LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label மந்திரமாவது சொல்! ரிஷி. Show all posts
Showing posts with label மந்திரமாவது சொல்! ரிஷி. Show all posts

Wednesday, November 25, 2015

மந்திரமாவது சொல்! - ரிஷி


மந்திரமாவது சொல்!


ரிஷி





பெரும்பேச்சுப் பேசி, 


பாராட்டும் கைத்தட்டலும் வாங்கி



திடீர் சமூகக்காவலர்களாகி


படீரெனத் தங்கள் மாளிகையின் 



இரும்புக் கதவங்களைத் தாழிட்டுக்கொண்டு 



பத்திரமாகத் தூங்கத் தொடங்கிவிடுவார்கள்....



உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையின்



வீச்சையும், விரிவையும்,


விளைவுகளையும் பற்றிய புரிதலற்று, 


அல்லது, ஈரம் வற்றிய புரிதலோடு்


பேசக் கற்றவர்கள்....



எனில், மனிதநேயம் என்பது 



தெருவோரம் முளைக்கும் காளான் அல்லவே.