite having to face so many hurdles and adversities on the way, your focus never once shifted and you have motivated your 50+ teachers also to have their focus on the downtrod den children and their well-being. I have often heard you say sadly that the political parties which claim to work towards the uplift of the downtrodden should take more interest in ensuring quality education and quality sanitation to these children.

Your initiative is worth mentioning, to say the least, and I salute your good self, your friends, Trustees and members of your esteemed organization and last but not the least your committed teachers for this visionary initiative of yours.

We have been friends for over 30 years now. When I was 29 years of age you were exactly twice my age. Now I am 59 going to be 60 ( I have never liked writer Shoba De and have always considered her to be superficial but when she observed in one of her articles that in the present day 60 years of age means 40 years of age I loved her with all my heart!) and you must be 88 or so now. But, age has never been a constraint in our friendship and we have never felt any communi cation gap.
There would be difference of opinion now and then( like you would say that if a profound statement is made we should concentrate on what is said than who said it and I would say that who says it also matters equally) but we have always agreed to disagree, allowing each other’s right to differ, not like the ‘ever-increasing pseudo progressives’ who look down on all others and take extra care to have a sarcastic smile spread on their countenance, thinking in all ignorance that they alone are right, brave and what not and they alone have the right to speak on certain issues, and, what is worse, decry people of merit by calling them names such as ‘barking bosses’, ‘fiddling fools’ 'middle-class morons' and what not(thereby exposing their own calibre), knowing well how words have the power to cause havoc in a society.

When I am typing this, my mother who is 81 is sleeping. Such a brave lady. She doesn’t read or write poetry but she makes it a point to visit some temple or other everyday. Once(long back) I asked her with the typical sarcasm of a pseudo intellectual ‘ Why do you have to go to temple everyday? After all god is one, if at all there is a god”. She merely said, “What books are to you, temples are for me” and ended the conversa tion. After several days she told me how for a woman in her late thirties (when my father died she was 38 or so) temple is a safe and convenient place to go and sit and that she can sit and talk with other women like her there and when she sees other people suffering in life but going on with grit and determination it strengthen ed her will-power and belief in life and that she went to the temple not to demand anything from god but to thank god for keeping her mentally and physically strong and in a position to look after her two children).
So what if she is not reading or writing poems? My Mother is a poignant poem!

So are you, my dear friend Padmini Madam. Whenever I speak to you and my mother I will be constantly reminding myself that I should not take you for granted just because you are close to me.

You have always been an ardent lover of books - Jaya kanthan, Bertrand Russel, Mani Bhaumik, Bharathiar, Thich Nhat Hanh, Quantum theory, Ramayana, Gandhi's Sathya Sodhanai and many more are your favourites!

And you have also written several real good poems. But, you keep them hidden somewhere, fearing that your friends would publish them! When you were in your seventies you attended a computer class and learnt the basics of computer operation. Now you are quite at ease with computer and android phones! You are never conscious of your worthy lineage. You are never overawed by power, position, assets and all the rest. ‘We should lead a meaningful life and leave without a trace’ you would always say. You should live long and healthy for the well-being of many downtrodden children.

Lots more to write. But, let me finish now with a poem of mine included in one of my poem-collections (மற்றும் சில திறவாக் கதவுகள், (மகிழம் வெளியீடு, 2005) which I have dedicated to you years back.

THANKS FOR BEING MY FRIEND MADAM.

affectionately
latha

THE JOY OF CARING AND SHARING

You introduced to me the Rama who fell at the feet of Akaligai reverentially;
You made me get acquainted with the Rama, the dear husband of Janaki who wandered all over the forest holding her hand all too lovingly;
You taught me the blessed state of floating in the musical space;
The entangled dreams and knots of thoughts and memories that we have untied strand by strand with each holding one end are indeed too many;
We unraveled the directions of several trails
Your ever serene inner voice has provided a sustaining support to me
With each of us burning in one’s own raging fire
We befriended Nandhalala and made him our own.
The way our dialogues would come to a close with three dots….
proving a boon
The ever-swelling ocean
being a gift to you on and on .

நெல்லிக்கனி
அகலிகையின் அடிபணிந்த ராமனை அறிமுகம் செய்தாய்.
ஜானகியின் கரம் பற்றிக் கானகமெங்கும் திரிந்த
காதல் மணாளனைப் பரிச்சயமாக்கினாய்.
நாதவெளியில் மிதக்கும் நற்றவம் கற்றுத் தந்தாய்.
பாதிப்பாதியாய் ஆளுக்கொரு முனையிலிருந்து
இழைபிரித்த கனவுச்சிடுக்குகள், நனவு முடிச்சுகள்
நிறையவாய்.
சிக்கவிழ்த்தோம் சில மார்க்கங்களின் திக்குகளை.
ஒருபோதும் அதிராத உன் அடிமனக் குரல் எனக்கொரு
பிடிமானமாய்.
அவரவர் வெந்தழலுக்குள் கனன்றபடி
நந்தலாலாவைச் சொந்தமாக்கிக் கொண்டோம்.
நிறைமாத கர்ப்பிணியின் எதிர்பார்ப்பும் குறைப்பிரசவக்
கையறுநிலையுமாய்
நம்முடைய கலந்துரையாடல்கள்
மூன்று புள்ளிகளோடே முற்றும் திறம் வரமாய்ப் புரியப்
பெருகுமாக் கடலொரு பரிசாய் உனக்கு என்றும்.
(’பத்மினி மாடம்’க்கு)



LET US RESPECT CHILDREN! Says MRS.PADMINI GOPALAN,

          LET US RESPECT CHILDREN!

Says
MRS.PADMINI GOPALAN,
FOUNDER-PRESIDENT,
SRI RAMACHARAN TRUST
_Written by Latha Ramakrishnan (*written and published in June, 2011)_

Padmini Gopalan, the founder-President of Sri Ramacharan Charitable Trust starts speaking in her gentle voice. "We are a group of women, all office bearers of a renowned social service organization called the Monday Charity Club. We felt the need to carry out a project connected with primary education for under privileged children. Hence we started the Sri Ramacharan Charitable Trust® in 1999 that has successfully established the Montessori Method in 20 Balwadis and Corporation School units across seven centers in Chennai.

There are seven volunteer trustees and all the donations received are directly used for charitable purposes.
Our Micro Credit Scheme helps poor people to start small business ventures or pay school fees.
We felt the need to focus on young children of an impressionable age. We wanted to give them proper education coupled with having a righteous, calm and blissful attitude towards life.
The result was the introduction of the Montessori Style Instruction in the Chennai Corporation Schools and the Balwadis starting in 2005. _ Sri Ramacharan Charitable Trust.

CHILD IS THE FATHER OF MAN ; CHILDREN ARE THE HARBINGERS OF A BETTER TOMORROW. So we have a lot more quotable quotes which highlight the importance of children. In the same way we have very many a maxim that drive home the importance of Education for the uplift of an individual and the society as a whole. The world renowned Tamil Poet Bharathiar had said that educating a poor child (or, for that matter, even an adult) is undoubtedly the best of all noble deeds.
The psychiatrists claim that the experiences that the child under goes before it reaches the age of five and that the impressions it gains during its initial five years of existence on Earth and that which it learns in this period have a lasting effect on its entire life and they shape his adulthood, so to say.
This is the reason why Madam Montessori found the exemplary system of education for the toddlers which has proved itself a time-tested method of teaching, the world over. Montessori System of Education aims at a comprehensive, wholesome development of the child by instilling self-confidence and by making it feel independent and self-sufficient. But, as this method of teaching the toddlers involves a lot of tools and accessories which the children are taught to handle by themselves, it is somewhat costly and hence only very few private schools have so far been running their kindergarten classes following Montessori method. When this being the case there was no chance of the children of Government Schools to have access to this boon of an Educational System.
But, no society can hope to move forward without giving the best of education to the children of weaker sections. And, it is to the credit of Chennai Corporation that with an adequate realization of this simple truth it has set out to introduce Montessori Method of Teaching for the tiny toddlers in Corporation Schools.
Initially through the Parent-Teacher Association it joined hands with the Chennai-based Sriramacharan Charitable Trust, a Service Organization and introduced this System of Education to the students of the pre-primary classes and seeing its positive impact on the toddlers and the way it has won the unanimous apprecia tion of the parents the Chennai Corporation has taken up the cause of imparting this method of Education to children in right earnest, in the true spirit of uplifting the poor and the weaker sections of the society.
Sri Ramacharan Charitable Trust has also initiated the pioneering project of Micro-Credit through which small vendors and poor students are given loan to enable them to come up in life. “The timely loan has made a firm and lasting impact in the life of many deserving individuals and we are happy to see their progress”, says Mrs. Padmini Gopalan, the founder-president of Sri Ramacharan Trust, a soft-spoken but firm-minded lady. She has never been conscious of her advancing age as her mind is always occupied with the task of critically analyzing the various aspects and complexities of life and human relationships and she is ever eager to discuss all sorts of worthy and perplexing issues threadbare. She is open to differing views and healthy debates. An out-and-out unassuming person, Mrs.Padmini Gopalan is a very discerning reader and well-versed in Carnatic Music. All forms of good art aim at ennobling man’s life, within and without, holds she with great conviction.
Right now her mind is too full of taking the Montessori system of education to as many poor and needy children as possible. “Children are to be treated with love and care and above all with due respect. I am pained to see the way many, both at home and in school ill-treat them and intimidate them, out of ignorance and sheer indifference, observes Mrs.Padmini Gopalan with pain in her voice.
At present there are some twenty Corporation Schools in the City of Chennai imparting this method of teaching to the children. And, in all the Schools where this system of education is introduced a significant improvement in the learning skills and activities of the children, is seen and felt by the parents and the school authorities. The disciplined and confidant way in which they conduct themselves is a treat to watch!
Going to School is no longer viewed as an ordeal by these toddlers for now they have a world of their own where they can explore a lot through Sight, Sound and Touch! Hence, there is a significant increase in the number of new admissions as the Heads of Schools happily inform. The parents are happy to see their little children conducting themselves with self-discipline, eager to learn things and the real values of life. Further, in this Method of Teaching the teacher-student bond is not mechanical or that exists between a master and menial but lively and reassuring with the children regarding their teachers as their friends.
Hope this constructive initiative of Chennai Corporation Schools would continue. Of course, for any innovative approach there would surely be some resistance due to many reasons. Driven by a feeling of insecurity as regards their place and position or with vested interests there may be some who oppose any new beginning. I only wish that this rare opportunity of receiving the best possible primary education should not be denied to the children of the weaker sections of our society and to this end the parents and the teachers should be sensitive enough to realize the importance of children and their well-being for the peace and prosperity of any society.
And, a real good initiative like this which is aimed at making possible a wholesome development as regards the mental and physical activities of children before the age of five, enhancing their physical and mental capabilities, their interest in learning lessons and skills and cultivating good habits in them, a system that creates a friendly atmosphere for them, with the teachers interacting with them as friends and co-learners, teaching them to be self-confident and self-sufficient should continue at all cost.
And, I sincerely feel that those who strive for the uplift of the poor and downtrodden, those who work for the cause of children, those educationists endowed with humaneness and social consciousness, politicians across the board should see to it that this boon of an education brought within the reach of the weaker sections of the society should have a smooth sailing, benefiting more and more children of the weaker sections, turning them into able and intelligent human-beings.
Children are the most vulnerable for they know not what their rights are nor how to safeguard their interests and they are completely at the mercy of the elders. Hence, one and all of us are duty-bound to protect their interests and hence it becomes imperative on our part to see to it that the children of Corporation Schools continue to receive this time-tested and enriching Method of Primary School Education.
“When I was in my seventies I started this venture with a group of like-minded friends. We are happy to see it growing and benefiting children. If only we have more funds or get more financial assista nce from good Samaritans who believe in Montessori System of Education we can sponsor many promising young women to undergo training in Montessori system of Education which would help a great deal in the overall development of children”.
Email id: / sriramacharan@yahoo.com

அவா - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  அவா

அவாவை நானாகிய இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
புறந்தள்ளும் அவாவிலேயே
அவாவை அறம்பாடுகிறேன் என்றார்.
அவாவைப் புறந்தள்ளியாகிவிட்டதா
தள்ளிக்கொண்டிருக்கிறீர்களா,
தள்ளப்போகிறீர்களா என்று கேட்டதற்கு
அவா இருந்தால்தானே அவாவைத் தள்ளவோ
கொல்லவோ முடியும் என்றார்.
அவா மட்டும்தான் புறந்தள்ளப்படவேண்டியதா
என்று வினவியதற்கு
அவாவே அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படை
என்றார்.
அப்படியுரைப்பதொரு குத்துமதிப்பான கருத்தல்லவா,
ஒட்டுமொத்தமான பொறுப்புத்துறப்பல்லவா என்றதற்கு
அப்படியிப்படி எக்குத்தப்பாய் ஏதேனும்கேட்டாலோ
கரும்புள்ளி செம்புள்ளி அப்பிவிடுவேன் அப்பி என்று
காறித்துப்பாத குறையாய். காதில் அறைந்தார்.
தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடாமல்
அப்படியேே நின்று
அவாவுக்குத் தனித்தனி உருவமுண்டா
அல்லது அதுவொரு மொந்தையா என்று கேட்டதற்கு
வேண்டும்போது அதை மொந்தையாக்கிக்கொள்ளலாம்;
தனித்தனி உருவமாக்கிக்கொள்ளலாம்.
அவாவைப் புறந்தள்ள என்ன தேவையோ
அதை செயல்படுத்துவதே நமக்கான சவாலாகட்டும்
என்றார்.
அவா புறந்தள்ளப்படவேண்டியது என்றால்
பின் ஏன் நீங்கள் அவ்வப்போது
ஓர் அவாவுடனிருக்கும் படத்தைப் பதிவேற்றுகிறீர்கள்
என்று கேட்டதற்கு
அவாவில் சின்ன அவா பெரிய அவா உண்டல்லவா
எளியதை உதறித்தள்ளி வலியதைக்
கைக்கொள்ளுவதே
அவா தொடர்பான ஆகப்பெரும் சூத்திரம்
என்றார்.
உங்கள் வாழ்வில் அவாவின் பாத்திரம்தான் என்ன
என்று கேட்டதற்கு
அவா எனக்குக் கிடைத்திருக்கும் ஜோக்கர் சீட்டு,
என்றார்.
குவா தவா சிவா ரவா போல்
அவாவும் வேண்டும்
அன்றாட வாழ்க்கைக்கு சுவாரசியம் சேர்க்க
என்று பாடிக்கொண்டே வேகமாய்ச் சென்றவரின் முதுகில்
பளிச்சிட்ட கண்களில்
கண்ட
அவா மீதான வெறுப்பு
அவரை மெகா துறவியாக்க
அவாவை சபிக்கும் அவாவில் அவர்
அவாஞானியென்ற அடைமொழிக்குரியவராக…..