LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..? ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..? ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Sunday, May 12, 2019

அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..? ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


(*மே 12, அன்னையர் தினம்)

அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




அன்னையர் தினம்அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
அலங்கார விளக்குகள் தொங்கும்
அதி யகன்ற அரங்குகளில்.
அதனால் என்ன?
அம்மாவும் சரி அன்பும் சரி
முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான
அதலபாதாளத்தை
வென்றுவிட்டது தெரிந்தது தானே!
கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை
எந்தக் கவிதையும் மட்டமல்ல.
_ தனக்குள் சொல்லிக்கொண்டவள்
வெளியே தெரியாத தன் எளிய தாய்க்கு
அவளறியாதவாறு பரிசளிக்க
சிறிய பொட்டலமாய் ஒரு புத்தம்புதுக்
கவிதைக்குள்
பத்திரமாகப் பொதிந்துகொள்கிறாள்
தானாகிய கொத்துமலர்களை!

·       

[’இப்போது’ கவிதைத்தொகுப்பிலிருந்து
கவிதை எண். 17.துளிவெள்ளக்குமிழ்கள்(5)]