ஒரு கை ஓசை…..
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அண்ணாந்து
பார்த்து
கைதட்டும்போது
அங்கிருக்கும்
முகில்திரள்களுக்குள்ளிருந்து
எந்த
எதிர்வினையேனும்
கிடைக்குமோ
என்ற
எண்ணமெழுந்தது.
அன்றொருநாள்
படித்த
’ஒரு
கை
ஓசை’
நினைவுக்கு
வந்தது.
உண்மையில்
எல்லாமே
ஒரு
கை
ஓசை
தானா?
எண்ண,
இப்படி
இருகைகளும்
ஒன்றையொன்று
தொட்டுணர்ந்து
எத்தனை
காலமாகிவிட்டது!
பெருக்க
இடதுகை;
பைதூக்க
இடதுகை
எழுத
வலதுகை
உணவருந்த
வலதுகை….
இரண்டுகைகளுமாக
ஒரு
புத்தகத்தைப்
பிடித்துக்கொண்டிருந்தாலும்
ஒன்றையொன்று
தொட
வாய்ப்பில்லை.
சுடச்சுட
காஃபிக்கோப்பையை
ஏந்தியிருக்கும்
சமயத்திலும்
ஒரு
கை
கோப்பையின்
அடியிலும்
ஒன்று
கோப்பையின்
பக்கவாட்டிலுமாய்….
கடவுளைத்
தொழும்போது
இரண்டு
உள்ளங்கைகளும்
இணைந்திருக்குமென்றாலும்
அது
தொடுவுணர்வைத்
தாண்டியதொரு
தருணமாய்….
இரு
உள்ளங்கைகளின்
விரல்களின்
இணைந்த
தட்டலின்
அதிர்வுகளில்
இரட்டிப்பு
உயிர்ப்புணரும்
மனம்
எல்லோரும்
கைதட்டிமுடித்துவிட்டுக்
கலைந்துசென்ற
பிறகும்
கூட
சிறிதுநேரம்
அதையே
செய்துகொண்டிருக்கும்…….
கொரோனா அச்சுறுத்தல்:
No comments:
Post a Comment