LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அரைகுறை ரசவாதம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label அரைகுறை ரசவாதம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Sunday, June 24, 2018

அரைகுறை ரசவாதம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


அரைகுறை ரசவாதம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும்
இறுகிய கருங்கல்லாகவும் 
காலம்….

நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
என்னால் முடிந்த உருவங்களையெல்லாம்
வனைந்துபார்க்கிறேன்.

நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு
இளகிவிடுவேனா என்ன என்று குறும்பாய்ச் சிரிக்கிறது காலம்
நான் குருவியாய் செதுக்க முனைந்து 
குருவி முட்டையாய் பிடித்துவைத்திருந்த 
உருண்டையைப் பார்த்து.

கருங்கற்காலமோ சதா பின்மண்டையைக் குறிபார்த்துக்கொண்டேயிருக்கிறது.