LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, January 12, 2025

பெருகிவரும் பாலியல் வன்கொடுமைகள் _ லதா ராமகிருஷ்ணன்

 பெருகிவரும் பாலியல் வன்கொடுமைகள்

_ லதா ராமகிருஷ்ணன்



அண்ணா பல்கலைக்கழகம்
அடுத்து
பத்தனம்திட்டா
அடுத்து....

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து சமீபத்தில் ஒரு தமிழக மூத்த அமைச்சர் ‘வங்காளத்தில் நடக்கவில்லையா, பீகாரில் நடக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். என்ன சொல்ல வருகிறார் அவர்? பாலியல் வன்கொடுமை வழக்கமான ஒன்றுதான் - யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறாரா?
இப்போது கேரளத்தில் பத்தனம்திட்டா என்ற ஊரில் ஒரு மாணவி - விளையாட்டு வீராங்கனை கடந்த சில வருடங்களாக தனது 13 வயதிலிருந்து 60க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக் கிறாள் என்ற செய்தி நேற்று வெளியாகியிருக்கிறது.
விளையாட்டுப் பயிற்சியாளர் முதல் சக மாணவர் வரை யாராராலோ வன்புணர்ச்சி செய்யப்பட்டிருக்கிறாள். அவளிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டு சந்தேகப்பட்டு மாணவிகளுக்கான ஆலோசனைக் குழுவிடம் ஆசிரியை தெரிவித்ததில் அவர்கள் அந்த மாணவியிடம் விசாரித்ததில் கிடைத்த விவரங்கள் அவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றன.
இன்று போர்னோக்ராஃபி படங்கள், இணையதளங்கள் என பெருகிவரும் காலகட்டத்தில் பெண் வன்புணர்ச்சி செய்யப்படு வதும் அதைப் அடம்பிடித்து அவளை மிரட்டி இன்னும் பலருக்கு இரையாக்குவதும் ஒரு பெரும் வியாபாரமாக நடந்துகொண்டிருக் கிறது. மிக அவலமான நிலைமை இது.
இளம் வயதில் காதல் உணர்வு ஏற்படுவது இயல்பு. அதைப் பயன்படுத்திக்கொண்டு சம்பந்தப்பட்ட பெண்ணை பலரும் பயமுறுத்திச் சீரழிப்பது வாடிக்கை யாகிவருகிறது. கோயில் விழாக்களில் ஆடப்படும் மிக ஆபாசமான நடனங்களை சிறார்கள் முன்வரிசையில் அமர்ந்து பார்ப்பதாகக் காட்டப்படும் காணொளி கள் இன்று நிறையவே வலம் வருகின்றன. இவர்களுக்கு பெண் குறித்த பார்வை என்னவாக அமையும்?
கல்விக்கூடங்களிலும், கல்லூரிகள், பணியிடங்களிலும் பெண்க ளுக்கான ஆலோசனை மையங்களும், உதவி மையங்களும் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. உதவிக்கு அழைக்க வெனத் தரப்படும் தொலைபேசி எண்கள் பல நேரங்களில் தக்க நேரத்தில் தொடர்புகொள்ள முடியாத அளவிலேயே இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
ஊடகங்கள் இத்தகைய விஷயங்களில் எத்தனையோ ஆக்க பூர்வமாகச் செயலாற்ற முடியும். சட்டரீதியான விஷயங்கள், பெற்றோர்கள்- பெண்கள்- சமூகத்திற்குரிய SENSITIZATION PROGRAMMES , கல்விக்கூடங்கள், மற்ற இடங்களில் இதுகுறித்த விழிப்புணர்வுக் கூட்டங்கள், உதவி மையங்கள் என பல விஷயங்கள் குறித்த தகவல்களைத் தரலாம். ஆனால், முக்கால்வாசி தொலைக்காட்சி சேனல்கள் ’குற்றமும் பின்னணி யும்’ போன்ற தலைப்புகளில் இத்தகைய அவல நிகழ்வுகளை சுவாரசியம் நிறைந்த திகில் கதைகளாக ஒளிபரப்பிக் கொண்டிருப்பதில் மும்முரமாக இருக்கின்றன.
யூட்யூப்களில் பல காணொளிப்படங்கள் ஆரம்பத்திலி ருந்து இறுதி வரை ஒரு நோயாளிப் பெண்ணை அவளுக்கு சிகிச்சையளிக்கு நபர் பாலியல் சீண்டல் களுக்கு உட்படுத்துவதாக விலாவாரியாகக் காட்டி இறுதியில் அந்தப் பெண்ணின் மகள் அவன் மண்டையில் குண்டாந்தடியால் அடிப்பதாகக் காட்டி முடியும். அந்தப் படங்களின் நோக்கம் வேறு என்பது வெளிப்படையாகத் தெரியும்.
இங்கே பெண்ணியவாதிகளோ, மாணாக்கர்களோ, பொது மக்களோ , அரசியவாதிகளோ - எல்லோருமே எங்கு அநியாயம் நடந்தாலும் ஓரணியில் திரளும் சாத்தியமே இல்லாத நிலையே நிலவுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கொடுமையை எதிர்த்து மாணாக்கர்கள் ஓரணியில் சேர்ந்து எதிர்ப்பு காட்ட வில்லை. மகளிரும் அப்படியே. அரசியல்வாதிகளும் அப்படியே.
தில்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நிகழ்ந்த அநியாயத் திற்கு எதிராகக் குரலெழுப்பியவர்கள் பத்தனம்திட்டாவில் இப்போது வெளியாகியிருக்கும் மாணவி - பாலியல் வன்கொடு மைக்கு எதிராகவும் குரலெழுப்புவார்களா, தெரியவில்லை. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறைக்கு எதிராக நகரிலுள்ள முக்கிய பெண்ணுரிமை அமைப்புகள் ஓரணியில் குரலெழுப்பியதாகவும் தெரியவில்லை. அரசியல்கட்சிக்கூட்டணி களாகத்தான் அணிபிரிந்து அநியாயங்களை எதிர்ப்போம் என்ற போக்கு படைப்பாளிகளிடையேயும் பலமாக ஊடுருவியிருப் பதைப் பார்க்க முடிகிறது.
........................................................................................................................................
HOME / KERALA / CRIMEStudent makes more revelations, was subjected to gang rape; 20 persons arrested so far Saturday 11 January, 2025 | 11:34 PMREAD MALAYALAM VERSION PATHANAMTHITTA: Fifteen more people were arrested on Saturday in the case in which a Dalit girl was subjected to sexual abuse by 64 individuals in five years

No comments:

Post a Comment