LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ஆரூடக்காரர்களும் அருள்வாக்குச்சித்தர்களும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label ஆரூடக்காரர்களும் அருள்வாக்குச்சித்தர்களும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Thursday, December 19, 2019

ஆரூடக்காரர்களும் அருள்வாக்குச்சித்தர்களும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ஆரூடக்காரர்களும் அருள்வாக்குச்சித்தர்களும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


கைபோன போக்கில் சோழிகளை உருட்டி
விழிகளை அகல விரித்து அச்சுறுத்தி
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
தான் சொல்லும் ஆரூடம் பலித்து
தனக்கு அருள்வாக்குச் சித்தர் என்ற பட்டமும் பிராபல்யமும் கிட்டவேண்டுமென்ற
பெருவிருப்பில் பரிதவித்து
பயணவழியில் வண்டியின்ப்ரேக்
வேலைசெய்யாமலோ
க்ளட்ச் பழுதடைந்தோ
சக்கரங்களில்
ஒன்றிரண்டு
கழண்டு தனியே உருண்டோடியோ
கோரவிபத்து நிகழவேண்டுமென்ற
பிரார்த்தனையில்
கண்மூடிக் கரங்கூப்பி லயித்திருப்பவர்களுக்குக்
கேட்பதில்லை
குருதி பெருகத் துடித்துக்கொண்டிருப்பவர்களின்
மரணஓலம்.