LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label சுவடு அழியும் காலம்….. ரிஷி. Show all posts
Showing posts with label சுவடு அழியும் காலம்….. ரிஷி. Show all posts

Tuesday, October 18, 2016

சுவடு அழியும் காலம்….. ரிஷி

சுவடு அழியும் காலம்…..
 ரிஷி

இரண்டு மூன்று முறை, அதற்குமேலும்கூட நச்சுவாயு தாக்கியிருக்கக்கூடும்;

நான்கைந்து முறை, அதற்குமேலும்கூட, கால்கள்
புதைசேற்றில் மாட்டிக்கொண்டிருக்கக்கூடும்;
புழுதியேறி யேறி நுரையீரல் பழுதடைந்திருக்கக்கூடும்

பலநேரம்;
பகலிரவாய் தோண்டிய பள்ளத்தருகே நின்றதில்

பித்தவெடிப்பில் பாதங்கள் கனன்றிருக்கக்கூடும்.
கருமமே கண்ணாகியிருந்தான் அகழ்வாராய்ச்சியாளன்….
பூமிக்கடியில் புதையல் இருக்கிறதென்று தோண்டத் தொடங்கியிருப்பதாய் 
எண்ணிக்கொண்ட சிலைதிருட்டுக்காரன்
மருந்துக்கும் தன் மேல் புழுதிபடாதவாறு
மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டு நின்றவாறு

உன்னிப்பாய் கவனித்துக்கொண் டிருந்தான்.
வியர்வை வழிய
கை
நகக்கணுக்களில் ரத்தம் கசிய

அத்தனையன்போடு ஏந்திக்கொண்டு வெளியே வந்தான்
அகழ்வாராய்ச்சியாளன்

அழகிய பொதி யொன்றை!
அப்படியே அவனைக் கீழே தள்ளி
யதை அபகரித்துக்கொண்டோடியவனிடமிருந்து
ஆறேழு மணிநேரங்கழித்து
அவலத்திலும் அவலமாய் எழுந்ததோர் ஓலம்!
அய்யய்யோ, என்ன இது வெறும் அத்துவான வெளி?
நட்சத்திரங்களைக் காணோமேநல்ல விலைக்குப் போகுமே…..
காற்று வீசலையே - காசாக்கியிருக்கலாமே….
கதிரவனும் சந்திரனும் காரிருளாகாதிருந்தால்
காலத்திற்கும் கடைவிரித்துகனவானாகியிருக்கலாமே
எல்லாம் போச்சே, எல்லாம் போச்சே
அகழ்வாராய்ச்சியாளனை அபகரித்த உழைப்பெல்லாம் 
அந்தோ, விழலுக்கிறைத்த நீராச்சே
என்ன செய்வேன் நான், என்ன செய்வேன் நான்…”
பின்_
அது சரி, அத்தனை நாள் தோண்டியவன் மண்டையை உருட்டினால்
சிறிதேனும் தேறுமோ பார்க்கலாம்..
காலால் எத்திவிட வாகாய் இருக்கவே யிருக்கிறது இந்த விரிபரப்பு 
என்று ஆயத்தமானான் 
-
(
நாயொத்தவன் என்றால் அது நாயைப் பழிப்பதாகும்).
சூழ்ச்சிக்காரர்களால் சுகவாசிகளால் கணக்கிடவியலா \
அணுக்கள் அண்டசராசரமெங்கும் 
அடர்ந்திருக்கக்

கண்டவரே விண்டிராத
போது
காணாக்கிராதகர்களுக்கு ஏது விமோசனம்?
விண்டவனைச் சுண்டைக்காயாக்கி உதைத்துப் பந்தாட

நீளும் கால்களில்
ஆலகால நஞ்சின் நீலம் பரவும்

ஆங்கே பாரதியின் வரிகளில் அதிரும் வான்:
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான்
போவான் ஐயோன்னு போவான்.”