ஒரேயொரு கப் காஃபி
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(* ’தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)
ஒரேயொரு கப் காஃபி கேட்டேன்.
நினைவூட்டல், நினைவுகூரல், நெகிழ்வுறல்
நெருக்கமுணரல், தகிப்பு, கொதிப்பு, கொந்தளிப்பு
கதகதப்பு, உயிர்ச்சூடு, உன்மத்த ஜன்னி…..
கால நீள அகலங்களிடை கட்டுமொரு திரவப்பாலம்.
கை வாய் இடை மரணக்கிணறின் மோட்டார்பைக்.
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
காதம் பல கடந்து வந்திருந்தேன்.
ஒரேயொரு கப் காஃபி கேட்டேன்
அரைகப்பாயிருந்தாலும் தரும் கனிவில் நுரைபொங்கும்….
சிறு முகச்சுளிப்போடு வரவழைக்கப்பட்ட காஃபியில்
கருகிவெந்தன குரல்வளை மனம் ஆன்மா மேலும்….
போலும்தான்போலும் எல்லாமும்……
No comments:
Post a Comment