நிலாமயம்!
LIFE GOES ON.....
Monday, March 2, 2026
நிலாமயம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
TWO BOOKS OF SELECT POEMS BY POET ATHMAJIV & THEIR ENGLISH TRANSLATIONS
TWO BOOKS OF SELECT POEMS
BY POET ATHMAJIV
& THEIR ENGLISH TRANSLATIONS
PUBLISHED BY
ANAAMIKAA ALPHABETS
%20%20-DF%20-%20JPEG.jpg)
Sunday, March 1, 2026
கவிஞர் வைதீஸ்வரன்
கவிஞர் வைதீஸ்வரன்
மந்திரமாவது சொல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
மந்திரமாவது சொல்
இவர்கள் இப்படித்தான் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
இவர்கள் இப்படித்தான்
பழுதடையும் எழுதுகோல்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
பழுதடையும் எழுதுகோல்கள்
மலைக்கவிதையும் மலைக்கவைக்கும் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
மலைக்கவிதையும்
மாற்றுத் திறனாளிகள் வேற்றுக் கிரகத்தவர்கள் அல்ல - லதா ராமகிருஷ்ணன்
மாற்றுத் திறனாளிகள் வேற்றுக் கிரகத்தவர்கள் அல்ல
லதா ராமகிருஷ்ணன்
- லதா ராமகிருஷ்ணன்
மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் குறித்து தோழர் பார்வையற்றவனின் காணொளிப் பதிவைக் காண நேர்ந்தது. https://www.facebook.com/reel/1180425227506969
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற் காகவும் அவர்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற அவல நிலையே இன்றளவும் தொடர் கிறது எனலாம்.
அரசியல் களத்தில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லை யெனலாம்.
திரு.விஜயகாந்த் தான் முதன்முதலில் மாற்றுத் திறனாளிகளுக் கான தனி பிரிவைத் தன் கட்சியில் தொடங்கி னார். (இப்போது அந்தப் பிரிவு அந்தக் கட்சியில் செயல்படுகிறதா தெரியவில்லை.
வேறு எந்தக் கட்சியிலும் அத்தகைய தனிப்பிரிவு இருப்ப தாகத் தெரியவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய பிரதிநிதித்துவம் இருப்பதாகவும் தெரியவில்லை.
அவர்களும் சமூகத்தின் அங்கம் என்பதால் தான் தனிப் பிரிவு ஆரம்பித்து அவர்களை ஒதுக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் கூறக்கூடும். அதுதான் உண்மை யெனில் மாற்றுத்திறனாளிகளின் நலவாழ்வு, முன்னேற் றம் அவர்களுடைய செயல்திட்ட உருவாக் கங்களில் இரண்டறக் கலந்த அம்சமாக இடம்பெறவேண்டும். பெறுகிறதா?
சமயங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒரு கட்சியை சார்ந்திருப்ப தாலும் பாதகங்கள் ஏற்படுவதுண்டு. கட்சி சார்ந்தே இயங்க வேண்டியிருக்கும் என்பதால் தங்களுடைய பிரச்சனைகளை உரிய முறையில் உரிய நேரத்தில் உரத்துப்பேச முடியாத நிலை ஏற்படக் கூடும்.
இவ்வகையில் பார்த்தால் மாற்றுத்திறனாளிகள் ஓர் அமைப்பாக, கூட்டமைப்பாக இயங்கவேண்டியதும் அவசியமாகிறது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகோரல்களெல்லாம், உரிமைக் கான போராட்டங்களெல் லாம் கண்டுகொள்ளா மல் புறக்கணிக் கப்படுவது எந்த அரசுக்கும் அழகல்ல.
இதில் பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளி களின் நிலைமை இன்னும் அவலம்.
இங்கே காணொளியில் தோழர். பார்வையற்றவன் (ஆசிரி யர் – எழுத்தாளர்) மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் சமூகத்தின் பல பிரிவினராலும் கண்டுகொள்ளப்படாத நிலை குறித்த தனது ஆதங் கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவருடைய ஆதங்கக்குரலை ஆளுங்கட்சியும், எதிர்க் கட்சிகளும், பொதுச் சமூகமும் பொருட்படுத்த வேண்டியது அவசியம்.
மாற்றுத்திறனாளிகளை அரசியல் கட்சிகளும் அரசுகளும் (தங்கள் முன்னேற்றத்திற்கான பகடைக்காய்களாகப் பயன்படுத்திக் கொள் ளாமல் அவர்கள் முன்னேற்றமும் சமூக முன்னேற்றத்தில் ஆதார மான பங்கு வகிக்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளின் நலன்களையும் தங்கள் நலத்திட்டங்கள் உருவாக் கத்தில் கணக்கில் கொள்ளவேண்டும்.
கலைடாஸ்கோப் கவிதைகள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
1. மனித நாகரீகமும் மூன்றாம் உலகப்போரும்













.png)



