LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label தேவையும் அளிப்பும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label தேவையும் அளிப்பும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Thursday, December 19, 2019

தேவையும் அளிப்பும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


தேவையும் அளிப்பும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


நாற்பது அறைகளைக்கொண்ட அரண்மனை போன்ற
மாளிகைவாசி
அவற்றில் ஆறு அறைகளை வீடற்ற வறியவர்களுக்குத்
தந்தால் என்ன?”
என்றார்.
நான்கு அறைகளைக் கொண்ட உங்கள் வீட்டில்
ஒன்றை நீங்களும்
ஒற்றை அறை கொண்ட எனது வீட்டில்
ஒரு சிறு மூலையை நானும்
கொடுக்கலாமே
என்றேன்.