அன்றும் இன்றும் என்றும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஒன்றுமேயில்லை யிதில்
என்றார்.
ஒன்றுமில்லாததைப் போய்
எல்லாமிருக்கிறது என்கிறாயே
என்றார்.
ஒன்றிப்போக முடியவில்லையே
என்றார்.
நன்றாகவேயில்லையே
என்றார்.
கண்றாவி யென்றார்.
காறித்துப்பினார்.
கரித்துக்கொட்டினார்.
ஒன்றிலிருந்து நாம் பெறும்
ஒன்று
அந்த ஒன்றை விட அதிகமாக
நம்மையே அடையாளங்காட்டுகிறது
என்றே
என் வழி சென்றேன்.
No comments:
Post a Comment