LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 1. Show all posts
Showing posts with label எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 1. Show all posts

Saturday, May 9, 2026

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 1

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து

அவர் இதுவரை தேர்தல்ல நின்னு ஜெயிச்சிருக்காரா, சொல்லுங்க

’இல்லை. அதனாலே என்ன?’
’அதனாலே என்னவா? மக்களாட்சியிலே மக்களால தேர்ந்தெடுக்கப்படாமல் வரலாமா?’
’அப்படின்னா, தேர்தல்ல ஜெயிச்சு வரவங்க எல்லாம் நல்லவங்களா? மக்களுக்கு நல்லது பண்றவங்களா?”





..................................................................................
வீதியில இறங்கிப் போராடணுங்க. ரத்தம் சிந்தாம எதுவும் நடக்காது.

நீங்களும் கலந்துப்பீங்கதானே?

இல்லீங்க, நான் இப்ப அமெரிக்காவுல இருக்கேன். நாளை மறுநா தான் இந்தியா வருவேன்.

அதுனால என்னங்க? போராட்டத்தை ரெண்டு நாள் தள்ளி வச்சுக்கலாம்.

இல்லீங்க – வந்ததும் நான் அடுத்தநாளே ஆஸ்திரேலியா வுக்குப் போயிடுவேன்.





“அய்யோ, என்னங்க இது இங்கே நிறைய அனுபவ சாலிங்க விஜயின் கட்சியைச் சார்ந்த இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடணும்னு எழுதிக் கிட்டிருக்காங்க?

அவங்களுக்கென்ன – பாதுகாப்பான இடத்தில இருந்துக் கிட்டு புரட்சிக் கருத்துகளை சொல்லிக்கிட்டேயிருப் பாங்க.... தவெக வைச் சேர்ந்த இளையதலைமுறையினரை உசுப்பேத்திவிட்டு போராடவச்சாத்தானே அவங்களுக்கு அடிபடவைக்க முடியும். அந்தப் பழியையும் விஜய் மேல சுலபமா தூக்கிப்போட்டுடலாம். .....

“அய்யய்யோ...





யாரையும் கலந்தாலோசிக்காம, அறிவுரை கேக்காம இப்பிடி மனம் போன போக்கில நடந்துக்கறது நல்லாவா இருக்கு? நான் சொல்றது புரியுதா?
நல்லாவே புரியுது. ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலை சந்திக்கக்கூடிய அளவு வந்திருப்பவர் யாரையும் கலந்தாலோசிக்காமலா, அறிவுரை கேட்காமலா செயல்பட்டிருப்பாரு? உங்களுடைய ஆதங்கமெல்லாம் ஃபேஸ்புக்கைத் தாண்டி பெரிஸ்ஸா யாருக்குமே தெரியாத உங்களை அவரு எப்படியாச்சும் தேடிவந்து இல்லைன்னா தொடர்புகொண்டு உங்க மேலான ‘அரைவேக்காடு’ ஆலோசனைகளைக் கேக்கலைங்கறது தானே?!
?????????????????????????????????????????????????????????????????????


பிரபல நடிகர்: ரொம்ப வருத்தமாயிருக்கு. ரொம்பவே வருத்தமாயிருக்கு. ஆனா, நீங்க வருத்தப்படாதீங்க. உங்க கஷ்டத்தில நான் உங்ககூடவே இருப்பேன்.
பதவியிழந்த அரசியல் தலைவர்: (மனதுக்குள்) எதுக்கு? என் அழுகையை துடைச்சுவிடறதுக்கா? எனக்கு வோட்டு போடச்சொல்லி ஒரு வார்த்தை வெளிப்ப டையா பொதுவெளியில சொன்னீங்களா?
பிரபல நடிகர் (மனதுக்குள்) மோடிக்கே நான் அப்பிடிக் கேட்கலையே. கேட்டிருந்தா நீங்களும் உங்க தொண்டர் களும் என்னை எப்பிடியெல்லாம் கழுவி ஊத்தியிருப் பீங்க! மோடி இன்னும் தோக்கலை . அதுனால நான் இன்னும் அவர்கிட்ட போய் இந்த வசனத்தைப் பேச வேண்டிய நேரம் வரலை.






அநியாயம், அக்கிரமம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்தான் ஏதோ கோளாறு. அதுதான் நான் தோற்றதற்குக் காரணம் - நான் பதவி விலகவே மாட்டேன்.

அப்பிடின்னா, நீங்க ஜெயிச்சிருக்கிற தொகுதிகள்ள?

அங்கெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விதிவிலக்கா நல்லாத்தான் வேலை செஞ்சுது!
????????????????????????????????????????????????????




[*வாக்களிக்கச் செல்லும் வழியில் கேட்டது]

’எல்லோரும் ’நோட்டா’வுக்கே போட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்

'ஆமாம். ஆனால், செய்யமாட்டாங்களே'

[அதாவது, பேசிக்கொண்டுபோன அந்த இரண்டு பேரும் அத்தனை அறிவாளிகளாம். இந்த தேர்தலுக்காக உழைத்த அத்தனை பேரும் - வேகாத வெய்யிலில் பிரச்சாரம் செய்த அரசியல்வாதிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் - அறிவீலிகளாம்]



‘ நம் வாக்கு நம் உரிமை ’


‘ஆமாங்க – இதே தான் எல்லா சேனல்லேயும் வருது.

'அதை நாம் வீணடிக்கக் கூடாது'.

அப்படியெல்லாம் வீணடிக்க மாட்டோமுங்க – பணம் கிடைச்சாலும், கிடைக்காட்டியும் கட்டாயம் போடு வோம்ங்க. நீங்க?

நாங்க நீலாங்கரையில வீடு கட்டி குடியேறி நாலு வருஷம் ஆகுது. இன்னும் வாக்காளர் அட்டை விலா சத்தை மாத்த நேரம் கிடைக்கலை.

அடடா – அப்ப எப்பிடி வோட்டு போடுவீங்க?

நம்ம ஒருத்தர் வோட்டில என்ன இருக்கு? WHATEVER WILL BE, WILL BE’

எதுக்குங்க திடீர்னு இங்கிலீஷுக்கு மாறிட்டீங்க?

இங்கீலீஷ்ல ஏதாவது சொன்னா நான் அறிவாளின்னு நம்பிடுவீங்க, நான் வாக்களிக்காமலிருப்பது என்னு டைய அலட்சியம் இல்லை, அறச்சீற்றம்னு நினைச்சுக்கு வீங்கன்னுதான்….

?????????????????????????????????????????????????????????




அய்யோ – இது என்ன ?….

எது என்ன?

நேத்துவரைக்கும் ஆளுங்கட்சியைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த இந்த நாளிதழ் இன்னிக்கு ஆளுங்கட்சி யின் சாதனைகளை விளக்கி முழுப்பக்கம் எழுதியிருக் குதே

அது அரசு விளம்பரம்ங்க

PAID NEWS போலவா

அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, அப்படிச் சொல்லாமலிருக்கவும் முடியாது...



ஐயா, அம்மா – உங்கள் பொன்னான வாக்கை எனக்கே அளிக்க வேண்டுகிறேன்.

’ஆனா, யார் தன்னுடைய மொத்த சொத்தில பாதியை சமூக மேம்பாட்டுக்காக முதலிலேயே கொடுத்துவிடு கிறாரோ அவருக்குத்தான் என் ஓட்டு.

அய்யய்யோ, இது என்ன வம்பா போச்சு.....





‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

‘மொதல்ல, இது மக்களாட்சி’.

‘மக்களாட்சியிலும் மன்னர்கள் உண்டு; இளவரசர்கள் உண்டு.

‘அடிமைகளும் உண்டுதான். இதில் ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது நல்ல நகைச்சுவை; பொழுதுபோக்கு'