LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label வேறு வழி…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label வேறு வழி…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Friday, October 21, 2016

வேறு வழி…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


வேறு வழி….
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


கணயுகங்களில்
கசங்கிச் சுருண்டும்
கரிந்து சாம்பலாகியும்
காலெட்டிப்போடுகிறது மனம்,
காலாதீதவெளியிலும் _
சுக்குநூறான துண்டுதுணுக்குகளை
ஒன்றுசேர்க்கும் ரசவாதம் நிகழ்த்தும்
தீரா முனைப்பும் 
திக்குமுக்காடலுமாய்.


(சமர்ப்பணம்தோழர்கள் ஷக்திக்கும் சௌரிராஜனுக்கும்)