இருண்மை பாதி - எளிமை பாதி .......
LIFE GOES ON.....
Tuesday, January 7, 2025
இருண்மை பாதி - எளிமை பாதி ....... ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
SELECTIVE AMNESIAவும் STRATEGIC விழிப்பும்
'படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்'
மலைமுழுங்கிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
//2022, JANUARY 7 - மீள்பதிவு//
Tuesday, December 31, 2024
இதுவும் கடந்துபோகும்
இதுவும் கடந்துபோகும்
https://www.youtube.com/watch?v=tznSYzIylWs
புது வருடத்திற்கு என்னால் சக மனிதர்களுக்கா கப் பகிரக் கூடிய இந்த எளிய பரிசு இன்னொருவ ரின் இசையில் இன்னொருவரின் வரிகளில் இந்தப் பாடலின் வழி வரவாகும் வாழ்வு குறித்த நம்பிக்கை, பற்றுறுதி, இன்னும் எத்தனையோ.
கொரானோ காலத்தில் வெளிவந்த பாடல் இது. எல்லாக் காலத்திற்குமானது.
உருவாக்கியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
கையறுநிலைக் கவிதை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
கையறுநிலைக் கவிதை
பலாபலன்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
பலாபலன்கள்
INSIGHT a bilingual blogspot for Contemporary Tamil Poetry 2019insight.blogspot.com OCT, NOV, DEC 2024
AN APPEAL
உதவிகோரி.......
//ஃபேஸ்புக்கில் இருக்கும் திரு, Semmal Abethan இன் வேண்டுகோள் இங்கே பகிரப்படுகிறது. உங்கள் உதவி யால் நாளைய நம்பிக்கைக்குரிய வாசகர்களுக்குப் புத்தகக் கண்காட்சிக்குப் போய்வர முடியும். சில புத்தகங்களை வனக்கிப் படிக்கவும் முடியும்.//
தமிழ்க்கவிஞர் ஆத்மாஜீவுக்குத் தோள்கொடுப்போம்
கவிஞர் ஆத்மாஜீவின் சமீபத்திய கவிதையொன்று கீழே தரப் பட்டுள்ளது. சிறந்த கவிஞர். காலக்ரமம் என்ற இலக்கிய இதழை நடத்தியவர். சமீபகாலமாக உடல் நலிந்தும் உழைக்க இயலாம லும் நிதி நெருக்கடியிலும் அவர் அனுபவிக்கும் வலிவேதனை களை அவருடைய கவிதைகள் பேசிவருகின்றன. முடிந்தவர்கள் அவருக்கு உதவ முன்வரவேண்டும். எத்தனையோ சமூக நல அமைப்புகள், அரசியல் அமைப்புகள் இருக்கின்றன. இவர்கள் கொஞ்சம் இந்தக் கவிஞருக்கு உதவிக்கரம் நீட்டினால் எத்த னையோ நன்றாயிருக்கும். இதுவும் இன்றியமையாத இலக்கியப் பணிகளில் ஒன்று. படைப்பாளியின் பசிப்பிணி போக்குவது.
வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு போய்விட
தூண்டுகிறது காலம்.
வாசலில் வந்து நின்று கூப்பாடு போடுகிறது
கழுத்தை நெறிக்கும் கைகள்.
நெஞ்சக்கூட்டில் கழுவேறியவனின் குரல்
நிராதரவாய் ஒலிக்கிறது.
கற்றுப் புரியா வாழ்வின் பாடம்
மொழிதெரியாதவனின் சாபம்.
இணையாளின் கால்களுடன் இணைந்து
வெளியேறத் துடிக்கிறது உயிர்க்கால்கள்.
கட்டங்கடைசியில் மரணத்தைக் கையேந்தி
வாய்க்கரிசியை மென்றபடி பயணிக்கிறோம்.
எங்கோ காத்திருக்கிறது எங்களை
ஏற்றுக் கொள்ளும் நதி.
ஆத்மாஜீவ்
MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS - VOL. 1 & 2
MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS -
VOL. 1 & 2
வெளியீடு : கலைஞன் பதிப்பகம்
ஒவ்வொரு தொகுப்பிலும் 150க்கு மேற்பட்ட சமகாலத் தமிழ்க்கவிஞர்களின் ஆளுக்கொரு கவிதை ஆங்கில மொழிபெயர்ப்பில் இடம் பெற்றுள்ளன.
முதல் தொகுதியிலுள்ள கவிதைகளை மொழி பெயர்த்தவர்: திரு S.N.ஸ்ரீவத்ஸா
இரண்டாம் தொகுப்பிலுள்ள கவிதைகளை மொழிபெயர்த்தவர்: லதா ராமகிருஷ்ணன்
வாங்கவிரும்புவோருக்கான தொடர்பு எண்:
திரு.ராஜா - +91 97104 22798
தன்வரலாற்றுப்புனைவு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
தன்வரலாற்றுப்புனைவு
இந்தக் காலத்துப் பாடல்கள்.....
இந்தக் காலத்துப் பாடல்கள்.....
இந்தக் காலத்துப் பாடல்கள் அந்தக் காலத்துப் பாடல்களைப்போல் இல்லை என்று ஒற்றைவரியில் தீர்ப்பளித்துவிடுபவர்கள் இங்கே நிறைய. ஆனால், எனக்கு என்றுமே அப்படித் தோன்றியதில்லை. இப்போதும் அருமையான பாடல்கள் நிறைய கேட்கக்கிடைக் கின்றன. எடுத்துக்காட்டாக இந்தப் பாடல். மனதையுருக்கும் வரிகள், இசை, குரல்.
இப்போது கேட்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிப்புக்காளாகியிருக்கும் அந்த மாணவியை யும் அவருடைய அன்பிற்குரிய அந்த மாணவரை யும் மனம் எண்ணி வலியுணர்வதைத் தடுக்க முடியவில்லை.
https://www.youtube.com/watch?v=lnYblKWl-Vw
அரசியல் பார்வை -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
//2019, DECEMBER 8 மீள்பதிவு//
அண்ணா பல்கலைக்கழக அவல நிகழ்வு
அண்ணா பல்கலைக்கழக
அவல நிகழ்வு
மிக மிக அவலமான நிகழ்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்தேறியிருக் கிறது. ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட் டிருக்கிறாள். அதற்கான எதிர்ப்பு ணர்வின், வலிவேதனையின் அந்த அவல நிகழ்வு குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் நோக்கத் தில் பாஜக தமிழகத்தலைவர் தன்னைத்தான் சாட்டையால் அடித்துக்கொண்டதை எள்ளிநகை யாடுவதில் ஆர்வங்காட்டும் எழுத்துலகப் போராளிகள் இந்த நிகழ்வு குறித்துக் கருத்து ரைப்பதை கவனமாகத் தவிர்க்கிறார்கள். இது வேதனைக் குரியது; வருந்தத்தக்கது.










%20image.jpg)

.jpg)


