LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, June 24, 2018

வழிச்செலவு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வழிச்செலவு
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)
(*24.6.2018 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

ஓருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில்
எனக்கேயெனக்கான நிழலை 
குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில்
இன்று
நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர்.
சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி;
சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின்
திருப்பெயர்களைச் செதுக்கியபடி;
சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி;
சிலர் தலவிருட்சமாய் பிரதட்சணம் செய்து
நெடுஞ்சான்கிடையாய் விழுந்து கும்பிட்டபடி.
சிலர் சலசலத்திருக்கும் பறவைகளைப் 
பலகோணங்களில் படமெடுத்தபடி…..
உணவிடுவார்களோ உரமிடுவார்களோ, தெரியவில்லை.
மரத்தின் பச்சையம் மாற்றுக்குறையாமலிருக்கிறதா
அறியேன்.
வனாந்திரம் மரத்தின் விருப்பா? அன்றி 
விபத்தாயமைந்த இருப்பா?
கனாக்கண்டு முடித்தபின் கண்விழித்த கதையாய்
பயணப்பொதி சுமந்துவழியேகும் தருணம் 
விழிநிரம்பும் நீர் வழியும்
மரம் வாழப் பொழிமழையாய்.


வீதியுலா - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


வீதியுலா
                                     ரிஷி
                                                            (
லதா ராமகிருஷ்ணன்)
                                     (*24.6.2018 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது.
அது மண ஊர்வலமா பிண ஊர்வலமாதெரிவதில்லை.
சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது.
பலசமயங்களில் இல்லை.
இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில்வாராயென் தோழி வாராயோவை அடுத்து வந்துவிடுகிறது
போனால் போகட்டும் போடா’……
ஊர்வலம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது;
நான் ஊர்வலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்.
வருவதும் போவதும் சந்திக்கும் புள்ளியில்
உருவாகும் கருந்துளை வெற்றிடமோ? அணுத்திறமோ…..?
அதோ, அந்த ஊர்வலத்தில் நானும் போய்க்கொண்டிருக்கிறேன் _
மௌனமாய் _ மகிழ்ந்து சிரித்தபடி _ மாரிலடித்து அழுதபடி……
ஓலமும் ஆலோலமும் ஆனபடியே….
தொலைவில் தெரியும் வெளிச்சப்புள்ளி
மோட்டார் பைக்கா? தண்ணி லாரியா….?
ரய்லில்லை, கப்பலில்லை என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை.
நான் நகர்ந்துகொண்டிருப்பது
நிலத்திலா, நீரிலா, ஆகாயத்திலா என்று 
நிச்சயமாகத் தெரியாத நிலை.
உள்ளேயொரு ஆகாயவிமானம் தரையிறங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு கப்பல் தரைதட்டிக்கொண்டிருக்கிறது.
இரண்டிற்குமிடையேயான வித்தியாசத்தில்


Tuesday, June 19, 2018

பிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பிரதி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



”எதற்கு ?

வேண்டாம் _

போதும்.”

உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய் எழுத்தாளர் பிரதி;

கலவியின்ப க் கிறக்கச்சிணுங்கலாய் இருபதாயிரம் மைல்களுக்கப்பால் சுயமைதுனஞ்செய்யும் வாசகப்பிரதி;

கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது கவிதை கன்னங்களில் நீர் படிய

Wednesday, June 13, 2018

Saturday, June 9, 2018

திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடுஇல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள்
லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த
தோழி நீலா அல்லது லீலா.



நானே ஒப்புக்கொள்வதில்லையே என்று நகைத்த என்னைப்
பகையாளிபோல் பார்த்தபடி
பார்த்தே தீரவேண்டும்;
நேர்த்திக்கடன் செலுத்தாதிருப்பது தெய்வக்குத்தம்-
உய்ய வழி தேடிக்கொள். அவ்வளவுதான் சொல்வேன்என்றாள்.



பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த தெனாலியில்
கிளப் டான்ஸர்(?) கணக்காய் அத்தனை குட்டைப்பாவாடையில்
அண்ணனோடு ஜோதிகாத் தங்கையைப் பார்த்ததில் உண்டான பீதியில்
அரங்கில் இடியிடித்து எரிமலை வெடிப்பதாய் பரவிய
ஒலியின் வன்முறையில் பலவீனமாகிப்போன மனதிற்கு
திரும்பவும் தியேட்டருக்குள் நுழைய தைரியம் வரவில்லை” யென்றேன்.



”பெண்ணின் நடை யுடை பாவனை குறித்து உனக்கெல்லாம்
எத்தனை மனத்தடை” என்று பழித்தாள்.
நான் சொல்லிக்கொண்டிருப்பது மனத்தடையின்
இன்னொரு பரிமாணம் பற்றி என்பதை
நன்றாகவேஅறிந்திருந்தும் ஏதுமறியாதவள் போல பேசுபவளிடம்
மேலும் என்ன சொல்லவிருக்கிறது…. ?
நாளும் வாளாவிருப்பதே இங்கே சாலச் சிறந்தது…..



அதையும் செய்யவிடாமல்
அங்கே விற்றுக்கொண்டிருந்த இளநீரைத் தாண்டிச் சென்று
கோலா வாங்கிக் கொடுத்தபடி _
”அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோள்களிலிருந்தெல்லாம்
வந்திறங்கிக் கண்டுகளித்துக்கொண்டிருக்கிறார்கள்;
அவர்களில் பேர்பாதிக்கும் மேல்
பாரியஎழுத்தாளர்கள்பாரியஎழுத்தாளர்கள் தெரியுமா”
என்று கூறிச் சென்றாள் மாலா அல்லது ஷீலா.



காரியமாய் அன்றி மனதார அப்படியேதேனுமொரு நூல்
அவர்களுடைய மேடைகளில் என்றைக்கேனும் மரியாதை செய்யப்பட்டிருக்குமானால்…….என்று
முனகும் மனதின் முட்டாள் வாயை முக்கியமாய் அடைத்தாகவேண்டும்….



அகண்ட திரையின் ஆக்கிரமிப்புக்கு அப்பால், இருள் மூலைகளில்
இறைந்துகிடக்கின்றன ஏராளமான இலக்கியப் படைப்புகள்
சிறிய அறிமுகமற்று, ஒரு வரி விமர்சனமுமற்று
சக படைப்பாளிகளாலும் சீந்தப்படாமல் _
வீசியெறியப்பட்ட மீந்த சோற்றுப்பருக்கைகளாய்