மதிப்புரைகள், அறிமுகங்களை எதிர்பார்த்து எதுவும் எழுதுவதில்லை, வெளியிடுவதில்லை என்றாலும், நம்முடைய எழுத்துமுயற்சி, வெளியீட்டு முயற்சி குறித்து ஒரு நடுநிலையான, அகல்விரிவான, நம் முயற்சியின் சாரத்தை அருமையாக எடுத்துக்காட்டுவதாய் அமையும் மதிப்புரைகள் நமக்கு என்றுமே உற்சாகமளிக்கத் தவறுவதில்லை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் வெளியாகும் உங்கள் நூலகம் மாத இதழில் இந்த மாதம் அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடான ‘வைதீஸ்வரன் கவிதைகள் - தமிழ் இலக்கிய விரிவெளியில் என்ற நூல் குறித்து வெளியாகியுள்ள அகல்விரிவான மதிப்புரை அத்தகைய உத்வேகமளிக்கிறது. மூத்த கவிஞர் வைதீஸ்வரன் இன்றளவும் இலக்கியப் பங்களிப்பு செய்துவருபவர். தமிழ் இலக்கிய வெளியில் அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணர்த்துவதாய் எழுதப்பட்டிருக்கும் இந்த மதிப்புரையை எழுதியிருக்கும் திரு. ஜி. சரவணனுக்கும், வெளியிட்டிருக்கும் உங்கள் நூலகம் ஆசிரியர் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகிறது. தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்.
