பட்டியலுக்கப்பால்
பரவும்
என் கவிதைவெளி [2]
_ ரிஷி
*காலத்தின் சில ‘தோற்ற’நிலைகள் என்ற
தலைப்பிட்டு காவ்யா பதிப்பக வெளியீடாக 2005இல் வெளியான என்னுடைய நான்காவது
கவிதைத் தொகுப் பிற்கு எழுதியது
*காலத்தின் சில ‘தோற்ற’நிலைகள் என்ற
தலைப்பிட்டு காவ்யா பதிப்பக வெளியீடாக 2005இல் வெளியான என்னுடைய நான்காவது
கவிதைத் தொகுப் பிற்கு எழுதியது
சொல்லவேண்டிய சில...
’காலாதிகாலம் குடுவைக்குள்ளிருந்து வரும்
பூதம்.
மூச்சுத்திணறி விழி பிதுங்கி
வெளிவந்தாக வேண்டிய நாளின்
நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்
நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின்
உறுதியை
அறுதியிட்டபடி நகரும்
பகலிரவுகள்.
பாவம் பூதம், குடுவை, காலம், நான்
நீ யாவும்....’
பூதம்.
மூச்சுத்திணறி விழி பிதுங்கி
வெளிவந்தாக வேண்டிய நாளின்
நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்
நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின்
உறுதியை
அறுதியிட்டபடி நகரும்
பகலிரவுகள்.
பாவம் பூதம், குடுவை, காலம், நான்
நீ யாவும்....’
நானே குடுவையாய், நானே பூதமாய், எதுவோ தகர்ந்து, எதுவோ விடுதலையாகி எழுதப்படும் என் கவிதைகளில் எதிரொலிப்பதும் பிரதிபலிப்பதும் ஒரு மனமா? நானூறு மனங்களா? எல்லாம் என்னுடையவையா? ஒரு மனதின் கிளைகளோ, வெவ்வேறு மனங்களின்
கூட்டிணைவோ _ கவிதையை எழுதிமுடித்த பின் எதையும்
தெளிவாக வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. கவிதையை ‘அபோத’ நிலையில் எழுதுகிறேன்
என்பதல்ல. முழுப் பிரக்ஞையோடு தான் எழுது கிறேன்.ஆனால், அந்தப் பிரக்ஞை, நம்முடைய பொதுவான பிரக்ஞையிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் துல்லியமாக வேறுபட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ, என் கவிதையை நானும் ஒரு வாசகராகவே படிக்கும்
தருணங்களே அதிகம்.
ஒரு விஷயம்
அல்லது உணர்வு பூதமாக மனதில் அடைபட்டு மூச்சுத்திணறலை அதிகரித்துக் கொண்டேபோகும்போது அதை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டிய
அவசரத்தேவையை மனம் அழுத்தமாய் உணர்ந்து அதன்விளைவாய் கவிதை எழுதப்படுகிறது. அல்லது, ஓர் உணர் வின் தாக்கத்தில் நாமே பூதமாகி விசுவ ரூபமெடுக்கிறோம் கவிதையில். அல்லது, நானாகிய, எனதாகிய இந்த அன்பிற்குரிய பூதம் அத்தனை ஆனந்தமாய் பீறிட்டு வெளியேறி குமிழ்களை யும், வானவிற்களையும் தன் மொழியால், தீண்டலால், நிரந்தரமாக்கிக் கொண்டே போகிறது. அதாவது, போக முயற்சிக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம் அதனுடைய பூதகணங்களும், குணங்களும்கூட தாற்காலிகத்தைத் தாண்டிய அடுக்கில்
இடம்பிடிக்கின்றன. மேலும், மிகத் தனியாக
இந்த பூதம் ஒரு சுமைதாங்கிக் கல்மேல் அமர்ந்துகொண்டு வேறொரு பூதத்தின் வரவைத் தனக்குள்ளிருந்தே எதிர்நோக்கியும், தனக்குள் தானே பழையபடி புகுந்து கொண்டும் கவிதையாய் காலங்கழித்துவருகிறது.
நுண்கணங்களின் கணக்கெடுப்பே கவிதை என்று சொல்லத்தோன்றுகிறது. யாராலும் திட்ட வட்டமாய் எண்ணிச் சொல்ல முடியாத ஒன்றை, உணர்வார்த்தமாய் வகை பிரித்து, அவற்றின் உள் கட்டுமானங்களையும் பகுத்துக்காட்ட மனம் மேற்கொள்ளும் காலத்திற்குமான பிரயத் தனமே கவிதை. இந்த முயற்சியின் வழி புதிய கருத்துருவாக்கங்கள் சில இயல்பாய் வரவாக லாம். ஆனால், கருத்துருவாக்கங்கள் மட்டுமல்ல கவிதை. அரூபக்கவிதைகள்
என்று எள்ளி நகையாடப்பட வேண்டியவையல்ல. அவை ஒரு மனதின் வழித்தடங்களை முன்வைக் கின்றன. தூலமாக இருப்பவர் கவிஞர் என்னும்போது அவர் எழுதும் கவிதைகள் எப்படி
அரூபக் கவிதை களாகி விட முடியும்?
என் கவிதைகள்
காலங்கடந்து வாழுமா என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. என் காலத் திலேயே அவை பேசப்படுமா என்பதும்
எனக்கு ஒரு பொருட்டில்லை.எழுதுவதில் கிடைக்கும் மனநிறைவும்,வலி நிவாரணமும், கலைடாஸ்கோப் காட்சிகளுமே பிரதானம். தனிஆவர்த்தனமே சேர்ந்திசையாகவும் ஒலிப்பதை என் சக-கவிஞர்கள் பலருடைய கவிதைகளில் உய்த்துணர்ந் திருக்கிறேன். அப்படி என் தனி ஆவர்த்தனமும் ஒருவேளை சேர்ந்திசையாகலாம்.
மிகவும் சிறப்பான பதிவு
ReplyDeleteமிகவும் சிறப்பான பதிவு
ReplyDeleteமிக்க நன்றி. லதா ராமகிருஷ்ணன்
ReplyDelete