LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label முளைவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label முளைவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Friday, January 19, 2018

முளைவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

                        முளைவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
 (*From my forthcoming 11th poem-collection எதிர்வினை)

மனம் வனம்
பிருந்தாவனம்
பாலைவனம்
பச்சையம்
பளபளக்கும் கானலும்.
பூக்களுமிலைகளும்
குடுகுடுவென ஓடும் பிள்ளைகளும்
ஒட்டகங்களும்
சுட்டுப்பொசுக்கும் மணற்பரப்பும்
கனவேபோல் தட்டுப்படும்
காலடித்தடங்களும்
விடுபட்டுப்போனதா
லானதா
ஆகாமலானதா

கவிதை…..