என் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 3
LIFE GOES ON.....
Thursday, June 23, 2016
என் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் 1
என் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள்
தற்போது சென்னையில் இருக்கும் எழுத்தாளர் கோமதியிடம் அவருடைய நூலைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். ஜூன் 9ஆம் தேதி அவர் மாரடைப்பால் காலமானதாக சதாரா மாலதியின் மகளிடமிருந்து அன்று மின்னஞ்சல் வந்தது. தன் உடலை மருத்துவ ஆய்வுக்குத் தந்துவீடவேண்டுமென்றும், தனக்கு ஈமச்சடங்குகள் செய்யவேண்டாம் என்றும் கோமதி ஐசியூவுக்குப் ஓவதற்கு முன் கையெழுத்திட்டுத் தந்ததாகத் தெரிவித்திருந்தார். நேர்ப்பேச்சிலும் கோமதி அவர்கள் அதை என்னிடம் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. அவருடைய மறைவுச் செய்தி கேட்டு
மிகவும் வருத்தமாயிருந்தது.
MODERNITY IS
NOT IN DRESS; BUT IN OUTLOOK என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.
Sunday, April 24, 2016
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..! ரிஷி
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!
ரிஷி

”உனக்கு அப்பாவைப் பிடிக்குமா?
அம்மாவைப் பிடிக்குமா?”
என்று வழக்கம்போல் கேட்டார்கள்.
”அம்மாவை, அப்பாவை,
ஆட்டுக்குட்டியை,
அம்மிணிக்கொழுக்கட்டையை
இன்னும் நிறைய நிறையப் பிடிக்கும்
என்று மிக உண்மையாக பதிலளித்தது குழந்தை
0
இன்னொரு நாள் _ “உனக்கு லட்டு அதிகம் பிடிக்குமா?
ஜாங்கிரி அதிகம் பிடிக்குமா?” என்று கேட்கப்பட்டது.
”லட்டு அதிகம் பிடிக்கும், ஜாங்கிரியும் அதிகம் பிடிக்கும்,
பால்கோவா, பர்ஃபி, பக்கோடா, பபுள்கம்,
பஞ்சுமிட்டாய் எல்லாமே அதிகமதிகம் பிடிக்கும்
ஆனால் மண்ணை மட்டும் தின்னவே மாட்டேன்”,
என்று தன்னிலை விளக்கியது பிள்ளை.
0
பேராசைக்கும் பேரன்புக்குமிடையேயான
சன்னக்கயிற்றரவத்தின் மேல்
இன்றின் நேற்றிலும் நேற்றின் நாளையிலுமாய்
தன் சின்னக்கால்களால் அப்படியுமிப்படியும் ஓடி
காலக்காற்றில் அலைப்புண்டவாறு
களித்து விளையாடிக்கொண்டிருக்கும்
குழந்தையை
ஏந்த வழியின்றிப் பேதுறும்
என் இடுப்பின் குழிவளைவு.
0
எப்பொழுதுமே
இருகால்களை இருவேறு படகுகளில் வைத்துக்கொண்டு
பயணம் செய்யவே பிடிக்கும் குழந்தைக்கு.
நீரின் இருப்புப்பாதைகள் ஒரே சீராகச் செல்லமாட்டா
என்பது அதன் அறிவுக்கு எட்டுமோ தெரியவில்லை.
படகுகள் அளவுக்கதிகமாய் ஒன்றிலிருந்து ஒன்று
விலகிச் செல்வதும்
ஒன்றுக்கொன்று நெருங்கிவருவதும்
நதியோட்டத்தில் நடந்தேதீருவது.
நிலைதடுமாறி நீரில் விழுந்தும்
படகுவிளிம்பில் தலை இடித்தும்
என எத்தனை பட்டாலும்
இருபடகுகளில் தனித்தனியே
இருகால்களைப் பதித்துப் பயணம்போவதிலுள்ள
சாகசவுணர்வெழுப்பும்சந்தோஷமே
குழந்தைக்கு வேண்டியிருக்கிறது எப்போதும்.
0
இடைத்தூரம் நிறையவாய்
வளர்ந்துவிட்ட குழந்தையின்
உறைகாலப் புகைப்படத்திலிருந்து
கண்கள் மட்டும் என்னையே
குறுகுறுவெனப் பார்த்தவண்ணம்!
0
உன்னிலிருந்தே வந்ததெனினும் உனதல்ல குழந்தை
என்கையில்
என்னிலிருந்து வராதவொன்று எனதேயாகுமென்ற
எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்
எல்லோர் வாழ்விலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன
வரமும் சாபமுமாய்!
0
குழந்தைக்கண்களைக் குதூகலிக்கச் செய்யும்
ரயில்வண்டியோ ஆகாயவிமானமோ
நம் விழிகளுக்குத் தட்டுப்படுவதேயில்லை!
முக்கண்களாலும் மேலும் பார்க்கத்தெரிந்த குழந்தையின்
வாய்க்குள் தெரியும் மூவேழுலகங்களையும்
கண்டு வியந்து கலங்கிப்போகும் பேதை
உரலில் கட்டிவைக்கப்பார்த்தாலோ
சிரித்தபடி சிறகடித்துச்சென்றுவிடும் பிள்ளை!
0
எல்லையின்மையில் தோய்ந்த துளி வானவில்,
துளி நிலா துளி கனா துளி நீலம் கடலின் துளி
ரீங்காரம் காற்றின் நினைவின் நிறப்பிரிகையில்
ஒரு துளியென் பித்துக்குளி மனதின் ஒரு துளி
கலந்து இன்னும் என்னென்னவோ துளிகள் சேர்த்து
பார்த்துப்பார்த்துச் செய்த அன்புப்பரிசை
இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின்
அருகில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறேன்.
கண்விழித்ததும் குழந்தை காண்பது
அதன் மிகுவிருப்பத்திற்குரியதாகட்டும்.
0
Saturday, April 23, 2016
குழந்தை கை மாயக்கோல்! - ரிஷி
ரிஷியின் நீள்கவிதை
குழந்தை கை மாயக்கோல்!
ரிஷி
’குச்சி ஐஸ்’ வேண்டுமென்று கேட்டு பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை
கொஞ்சம் அங்கேயிங்கே அலைந்துவாங்கித்தந்து
சமாதானப்படுத்திவிடமுடியும்.
“பிச்சுத்தா மேலே தொங்கும் நட்சத்திரங்களை”, என்று கேட்டால்
என்ன செய்வது….?
எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்க
கையிலுள்ள மாயக்கோல் கொண்டு
கண் துஞ்சாமல் இரவு முழுக்க விண்ணைத் தாண்டி யேகு மந்த
எழுத்தேணியைக் கட்டமைத்துக்கொண்டது குழந்தை.
v
அடங்காத் தாகத்துடன் தட்டுத்தடுமாறி யேறத் தொடங்கியது
அவ்வப்போது மூச்சு முட்டியது;
அங்கேயிங்கே மோதிக் காயம்பட்டது.
கீழே போய்க்கொண்டிருந்தவர்கள் அண்ணாந்துபார்த்து
அங்கலாய்த்தார்கள்
அத்தனை ‘கொழுப்பு’ உடம்புக்கு ஆகாதென்று.
தங்களுக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளால்
கண்டித்தார்கள்.
கெக்கெலித்தார்கள், கல்லெறிந்தார்கள்,
பின் வழி போனார்கள் பூனைக்கண்மூடி.
அந்தரவெளியின் அரவணைப்பில்
குழந்தை யனுபவித்துக்கொண்டிருந்த ஆனந்தப்பரவசம்
அதற்கு மட்டுமே தெரியும்.
யாராலும் பொருள்பெயர்க்கலாகா வாக்கியமொன்றின்மேல்
தன் வாழ்க்கையை நிறுவிக்கொண்டுவிடுவதென்று
காற்றிடமிருந்து கசடறக் கற்றுக்கொண்டுவிட்டது
குழந்தை.
v
நூலேணியில் மேலேறிச் செல்லச் செல்ல
மனதிலூறிய இன்பத்தில்
விண்மீன்களைக் கொய்துவரும் எண்ணம்
அறவே மறந்துபோக
அந்ந்தரத்தில் சுந்தரத்தைக் கண்டுணர்ந்து
கைகொட்டி மகிழ்ந்துகொண்டிருந்தது குழந்தை.
பூரிப்பில் மின்னிக்கொண்டிருந்த அதன்
கண்களினூடாய்
வந்துசேர்ந்தன விண்ணின் இரண்டு புதிய
நட்சத்திரங்கள்!
v
அந்தரவெளியில் தொங்கிக்கொண்டிருக்கும் நூலேணி.
ஆரம்பமும் முடிவும் புலப்படவில்லையோ,
அல்லது இல்லையோ …..
சொல்வார் யார் உறுதியாய்.?
இறுதியில் எல்லாமே ஒரு கைத் தட்டலொலி
தானோ ஏனோ
மானோ மயிலோ மல்லிகைச்சரமோவெனத்
தானோடிக் கொண்டிருக்கிறது குழந்தை தாவித்தாவி
மேலே
வீணான கேள்விகளுக்கு விடையளிக்க நிற்காமல்.
v
கற்காமல் கைகூடாது அறிவு என்றே
கைகட்டி அமரச் சொன்னார்கள் வகுப்பறைக்குள்.
பொற்காசு பரிசளிப்பதாய் போட்டிவைத்தார்கள்
–
சட்டாம்பிள்ளைத்தனமாய் வகுத்துரைத்தார்கள்
இப்படியிப்படி யிருக்கவேண்டும் கவிதை
யென்று.
செல்வங் கொழிக்கும் இல்லில் பிறக்கவில்லை
யானாலும்
சொல்செழிக்கும் உள் வாய்த்திருந்த குழந்தை
ஆயகவிதையை எழுதலாயிற்று முற்றுப்புள்ளியிலிருந்து.
v
புள்ளிக்கு முன்னும் பின்னும்
கள்ளச்சிரிப்போடு துள்ளிக்கொண்டிருந்த
எண்ணிறந்த வரிகளைக்
காணவியலாதார்
”போட்டிக்கு நீ லாயக்கில்லை போ” என்று
பிரம்போடு வந்தனர்.
விருதுக்கல்லவே என் வரிகள் எனச் சொல்லியபடி
தான் எழுதியிருந்த வெல்லும் சொல் ஒன்றை
அவர்களுக்கு அன்பளிப்பாய் விட்டுவைத்து
அங்கிருந்து அகன்றது குழந்தை.
செய்வதறியாமல் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே
அந்தச் சொல்லிலிருந்து பல்கிப் பெருகலாயிற்று
நல்வினைப் பயன்களெல்லாம்!
v
கோலிகுண்டு, கலைடாஸ்கோப்,
பறவையின் சிறகிழைகள்,
கடற்கரைக் கிளிஞ்சல்கள்,
காற்றின் திருவுருவங்கள்
கானக விலங்கினங்கள்,
கண்ணன் வேய்ங்குழல்,
காற்றாடி, கலர்ச்சட்டை
கார்வண்டி, கப்பல், ராக்கெட்
பாக்கெட் நிறைய சாக்லெட்டுகள்
மண்டை முழுக்க மூளை
பாலையில் சோலை
உறவில் பிரிவு
பிரிவில் உறவு யென்றாங்கு
உறுகி யிறுகிக் குறுகிப் பெருகிப்
பிள்ளைக்கு வல்வினை தீர்த்தும் நல்வினை
சேர்த்தும்
எல்லாமாகி நிற்கும் சொல்.
v
மின்மினியின் ஒளிர்வில் தட்டுப்படும் பாதையில்
தன்னந்தனியாய் தளர்நடை பழகிக்கொண்டிருந்த
குழந்தையின்
கன்னத்தில் முத்தமிட
அந்தரத்திலிருந்து மிதந்திறங்கிவந்த
தேவதை
நெருங்கக் கண்டு புன்னகைக்கும் பிள்ளையின்
கனிவில்
வாயெங்கும் பரவிய இதுவரை யறியாத தித்திப்பு
தெவிட்டத் தெவிட்ட
வந்தவழி திரும்பமாட்டாமல்
திக்குத் தெரியாத காட்டில்
இன்னுமின்னும் குழந்தையை உச்சிமோந்தவாறு.
v
Subscribe to:
Comments (Atom)



